முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை இலக்கியங்கள் மனித வாழ்க்கையைப் பிரதிபலிப்பன. மனிதர்களின் வாழ்க்கை இலக்கியங்களில் பதிவுசெய்யப் பெறுகின்றது. இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையே ஆன இக்கொண்டும் கொடுக்கும் உறவானது படைப்பாளிகளால் மேம்பாடடைகின்றது. படிக்கும் வாசகரால் பயன் கொள்ளத்தாகின்றது. சிலப்பதிகாரம் முதன் முதலாக எழுந்தக் காப்பியம். இக்காப்பிய இலக்கியத்தில் வாழ்க்கையைப் பற்றியும், வாழ்க்கை அறங்கள் பற்றியும் சுவைபட காட்சி அடிப்படையில் படைக்கப்பெற்றுள்ளன. கண்ணகி, கோவலன் போன்ற தலைமைப் பாத்திரங்களின் வழியாகவும், ஐயை, மாதரி […]
முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை திருத்தொண்டர்புராணம் என்ற சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் நாயன்மார்களின் சிவத் தொண்டினை எடுத்துரைப்பது. இதுபோன்று முருகனடியார்களின் அற்புதத் தொண்டினை விரித்து உரைப்பது சேய்த்தொண்டர் புராணம் ஆகும். முருகவேள் திருமுறை என்று தொகுக்கப் பட்ட இறைத்தொகுப்பில் பன்னிரண்டாம் திருமுறையாக அமைவது சேய்த்தொண்டர் புராணம் ஆகும். முருகவேள் திருமுறையில் ஆறுபடை வீடுகளை அடிப்படையாக வைத்து பாடப்பெற்ற திருப்புகழ்ப் பாடல்கள் முதல் ஆறு திருமுறைகளாக வகுக்கப் பெற்றன. ஏழாம் திருமுறை […]
முனைவர் மு.பழனியப்பன். தமிழாய்வுத்துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை. காயா? பழமா? …… விளையாட்டு விளையாடி இருக்கிறீர்களா. மிக அருமையான விளையாட்டு அது. காலால் கோடு கிழித்து மூன்றும் மூன்றும் ஆறு கட்டங்களை உருவாக்கி நொண்டி என்ற ஆட்டத்தைச் சிறுவயதில் ஆடியிருப்போம். அந்த ஆட்டத்தின் நிறைவில் தலையில் சில்லு என்ற உடைந்த பானையோட்டைத் தலையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு கட்டங்களைத் தாண்டவேண்டும். கட்டங்களைத் தாண்டும்போது கோட்டினைத் தொட்டுவிட்டால் காய். தொடாமல் கடந்துவிட்டால் பழம். எப்படியிருக்கிறது […]
தமிழர்தம் பண்பாட்டுப் பெருமை என்பது குடும்பவாழ்வில்தான் நிலைத்து நிற்கிறது. குடும்பம் என்ற கட்டமைப்பு தமிழர் வாழ்வில் நிகழ்த்தி வருகின்றன அற்புதங்கள் பலப்பல. குடும்பம் என்பது கூடிவாழும் நடைமுறை. இது கணவன், மனைவி, மக்கள் அனைவரும் கொண்டும் கொடுத்தும் இன்புற்று வாழும் செயல்முறை. திருமணம் முடிந்து கணவனும் மனைவியும் இணைந்து வாழும் வாழ்க்கை முறையைக் கற்பியல் என்று தமிழ் இலக்கணம் குறிப்பிடுகின்றது. வாழ்க்கையின் எழுபத்தைந்து விழுக்காடு இந்தக் கற்பு சார்ந்த வாழ்க்கை முறையில் நடக்கின்றது. கணவன் மனைவியிடம் […]
தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை தற்கால ஆய்வுகளில் குறிக்கத்தகுந்தது சமூகவியல் ஆய்வாகும். சமூகவியல் ஆய்வு என்பது அறிவியல் சார்ந்த அணுகுமுறையை உடையது. ‘‘சமூகவியல் என்பது அறிவியல்களின் தரவரிசை அடுக்கமைவில் கடைசியாக வருவதாகும். அறிவியல்களின் தரவரிசை என்பது கணிதத்திலிருந்து தொடங்கி, வானியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் என்று அடுக்கடுக்காக உயர்ந்து இறுதியில் சமுகவியலில் முடிவதாக கோம்த் என்ற சமூகவியல் அறிஞர் கருதுகின்றார்’’.[1]சமூகவியல் என்பது அரசியல், பொருளாதாரம், வரலாறு, ஒழுக்கவியல் ஆகிய சமுக அறிவியல்களையும் […]
தமிழாய்வுத்துறைத் தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் கூர்ந்து நோக்கப்பட வேண்டியனவாகும். தொடர்ந்து தமிழக இலக்கிய வளர்ச்சியோடு இணைந்து போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்துவரும் இலங்கைத் தமிழ் இலக்கியம் தற்போது புலம்பெயர்ந்தோர் இலக்கியமாக உலக நாடுகளில் பரவி நிற்க வேண்டிய சூழலை அடைந்துள்ளது. கி.பி. 1983 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் அரசியல் சூழல் காரணமாகப் புலம் பெயர்தல் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. புலம் பெயர்தல் வழியாகப் பல தரப்பட்டவர்களும் […]
முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை மண்ணுலகம், பூவுலகம், மக்கள் உலகம் என்று இந்த பூமி பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. மண்ணால் நிரம்பியிருப்பதால் இதனை மண்ணுலகம் என்கிறோம். இந்த உலகம் பூமி என்றழைக்கப்படுவதால் பூவுலகம் எனப்படுகின்றது. மக்கள் நிரம்பி வாழ்வதால் இதனை மக்கள் உலகம் என்று அழைக்கிறோம். ,மக்கள் உலகம், பூவுலகம் இவற்றையெல்லாம் விட மண்ணுலகம் என்று சொல்லுவதில்தான் பொருள் ஆழம் அதிகம். மண் தனக்குள் முளைக்கும் திறனைக் கொண்டுள்ளது. […]
தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை அரசு கலைக்கல்லூரி, முதுகுளத்தூர் (மாற்றுப்பணி) இணையத் தமிழை தமிழ்ச் செய்திகளைப் பரவலாக்கம் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. செய்திகளைத் தளங்கள் வாயிலாக அறிவித்தல் மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்தல் குழு அஞ்சல் வாயிலாகத் தெரிவித்தல் திரட்டிகள் வாயிலாக அறிவித்தல் என்ற பலவழிகளில் ஒன்று திரட்டிகள் வழியாகச் செய்திகளை அறிவித்தல் ஆகும். வலைப்பக்கங்களை அமைக்க பணத்தேவை அதிகமாக உள்ளது. ஆனால் எளிமையாக, வளமையாக கருத்துக்களை அளிக்க பணச்செலவின்றி வலைப்பூக்கள் தற்போது […]
தமிழ்த்துறைத்தலைவர், அரசு கலைக்கல்லூரி, முதுகுளத்தூர் கவிதை எழுதுபவர் கவிஞர். கட்டுரை எழுதுபவர் கட்டுரையாளர். கட்டுரையைக் கவிதையாக எழுதுபவருக்கு என்ன பெயர் தருவது? கவிதைகளைத் திறனாய்வாளர்கள் திறனாய்ந்தால் அதன் வாயிலாகக் கவிநுட்பம் வெளிப்படும். சான்றோர் கவிதைகளைக் கவிஞர் ஆராய்ந்தால் என்ன வெளிப்படும்? கவிதைகளில் சொற்கள் இருக்கும். பொருள், அணி, யாப்பு இருக்கும். இவற்றைத் தாண்டி, கவிதைகளில் தத்துவம், யோகம், மறைபொருள் விளக்கம் போன்ற பல அறியப்படாதன புதைந்திருக்கலாம். இவற்றை எல்லாம் வெளிப்படுத்தி நிற்கும் எழுத்திற்கு […]
முனைவர் மு.பழனியப்பன், தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி,சிவகங்கை, திருக்குறளின் கவிதை வடிவம் செறிவானது. அதன் சொற்கட்டமைப்புக்குள் தத்தமக்கான பொருளைக் கற்பவர்கள் பொருத்திக்கொள்வதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. திருக்குறள் காட்டும் பொதுப்பொருள், சிறப்புப் பொருள், தனிப்பொருள், தொனிப்பொருள் என்று அதற்குப் பொருள் காணப் பெருவழிகள் பல உள்ளன. அறிவியல் சார்ந்தும் அறவியல் சார்ந்தும் பொருளியல் சார்ந்தும் தத்துவம் சார்ந்தும் பண்பாட்டியல் சார்ந்தும் மொழியியல் சார்ந்தும் மரபியல் சார்ந்தும் பல கோணங்களில் திருக்குறளை ஆராய்வதற்கு வழிவகை செய்து […]