விருப்பங்கள்

என் கருதுகோள்கள் ஒவ்வொன்றாக உதிர தொடங்குகிறது பொய்மையின் உருவில் . வழியெங்கும் அதன் பிம்பங்கள் என்னை துரத்துகிறது உண்மையின் சிந்தனையாய் . குறிப்பிட்டு சொல்ல ஏதும் இல்லாமலே வார்த்தை இயலாமையில் உறைகிறது . அவரவர் நியாயங்கள் பொய்மையும் உண்மையும் உருவில் அலைந்து…

காந்தி சிலை

எங்கோ பறந்து வந்து இளைப்பாறி எச்சமிட்டபோதும் அதே புன்னகையுடன் இருக்கிறார் காந்தி தடி இருந்தும் அந்த பேருந்தில் பத்து பதினைந்து காந்தி சிலையாவது பயணித்து இருக்க வேண்டும் நிறுத்தம் வந்ததும் 'காந்தி சிலை இறங்கு' என இரு முறை கூவும் நடத்துனர்…

இரவின் முடிவில்.

இரவின் முடிவில் புறாக்கள் பறந்தன. நாகங்கள் புற்றுக்குள் இரையோடு பதுங்கின. இரவின் சோம்பலை விரட்ட சூரிய கிரணங்கள் பாய்ந்தன. நதியெங்கும் புனிதங்கள் வாய் மூடிக் கிடந்தன. நிர்வாண சடலங்கள் சிதைகுள் வெந்தன. மழைத்துளி பட்டு பூமிக்குள் நடனம். நதியின் உதிரத்தில் பயிர்களின்…

புரிந்தால் சொல்வீர்களா?

சக்தி சக்திதாசன் எனக்குள்ளே என்னைப் பரப்பி அதற்குள்ளே அதனைத் தேடி எதற்காக இத்தனை ஏக்கம்? விடைகாணா வினாக்களின் முழக்கம் நினவாலே இசைத்திடும் சங்கீதம் கனவோடு கலந்திடும் சிலநேரம் முடிவோடு தொடக்கம் முடியாமல் ப்கலோடு இரவாகத் தெரியாமல் இது என்ன மாற்றம்? இதுதானா…

எவரும் அறியாமல் விடியும் உலகம்

பா. சத்தியமோகன். விற்காமல் வீசப்பட்ட சுருங்கல் மாலைகள் அதிகாலைத் தெருவில் வதங்கிக் கிடக்கும் கீரை மூட்டை இறக்கிப்போடுவதற்கு கல்யாணிக் கிழவி பேருந்து முன் நின்று இன்றும் கூவுகிறாள் விடை பெற்றுக் கொண்டிருக்கிறது கோடைகாலத்தின் மார்பில் ஒட்டியிருக்கும் குளிர் புலரப் போகும் இந்த…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -3)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "கடவுள் உனக்குக் கொடையாக அளித்துள்ளார் ஆன்மீக இறக்கைகளை ! அவற்றின் மூலம் நீ காதல் விரி வான்வெளிக் கோட்டையில் விடுதலையாகப் பறக்கலாம். நீ உன் கையாலே உன்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இறைவன் திருநாம உச்சரிப்பு (Zikr) (கவிதை -53 பாகம் -2)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இறைவன் திருநாம உச்சரிப்பு (சென்ற வாரத் தொடர்ச்சி) வழிப் பயணிகள் பின்னே நடந்து செல் விளக்கேற்றிய சில விளக்குகள் அணைந்து விட்டன விரைவாக ! விடிவு வரை…

மழையின் முகம்

துளி துளியெனத் தூளியில் ஆடிப் பாடுகிறது மழை. பக்கம் பக்கமாய் மணலில் எழுதி கடலில் சேர்க்கிறது காவியமாய். வரையும் சித்திரம் வளர்கிறது விரிகிறது இலையாய் மலராய் மரமாய்.வனமாய். காங்கிரீட் தளங்களில் விழுந்து எழுந்து காயமும் படுகிறது. கொட்டிக் கொட்டி கண்ணாடியில் முகம்…

வெளிச்சம்

அந்தகாரத்தில் எனக்கு வழி காட்டிய அச் சிறிய தங்க நிற ஒளிப் புள்ளி வெளியே தென்படாதது எங்கு, எப்பகுதியலது தேடினாலும் தென்படாதது அலங்காரங்களற்ற விழிகளில் இருளை விடவும் அனேகமானவை வெளிச்சத்தில் மறைந்துபோகும் தென்படாமலேயே - இஸுரு சாமர சோமவீர தமிழில் -…

கோழியும் கழுகும்…

வறுத்தெடுக்க  மனிதன் கொத்திக் குடிக்கப்  பாம்பு இயற்கையும்  சிதைக்க.... உறக்கம் விற்று திசையோடு தவமிருக்கிறது காக்கும் அடைக்காய். ஆகாயக் காவலன் கண்களில் மிஞ்சிப் பொரித்த ஒற்றைக் குஞ்சை உறிஞ்சும் மரணம். அருக்கனையே மறைக்கும் அதிகாரம் வானில் அடங்கினால் அரிகண்டம் மாட்டுவதற்கொப்பு. இறகு…