நெஞ்சு பொறுக்குதில்லையே…..

நெஞ்சு பொறுக்குதில்லையே…..

  சிவராத்திரிக்குச் சில நாட்கள் முன்பாய் கண்டெடுக்கப்பட்டது உமா மகேசுவரியின் சடலம். யாருமற்ற வனாந்திர இரவொன்றில் வேரோடு பொசுக்கப்பட்ட பெண்ணுடலின் அணுக்கள் அந்தரவெளியெங்கும் பரவியிருக்கின்றன. வெளியே கேட்டதோ கேட்கவில்லையோ அவளுடைய அலறல்கள் என் அடிவயிற்றில் வீறிட்ட வண்ணம்…. ஐயோ தாங்க முடியவில்லையே…..…

நாணயத்தின் மறுபக்கம்

1. ஒரே சமயத்தில் பல மேடைகளில் முழங்கிக்கொண்டிருக்கிறார்கள்; உலகின் பல மூலைகளிலும் கூட….. ”தமிழ்க்கவிதை வெளியில் எமக்கு முன்பிருந்தோரெல்லாம் தாந்தோன்றிகள், தனாதிபதிகள் [தமிழ்க்கவிதையெழுதி சம்பாதித்ததை ஸ்விஸ் வங்கியில் சேமித்திருக்கக்கூடும்]. துட்டர்கள், தட்டுக்கெட்டவர்கள் தொடைநடுங்கிகள் சீக்காளிகள், ஷோக்காளிகள் சமூகப்பிரக்ஞை என்றால் கிலோ என்ன…

முன்பொரு நாள் – பின்பொரு நாள்

[ 1 ] சிலருக்கு பெயர் சிலருக்கு செயல், சிலருக்கு உவமை சிலருக்கு கயமை; சிலருக்கு குறியீடு சிலருக்கு குறைபாடு, சிலருக்கு பக்தி சிலருக்கு கத்தி; சிலருக்கு பொறுப்பு சிலருக்கு வெறுப்பு, சிலருக்கு புனிதம் சிலருக்கு கணிதம்; சிலருக்கு அறவியல் சிலருக்கு…

கவிதைகள்

அன்றொரு நாள் – என்றொரு நாள் இலைகளை மட்டும் நேசிக்கும் வக்கிரப் பெருவழுதி என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டான் அன்றொரு நாள் அந்த நவீன தமிழ்க்கவிஞன். ‘செலக்டிவ் அம்னீஷியா’வில் தோய்த்தெடுக்கப்பட்ட சமகாலத் தமிழ்க்கவிதைச் சரித்திரத்திலிருந்து புறந்தள்ளப்பட்டான். கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் அதையும் கேள்வி…

ஒரு நாள், இன்னொரு நாள்

  நள்ளிரவைக் கடந்ததுமே விழிப்பு வந்துவிட்டது கொள்ளிவாய்ப் பிசாசாய். கால்கள் சென்றன தம்போக்கில் கணினியை நோக்கி. திரை யொளிரத் தொடங்குவதற்காய் காத்திருக்கும் நேரம் கரை மீறும் ஆத்திரம். பின், சுரங்கெட்ட பியானோ வாசிப்பாய் விசைப்பலகை மீது தட்டத்தொடங்கும் விரல்கள் சில. திறந்துகொள்ளும்…

கவிதைகள்: பயணக்குறிப்புகள்

16 செல்வழியெங்கும் பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது சிந்தா நதி யொன்று! படகில்லை, நீந்தத் தெரியாது, சிறகில்லை, பறக்கமுடியாது.... ஆனாலுமென்ன? ஏழு கடல் ஏழு மலை தாண்டி அந்தப் பச்சைக்கிளியைக் கண்டடைவதுதானே வழிச்செலவின் வரவு என்று சுழித்தோடியவாறு அறிவுறுத்துகிறது ஆறு! 17 தெம்மாங்குப் பாட்டு தெரியாது.…

கவிதைகள்: பயணக்குறிப்புகள்

11 தொடக்கப்புள்ளியிருந்து வெகுதூரம் வந்தாயிற்று- போகவேண்டிய தூரம் அதிகம் என்ற தெளிவோடு. சிறுகற்கள் மலைமுகடுகளாய் வழியடைத்த நிலை மாறி பெரும்பாறைகளும் இன்று துகள்களாகிவிட்ட ரசவாதம்! கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்!! புரியாமல் கருத்துப்போர்வையில் கற்களைச் சுருட்டியெடுத்துவந்து கைபோனபோக்கில் என் ஆறெங்கும் இறைத்துக்கொண்டிருக்கும்…

கவிதைகள் : பயணக்குறிப்புகள்

4 குருவி தென்படாத இயற்கைச்சூழலினூடாய் பயணித்துக்குக்கொண்டிருக்கும்போதும் கவண்கல்லைக் கையிலெடுத்துக் குறிபார்த்துச் சென்றால் கல் இடறி காலில் காயம்படத்தான் செய்யும். சுயநலம் கருதியேனும் சகவுயிர்களை நல்லவிதமாக நடத்தப் பழகு. ’சகோதரத்துவம் மனிதரிடமே வராத போது மிருகங்களிடம் எப்படி வரும்’ என்று எதிர்க்கேள்வி கேட்கிறயா?…

பயணக்குறிப்புகள்

_ ரிஷி 1 ஒருவர் ஒன்றை மொழிந்ததுதான் தாமதம் அந்த இன்னொருவரின் கை வழக்கம்போல் வீறிட்டெழுந்துவிடும்! வெறிகொண்ட பரவசத்தில் அவர் உடல் துடித்தெழ கூறப்பட்டதை தனக்குரிய விதத்தில் பொருள்பெயர்த்துத் தந்துவிடும் அவர் வாய் பல வண்ணங்களில் பிறழ்வாய் பிறவாய். சகபயணிகளில் இது…
’ரிஷி’யின் கவிதைகள்:

’ரிஷி’யின் கவிதைகள்:

1.மச்சம்   இடது ஆள்காட்டிவிரலின் மேற்புறம்  புதிதாக முளைத்த மச்சத்திற்கும் ஆரூடங்கள் உண்டுதான். நிலைக்காத போதிலும் நாளையே அழிந்துபோகுமென்றாலும் ஒவ்வொரு புதிய மச்சமும் பழைய (தலை) எழுத்தின் தொடர்ச்சியாய் புதியதோர்(தலை) எழுத்தாய் உருமாறிக்கொள்ள, மீள்வரவாகக்கூடும் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகள் புதிய விரல்களை நாடியவாறு...…