சோ.சுப்புராஜ் கவிதைகள்

காத்திருப்பு வெகு நேரமாயிற்று விமானம் தரை இறங்கி...... விடைபெற்றுப் போயினர் உடன் பயணித்தவர்கள் யாவரும்; வெறிச்சோடிக் கிடக்கிறது விமான நிலையம்; அடுத்த விமானத்திற்கு இன்னும் அவகாசமிருப்பதால்...... அலைபாயும் கண்களுடன் காத்திருக்கிறார் அழைத்துப் போக யாரும் வராத அவஸ்தைகளை விழிகளில் தேக்கி  …

ராணி., பெண்ணாதிக்கம் இரு கவிதைகள்.

ராணி.. ************************** சேணம் பிடித்து பாயும் குதிரையின் பிடறி சிலிர்க்க தோல் பட்டியில் கால் மாட்டி எவ்வுகிறேன்.., முன்பின்னாக ஆடும் மரபொம்மைக் குதிரையில் கூட இல்லை.. திருவிழா ., தேரோட்டம்., புரவி எடுப்பு.. அணிவகுப்பு முடித்து அமைதியாய் உறைந்து அசைவு மறந்த…

அபியும் அப்பாவும்

சிகரெட் பிடிப்பதில்லை மது அருந்தும் பழக்கம் இல்லை பிற கெட்ட பழக்கங்கள் இல்லை - இவன் வேண்டாம்   வெள்ளி செவ்வாய் தவறாது கோவிலுக்கு போவான் இறைவழி நடப்பதில் தான் விருப்பம் வம்புதும்புக்கு போய் பார்த்ததில்லை - இவன் வேண்டாம்  …

வட்டத்துக்குள் சதுரம்

சில சதுரங்கள் கூடி தம்மைக்கொண்டு ஒரு வட்டத்தை உருவாக்க முனைந்தன சில சதுரங்கள் அதற்கு ஒத்துக்கொண்டன சில அவற்றை சற்றுத்தள்ளி நின்று வேடிக்கை பார்த்தன ஒரு சதுரம் நாம் எவ்வளவு தான் முயன்றாலும் வட்டத்தை உருவாக்க முடியாது என வாதிட்டது அதனை…

வலி

சமீலா யூசுப் அலி 2011.06.28 முதுகின் அடித்தண்டில் குவிந்தாரம்பிக்கும் வலி அரைநொடியில் தொடைகளில் கனக்கும் காலிரண்டும் துவள அவள் கலண்டரை வெறிப்பாள். ஒரு நொடி, புயலின் பின் பூமியாய் உடல் சுதாகரிக்க முன்னை விடவும் பேயாட்டத்தோடு வலி நரம்பு பிய்த்துண்ணும். தலைக்குள்…

ஸ்வரதாளங்கள்..

காலிவயிற்றின் உறுமல்களை எதிரொலித்த வாத்தியங்களும் தன்னிலை மறந்து தாளமிட்ட கால்களும் ஓய்வெடுக்கும் சிலஇடைக்காலத்துளிகளில், மெல்லியதாய் முனகிக்கொள்கின்றன தட்டில்விழும் வட்ட நாணயங்கள்; ஸ்வரம் தப்பாமல் இறைஞ்சும் குரலுடன் இழைந்து.. அமைதிச்சாரல்

அவள் ….

கருநிற மேகமொன்று சற்று வெளிறிப் போயிருந்தது அவளது பார்வை கலைந்து போனதில் நிலைத்து மேகத்திரையில் காற்றின் அலைகள் பிய்த்து போட்டன கற்பனைகளை மீண்டும் ஒன்று கூடிற்று கலைந்து போனவை பார்வையின் உஷ்ணம் தாங்காது கோர்த்து வைத்தவை காணாமல் போக கண்ணீர் வடித்தது…

எதிர் வரும் நிறம்

ஓவிய பலகையில் பளீரென்று வரவேற்ற ஊதா, புதுப்புது நிறங்கள் ஏற்றபட ஏற்றபட பின் அடுக்குக்கு மெல்ல நகர்ந்து கொண்டே போக ... முன்வாசலில் நிலைப்பாட்டை நிறுத்த சிவப்பை போல ஆக்ரோஷமாக இருந்திருக்க வேண்டுமோ ? வெள்ளை போல வெள்ளெந்தியாய் இருந்திருக்க வேண்டுமோ…

மகுடி கேட்ட மயக்கத்தின் ஆட்டம்

சிரிக்கவும் இயல்பாய் கரைந்துருகி அழவும் மரணிக்கவும் தெரிந்த கடிகார விட்டத்தின் முட்கள் ஒலிஎழுப்பி தெரிவிக்கும் அதன் குறிப்புணர்த்தலில் காலம் கட்டுண்டு கிடக்கிறது நிறுத்தினால் முடியாத கால ஓட்டத்தை பந்தயவீரர்கள் கடந்துவிட முயற்சிக்கிறார்கள் காலத்தை கைப்பற்றும் முயற்சியில் எல்லோரும் தோற்றுப் போக அகாலவெளியில்…

பிரியாவிடை:

பிரியா விடைகளும் பிள்ளைகளுக்கு முத்தங்களும் என வாழ்ந்து கொண்டிருந்தது விமான நிலையம் எட்டிய உயரத்தில் கிட்டிய நெஞ்சில் மகனை முகர்ந்தது மூதாட்டி உம்மா கடவுச் சீட்டு அடங்கிய கைப்பை முழங்கையில் தொங்க கடைக்குட்டியை கைகளில் ஏந்தி வாப்பா பயணம் சொல்ல குழந்தை…