This entry is part 3 of 19 in the series 30 ஜனவரி 2022
“கவிதை அனுபவம் என்பது அழகியல் பார்வை மட்டுமல்ல. சமகால அரசியல், மானுடவியல், சமூகவியல் இவை அனைத்தும் சேர்ந்திருக்க வேண்டும் . நான் இப்படி சொல்லும் போதெல்லாம் அப்படியானால் கவிதைக்கு அழகுத் தேவையில்லையா? என்று கேட்கிறார்கள் சில கவிதைப் பிதாமகன்கள். கவிதை வெறும் அழகியல் சார்ந்தது மட்டும் தான் என்றால் ப்ளாஸ்டிக் ரோஜாக்கள் வந்தப் பிறகு தோட்டத்து ரோஜாக்கள் தேவையற்றுப்போயிருக்கும். ப்ளாஸ்டிக் ரோஜாவில் அழகு உண்டு. மிக நேர்த்தியாக வண்ணங்களும் மென்மையும் பனித்துளியின் காட்சிப்படிமமும் செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும், ஆனால் […]
1975 ஆம் வருடம். ‘அபூர்வராகங்கள்’ திரைப்படம் வெளிவந்த வருடம். இளங்கலை படித்துக்கொண்டிருக்கிறேன். எப்படியாவது அத்திரைப்படத்தை பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பு. அந்த வயதுக்கே உரிய குறும்பு. படித்தது பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரியில். விடுதியில் தங்கிப்படிக்கும் வாழ்க்கை. விடுதியில் ஏகப்பட்ட சட்டதிட்டங்கள் உண்டு. கோடை விடுமுறை தவிர மற்ற விடுமுறைகளின் போதும் பெற்றோர் மும்பையில் வ்சித்ததால் என் போன்றவர்களும் சில மலையகப்பகுதி மாணவிகளும் விடுதியிலேயே இருப்போம். அப்படி இருந்த ஒரு விடுமுறை. எப்படியொ விடுதி […]
பெண்களின் வெளி உலகம் இன்று விரிவடைந்திருக்கிறது. முகநூலின் பங்கு அதில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் முகநூலில் இடம்பெற இண்டர்நெட் தேவைப்படுகிறது அத்துடன்,முகநூலைப் பயன்படுத்தும் பெண்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தவர்களாகவே இருக்கிறார்கள். . கணினி வசதிகள் எதுவும் இல்லாத இடத்திலும் இன்று கைபேசிகள் வந்துவிட்டன. அதிலும் கைபேசிகள் வேலைக்குப் போகாமல் வீட்டிலிருக்கும் பெண்களிடம் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதற்கு இன்றுவரை நம்மிடம் கள ஆய்வுகள் இல்லை. தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட […]
எழுத்தாளர் வாசந்தி அவர்களின் ஜெயலலிதா குறித்த நேர்காணலை வாசித்தேன். ஜெ குறித்து வாசந்தி எழுதிய தன்வரலாற்று புத்தகம் வெளிவருவதை ஜெ தடுத்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்தச் செய்தி தான். இதற்குப் பின்னால் என்ன கதைகள் இருக்கிறது என்பதும் ஜெ குறித்து வாசந்தி எழுதியிருந்தது என்ன என்பதும் ஊகிக்க முடியுமே தவிர எதுவும் இப்போது சொல்வதற்கில்லை. ஆனால் வாசந்தி தன் நேர்காணலில் ஜெ பற்றி சொல்லும் போது She wants to project herself as the […]
இக்கட்டுரையை நிறைவு செய்யும் இத்தருணத்தில் என் நினைவுக்கு வருபவர் செங்கோட்டை ஆவுடையக்காள். செங்கோட்டை ஆவுடையக்காள். “பக்தி, யோக ஞான வேதாந்த ஸமரச பாடல்திரட்டு” – 325 பக்கங்கள் -என்ற பெயரில் ஆவுடையக்காளின் பாடல்களை ஶ்ரீ ஆனந்த நிகேதன் வெளியிட்டிருக்கிறது. “பிரம்மயோகம்” என்ற பெயரில் ஆவுடையக்காளின் சிறுபாட்டு புத்தகம் 450 ஆண்டுகளுக்கு முன்னரே வெளிவந்துவிட்டது. செங்கோட்டை ஆவுடையக்காள் தான் ஒருவகையில் மகாகவி பாரதியாரின் கவிதைகளைப் பாதித்த ஆளுமைமிக்கவர் எனலாம். என்ன காரணத்தாலோ நம் மகாகவி செங்கோட்டை ஆவுடையக்காவைப் […]
இதுவரை நாம் பார்த்தப் பெண்களில் முதலாமவள் காரைக்கால் அம்மையார். கணவன் தொட்ட உடலே வெறுத்து பூதவடிவம் கொண்டாள் இறைவனுக்காக. அடுத்தவள் ஆண்டாள், கண்ணனே என் காதலன் என்று நாயகன் நாயகி பாவத்தின் உச்சத்தில் சென்று அவனுடன் ஐக்கியமானாள். மூன்றாவது சொன்ன அக்காமகாதேவி திருமண ஆசையுடன் நெருங்கியவனை உதறிவிட்டு உதறிய அந்த ஆடையை எடுக்காமல் சமூகவெளிக்குள் வந்துவிடுகிறாள். அடுத்தவள் லல்லேஸ்வரிக்குத் திருமணம் ஆகிறது. ஒத்துப் போகவில்லை. வெளியில் வருகிறாள். இங்கே எவனும் ஆண்மகன் இல்லை என்ற ஆவேசத்துடன். இத்தனை […]
ஆண்டாளைப் போலவே ஆண்டவனையே தன் கணவனாக காதலனாக தலைவனாக வரித்துக் கொண்டவர் கர்நாடக மண்ணில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீர சைவ பக்தி இயக்கத்தின் முக்கியமானவரான அக்கா மகாதேவி. அம்மா, கேள் …நான் அவரை நேசிக்கின்றேன், அவர் இந்த உலகில் உள்ளவர்களில் அவருக்கு மட்டுமே, பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை, ஜாதியும் இல்லை பேதமும் இல்லை. எங்கும் நிறைந்தவர், உருவமற்றவர், மாறாதவர் கற்பனைக்கெட்டாத அழகின் திருவுருவம் அவர்., இந்த உலகில் எல்லாமே அழிந்துவிடும் […]
அடுத்து வருவது சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள். 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தமிழ்ச்சூழலில் பக்தி இயக்கத்தில் மிக முக்கியமானவர் என்பதுடன் பெண்ணியப்பார்வையில் ஆண்டாளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு, பெரியாழ்வார் என்கிற விஷ்ணு சித்தர் நந்தவனத்திலே துளசிச் செடியின் கீழே கொத்திக் கொண்டிருக்கும் போது ஒரு அழகிய பெண் குழந்தை அவருக்குக் கிடைத்தது. அவரும் அக்குழந்தையை தன் மகளாகவே கருதி “கோதை” என்று பெயரிட்டு மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்தார். கோதை நாய்ச்சியார் என்றும் சூடிக் […]
இனி இந்தியாவுக்கு வருவோம். வேதங்களில் பேசப்படும் கார்க்கி வாச்கனவி, மற்றும் மைத்ரேயி ஆகிய பெண்கள் தங்களில் தேடலை தத்துவங்களின் ஊடாக பயணித்து ஆண்களுக்கு இணையாக நின்றதைக் காணலாம். தென்னிந்தியாவில் அவ்வை மூதாட்டி தான் முதல் வரிசையில் வருகிறார். அவ்வை என்ற பெயரில் முச்சங்க காலத்திலும் பெண்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வை என்ற பெண்ணின் அடையாளம் தமிழ்ச் சூழலில் ஒரு வயதான மூதாட்டியாக மாறி இருக்கும் வாய்மொழி கதைகள் நமக்கு அவ்வையும் சொல்லாத இன்னொரு பெண்மொழியை முன்வைக்கின்றன. அதியமான் , பாரி […]