தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

வாக்குமூலம்  

                                ---வளவ. துரையன்                   நான் உன்னை முழுதும் மறந்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனாலும் உன் நினைவுகளெல்லாம் பலாச்சுளைகளை  மொய்க்கப் பறந்து வரும்  ஈக்களாக வருகின்றன. தண்ணீரில் மிதக்கவிட்டக் காகிதக் கப்பல் கவிழ்ந்து விடுமோவெனக் கலங்கும் சிறுவனின்…

வாழ்க்கை

அன்று என் முப்பதுவயதுப் பண்டிகையில் ஆயிரம் வெள்ளியில் எனக்கு உடுப்பு ஐம்பது வெள்ளியில் அப்பாவுக்கு உடுப்பு இன்று  எழுபது வயதில் என் பிள்ளைகளின் பண்டிகையில் ஐயாயிரம் வெள்ளியில் அவர்களுக்கு உடுப்பு ஐம்பது வெள்ளியில் எனக்கு…

எனக்கு ஒரு கோப்பை மது கொடுங்கள்

ப.மதியழகன் 1 சிறுசிறு துயரங்கள் என்னை வேதனையின் அடிஆழத்திற்கு இழுத்துச் செல்கின்றன ஒரு கோப்பை மதுவோடு ஒரு துளி விஷத்தைக் கலந்து எனக்குக் கொடுங்கள் என்னை மறந்திருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் நான்…

மொகஞ்சதாரோ 

மனிதர்கள்  சந்தித்துக்கொள்ளும்  பாதையில்  சுவர்ண பட்சிகள்  வருவதில்லை. வறண்டு போன  நதிகளின் கண்ணீர்  கதையை  அவைகள் கேட்ட பிறகு  மனித வாடை  துர்நாற்றம் வீசுவதாக  புகார் கூறுகின்றன.  இடிந்து போன  அரண்மனையின்  கடைசி செங்கல்லில்தான் …

திளைத்தலின் உன்மத்தம்

ரவி அல்லது இப்பெரு மழையினூடாகவரும்உன் நினைவுகளின்கதகதப்புதான்பார்க்குமாவலைத் தடுத்துபரவசம் கொள்ள வைக்கிறதுஎனக்குள்ளானஉன் ஆதுரத்தில்வெயிலானாலும்மழையானாலும்வெளுக்காமல். -ரவி அல்லது.ravialladhu@gmail.com

ஒரு தாம்பத்தியத்தின் தன்னிழப்பு

வெங்கடேசன் நாராயணஸ்வாமி  எப்போதுமுள்ள மௌனமே  நம்மிடையே - நாம் நம்முள் உறைவதின் அத்தாக்‌ஷியாய், நம்மிருப்பே இடையறாத  சொற்பொழிவாய், வாழ்வாய், நாமொருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தாலும்,  பார்க்காத மாதிரிதான், பார்க்காது இருந்தாலும், பார்த்துக் கொண்டிருப்பது போல்தான். ஒன்றாயிருப்பது…

சித்தம் ஒருக்கி

வெங்கடேசன் நாராயணஸ்வாமி  பக்கத்து வீட்டுச் சாளரக் கதவு திறக்கும் ஓசை . . . இறுக மூடினேன் என் வீட்டுச் சாளரக்கதவை, சிகரெட் புகையுள்ளே வராமலிருக்க. காற்றைக் குறை கூறுவானேன்?

கவிதை

குடைபிடி ஞாபகங்களில்  எச்சரிக்கின்றது  வயோதிகம்.  குழந்தையின்  மழலைப்போல  போய்விடுகின்றது  கால்கள்.  குளிரில்  அணைத்தப்படி செல்லும்  இளசுகளின்  உரசலில்  என் வாலிபத்தின்  விலாச முத்திரை தெரியும்.  எங்கோ  போய்விட்ட  அறுந்த  காத்தாடியின்  நூலை பிடிக்க  அலையும் …

விலாச குறிப்பு

இறக்கிவிட்ட ரயில்  வெகுதூரம் சென்றுவிட்டது  சில  ஞாபக விலாசங்களோடு.  "ஏதோ நினைவுகள் மலருதே...," பாடிய  குருட்டு பிச்சைக்காரனை  கைத்தடியில்  அழைத்து செல்லும்  சிறுமி . கடலை பர்பி  கைக்குட்டை  விற்று செல்லும்  நொண்டி அண்ணன். …

சுயநலம்

ஆர் வத்ஸலா உன் சோகங்களை பகிர்ந்து கொள்ள  ஒரு நல்ல தோழியாக என்னை‌ தேர்ந்தெடுத்தாய்  நீ உன்னுடைய ஒவ்வொரு சோகத்திலும்  அமிழ்ந்தெழுந்து ஆறுதல் அளித்தேன் உனக்கு நான்   வெகு காலத்திற்கு பிறகு தான் தெரிந்தது…