சுப்ரபாரதிமணியன் எட்டாவது நிறுவனத்திலிருந்து அம்மினி நேற்றுதான் விலகினாள். விலகினாள் என்றால் அந்தக் கணினி நிறுவனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டாள். நேற்று ஒரு மோசமான நாளாக இருக்கும் என்று அம்மினி காலையிலேயே நினைத்திருந்தாள். அது எப்படி மோசம் என்று அவளுக்குத் தெரியவில்லை. சமிக்ஞை சொல்லும் எந்தக்கனவும் அவள் காணவில்லை.பள்ளிக்குடம் ஏதோ கனவில் வந்து போயிருந்த்து. காலையில் எழுந்தபோது முன்வாசலுக்கு வந்த போது அப்படியெதுவும் அபசகுணம் தென்படவில்லை. குறிசொல்பவன் அந்த வீதியில் அலைந்து கொண்டிருந்தான், ஆனால் அவன் ஏதாவது சொல்லி விட்டுப்போனானா […]
சுப்ரபாரதிமணியன் திரைப்பட விழாக்கள் அதன் கவர்ச்சியையும் இயல்பையும் இழந்து கொண்டிருக்கின்றன. உள்ளங்கையில் குறுந்தகடுகள் குவிகையில் திரைப்பட விழாக்களுக்குச் செல்வது அவசியமற்றது, தேவையில்லாதது என்று தோன்றினாலும் திரைப்பட விழாக்களில் அதிகமாகிக் கொண்டிருக்கும் பிரதிநிதிகள் எண்ணிக்கை வெகுவாகக் கூடிக் கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் 5 ஆயிரம் பிரதிநிகள் கூடுவர். இப்போது திருவனந்தபுரத்தில் நடைபெறும் கேரள சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு 10 ஆயிரம் பேர் பதிவு செய்து கொண்டு கலந்து கொள்கிறார்கள். இவர்களில் பாதிக்கும்மேற்பட்டவர்கள் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.11 திரையரங்குகளில் சர்வதேசப் […]
சுப்ரபாரதிமணியன் அமராவதிக்குப் போயிருந்தேன் அமராவதியும் ஜீவனில்லாத நதியாகி விட்டது. ஆனால் தாராபுரம் பகுதி அமராவதி பகுதிக்குப் போகையில் ஆறுதலாக இருக்கும். சாயக்கழிவு, வீட்டுக்கழிவு எதுவும் கல்க்காமல் சற்றே சுத்தமாக அமராவதி காணப்படும். இவ்வாரம் சக்தி விருது அளிப்பதற்காக –பெற்றவர் சவுதாமின், ஓய்வு பெற்ற ஆசிரியை, ஹோமியோ மருத்துவர், சுயமுன்னேற்ற நூலகளை எழுதிவருபவர்- தாராபுரம் சென்றேன். நண்பர் குள்ளாளக்காளி பாளையம் பாலசுப்ரமணியம் அவர்களுடன் சென்றேன். தாராபுரம் அவ்வளவு அழுக்கிலாத, அவ்வளவு குப்பையில்லாத நகரம்( உடுமலையிலிருந்து எங்காவது கிளம்பி வந்து […]
சுப்ரபாரதிமணியன் தமிழ்ச்சூழலில் அறிவியல் நூல்கள் பெரும்பாலும் விளக்க நூல்களாகவே அமைந்து விடுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. அறிவியல் துறைகளில் பணிபுரிவோர் தங்களின் அனுபவங்களை பதிவு செய்வது குறைவு, அவர்களுக்கும் இலக்கியம், நுண்கலைகளுக்கும் தொடர்பும் இரசனையும் வெகு குறைவாகவே இருக்கிறது . அவர்கள் மலிந்த இரசனை கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டும் நெடும் காலமாக இருந்து வருகிறது. அறிவியல் விஞ்ஞானிகள் தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்வது வெகு குறைவே. அதிலும் இலக்கிய அக்கறை கொண்டவர்களே அதை சில சமயங்களில் செய்கிறார்கள். […]
சுப்ரபாரதிமணியன் வலது கை பட்டு மெழுகுவர்த்தி பாக்கெட் கீழே விழுந்த மொசைக் தரைச் சப்தத்தினூடே மின்சாரம் போய் அப்பகுதி இருளடைந்தது .. அவள் நின்றிருந்த சூப்பர்மார்க்கெட் “மாலி”ன் இரண்டாம் தளம் முழுவதும் இருட்டாகி விட்டது. “ உலகம் இருண்டு விட்டது “ பூனையாய் கண்களை மூடியிருந்தாள் சுகன்யா. கைபேசி ஒளிர்ந்து “ கண்ணம்மா ..கண்ணம்மா.. “ என்றது. இந்த சமயத்தில் கைபேசியை எடுத்து பேசி விடக்கூடாது. எடுக்கவில்லையென்றால் வகுப்பில் இருப்பதாக நினைத்துக் கொள்வர்.அது சவுகரியம்.எடுத்து விட்டால் கல்லூரியில் […]
” இந்தியாவில் ஏழு குழந்தைகளில் அய்ந்து பேர் பள்ளிக்குச் செல்லவில்லை. இங்குள்ள 5 கிராமங்களில் 4ல் பள்ளிக்கூடமே இல்லை. தொடக்கக் கல்வியை நாடு முழுக்க இலவசக் கட்டாயக் கல்வியாக்கச் சட்டம் கொண்டு வர வேண்டும்.” 1910 ம் ஆண்டில் இப்படிக் குரல் எழுப்பி பிரிட்டிஷ் அரசிற்கு அவமானகரமான விசயம் இது என்று சுட்டிக் காட்டியவர் கோகலே. எல்லோருக்கும் கல்வி தேவை என்பதை 1937ல் காந்தி அறிவித்தார், 1993ம் ஆண்டில் கல்வி அடிப்படை உரிமை, அதை இலவசமாக்க் கொடுக்க […]
கல்வித்துறை சம்பந்தமான பல நூறு விதை நெல்களின் தொகுப்புகளிலிருந்து புது பரிமாணமான விதைனெல்லாய் இத் தொகுப்பை ஆயிஷா நடராசன் கட்டமைத்திருக்கிறார்.உலக வகுப்பறைகளை ஒரு பார்வை பார்த்து மூச்சுவிட்டுக்கொண்டு நம்மைப் பற்றியும் கொஞ்சம் யோசித்திருக்கிறார்.ஆசிரியர் மாணவர் உறவு பற்றியும் அந்த உறவு இன்றைக்கு அச்சுறுத்தலாய் மாறி வருவதைப் பற்றிய அபாய பெருமூச்சுகளையும் இத்தொகுப்பு கொண்டிருக்கிறது அந்தப் பெருமூச்சு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தரும் நெருக்கடியில் அவர்களை பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக மாற்றுவதில் வெற்றி கொள்கிற தோல்வியடைகிற இந்தியச் […]
சுப்ரபாரதிமணியன் அமைதி .. அமைதி .. கோர்ட் நடக்கிறது சுப்ரபாரதிமணியன் நாராயணன் காம்ளே என்ற மராத்திய கவிஞர் மீது சாட்டப்பட்ட குற்றத்தால் சிறையில் அடைக்கப்படுகிறார். குற்றம்: சாக்கடைசுத்தம் செய்யும்தொழிலாளியைத் தற்கொலைக்கு தூண்டியதாக. எப்படித்தூண்டினார் : அவர் மேடையில் பாடல்கள் பாடியது மூலமாக.உணர்ச்சிப் பாடல்கள்மூலமாக. இவ்வுலகம் வாழ வழியில்லாதது . சாகத்தான் லாயக்கு என்றக் கருத்தைச் சொன்னதால். அவருக்கு வருமானம்; குழந்தைகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுப்பது. அவர் கைது செய்யப்பட்ட நாளில் சொல்லிக்கொடுத்து: வண்ணத்துப்பூச்சிகள் பற்றி. வழக்கமான வழக்கறிஞர்கள் […]
சுப்ரபாரதிமணியன் போபாலில் விச வாயு நினைவுச் சின்னம் பற்றி விசாரித்தபோது பலரும் போபால் நினைவு மருத்துவமனையைப் பற்றியே சொன்னார்கள். போபால் நினைவுச்சின்னம் பார்க்கவே சிரமப்பட வேண்டியிருந்தது. கெடுபிடிகள்.. அசுரன் பிடித்த நகரம் போல் சோபை இழந்து இருக்கிறது பழைய போபால்… யூனியன் கார்பைடு தொழிற்சாலைக்கு அருகாமையில் சுலபமாய் 5 கி மீ பகுதியில் வசிப்பவர்கள் படும் சிரமங்களை நினைத்துப் பார்க்கவே வேதனை பெருகுகிறது போபால் நினைவுச்சின்னம் பார்க்க கெடுபிடிகள் சோர்வைத் தந்தன. முகப்பு காவலாளிகள் கும்பல் உள்ளே […]
மற்றும் சிலர்: * என் முதல் நாவல்.திமுக ஆட்சிக்கு வந்த பின் வேலை இழந்த இந்தி ஆசிரியர் ஹைதராபாத்திற்கு பிழைக்க வந்த கதை. நர்மதா..மருதம் இரு பதிப்பகங்கள் 3 பதிப்புகள் வெளியிட்டுள்ளன. அதன் ஆதரசம் போஜராஜன் என்பவர் அவரை 23 ஆண்டுகளுக்குப்பின் ஹைதராபாத்தில் சந்தித்தேன் * பிரகாஷ் நிறை இலக்கிய வட்டம் கூட்டம் நடத்த இடம் தருகிறார் உபசரிக்கிற தாய் உள்ளம்.நன்கு கதை சொல்கிறார். 0 ஹைதராபாத் சாந்தாதத்தின் முதல் மொழிபெயர்ப்பு நூல் தெலுங்கானா போராட்ட பெண்கள் […]