author

மொழிவது சுகம் 23 ஜூலை 2017

This entry is part 12 of 15 in the series 23 ஜூலை 2017

  அ. அண்டை வீட்டுக் காரனும் அடுத்த வீதிக் காரனும்   எங்கோ இருந்த ஒருவர் அல்லது அடுத்த தெருவில் வாழ்ந்து வந்த ஒருவர்  அண்டைவீட்டுக்காரனாகிறார். அவரோடு முதல் ஆறுமாத த்திற்குப் பிரச்சினை இல்லை. ஆனால் எழாவது மாதத்திலிருந்து  பிரச்சினை ஆரம்பிக்கிறது. « நம்மைவிட அவர் வைத்திருக்கும் டூ வீலர் விலை கூடியது » «  தெருவில் குடியிருக்கும் அரசியல்வாதி அவரிடம் நின்று பேசிவிட்டுப் போகிறான் » «  கீரை விற்கிற பொம்பிளை அவன் பொண்டாட்டிக்கிட்ட பத்துபைசா குறைச்சு கொடுத்துட்டு போவது, […]

கடல் கொண்ட மனிதர்கள் : சூறாவளி(குறுநாவல்) [ஆசிரியர் லெ கிளேஸியோ, பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு சு. ஆ வெங்கட சுப்புராய நாயகர்]

This entry is part 12 of 12 in the series 16 ஜூலை 2017

காலச்சுவடு வெளியீட்டில்,  தமிழ் வாசகர்வெளியில் பரவலாக அறியப்பட்ட  பேராசிரியர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகரின் மொழிபெயர்ப்பில் வந்துள இரு குறுநாவல்களின் தொகுப்பு சூறாவளி.  மொழிபெயர்ப்பாளர் மட்டுமல்ல நூலின் மூல ஆசிரியர் லெ கிளேஸியோவும் தமிழுக்குப் புதியவரல்ல. பிரெஞ்சுமொழியின் முதன்மை எழுத்தாளர், நோபெல் பரிசினை அண்மைக்காலத்தில் வென்றவர் என்பதால் உலகின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரென்ற அடையாளத்தையும் பெற்றிருக்கிறார்.  இச்சூழலில், இலக்கிய உலகின் எதிர்பார்ப்பென்ன ? தம்முடைய வாசகர்கள் யார் ? போன்ற கேள்விகளுக்கும் முன்னுரிமைக் கொடுக்கவேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு. லெ […]

மொழிவது சுகம் 8ஜூலை 2017

This entry is part 12 of 16 in the series 9 ஜூலை 2017

  அ. « Tout ce que j’ai le droit de faire est-il juste ? » உரிமையின்  பேரால்  செய்வதனைத்துமே நியாயமா ? அல்லது சரியா ?.   இக்கேள்வி அண்மையில் பள்ளி இறுதி வகுப்பு பொது த் தேர்வு மாணவர்களில்  இலக்கியத்தைச் சிறப்புப் பாடமாக தேர்வு செய்திருந்தவர்களுக்கு  தத்துவப் பாடத்தில் கேட்கப்படும் இரண்டு கேள்விகளில்  இரண்டாவது. இக்கேள்வி சட்டம் நமக்கு அனுமதிக்கிற உரிமைகள் பற்றி பேசுகிறது. அனுமதிக்காத உரிமைகள் அல்லது மறுக்கிற உரிமைகள் பற்றி கேள்வி எழுப்புவதில்லை.  […]

பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 4 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி) – கவிதை, ,ஓவியம் உரைநடை

This entry is part 6 of 18 in the series 2 ஜூலை 2017

– நாகரத்தினம் கிருஷ்ணா சென்ற கட்டுரையில் பதினேழாம் நூற்றாண்டு கலை இலக்கியத்தின் தொடர்பாக நாடகத்துறையையும், நாடகவியலாளர்களையும் பார்த்தோம். இம் முறை எஞ்சியுள்ள பிறதுறைகளைக் காணலாம். பொதுவாக ஒரு நாட்டின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம், அரசியல், சமூக அமைப்பு இவை அனைத்தையும் முழுமையாக விளங்கிக்கொள்ள அக்காலகட்டத்தின் கலை இலக்கியச் சான்றுகளைக் காட்டிலும் வேறு சாட்சியங்கள் இருக்க முடியா. அ. இலக்கிய விவாத அரங்குகள் இந்நூற்றாண்டில் கலைஇலக்கியங்கள் பெருமளவில் தழைத்தோங்கியமைக்கு , அரசைப் போன்றே நாட்டின் பெரும் செல்வந்தர்கள், உயர்குடிமக்கள் […]

மொழிவது சுகம் ஜூன் 24 2017

This entry is part 10 of 13 in the series 25 ஜூன் 2017

  அ.  அறிவுடையார் ஆவதறிவார்   அறிதலுக்கு அவதானிப்பு மட்டுமே போதுமா ? Pour connaître, suffit-il de bien observer ? பிரான்சு நாட்டில் பள்ளி இறுதிவகுப்பு மாணவர்களுக்கு விருப்ப ப் பாடம் எதுவென்றாலும்  தத்துவம் கட்டாயப் பாடம். இவ்வருடம் இலக்கியத்தை  முதன்மைப்பாடமாக எடுத்திருந்த மாணவர்களுக்குப் பொதுத் தேர்வில் சில தினங்களுக்கு  முன்பு கேட்டிருந்த  இரண்டுகேள்விகளில் ஒன்றையே  மேலே காண்கிறீர்கள். இக்கேள்வியில் இரண்டு முக்கியமான சொற்கள். : ஒன்று அறிதல், மற்றறொன்று அவதானிப்பு. இரண்டுமே  வினைச்சொற்கள். எனினும் அறிதலுக்கு அவதானிப்பு […]

பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 3 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி)

This entry is part 14 of 14 in the series 18 ஜூன் 2017

  (அன்புடையீர், கடந்த ஒரு மாதமாக உடல் நலமின்றி இருந்ததால் தொடர் தாமதமாக வெளிவருகிறது. திண்ணை இதழ் வாசக நண்பர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்)   பிரான்சு நாட்டின் பதினேழாம் நூற்றாண்டு பதினான்காம் லூயியின் நூற்றாண்டு என்றால் மிகையில்லை. 1638 தொடங்கி 1715 வரை அவர் ஆட்சி செய்த தாக வரலாறு சொல்கிறது. ஏற்கனவே கூறியிருந்ததைப் போல அவர் பட்டத்திற்கு வந்தபோது  வயது ஐந்து.  பதின்மூன்றாம் லூயியைப்போலவே தொடக்கத்தில் பிரதிநிதித்துவ ஆட்சி. இங்கும் மகனுக்குப் பதிலாக தாயின் ஆட்சி, […]

மொழிவது சுகம் ஏப்ரல் 30 2017 அ. இயற்கை தரிசனம் : அம்மா ; ஆ. பிரான்சு அதிபர் தேர்தல்

This entry is part 9 of 14 in the series 30 ஏப்ரல் 2017

  –  நாகரத்தினம் கிருஷ்ணா   அ. இயற்கை தரிசனம் : அம்மா ;     ஆ. பிரான்சு அதிபர் தேர்தல்   அ. இயற்கை தரிசனம் : அம்மா    நீர், நிலம் நெருப்பு, ஆகாயம் இவற்றின் சங்கமத்தால்  ஏற்பட்ட விளவுகள் அனைத்துமே இயற்கைதான். மனிதர் உட்பட அனைத்துஜீவன்களும் இயற்கையின் பிரதிகள்தான், இயற்கையின் கூறுகள்தான், இயற்கையின் கைப்பாவைகள்தான், இயற்கையினால் ஆட்டுவிக்கப்படுவர்கள்தான். இயற்கை வேறு நாம் வேறு அல்ல என்ற உணர்வுதான் கடந்த சில கிழமைகளாக என்னிடத்தில் மிஞ்சுகிறது. ஒளியும், நிலமும், நீரும் […]

பிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) பதினேழாம் நூற்றாண்டு

This entry is part 2 of 18 in the series 23 ஏப்ரல் 2017

பிரெஞ்சு ஓவியத்துறையும், இலக்கியங்கள் குறிப்பாக நாடகத்துறை புகழின் உச்சத்தில் இருந்த காலம் பதினேழாம் நூற்றாண்டு. தத்துவ உலகெங்கும்  கொண்டாடப்படுகிற ரெனெ தெக்கார்த்(René Descartes) , நாடகவியலாளர்களும் படைப்பாளியுமாகப் புகழ்பெற்ற பியர்கொர்னெய் (Pierre Corneille) ழான் ரசீன் (Jean Racine) மொலியேர்(Molière) ஆகியோரும் ; லெ நேன் சகோதர ர்கள் (Frères Le Nain), ழார்ழ் துமெனில் (Georges Dumensil de la Tour ), நிக்கொலா பூஸ்ஸன் (Nicolas Poussin)  போன்ற ஓவியர்களும் இந்த நூற்றாண்டில் முக்கியமானவர்கள்.  பதினைந்தாம் […]

மாத்தா ஹரி நாவல் பிரெஞ்சு மொழியில்

This entry is part 7 of 18 in the series 23 ஏப்ரல் 2017

எனி இந்திய பதிப்பகம் வெளியிட்டிருந்த என்னுடைய  இரண்டாவது நாவல்‘மாத்தா ஹரி ‘ ‘Bavani, l’avatar de Mata Hari’ என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் எனது முதல் நாவலாக வெளிவருகிறது. புதுச்சேரியைச் சேர்ந்த  தமிழன் என்ற வகையில் எனது படைப்பு பிரெஞ்சு மொழியில் வருவதில் பிரத்தியேக மகிழ்ச்சி. சிறுகதைகள், நாவல்கள் அனைத்துமே பிரெஞ்சுமொழியில் வரவேண்டும் , வருமென்ற கனவுடன் எழுதப்பட்டவை,  புதுச்சேரி,யையும்  பிரான்சு  நாட்டையும் களனாகக் கொண்டவை, எனவே பிரெஞ்சு வாசகர்களுக்கு அந்நியத் தன்மையைத் தராது என்பது […]

பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்): மறுமலர்ச்சி காலம் (la Renaissance) (1453-1600)

This entry is part 12 of 12 in the series 9 ஏப்ரல் 2017

  நாகரத்தினம் கிருஷ்ணா கலை, இலக்கியத்துறையில்   பதினைந்தாம் நூற்றாண்டில்  நிகழ்ந்த மாற்றங்களை ஒருவித பகுத்தறிவு அணுகுமுறை என வர்ணிக்கலாம். சமயத்தை விமர்சனத்திற்கு உட்படுத்தி,  இயற்கையைப் போற்றிய கிரேக்க- இலத்தீன் தொன்மத்தின்மீது உருவான பற்றுதல் அல்லது  அமைத்துக்கொண்ட நோஸ்ட்டால்ஜியா தடமே மறுமலர்ச்சி. இடைக்காலத்தில் ஆதிக்கச்சக்தியின்கீழ் அண்டிப்பிழைத்த படைப்பாளிகள், கலை இலக்கியம் சார்ந்த துறைகளில் மட்டுமின்றி சமயத்தின் நிழலிலிருந்தும் தங்களை விடுவித்துக்கொண்டு  தொன்மத்திற்கு பயணிக்க முடிவுசெய்ததின் விளவு அது. பொதுவாகவே ஐரோப்பிய நாடுகளில் கலை இலக்கிய துறையில் இத்தாலிநாட்டின் பங்களிப்பினை […]