author

நான் ஒரு பிராமணன்?

This entry is part 1 of 19 in the series 7 பெப்ருவரி 2016

ஆம். நானும் ஒரு பிராமணன் தான். உச்சிக்குடுமி வைத்திருக்கவில்லை. பஞ்சக்கச்சம் உடுத்த வில்லை. பூணூல் போடவில்லை. கோத்திரம் இல்லாத ஒரு கோத்திரம் எனக்கு உண்டு. கோவில்களில் யாகம் நடத்தி அதி ருத்ர ஹோமங்களுக்காக‌ ஸ்ரீ ருத்ரம் சமகம் சொல்லி பூர்ண ஆகுதிக்கு அந்த நீண்ட மர அகப்பையில் எல்லாவற்றையும் பொசுக்கப்போகிறேன் என்று அடையாளமாய் சில தானியங்களையும் தனங்களையும் தீயின் நாக்குகளுக்கு கொடுக்க வில்லை தான். ஆனாலும் நான் பிராமணன் தான். பண்ணிக்குட்டிகளை மேய்ப்பவன் நான். பிணங்களைச் சுடுகிறவன் […]

காதலர் தினம்

This entry is part 7 of 19 in the series 7 பெப்ருவரி 2016

    ஈடன் தோட்டத்தின் மிச்ச சொச்சம். வணிகப்பாம்பும் சைத்தான்கள் காட்டும் ப்ளாஸ்டிக் ஆப்பிளும் பதினாறுகளில் பாய்ச்சுகின்றன‌ தேனாறும் பாலாறும். வாய்க்கால் வரப்புப்புல்லின் பனித்துளியில் கண்ணாத்தாவின் விழி வர்ணம் அந்த முனியனின் நரம்பு புடைத்தலில் யாழ் மீட்டியது. ஒரு பேருந்தில் எச்சில் தொட்டுக்க்கொடுத்த‌ டிக்கட் வாங்குகையில் கண்ணுக்கே எச்சில் ஊற வைத்த ஒரு சுடிதார் பெண்ணின் கண்ணின் கருங்குழியில் விழுந்த‌ அந்தக்காளை ஒரு மௌன ஜல்லிக்கட்டுக்கு தயார் ஆகி கொம்பு சீறி கண் கொதித்து மண் தெறிக்கிறது. […]

புழுக்களும் மனிதர்களும்

This entry is part 2 of 19 in the series 31 ஜனவரி 2016

  காந்தித்தாத்தா என்ற சொல் முள்ளுமுனையில் கூட‌ மூணு குளம் வெட்டும். மூணு குளமுமே பாழ் என்றாலும் வெட்டிய இடம் எல்லாம் அவர் ரத்தமும் வேர்வையும் தான். சுதந்திரத்தை வாங்க‌ அடிமைத்தனத்தை பண்டமாற்றம் செய்யச்சொன்னார். அப்படி மாற்றப்பட்டதை விடவும் மாட்டிக்கிடந்ததே நமக்கு பரம சுகம். கத்தியின்றி ரத்தம் இன்றி யுத்தம் புரிவதன் உருவகமே அந்த அண்ணல்! உருவமே மூளியாய் நின்றவர்களுக்கு கத்தியும் புரியவில்லை ரத்தமும் புரியவில்லை. அதனால் நம் ரத்தமே நமக்கு தர்பூஸ் ஜூஸ். நம் அன்னையர்களே […]

தியானம் என்பது….

This entry is part 8 of 22 in the series 24 ஜனவரி 2016

தியானம் என்பது மூச்சுகளில் தக்கிளி நூற்றல். காற்றை சோறு சமைத்து குழம்பு தாளித்து சாப்பிடுதல். ஆக்ஸிஜனின் “வேலன்ஸி-பாண்ட்” மோல்யூக்யூலர் ஸ்ட்ரக்ச்சர் என்று வேண்டுமானால் நுறையீரலுக்குள் புகுந்து பாடம் எடுக்கலாம். பாடம் படிக்கலாம். உங்களை மயிரிழையாக்கி உங்கள் மூக்கின் வழியே சுருட்டி நுழைத்துப்பாருங்கள். உங்கள் நெருடல்கள் அங்கே ஆயிரம் மலைகளின் பனிக்குடம் உடைக்கும். சுகமாய் மரணம். சுகமாய் ஜனனம். மீண்டும் மீண்டும் வேதங்கள் எச்சில் பட்டு புழுதின்று உங்களுக்குள் தகனம் ஆகி சாம்பல் மேடு தட்டும். காதுப்பறைகளுக்குள் காண்டா […]

இதோ ஒரு “ஸெல்ஃபி”

This entry is part 2 of 16 in the series 17 ஜனவரி 2016

இதோ ஒரு “ஸெல்ஃபி” ==============================================ருத்ரா யார் இந்த மானிடப்புழு? நெளிந்து கொண்டிருந்தாலும் நெளிந்த தடம் எல்லாம் மின்னல் உமிழ்வுகள். ஆயிரம் கைகள். ஆயிரம் கண்கள்..தலைகள். ஆயிரம் ஓசை எழுப்பும் ஆயிரம் நயாகராக்களை கடைவாயில் ஒழுக விடும் கடையனுக்கும் கடையவன். ஒளியாக‌ ஒலியாக‌ நரம்புகளைத் துளை போடும் அதிர்வுகளை இரைச்சல்களை வெளிச்சங்களை சர்க்கரைப்பொங்கலாய் தின்று கொண்டிருப்பவன். எங்கிருந்தோ எதையோ எப்படியோ இழுத்துவந்து வெளியே போட்டு அதன் கருப்பொருள் தெரியாமல் ஆரவாரம் செய்து கொண்டிருப்பவன். காரணமே கரு தரிக்காமல் காரியமாய் […]

ஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டு

This entry is part 6 of 18 in the series 3 ஜனவரி 2016

  கல் பொருதிறங்கும் மல்லல் யாறு புல் தடவி பூக்கள் வருடி நறவம் துரூஉய் பல்லிணர்ப் பரவி வள்ளி படர்ந்த வளமண் பொள்ளி புடை யுடுத்த மன்றுகள் ஆக்கி வேங்கை படுத்த வேங்கை வெரூஉய் பெயரும் காட்சியும் மலியும். அற்றை வானின் அகல்வாய் திங்கள் ஒளியுமிழ் காலை வருவாய் என்ன‌ விழிஅவிழ் குவளை விரியாநின்று நோதல் யான் உற்றது அறிவையோ வாடிய காந்தள் அன்ன ஊழியும் கொடுவிரல் நுடங்கி வீழ்ந்ததும் அறிவையோ. வளி அவி அடவி வெம்மை […]

சினிமாவுக்கு ஒரு “இனிமா”

This entry is part 26 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

ருத்ரா இளம்புயல் ஒன்று கோலிவுட்டுக்குள் தரையிறங்கி இருக்கிறது. குறும்படங்களை குறும்படங்களாகவே எடுத்துக்கொண்டிருந்தவர்கள் அதை கொஞ்சம் பட்ஜெட்டால் பலூன் ஊதி குறுநெடும்படமாக்க எடுத்து குவிக்கிறார்கள். மொத்த அண்டாவில் கதை அவியல் வேகிறது. சில மிளகாயை கடிக்கும். சில ஜிகர்தண்டாவில் சாம்பார் வைக்கும். சில குள்ளநரிக்கூட்டக் குருமா வைத்திருக்கும். சில பெருங்காய டப்பாடக்கர் என்று இருக்கும். தலைப்புகள் கூட‌ ஒண்ணாய் ஒடக்காம் அடிச்சி ஒண்ணுக்கு பெஞ்சதை கதைக்கு சூட்டப்பட்டிருக்கும். அப்புறம் அவங்களுக்கே நாற்றம் சகிக்காமல் “ஒண்ணாப்படிச்சதை” தலைப்பாக்கியிருக்கும். “மொசக்குட்டி”..”தெஹிடி”..என்று வடிவேலுக்கள் […]

பெண்ணே

This entry is part 2 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

=ருத்ரா இந்திய சரித்திரம் இன்னும் இமை திறக்கவில்லை. அறிவு நூல்கள் ஆயிரம்..ஆயிரம்.. ஆனாலும் உன் வளையல் சத்தங்களுக்கும் மல்லிகைப் பூ குண்டு வெடிப்புகளுக்கும் மாங்கல்ய மாஞ்சாக்களின் கண்ணாடித்தூள் அறுப்புக்காயங்களுக்கும் இங்கே எழுதாத இதிகாசங்கள் எத்தனையோ? எத்தனையோ? பிறப்பு எனும் பிரபஞ்ச வாசலில் மாணிக்கவெளியின் மாயக்கணிதப்புதிரை நீ விடுவிக்கின்றாய். ஆனால் இந்த மண்ணின் பாஷ்யங்கள் பிறப்பை தீட்டாக்கி மோட்சத்தை தேடுகின்றன. உலகத்திலேயே கடைந்தெடுத்த போலித்தனம் அல்லவா இது! தங்களுக்குள்ளேயே பூட்டிக்கொண்டு விடுதலைக்கு வீறிடுகின்ற‌ குரல்களில் தான் ஆத்மா முதன் […]

ஆறு

This entry is part 10 of 21 in the series 31 மே 2015

==ருத்ரா மழை நீர் பருக‌ ஆறுகள் எனும் பாம்புகளே இங்கு வாய்கள். அதன் வாலில் உப்புக்கரித்த வேர்வை கடல் ஆனது. சூரியனால் மீண்டும் மீண்டும் கடையப்படுவதால் தான் கடல் ஆனதோ? அமுதமே மீண்டும் இங்கு ஆறு. ஆற்று மங்கைகள் மணல் எனும் துகில் உடுத்தி மணம் சேர்க்கிறார்கள். வளம் தருகிறார்கள். மனிதனின் வீடு ஆசை நியாயமானது தான். ஆனால் ஒரே மனிதன் கட்டும் ஒரே வீட்டில் நூறு பேர் ஆசைகள் அல்லவா “அஸ்திவாரம்” ஆகின்றன? ஒருவன் நூறுபேரை […]

அந்த சூரியனை நனைக்க முடியாது (ஜெயகாந்தன் எழுத்துக்கள்)

This entry is part 9 of 28 in the series 12 ஏப்ரல் 2015

எழுத்துக்கள் வெறும் நிப்புகளின் வடுக்கள் அல்ல! அவை ஒவ்வொன்றும் கடி எறும்புகள் ஆனபோது தான் தமிழ் இலக்கியம் தூக்கம் கலைத்தது. புதிய யுகம் காண‌ தூக்கம் கலைத்த அவருக்கு தூக்கம் ஏது? தூங்கி விட்டார் என்ற செய்தியில் செய்திகள் ஏதும் இல்லை. ஒரு வெட்டியானைப்பற்றிய‌ அவரது சிறுகதைக்கு இப்போது தான் பிள்ளையார் சுழி போடுகிறார் என்று எடுத்துக்கொள்வோம். பிள்ளையார் என்று சொல்லால் அவரை நாம் கொச்சைப்படுத்தினாலும் மார்க்ஸ் எங்கல்ஸின் டையலக்டிகல் மெடீரியலிஸம் அவருள் நாடி துடித்துக்கொண்டிருப்பதாய் தான் […]