author

மொழிவது சுகம் – ஏப்ரல்1, 2017

This entry is part 13 of 13 in the series 2 ஏப்ரல் 2017

  அ. மரங்களின் வாழ்க்கை ரகசியம், ஆ. இலக்கிய சொல்லாடல் : இலக்கிய காப்பிக்கூடம் (Café littéraire) ; இ.  பிரான்சில் என்ன நடக்கிறது ? அ. மரங்களின் வாழ்க்கை ரகசியம்.: பீட்டர் வோலீபன் (Peter Wohlleben) என்ற ஜெர்மன் இயற்கையியல்  அபிமானி ஜெர்மன் மொழியில் எழுதி பல இலட்சம் பிரதிகள்   விற்பனையில்  சாதனை புரிந்துள்ள  நூல் அண்மையில் பிரெஞ்சு மொழியில்   வந்துள்ளது. மொழிபெயர்ப்பாளர்,  Bernard Mangiante.  நூலின் பெயர் « மரங்களின் வாழ்க்கை ரகசியம்.(‘La vie sécrète des arbres ) » . […]

பிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) – இடைக்காலம் தொடர்ச்சி

This entry is part 13 of 14 in the series 26 மார்ச் 2017

ரொமான் (le roman) : புதினத்தைப் பிரெஞ்சு மொழியில் ரொமான் என்றே இன்றைக்கும் அழைக்கிறார்கள். இச்சொல் இடைக்காலத்தில் உருவான சொல் தவிர அவை உரைநடையில் அல்லாது பாடல்களால் ஆனவை. (பிரெஞ்சு உரைநடை புதினங்களின் காலம் பதினாறாம் நூற்றாண்டு). ரொமான் என்ற பெயரை இவ்வகை இலக்கியங்கள் பெறுவதற்குரிய காரணம் , அக்காலகட்ட த்தில் இலக்கியங்கள் எனப்பட்டவை இலத்தீன் மொழியிலேயே சொல்லப்படுவது மரபு. தவிர அவை பெருவாரியான சாமானிய மக்களிடமிருந்து விலகி அரசவை, திருச்சபை, மேட்டுக்குடியினர் ஆகியோருக்கு உரியனவாக க் […]

மொழிவது சுகம் மார்ச் 18 2017 அ. இலக்கிய சொல்லாடல்கள் ஆ. சத்தியானந்தன் சிறுகதை இ. கமலஹாசன் குரல்

This entry is part 8 of 17 in the series 19 மார்ச் 2017

நாகரத்தினம் கிருஷ்ணா அ. இலக்கிய சொல்லாடல்கள் ஆ. சத்தியானந்தன் சிறுகதை இ. கமலஹாசன் குரல் அ. இலக்கிய சொல்லாடல்கள் : கலைத்துவ எழுத்து (Belles-lettres) பதினேழாம் நூற்றாண்டிலேயே ‘கலைத்துவ எழுத்தின்’ வருகை உணரப்படுகிறது. எனினும் அதற்குச் சரியானச் சொல்லாடலைப் பிரெஞ்சு இலக்கிய உலகம் உபயோகிக்கத் தொடங்கியது பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில். அக்காலக் கட்ட த்தில் சமயபோதனைகள், பைபிள், சமய வரலாறு ஆகியன மறை எழுத்து (Lettres-saintes) என்றும், இதனைத் தவிர கல்விமான்கள் எழுத்து(Lettres savantes), நல்ல எழுத்து […]

பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலையும் இலக்கியமும்): இடைக்காலம் (கி.பி 476- 1453)

This entry is part 11 of 12 in the series 12 மார்ச் 2017

    பிரெஞ்சுமொழியின் இலக்கிய வரலாறென்பது இடைக்காலத்தில் தொடங்குகிறது, அதாவது ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டுவரையிலானக் காலத்தை  இடைக்காலத்திற்குரிய காலம் என்போமெனில் அதில் கடைசி  இருநூறு ஆண்டுகளில்தான் இலக்கியம் என்ற சொல்லை இன்று  நாம் விளங்கிக்கொள்ளும் பொருளில் கையாளுகிறார்கள்.  பிரெஞ்சு இலக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கு முன்பாகச் சுருக்கமாக  பிரெஞ்சு மொழியின் வரலாறு: இன்றைய பிரெஞ்சு மொழியின் தாய்மொழி இலத்தீன் அல்லது  இலத்தீன் மொழியின்  வெகுசன வடிவம்.  இரும்பு யுகத்தில்,  பிரான்சு நாட்டின் பூர்வாங்கப்பெயர் கோல் (la Gaule) என்றும், […]

இலக்கிய சொல்லாடல்கள் : 1அவான் – கார்ட் (Avant-Garde)

This entry is part 2 of 14 in the series 5 மார்ச் 2017

பிரெஞ்சு மொழியிலிருந்து நவீன இலக்கியம் தருவித்துக்கொண்டதொருசொல். இராணுவப் பொருள்கொண்ட ஒரு வார்த்தை. Avant என்ற பிரெஞ்சு சொல்லுக்கு முன்புறம் என்றும் Garde என்ற சொல்லுக்குக் காவலர் அல்லது வீரர் என்றும் பொருள்.   ஒரு படையில் முன்வரிசையில் இருக்கிற, தாக்குதலை முன்நின்று நடத்துகிற அதன் விளைவுகளையும் முன்நின்று எதிர்கொள்கிற படைக்காவலர் அல்லது படைவீரர் ‘Avant-Garde’, அதாவது ‘படைக்கு முந்தி’,  என்று இருப்பவர்கள், முன்னணி வீரர்கள்.    இச்சொல்லை முதன் முதலில் (தற்போது அனைவரும் அறிந்துள்ள பொருளில்) உபயோகித்தவர் குளோது ஹாரி […]

இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் அவர்கள் நண்பர்களுக்கும்

This entry is part 10 of 18 in the series 12 பெப்ருவரி 2017

  இருமாதத்திற்கு ஒருமுறை எங்கள் பிரெஞ்சு இளைய தளத்தில் ஒரு தமிழ்ச் சிறுகதையை மொழிபெயர்த்து வெளியிட த்திட்டம். கடந்த இருமாதங்களில் சிற்றிதழ்களில், தமிழ் இணைய தளங்களில் வெளிவந்த இளம் படைப்பாளியின் ஒரு சிறுகதையைத் தேர்வுசெய்து , ஏன் பிடித்திருக்கிறது என்பதை திறனாய்வு அடிப்படையில் பதினைந்து வரிகளுக்கு மிகாமல் உங்கள் கருத்தையும் எழுதினால் , உங்கள் தேர்வுக்குட்பட்ட கதைகளில் ஒன்றை நண்பர்களுடன் கலந்தாலோசித்து பிரசுரிக்கப்படும்.   விதிமுறைகள்   1. எழுத்தாளர் 45 வயதிற்குட்பட்ட இளைய தலைமுறையி னராக […]

கதை சொல்லி – 4 (சென்ற வாரத் தொடர்ச்சி)

This entry is part 20 of 21 in the series 16 அக்டோபர் 2016

– பியர் ரொபெர் லெக்கிளெர்க்   கதை சொல்லி , தமது கற்பனை நகருக்கு வந்தாயிற்று.. அதிசய நகரத்தை அடைவதற்கு முன்பாக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. முதியவரின் சகோதரர் நஃபிசாட்டு  இவருடைய துபாம்பூலுக்கே  வந்திருந்து விமானமேற்ற டக்கார் நகருக்கு அழைத்துச்சென்றர். முதியவர் விமானத்தில் காலைவைத்த பின்னரே அவரும் புறப்பட்டுச் சென்றார். விமானப்பணிப்பெண்ணிடம் ஒரு குழந்தையைப் போல அவர் ஒப்படைத்துவிட்டு ச் சென்றார், அதை நபிசாட்டு உணர்ந்திருக்கவில்லை. பாரீஸ் நகரில் ஒரு விமான நிலையத்திலிருந்து மற்றொன்றிர்க்கு  அவரை […]

கதை சொல்லி (சென்றவாரத் தொடர்ச்சி) – 3

This entry is part 18 of 29 in the series 9 அக்டோபர் 2016

பியர் ரொபெர் லெகிளெர்க்   இடது பக்கம் கத்தீட்ரல, வலது பக்கம்  சேன்-போல் தேவாலயம்; நேர் எதிரே அவர் தீவு என்று குறிப்பிட்ட நதி. தம்மை அவர்கள் கடந்துசெல்லும் ஒவ்வொருமுறையும்கையை அசைத்து தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறார். அவர்கள் சுற்றுலா பயணிகள், படகில் நகரைச் சுற்றிப் பார்ப்பவர்கள். அறை எண் 243, பால்கணியில் நிற்கிறார். இப்படியொரு அதிசயத்தை அவருக்களித்த அல்லாவிற்கு மாத்திரமின்றி, ஒருவகையில் இந்த அதிசயத்திற்குப் பங்களித்த சகோதரர் நஃபிசாட்டு, அவர் பேரன் அப்துலயே, வெகுதொலைவில் இருக்கிற உமார் […]

கதை சொல்லி (சென்ற வாரத் தொடர்ச்சி) -2

This entry is part 28 of 29 in the series 9 அக்டோபர் 2016

  பியெர் ரொபெர் லெக்ளெர்க் பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா   நூரம்பரக் – இலண்டன் பயணத்தின்போது செகோனுக்கும் மொரான்ழ்க்குமிடையில் பிறந்த நட்பு நெருக்கடியன நேரத்திலும், சந்தோஷமான தருணங்களிலும்  உருவாகி  நீடிக்கக்கூடிய நட்பு வகையைச் சேர்ந்தது.  அவர்கள் பிரிவுக்குப் பின்னர் முடிவு என்ன ஆயிற்றென்று ஒருவருக்கும் தெரியாது. அவற்றின் மறுபிறப்பு வாழ்க்கையின் எதிர்பாராத நிகழ்ழ்வுகளின் கைவசம் உள்ளது. அவர்களுக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை.   மொரான்ழ் நினைவில் மூழ்கி, அடிக்கடி ஸ்லாபூகூம்  கனவில் ஆழ்ந்துவிடுவதையும், கண்கள் அடிவானத்தில் […]

கதை சொல்லி

This entry is part 12 of 19 in the series 2 அக்டோபர் 2016

பியர் ரொபெர் லெக்ளெர்க்   தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா   (Pierre –robert Leclercq  பிரெஞ்சு படைப்பாளி சிறுகதைகள், கவிதைகள்,நாவல்கள், நாடகங்களென ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்புகளை வழங்கியுள்ளார். குறுநாவலையொத்த இச்சிறுகதை ‘Griot’ என்று ஆப்ரிக்க மொழியில் அழைக்கப்படும் ஒரு கதைசொல்லியைப் பற்றி பேசுகிறது. இக்கதை சொல்லி பிரெஞ்சுக் காலனியாக இருந்த செனெகெல் நாட்டில் இருந்துகொண்டு யுத்தகால அனுபவமென்று கதைசொல்ல முற்படுகிறார். உண்மையா, புனைவா யாருக்குத் தெரியும் ? ஆர்.எல் ஸ்டீவன்ஸன் treasure island ஐ, தனது வீட்டில் அடைந்துகிடந்த […]