அடுத்த முறை

அடுத்த முறை

ஆர் வத்ஸலா அடுத்த முறை  யாரிடமாவது  அன்பு செலுத்தினால் வெளிக்காட்டாதே இப்படி அதை அடுத்தமுறை காண்பிக்காதே கண்களில்  இத்தனை கரிசனத்தை யாரிடமும்  அடுத்தமுறை  வெளிப்படுத்தாதே  இவ்வளவு அழகான  சொற்களில் உன் மதிப்பை யாரிடமும் அடுத்த முறை  பிரதிபலிக்காதே உன் கண்களில்  யார்…
விநாயகர்

விநாயகர்

ஆர். வத்ஸலா பல விநாயகர்கள் உண்டுபூஜையறையில்பர்மாவிலிருந்து அகதியாக நடந்து வருகையில்ஒரு சிகை மழித்த பாட்டி தூக்கி வந்த பளிங்கு விநாயகர்நிற்க வைத்தால் லொட்டென்று விழும் நவதானிய விநாயகர்கற்பனை வளத்தால் மட்டுமே அது விநாயகர்என்று ஒப்புக் கொள்ளக் கூடிய மொண்ணை உருவம் கொண்டநாள்…
நங்கூரம் 2

நங்கூரம் 2

ஆர் வத்ஸலாஒரு சாண் துணை தான்அமையும்உனது நங்கூரமாகஎனபூர்வ ஜென்மங்களில்சலவை செய்யப்பட்ட மூளையுடனேயே பிறந்தேன்பணி, அண்ணனுக்குப் பிறகுகவனித்தார் சற்றுஎன்னைதந்தைஅளவாய்பாசம் செலுத்தினர்சகோதரர்கள்‌தங்களுக்கு மணமாகும் வரைகொண்டவனும்கூரையும்தூற்றினர் கைகோர்த்துஆண் பெண் நட்பிலக்கணமறியாமடையரைபுறந்தள்ளிதோழியர் உதவியுடன்உற்பத்தி செய்து நானேபாய்ச்சிக் கொண்டேன்எனது நங்கூரத்தை
நங்கூரம் 1

நங்கூரம் 1

ஆர் வத்ஸலா கவிதை எழுதுதல் எனது நங்கூரம் என நம்பி இருந்தேன் திடீரென புரிந்தது இன்று அது அப்படி இல்லை என்று கடலில் ஆடிக் கொண்டிருக்கும்  ஓட்டைப் படகு மூழ்காமலிருக்க அதில் நிரம்பும் நீரை வெளியே கொட்டுவதைப் போல் நான்  செய்து…

இரண்டு கவிதைகள்

வாகன  இரைச்சலில் சாலைகள் காலடி  ஓசையில்  பாதைகள் இடைப்பட்ட புல்வெளியில் ஒரு மைனாவாய் மேய ஆசை ---------- அவள் தைரியமாகவே உலா வருகிறாள் உரக்கப் பேசுகிறாள் எவர்தான் என்ன செய்யமுடியும்? அவளுக்கென்று ஒருவன் அவனோடு இருக்கும்வரை அமீதாம்மாள்
அழகு

அழகு

கோ.வைதேகி பூ பூத்து காய் காய்த்து நிழல் தரும் போதெல்லாம் இல்லாத அழகு பறவை வந்து கூடு கட்டும் போது  வந்து விடுகிறது மரத்திற்கு....
கோடை மழை 2

கோடை மழை 2

ஆர் வத்ஸலா 'சடசட' வென்று பெய்து நிற்கிறது கோடை மழைபால்கனியில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்வெளிச் சுவற்றில் பட்டுகைமேல் தெறிக்கும்தண்துளி சுடுகிறதுசிறு வயதில்பின் கட்டில் இருக்கும் அம்மாவுக்குத் தெரியாமல்முற்ற மழையில் தலை நனைத்துஅம்மா வருவதற்குள்அண்ணனும் நானும்ஒருவர் தலையை மற்றவர் துவட்டி விட்டுசாதுவாகஅம்மா…
கோடை மழை 1

கோடை மழை 1

ஆர் வத்ஸலா மழைக்கென்ன!வருகிறதுஅதன் இஷ்டம் போல்நிலத்தின் தேவையைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல்காணாமல் போவதும்அதே இலக்கணப்படி தான் அவனைப் போலவே - பொங்கி வழிகிறதுஎன் கோபம்தன்மானம் தொலைத்தநிலத்தின் மீது
வாக்குமூலம்

வாக்குமூலம்

வளவ. துரையன் நான் உன்னை முழுதும்மறந்துவிட்டதாகநினைக்கிறேன்.ஆனாலும்உன் நினைவுகளெல்லாம்பலாச்சுளைகளைமொய்க்கப் பறந்து வரும்ஈக்களாக வருகின்றன.தண்ணீரில் மிதக்கவிட்டக்காகிதக் கப்பல்கவிழ்ந்து விடுமோவெனக்கலங்கும் சிறுவனின்மனமாய்த் தவிக்கிறேன்.மலர்த்தோட்டத்தில்எல்லாமேமணம் வீசினாலும்மனத்தில் ஒன்றுதானேவந்தமர்கிறது.இறுதியில் முன்னால்ஓடுபவனைவெற்றி பெற விட்டவனாய்த்தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.
என்ன செய்வது?

என்ன செய்வது?

வளவ. துரையன் எனக்குத் தெரியும்நீ எப்பொழுதும்உண்மையை நேசிப்பவன்.மண்ணால் சுவர் வைத்துபுறஞ்சுவருக்கு அழகாகவண்ணம் தீட்ட எண்ணமில்லை.வார்த்தை அம்புகளைத்தடுக்க உன்னிடம்வலுவான மனக் கேடயம்வாழ்ந்து கொண்டிருக்கிறது.பொய் மழை பெய்கையில்முழுதும் நனைந்தாலும்புறந்தள்ளிப் போகிறாய்.எதிரி நாகங்களைஎதிர்கொள்ளக் கைவசம்ஆடும் மகுடி உண்டு.ஆனால்துளைத்திடும் முள்கள் கொண்டதோள்களால் தழுவுகையில்என்ன செய்வது?