author

தீராத சாபங்கள்

This entry is part 14 of 29 in the series 24 மார்ச் 2013

சோ.சுப்புராஜ் முத்துப்பாண்டியைக் கொஞ்ச நேரம் உன்னிப்பாய்ப் பார்த்து விட்டு மிகவும் நிதானமான குரலில் கேட்டாள் பாக்யலட்சும் “உன் வாழ்க்கையிலயும் பெண்சாபம் மாதிரி ஏதாவது இருக்குமாப்பா… ”         சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு மத்தியான வேளை; வேலைத்தளம் இயந்திர இரைச்சலும் மனிதக் கூச்சலுமின்றி அமைதியாக இருந்தது. சாப்பிட்டு முடித்த வேலையாட்கள், சிலர் அங்கங்கே உட்கார்ந்து பழமை பேசிக் கொண்டும், பெரும்பாலோர் மணலிலும் தரையிலுமாய்ப் படுத்துக் கண்மூடியும் கிடந்தனர்.     அக்கௌண்டென்ட் மணிசேகர் ஓரமாய் நின்று […]

தொல்காப்பியம் ஆந்திரசப்தசிந்தாமணி கூறும் எழுத்தியல் கோட்பாடு

This entry is part 11 of 29 in the series 24 மார்ச் 2013

  பி.லெனின் முனைவர்பட்ட ஆய்வாளர் இந்திய மொழிகள் பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்- 613010 தோற்றம் மொழியின் கூறுகளை விளக்குவதில் இலக்கணம இன்றியமையாத இடம் வகிக்கின்றது. ஒரு மொழியின் கூறுகளைக் காத்து அமைப்பு வழியில் நெறிப்படுத்துவதில் இலக்கணத்தின் பங்கு மிகப் பெரிது, ஒவ்வொரு மொழிக்கும் அடிப்டபடையாய் இருப்பவை ஒலிகள், ஒலி இன்றி மொழிகள் இல்லை. ஓலிகள் எழுத்து என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது. இவ்வெழுத்து பொதுவாக ஒலி வடிவத்தையும் வரி வடிவத்தையும் குறிப்பதாக அமைகிறது, அவ்வெழுத்து எழுத்தியல் சிந்தனையென்று […]

குரல்வளை

This entry is part 25 of 29 in the series 24 மார்ச் 2013

டாக்டர் ஜி.ஜான்சன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த என்னைத் தட்டி எழுப்பினாள் மாரியாணி. அவரசரத்தை உணர்ந்தவனாக எழுந்து உட்கார்ந்து கண்களைக் கசக்கியவாறு, ” என்ன? எமெர்ஜென்சியா? ” என்று ஆங்கிலத்தில் கேட்டேன். கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். அப்போது அதிகாலை இரண்டு மணி. ” மெல்ல பேசுங்கள். அங்கே வந்து பாருங்கள் . ” என்றவாறு முன் அறை நோக்கி நடந்தாள். நான் பின்தொடர்ந்தேன். வெளியில் முனகல் சத்தம் கேட்டது. என்னவாக இருக்கும் என்று அறிய வெளியே எட்டிப் பார்த்தேன். கிளினிக் வராந்தாவில் […]

காணிக்கை

This entry is part 6 of 29 in the series 24 மார்ச் 2013

                                     சத்தியப்பிரியன்             “மதம் என்பது மக்களின் எளிமையான வாழ்வில் ஆன்ம பலத்தையும் , நம்பிக்கையையும் வளர்ப்பதற்கு பதில் அவ்ர்களைச் சுரண்டுகிறது.” என்றேன்.             “By  an elaborated fine processed way “ என்று என் நண்பன் என்னை ஆமோதித்தான்.              மதம் தொடர்புடைய சிறுகதை என்பதால் தன்னிலை ஒருமையில் எழுத வேண்டியுள்ளது. எங்கள் பயணம் ஒரு மோட்டார் சைக்கிளின் மீது சுட்டெரிக்கும் கத்திரி வெயிலில் பத்து கிலோமீட்டர் தூரம் நீண்டு கொண்டிருந்தது. “ கூட்டம் என்ற பெயரில் எங்கள் […]

கடைசி வேரின் ஈரம் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

வெலிகம ரிம்ஸா முஹம்மத் கடைசி வேரின் ஈரம் என்ற சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர் கிண்ணியா எம்.எம். அலி அக்பர் அவர்கள். ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் தனது பெயரை பதித்துக்கொண்டவர். கலாபூஷணம் விருதை பெற்றுள்ள எம்.எம். அலி அக்பர் அவர்கள், ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 112 பக்கங்களுடைய இந்தத்தொகுதியில் 12 சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அணிந்துரையை வழங்கியருக்கின்றார் கிண்ணியாவின் இன்னொரு கவிஞரும், சிறுகதையாளருமான ஏ.எம்.எம். அலி அவர்கள். இறைவனின் நியதி என்ற கதை மனிதனின் அழுக்குக் குணங்களை […]

குறு நாவல் அத்தியாயம் – 2 நன்றியுடன் என் பாட்டு…….

This entry is part 31 of 31 in the series 31 மார்ச் 2013

-தாரமங்கலம் வளவன் பட்டாபி தன் மகளின் இந்த கேள்வியை கேட்டு சங்கோசப்பட்டு, பேச்சை மாற்றுவதற்காக, “ தம்பி, நீங்களும் சினிமாவில பாட்டு பாடியிருக்கிங்களா… என்னா மாதரி பாட்டு…. நா சினிமா பாட்டு கேட்டது இல்லீங்க… கர்நாடக சங்கீதம் கொஞ்சம் கேட்பேன்… இதுல பாருங்க… பகவானோட விளையாட்டு….. எங்க அப்பாவோட சங்கீத ஞானம் எங்களுக்கு வர்ல…. முறுக்கு, பலகாரம்னு வீடு வீடாய் போய் வித்து கஷ்டப் பட்டுக்கிட்டு ஜீவனம் நடத்திகிட்டு இருக்கேன்…உங்க அப்பாவுக்கு அந்த ஞானம் வந்திருக்கு….. எனக்கு […]

நடு வலதுசாரி திட்டத்தை முன்வைக்கிறார் நரேந்திர மோடி

This entry is part 26 of 26 in the series 17 மார்ச் 2013

சசி சேகர் குஜராத் முதலமைச்சர் இந்தியா டுடே கான்க்லேவ் 2013 நிகழ்ச்சியில் பேசியது, அந்த நிகழ்ச்சியிலும், இணைய உலகத்திலும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. அதனை இணைய ஒளிபரப்பு செய்தது ஒருமுறை தடங்கலுக்கு உள்ளானாலும் அந்த நிகழ்ச்சியே 20 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது என்பதும், அந்த நிகழ்ச்சிக்குள் நுழைய ஏராளமான கூட்டம் இருந்ததும், அதனால் தடங்கலானதும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ட்விட்டரில் தெரிவித்துகொண்டே இருந்தார். நரேந்திர மோடியின் பேச்சுக்கு இருந்த எதிர்பார்ப்பு புரிந்துகொள்ளக்கூடியது. நமது ஜனநாயகத்தில் இன்னமும், முதன்மை அரசியல்கட்சிகள் […]

மெல்ல நடக்கும் இந்தியா

This entry is part 12 of 26 in the series 17 மார்ச் 2013

வேங்கட ஸ்ரீநிவாசன் மார்க் துல்லி – கல்கத்தாவில் பிறந்து இங்கிலாந்தில் கல்வி பயின்ற ஆங்கிலேயர். பி.பி.சி.யின் தெற்காசிய செய்தித் தொடர்பாளராக இருந்தவர். தற்போது புது தில்லியில் பத்திரிகையாளராக இருப்பவர்.   ஜில்லியன் ரைட் – இவர் துல்லியின் தோழி. இந்திய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருபவர்.   இந்த இருவரும் இணைந்து பல புத்தகங்களை எழுதியுள்ளனர். ‘No Full Stops in India’, ‘The Heart of India’ ஆகிய புத்தகங்கள் மிகவும் பிரபலமானவை.   2002-ஆம் […]

மஞ்சள் விழிகள்

This entry is part 13 of 26 in the series 17 மார்ச் 2013

  டாக்டர் ஜி.ஜான்சன் பங்கஜம் எல்லாருக்கும் தெரிந்தவள் . அவளைக் கண்டாலே போதும், ” பங்காஜாம் சூடா மறிலா! ” என்று மலாய்க்கார ஊழியர்கள் கேலி செய்வதுண்டு. தாதியர்களும், இதர பணியாளர்களும் அவளை விடுவதில்லை. ஏன்? நான்மட்டுமென்ன? ” வந்துவிட்டாயா பங்கஜம்? ” என்றுதானே ஒவ்வொருமுறையும் அவளைக் கிண்டல் செய்துள்ளேன்? குளுவாங் அரசுப் பொது மருத்துவமனைக்கு வாரத்தில் இருமுறையாவது பங்கஜத்தைப் பார்க்கலாம்.அவள் நிறத்தில் சாம்பல்.கருப்பு என்றும் கூற முடியாது. மாநிறம் என்றும் கூற இயலாது. கிளி போன்ற […]

நன்றியுடன் என் பாட்டு…….குறு நாவல் அத்தியாயம் – 1

This entry is part 11 of 26 in the series 17 மார்ச் 2013

  -தாரமங்கலம் வளவன் “ குரு தட்சணை கொடுக்கிறதுக்கு பதிலா இந்த ஏழைப் பெண்ணை வர தட்சணை இல்லாம கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றீங்களா ”  கல்யாணி கேட்ட இந்த நேரிடையான கேள்வியை கொஞ்சமும் எதிர்பார்க்காத சந்தானம் தடுமாறினான்.   சந்தானம் பிரபல பிண்ணணி பாடகர் வெங்கட்டின் ஒரே மகன். சந்தானமும் பாடுவான். சில திரைப் பாடல்களை அவனும் பாடியுள்ளான். அவ்வளவு பிரபலம் என்று சொல்ல முடியாது. அதில் அவனுக்கு வருத்தம் தான். அப்பாவின் பெயரினால் தான் தனக்கு […]