எஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு ( உயிர்மெய் பதிப்பக வெளியீடு, சென்னை ) திருப்பூரில்” யாதும் ஊரே. யாவரும் கேளிர்” விருது இன்று தரப்பட்டது. காது கேளாதோர் பள்ளி சார்பில் தரப்பட்டது இவ்விருது… இப்பள்ளி முன்பு நம்மாழ்வார், ஜெயமோகனுக்கும் விருது வழங்கியுள்ளது. புதன் மாலை திருப்பூர் கோதபாளையம் காது கேளாதோர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் முருகசாமி பரிசு வழங்கினார், பள்ளி அறக்கட்டளைத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். காது கேளாத […]
” என்ன திருட்டுத் தபால் ஏதாச்சும் கெடச்சிருச்சா . மேய்ஞ்சுட்டு இருக்கீங்க” “ இதுலே அதுவெல்லா புடிக்கறதுக்கு வயசும், புது டெக்னாலஜி மூளையும் வேணும் “ கண்களை இடுக்கிக் கொண்டு மூக்குக் கண்ணாடி பிரேமை மூக்கிலிருந்து தற்காத்துக் கொண்டார் மணியன். .தனலட்சுமி பூச்சி பூச்சியாய் நெளியும் கணினி எழுத்துக்களைப் பார்த்து நகர்ந்து விட்டாள்..அவளுக்கும் மூக்குக்கண்ணாடிதான் தெளிவு தரும். “ அதிகாரம் இருந்துச்சு திருடின்னீங்க.. இதிலே முடியுமா.. “ “ என்ன பெரிய அதிகாரம் போ… இப்போ இங்க […]
தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் ஸ்டாலின் குணசேகரன். ஈரோடு புத்தகக் கண்காட்சியின் முக்கியத் தூண். பொதுவுடமைகட்சி சார்ந்து இயங்குகிற முக்கிய நிர்வாகி. இவரின் பேச்சுக்கள் பல்லாயிரக்கணக்கானவர்களை ஈர்க்கும். அவை பெரும்பாலும் காற்றில் கரைந்த பேரோசையாக கரைந்து விடும். ஆனால் அவற்றில் சிலவற்றை புத்தகமாக்கும் பதிவில் இந்நூல் வெளிவந்திருக்கிறது..கோவை வானொலி , சென்னை வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்பட்ட 55 உரைகள் ( 5 நிமிட உரைகள் ) சிறுகட்டுரைகளாக்கப்பட்டிருக்கின்றன. அவை வலியுறுத்தும் விசயங்களாக சமூக அறம் சார்ந்தவற்றை […]
“ஒரு உறைக்குள்ள ரெண்டு கத்தி இருக்க முடியாதே. ஒரு எடத்தில ரெண்டு அழகிக இருக்க முடியாதே” மணிகண்டன் சிரித்துக் கொண்டே சொன்னான். பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் லலிதாவும், சுகன்யாவும் உட்கார்ந்திருந்தனர். சுகன்யா இறுகிய முகத்திலிருந்து புன்னகையை உதிர்த்தாள். லலிதா தூரத்தில் எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். விறு விறுப்பான காற்று மெல்லப் பேருந்தைச் சூழ்ந்து கொண்டது. சோளப் பயிர்கள் குட்டையாய் நின்றிருந்தன. சில் வண்டுகளின் சப்தம் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருந்தது.அபரிமிதமான பனி எல்லோரையும் குறுகி […]
சமீபத்தில் கனடா இணைய தளத்துக்காரர் , கிரிகெரி டியன், என்பவr அவரின் இணைய தளத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுவரைச் சந்தித்திராத 100 பேருடன் தேனீர் அருந்தியபடிச் சந்திக்க விரும்பினார் ” இந்த உலகம் தனிமைப்பட்டு விட்டது. நாமெல்லாம் சமூக மனிதர்கள், சமூக விலங்குகள். ஆனால் ஏன் இப்படித் தனிமைப் பட்டுப் போனோம். பேச, பரிமாறிக் கொள்ள, கதைகள் சொல்ல, சிரிக்க, சந்தோசிக்க, கற்றுக் கொள்ள சந்திப்பு அவசியம் “ என்றார். aaஅவருக்கு 100 கோப்பைத் தேனீருடன், […]
இங்குதான் இருந்தது கடல். கடல் தண்ணீரில் கரைந்த நம் நிர்வாண பிம்பங்களை உண்ட கடல் மீன்களுக்குப் பித்தேறின. அலைகள் கரையைத் தொட்டு விலகும்போது நமது உடல்களின் உவர்ப்பில் கொஞ்சம் உப்பு கூடிவிடுகிறது. அதே கடலருகில் சூரியனின் ஆயிரம் ஆயிரம் கரங்கள் நம் வேட்கையின் சுவர்களில் நிறங்களைப் பூசியதைக் கண்டோம். கடற்கரையின் தீராத மணல் வெளி நமது தீராத விருப்பங்களை எவ்வளவு குடித்த பிறகும் சுவடற்று இருந்தது. கடலின் அவ்வளவு […]
இவ்வாண்டில் வெ. இறையன்புவின் இரு நூல்களை நியூசென்சரி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 1. சிம்மாசன சீக்ரெட் 2. துரோகச்சுவடுகள் தலைமைப்பண்பு பற்றி பேசுகிறபோதெல்லாம் அது பரம்பரையாக வந்தது போல் சொல்லும் பண்பு இருந்து கொண்டே இருக்கிறது. பிறப்பு தலைமைப்பண்பை தீர்மானிப்பதாய் இருப்பதாய் இருந்த மாயைகளும், கட்டமைப்புகளெல்லாம் தகர்ந்து விட்டன. தொடர்ந்த உழைப்பு, தன்னலமற்றத் தன்மை தலைமைப்பண்பிற்கு வழிகோலுகிறது. அவ்வகையில் தலைமைப்பண்பிற்கான விசயங்களாய் விழிப்புணர்வுடன் இருத்தல், பேச்சில் கவனம கொள்ளுதல், துணிவுடன் தொடங்குதல், உடனடியாக […]
குறிப்புப்புத்தகத்தை எடுத்தார் மாணிக்கம். கை மெல்ல உயர்ந்து உதட்டைத் தொட்டது. இது முத்தமா…மீண்டும் உதட்டருகே கொண்டு சென்று உதட்டை அதன் மீது அழுத்தினார் இது முத்தமா…பெண் உதடு பட்டால் மட்டுமே முத்தம். ஒரு வகைக் கிளர்ச்சியாகவே இருந்தது. அகால நேரத்தில் லிப்டை விட்டு வருபவர்கள் அதிசியப் பிறவிகள் என்று சிலர் நினைப்பர். மாணிக்கம் கூட அப்படி நினைத்தார். அகால நேரம் என்றால் இரவு, நடுநிசி என்றில்லை. ஆட்கள் நடமாட்டம் குறைந்த நேரம். நல்ல வெயில் . நல்ல […]
திருப்பூரை அடுத்த ஒரு கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தில் 10 கி.வாட் சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பு செய்து விவசாயத்தில் ஈடுபட்டு வரும் குவைத்தில் வாழும் இளங்கோவன் பற்றி பசுமை விகடனின் ஜல்லிப்பட்டி பழனிச்சாமி எழுதிய ஒரு கட்டுரை பேட்டியில் தெரிந்து கொண்டேன். திருப்பூர் பின்னலாடை தொழில் மின்சார வெட்டால் அவதிப்பட்டிருந்த காலம் அது. சூரிய ஒளி மூலமான மின்சார உற்பத்தி பற்றிய முக்கிய கட்டுரைப்பேட்டி அது. சமீபத்தில் கோவையில் நடைபெற்ற இளங்கோவனின் “ […]
மாற்று மருத்துவம் பற்றி தீவிரமான அக்கறையை கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். ஆங்கில மருத்துவ முறைகள் சாதாரண மக்களுக்கு எட்ட முடியாத உயரத்தில் சென்றுகொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் குறைபாடுகளும், மோசமான சுகாதாரமும் விளிம்பு நிலை மக்களை நிரந்தர நோயாளிகளாக்கியுள்ளன. தமிழ் மரபின் மருத்துவ முறை சித்த வைத்தியம் உலகிற்கு இன்னும் இன்றும் பல விசயங்களைக் கற்றுக் கொடுக்கிறது. சீனாவின் அக்குபஞ்சர் மருத்துவ முறை இந்தியாவில் 2003ல்தான் சட்டமுறைப்படி அங்கீகரிக்கப்பட்டது. தமிழர்கள் பார்வையில் அதற்கு […]