அண்ட்டால்யா - கொன்யா - கப்படோஸ் - நாகரத்தினம் கிருஷ்ணா ஏப்ரல் - 1 மீண்டும் அண்ட்டால்யாவிலிருந்தோம். ஒரு வாரத்திற்குப் பின் அண்ட்டல்யாவை வேறுதிசைகளில், வேறுகோணத்தில் வேறு கதைப்பொருளில் காண இருந்தோமெனச் சொல்லலாம். முதல்…
நான் என் வாழ்வில் முதன் முதலாகச் சந்தித்த எழுத்தாளர், கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களாகத்தான் இருக்கமுடியும். என் சிறுவயதில் என் தந்தையார் பழ. முத்தப்பன் அவர்கள் எங்களின் சொந்த ஊரான புதுவயலுக்கு ஒரு முறை…
ஒருவழியாக நான் வெளியிட்டு உள்ள ”திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை’ புத்தகங்கள் எட்டு அட்டைப்பெட்டிகளில் சென்னையிலிருந்து பெங்களூர் தனியார் பார்சல் ஆபிசுக்கு வந்து அவற்றை என்னுடைய இல்லை. . .…
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பெண்மையைப் போற்றிய கவிஞர்கள் பெண்மையைப் போற்றாத கவிஞர்கள் இல்லை. ஆனாலும் பெண்விடுதலைக்குக் குரல் கொடுத்த உன்னதக் கவிஞராகப் பாரதியார் விளங்குகிறார். தாம்…
ஆதி இராஜகுமாரன், மலேசிய “நயனம்” வார இதழின் ஆசிரியர் (“பாப்பா பாவலர்” என அறியப்படும் மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன் 75 வயதை எட்டியுள்ளார். அவருடைய வாழ்வை நினைவு கூரும் கட்டுரை) தலைமுறைகள்தோறும்…
அடுத்த நாள் காலை ராஜ்காங்பூருக்குப் போனோம் என்பது நினைவில் இருக்கிறது. இந்த பயணம் முழுதிலும் கலுங்காவைப் பற்றி ஜார்ஜ் தன் இச்சையாகவே தகவல் அறிந்து கொண்டாரே தவிர நாங்கள் எங்கு செய்த பயனத்துக்கும்…
ருபாய்யத் பற்றி எனக்கு முதலில் தெரிய வந்தது ஃபிட்ஜெரால்டின் ஆங்கில மொழிபெயர்ப்பில். அடுத்து தேசிக விநாயகம் பிள்ளையின் மொழிபெயர்ப்பில் 1950- களின் ஆரம்ப வருடங்களில் எப்போதோ. அப்போதே உடன் பின் தொடர்ந்தது ச.து.சு. யோகியின்…
(எஸ் சுவாமிநாதன்) அர்த்தம் என்பதை எப்படி அர்த்தப் படுத்திக் கொள்வது என்பது மொழியியலும், சமூக வரலாறும், அன்றாட வழக்காடலும் இணைந்து நிற்கும் ஒரு களத்தில் எழுகிற கேள்வி. இதற்கான பதில் சுலபமானதோ எளிய ஸூத்திரங்களுக்குள்…
1.முன்னுரை: திருக்குறளின் அறம் நடைமுறை வாழ்க்கையின் உன்னதத்தின் அடிப்படையாகும். இரு வரிகளில் அமைந்ததால் மட்டும் குறளல்ல. அணுவைத் துளைத்து ஆழ்கடலைப் புகட்டியதால் மட்டும் குறளல்ல. ஒவ்வொரு அதிகாரத்திலும் பேசப்படும் கருத்தின் முழுமையைப் பத்துக் குறட்பாக்களில்…
முனைவர் நா.இளங்கோ இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி. மனிதகுல வரலாற்றைச் சிந்தனைகளின் வரலாறு என்றும் சிந்தனையாளர்களின் வரலாறு என்றும் வருணிக்கலாம். ஏனெனில் மனிதகுல முன்னேற்றம் காலந்தோறும் பல்வகைப்பட்ட சிந்தனையாளர்களின் தத்துவச்…