author

சுவீகாரம்

This entry is part 21 of 33 in the series 19 மே 2013

பொத்தி பொத்தி வளர்த்தாள் ஒன்று தறுதலையாகும் இன்னொன்று தமிழ் வளர்க்கும் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள் அவளுக்கு வேண்டுமென்று ஒரு கவளை சோற்றையாவது தட்டில் எடுத்து வைத்ததில்லை நாங்கள் வளர வளர சுமையை பகிராமல் மேலும் பாரமானோம் அவளுக்கு இரத்தத் திமிரில் வம்பை வீட்டுக்கு கொண்டுவர ஒரு நாளும் எங்களுக்கு பரிந்து பேசாமல் இருந்ததில்லை அவள் எந்த வேலையிலும் நிலைக்காது சொந்தமயாய் தொழில் வைத்தோம் ஒரு காசு வட்டியில் அசலையும் வட்டியையும் சேர்த்து சுமந்தாள் வாழ்க்கை யார் […]

பேரழகி

This entry is part 23 of 29 in the series 12 மே 2013

உயிர் பிரியும் இறுதி வினாடியில் நினைத்துப் பார்க்கிறேன் வாழ்ந்திருக்கலாமே என்று விடை பெறும் தருணத்தில் தவறவிட்டு விட்டேன் வழியனுப்பி விட்டு திரும்பி இருக்கலாம் மதுப் புட்டியில் மயங்கி விழுந்தேன் புதுப் புது கவிதைளோடு பிறகு எழுந்தேன் போதைியில் அமிழ்ந்தால் தான் எழுதுகோலில் மை கரைகிறது நதியில் நீந்துவதெல்லாம் கவிதையோடு கரை சேர்வதற்காகத்தான் கற்பனைக்காக கடிவாளத்தை கழற்றிய போது துகிலுரித்துக் காட்டினாள் அரசிளங்குமரி சுயம்வரத்தில் தோற்றால் என்ன விளக்கை அணைத்தால் படுக்கை விரிப்பும் பஞ்சு மெத்தை தான் அடுக்களைக் […]

கவிதைகள்

This entry is part 19 of 28 in the series 5 மே 2013

உளி   அவர் பயன்படுத்திய சூரல் நாற்காலி அனாதையாய் கிடந்தது அவர் மணி பார்த்த கடிகாரம் இன்றும் நிற்காமல் சுழன்று கொண்டிருந்தது பத்திரிகை தலையங்கங்களில் பரபரப்புக்கு ஒன்றும் பஞ்சமில்லை காலையில் சூரியன் உதிப்பதும் மாலையில் மறைவதிலிருந்து எந்த மாற்றமும் ஏற்படவில்லை ஆஷ்ட்ரேவில் சாம்பல் அப்புறப்படுத்தப்படாமல் அப்படியே இருக்கிறது அவர் பயன்படுத்திய அத்தனையையும் தீயிலிடுவது இயலாத காரியமாயிருந்தது எழுதுகோல் எழுதித் தீர்க்க காகிதத்தை எதிர்பார்த்திருந்தது கவிதை தன்னையே எழுதிக் கொள்ள அவர் சிதையில் தீயை மூட்டியது.     […]

மறுபக்கம்

This entry is part 16 of 29 in the series 28 ஏப்ரல் 2013

    வானத்தின் கைகள் யாரைத் தழுவ மோகம் கொண்டு அலைகிறது முடவனின் கால்களும் குருடனின் கண்களும் ஊனன் நாடியாக வேண்டும் பிறர் தயவை எந்நாளும் சிநேகிதியிடம் நேரத்தை பகிரும் போது வியர்த்து ஆடை நனைந்து விடுகிறது விபரீதங்கள் நடந்த பின்னரே உணர  முடிகிறது எல்லைக் கோட்டை தாண்டி விட்டோமென்று செய்தது பாபம் என்று உணர்ந்த பின் மனம் தாயின் மடியை தேடியலைகிறது பிறரின் மறுபக்கம் தெரிய வரும் போது ராட்சச சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டுள்ளது ஞாபகம் […]

மீள்பதிவு

This entry is part 4 of 33 in the series 14 ஏப்ரல் 2013

    கிரணங்கள் ஊடுருவிப் பாய்கிறது மனிதனின் நகல் நிழல்களைத் தொடர்கிறது பசி கொண்ட காளைகள் வைக்கோல் போரை சுமக்கின்றன உச்சி வெயில் பாதைகளை மறந்து நிஸ்சிந்தையாய் தோண்டித் துழாவி இலக்கியம் ஒரு கடைச்சரக்கு கொள்வாரின்றி நிலத்துக்கு சுமையாய் கவிதையில் சந்தங்களையும், தாளங்களையும் துரத்தியாயிற்று மின்கம்பம் ஒலியைக் கடத்துவது சிறுபிள்ளை விளையாட்டு நீ நான் உன்னையும் என்னையும் அடகு வைத்து விட்டால் உலகம் இயங்காது வேசிகளாய் அவிழ்த்துக் காட்டும் மரங்கள் ஒரு மதிய வேளை எப்பவும் போல் இருக்கும் […]

வெற்றிக் கோப்பை

This entry is part 19 of 31 in the series 7 ஏப்ரல் 2013

    நீங்கள் கைப்பற்றலாம் விலங்குகள் இல்லா கானகத்தை உங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டலாம் தாகத்திற்கு சிறுநீரைப் பருகும் தேசத்தை உங்கள் தீர்மானத்துக்கு தலையாட்டலாம் இறையாண்மையை அடகு வைத்து பூம்பூம்மாட்டினைப் போல் உறக்கத்தில் கனவுகளுக்கு தடை போடலாம் சிறைக்கு உள்ளே மனதை விலங்கிட்டு உங்கள் ஏகாதிபத்தியத்தை விஸ்தரிக்கலாம் கடனை திருப்பித் தர இயலாத கிராமத்திலிருந்து வாசலில் கோலமிட்டு அழைக்கலாம் நீல வண்ணத்தில் யார் வந்தாலும் நீங்கள் நதியை நாடலாம் பாவமூட்டையை இறக்கி வைக்க உங்கள் கால்களை வருடும் அலைகள் […]

எழுத்து

This entry is part 2 of 30 in the series 17 பிப்ரவரி 2013

கைவிலங்கை உடைத்தெறிந்தால் சமூகம் அவனை பைத்தியமென சிறை வைக்கிறது விதி வெண்கலப் பாத்திரத்தைக் கூட வீட்டில் இருக்கவிடாது எத்தனை இரவுகள் நீ அருகிலிருந்தும் நான் விலிகி இருந்தேன் மனைவியை மதிக்காமல் உடைமையாக்க முற்பட்டது மனப்பிறழ்வின் ஆரம்பம் மெல்லிய லெட்சுமணக் கோட்டை தாண்டுவதற்கு தயாராகும் சீதைகள் உதிர்ந்த இலைகளையும் வானத்து விண்மீனையும் விரல் விட்டு எண்ணிக் கொண்டிருந்தேன் காலம் அனுகூலமாக இருந்தாலும் இருபுறமும் கூர் உள்ள கத்தி ஒருவரை பலி கேட்கிறது. ————————————–

விழுது

This entry is part 27 of 32 in the series 3 பிப்ரவரி 2013

ஆலமரத்தின் வேர்ப்பகுதி நீர்நிலையில் மூழ்கி இருந்தன அதன் விழுதுகள் கூட அதனை கைவிட்டுவிட்டன விருட்சம் தனக்குக் கீழே எதையும் வளரவிடாது புளிய மரத்துப் பேயைப் பற்றி நிறைய இக்கட்டி கதை சொல்வாள் பொரிஉருண்டை அஞ்சம்மாள் குச்சியை நட்டு வைத்தால் கூட வேர் பிடித்து விடும் முருங்கை ஐந்து வருடம் காத்திருந்தாள் போதும் அன்னையைப் போல் காவந்து பண்ணும் தென்னை பனங்கல்லு குடிச்சவனுக்கு ஏது சாமி கேட்காமலேயே நுங்கு கொடுக்கும் கிராமத்து பூமி.

கவிதைகள்

This entry is part 15 of 26 in the series 30 டிசம்பர் 2012

இடப்பெயர்ச்சி கண்கள் கூசுவதிலிருந்து தப்பித்தேன் குளிர்க்கண்ணாடிகள் மூலம் வன்முறைகள் நிரம்பிய உலகில் இரக்கம் பறவையின் இறகுகளாய் உடலை மென்மையாய் வருடியது கரங்களை நனைத்த தண்ணீர் குருதியைவிட அடர்த்தியாய் இருந்தது பீழை தான் வாழ்வு சுமக்கும் பாரத்தை கைத்தாங்கலாக இறக்கி வைப்பார் யாருமில்லை வியர்வை நெடி விலகி ஓடத் தோன்றும் நெருங்கி வருபவர்களையும் தலையை அனுசரணையாய் கோதுபவர்களையும் அவயங்களை காமத்தின் வடிகாலாக கருதுபவர்கள் ஸ்படிக நீரில் சகதியைத் தேடுவர் கருவறையின் புனிதத்தை கெடுத்தவர் உறவுக்கு அவப்பெயர் கொடுத்தவர் சத்யநெறி […]

அறுவடை

This entry is part 20 of 27 in the series 23 டிசம்பர் 2012

கனவுக்கும் நனவுக்கும் இடையே இருந்தேன் காலக் கணக்குகள் தப்பாகாது வசிப்பது ஏ.சி அறையிலென்றால் இறந்த பின் அரியணையில் உட்கார வைத்து சாமரம் வீசுவோர் உண்டோ விதிக்கு கை விலங்கு போட்டுவிட்டேன் என்று நுனி மரத்தில் உட்கார்ந்து அடி மரத்தை வெட்டுவோர் உண்டோ சமரில் சமரசம் கொள்ளாதே என்று கீதை உரைத்தவன் வேடனடிக்க மாண்டது விநோதமல்லவா கருவறை இருட்டு என்றாலும் வெளியே நடப்பது கர்மாதி கர்மமன்றோ கோடி புரளும் கோயிலெல்லாம் உண்டிங்கே மகசூல் விருத்தியாகி விவசாயி வீட்டில் உலை […]