author

5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலை

This entry is part 16 of 32 in the series 3 பிப்ரவரி 2013

லாமியா ஐந்து வயது பாதி எகிப்திய – பாதி சவுதி குழந்தை. இக்குழந்தையின் தாயார் எகிப்தில் பிறந்து சவுதி அரேபியாவுக்கு 25 வருடத்துக்கு முன்னர் வந்தார். அக்குழந்தையின் தந்தை பாயான் அல் காம்தி என்பவர் இஸ்லாமிய பிரச்சார தொலைக்காட்சிகளில் இஸ்லாமை பிரச்சாரம் செய்பவர். அல் காம்தி லாமாவின் தாயாரை விவாகரத்து செய்துவிட்டு அந்த குழந்தையை எடுத்துகொண்டார். இந்த வீடியோவில் குழந்தையை தத்தெடுத்துகொண்டால் மதரீதியாக என்ன பயன் பெறலாம் என்று உள்ளம் உருகுவதை காணலாம்.     செய்திகளின் […]

ஜெயாவின் விஸ்வரூபம்…

This entry is part 14 of 32 in the series 3 பிப்ரவரி 2013

அக்னிப்புத்திரன் தமிழ்நாட்டில் கமலின் விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் அரசியல் விளையாடிவிட்டதாகவே தெரிகிறது. முஸ்லீம் தோழர்கள் அதிகம் வாழும் மலேசியாவில் படம் ரிலீஸ் செய்யப்பட்டு படம் ஓடியதும் பின் தாய்நாட்டு முஸ்லீம் தோழர்களின் அறிவுத்தலால் அங்கும் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. அதுபோல கேரளா, ஆந்திரா போன்ற இடங்களில் அதிகமாக வாழும் முஸ்லீம் சகோதரர்கள் இருந்தும் படம் ரீலிஸ் செய்யப்பட்டதை கணக்கில் எடுத்துக்கொண்டால் இது அப்பட்டமாக ஜெயா டிவிக்காக முதல்வர் ஜெயாவால் அரங்கேற்றப்பட்ட திருவிளையாடல் என்பதில் சற்றும் ஐயமில்லை. அப்பாவி முஸ்லீம் […]

வங்க தேசம் முதல் பாகிஸ்தான் வரை : இந்துப்பெண்களின் மீது தொடரும் பாலியல் பலாத்காரம்

This entry is part 11 of 28 in the series 27 ஜனவரி 2013

அயீஷா அஸ்கார் (எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் என்ற பாக்கிஸ்தான் பத்திரிக்கையில் ஜனவரி 4 2013இல் வெளியான கட்டுரை) பெரும் போரில் பாலியல் பலாத்காரம் எவ்வாறு ஒரு ஆயுதமாக உபயோகப்படுத்தப்படுகிறது என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். 1971இல் கிழக்கு பாகிஸ்தான் போரின்போது, பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு எதிராக கிளம்பிய குரல்களை நசுக்க, பல்லாயிரக்கணக்கான பெண்கள் கொடூரமாக பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஒவ்வொரு வருடமும், பாகிஸ்தானிகள் போரின்போது சிறைப்படுத்தப்பட்ட போர்வீரர்களை பற்றி புலம்புவார்கள். ஆனால், அவர்கள் செய்த கொடூரமான செயல்களை பற்றி வாயே திறக்க மாட்டார்கள். […]

மௌலானா அபுல் கலாம் ஆசாத் – பங்களாதேஷில் தாமதமாக வந்த நீதி

This entry is part 13 of 28 in the series 27 ஜனவரி 2013

எகனாமிஸ்ட் பத்திரிக்கை பாகிஸ்தானிடமிருந்து பங்களாதேஷ் பிரிவதற்காக நடந்த போரில் சுமார் 30 லட்சம் மக்கள் கொல்லப்பட்டு சுமார் 41 வருடங்களுக்கு பிறகு, பங்களாதேஷ் போர் குற்ற ட்ரிப்யூனல் தனது முதலாவது தீர்ப்பை வழங்கியுள்ளது. ஜனவரி 21, 2013ஆம் தேதி அன்று, அபுல் கலாம் ஆஜாத் என்பவருக்கு, 1971இல் நடந்த 9 மாத போரின் போது இனப்படுகொலைக்காகவும், கொலைகளுக்காகவும் மரணதண்டனை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களுக்கும், அவரது அவாமி லீக் கட்சிக்கும் வெற்றியாக […]

குப்பை

This entry is part 26 of 28 in the series 27 ஜனவரி 2013

ஆனந்தன், பூனா   அலுவலகத்தில் நாங்கள் மூவரும் ஒரே அறையை பகிர்கிறோம். நான், ஜெயந்தி மற்றும் எங்கள் உயரதிகாரி. என் உயரதிகரியும் எனக்கும் இடையே இடுப்பளவு மரத்தடுப்பே பிரிக்கும். ஒரு நண்பர்தான். நண்பராகிவிட்டார். இன்று அலுவலகத்தில் நுழைந்ததும், அழைத்தார். ’கருப்ஸ்’ தடுப்பை தாண்டி எட்டி பார்த்தேன். ஒரு புதிய குப்பைகூடையை கையில் வைத்திருந்தார். நேற்று வாங்கினேன். அழகாக இருந்தது. பார்த்தாயா. வார்க்கப்பட்டது. மாசு மருவற்று, செய்ததற்கான இணைவுகள் எதுவுமில்லாமல். கீழே அடிபக்கம் தரையை தொடாமல் உயர வைக்கபட்டுள்ளது. […]

கவிஞ‌ர் நெப்போலிய‌னின் காத‌ல் க‌டித‌ங்க‌ள் 2013

This entry is part 23 of 28 in the series 27 ஜனவரி 2013

  க‌விஞ‌ர் திரைப்ப‌ட‌ப்பாட‌லாசிரிய‌ர் நெப்போலிய‌னின் க‌விதை , சிங்க‌ப்பூர் தேசிய‌ க‌லைக‌ள் ம‌ன்ற‌ ஆத‌ர‌வுட‌ன் இய‌ங்கி வ‌ரும் தி ச‌ப் ஸ்டேஷ‌ன் ‍ ல‌வ் லெட்ட‌ர்ஸ் ப்ராஜெக்ட்ல் ( 2013 ) இட‌ம் பெற்றுள்ள‌து. காத‌லின் ( ந‌ட்பின் சினேக‌த்தின் ) பிரிவின் வ‌லியின் சுவையைச் சொல்லும் வ‌ரிக‌ளைக் க‌ருப்பொருளாய் கொண்ட‌ சிங்க‌ப்பூரின் 12 க‌விஞ‌ர்க‌ளின் க‌விதைக‌ள் இந்த‌ வ‌ருட‌த் தொகுப்பில் இட‌ம் பெற்றுள்ள‌ன‌. சீன‌ம், ம‌லாய், ஆங்கில‌ம், த‌மிழ் என‌ நான்கு மொழிக‌ளிலும் அத‌ன் ஆங்கில‌ […]

தாய்மை

This entry is part 22 of 28 in the series 27 ஜனவரி 2013

  டாக்டர் ஜி. ஜான்சன் கோத்தா திங்கி பேருந்து நிலையத்தின் எதிர்புறம் ஒரு சந்தின் வழியாகப் புகுந்தால் பிரதான வீதியொன்று தெரியும். அதைத் தாண்டி சென்றால் எதிரேயுள்ள கடைகள் வரிசையில் கிளினிக் புத்திரி உள்ளது. நான் அதில்தான் தற்போது பணியாற்றுகிறேன். மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் இந்த கிளினிக்கில் மலாய்க்காரர்களே அதிகம் வருவதுண்டு. இந்தப்பகுதியில் ஏராளமான பெல்டா ( FELDA ) தோட்டங்கள் இருப்பதால் அவர்களின் ஜனத்தொகையே அதிகம். எப்போதாவதுதான் தமிழர்கள் வருவர். சீனர்கள் வருவது மிகக் குறைவுதான். […]

பேராசிரியர் எம். எ. எம். நுஃமான் விளக்கு விருது பெறுகிறார்

This entry is part 1 of 30 in the series 20 ஜனவரி 2013

இலக்கிய விமரிசகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர்,பேராசிரியர் எம். எ. எம். நுஃமான் அவர்கள் 2011 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். திறனாய்வு, மொழியியற்சிந்தனை, கவிதை, மொழிபெயர்ப்பு, கல்வித்துறை சார்ந்த கருத்தியல் உருவாக்கம் போன்ற பலதிறப்பட்ட பங்களிப்பைத் தமிழுக்குச் செய்திருப்பதைக் கருத்தில் கொண்டு பேராசிரியர் ராமசாமி, கவி சிபிச்செல்வன், எழுத்தாளர் சபாநாயகம் ஆகியோர் கொண்ட நடுவர்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் நுஃமான் அவர்களை நடுவர்குழு தெரிவு செய்தது. பேராசிரியர் நுஃமான் முப்பது நூல்களுக்கு ஆசிரியர். மொழியும் இலக்கியமும் (2006), மொழியியலும் […]

ஒரு ஆன்மாவின் அழுகுரல்..

This entry is part 9 of 30 in the series 20 ஜனவரி 2013

  எஸ். ஹுசைன் மௌலானா 17வயதுச் சிறுமி அவள். கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கடந்த வாரம் மரணதண்டனை வழங்கி சவூதி அரசாங்கம் சரிஆ சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. மரணதண்டனை வழங்கி தீர்ப்புச் சொன்ன போது அவளுக்கு வயத 18 பூர்த்தியாகி இருக்கும். சவூதியின் சரிஆ( இஸ்லாமிய சரீஆ அல்ல அது) அதிகபட்சத் தண்டனையான மரணதண்டனையை வழங்கிய போது அது, ரிஸானாவின் வயதைக் கூட கருத்தில் கொள்ளவில்லை. எத்தனையோ மனித உரிமை அமைப்புக்கள் வேண்டி நின்ற போதும் அத்தனையையும் வெகு சாதாரணமாக […]