சித்தநாத பூபதி ஒரு பெண் அதுவும் ஏழு குழந்தைகளுக்குத் தாய் , எப்பொழுது கிணற்றில் விழுவாள் என்று ஊரே எதிர்பார்க்குமா ? ஆனால் பத்மாவதி – லூசுப்பத்மா விசயத்தில் அப்படித்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் அவள் கெட்டவள் இல்லை. அவள் சின்ன வயதில் இருந்தே பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குத்தான் அது புரியும். தீப்பெட்டி விளையும் ஊர்களில் ஒன்று. ஊடுபயிராக பட்டாசும். விடிந்தது முதல் அடையும் வரை வேலை. சினிமா பார்க்கனும் என்றால் பஸ் ஏறி சாத்தூர் போகணும். ஆனால் […]
குன்றத்தூர் ரோடில் போனீர்களானால் பெரிய பணிச்சேரி என்று ஒரு பகுதி வரும். அந்தப் பகுதியில் போய் வாப்பா கடை என்று கேட்டால் யாரும் காட்டுவார்கள். காதர் பாய் அந்தக் கடையின் சொந்தக்காரர். இமிடேஷன் நகைகளை விற்கும் கடை அது. இப்போது பரவிக் கிடைக்கும், ஒரு கிராம் கோல்ட் கடைகளுக்கு முன்னாலேயே ரோல்ட் கோல்ட் கடைகள் சென்னையில் பிரசித்தம். அப்படி ஒரு கடைதான் காதர் பாயின் கடை. மங்களம் மாமி வாப்பா கடையில்தான் எல்லாவற்றையும் வாங்குவாள். சுற்றியிருக்கும் புர்க்கா […]
– கே.எஸ்.சுதாகர் வரன் மிகவும் பிரயாசை உள்ள மனிதர். ஒரு டொலரேனும் வீணாகச் செலவழிக்க மாட்டார். வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்துவிட்டு குசினிக்குள் சென்றார். அப்பொழுதுதான் மனைவி வாணி ‘ஷொப்பிங்’ முடித்து வந்திருந்தாள். வாங்கி வந்த பொருட்களை அடுக்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். “பில்லை ஒருக்கால் தாரும் பார்ப்பம்!” “சரி… இனி அக்கவுண்டன் வந்திட்டார்.” வரன் பில்லைப் பார்த்தார். முகம் அஸ்ட திக்கிற்கு கோணலாகியது. “ஐஞ்சு கிலோ உருளைக்கிழங்கு இரண்டு டொலர் எண்டு எங்கையோ கிடந்தது. நீர் என்னடாவெண்டால் […]
குழல்வேந்தன் அன்பு தோழர்களே, நமக்கெல்லாம் பெண்களைப் பற்றிய செய்திகளோ அல்லது தகவல்களோவென்றால் விருப்பமானதன்றோ? பெண்களைப் பற்றிய சித்திரங்கள், வண்ணப் படங்கள், சிற்பங்கள், கவிதைகள், காவியங்கள், நாடகங்கள், என எங்கும் பெண்கள் எதிலும் பெண்களென்பதன்றோ நம்மவர்களின் விருப்பமும் தேர்வும். ஆடவர்களின் ஜட்டி விளம்பரம் தொடங்கி முகச் சவரம் செய்துகொள்ள ாடவர்கள் பயண்படுத்தும் பிலேடு விளம்பரம் வரை எல்லாவற்றிர்க்கும் நமக்கு ஒரு பெண்ணின் பிம்பமன்றோ வேண்டி இருக்கிறது. எனவே தோழர்களே நானும் உங்களோடு பெண்ணைப் பற்றியே பேசுவதென்று தீர்மானித்துள்ளேன். பெண்கள் […]
யோசனையில்லாத உபாயம் ஒரு காட்டில் ஆலமரம் ஒன்றிருந்தது. அதில் நாரைகள் கூடு கட்டி இருந்து வந்தன. மரத்தின் ஒரு பொந்தில் ஒரு கருநாகம் இருந்தது. நாரைகளின் குஞ்சுகளுக்கு இறக்கை முளைப்பதற்குமுன்பே அவற்றை தின்று காலங்கழித்து வந்தது. அப்படியே ஒருநாள் ஒரு நாரையின் குஞ்சுகளைப் பாம்பு தின்றுவிட்டது. அதனால் அந்த நாரை துக்கத்தோடு ஏரிக்கரைக்குப் போய் தாரை தாரையாகக் கண்ணீர் விட்டு அழுது தலையைத் தொங்க விட்டுக்கொண்டு நின்றது. அதைப் பார்த்த ஒரு நண்டு, ‘’மாமா, ஏன் இப்படி […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ஸ்டீஃபன் ! உனக்கு வாணிபத்தில் ஈடுபாடு இல்லை. வழக்காடும் திறமை இல்லை ! கலை, இலக்கிய நாடகத்தில் இச்சை துளியும் இல்லை ! வேதாந்தம் உனக்கு விளங்காதது ! ஆனால் மனிதர் பலருக்குத் தெரியாத நல்லது கெட்டது நியாயம் மட்டும் உனக்கு எப்படிப் புரியுது ? பெர்னாட் ஷா (ஸ்டீஃபன் அண்டர்ஷாஃப்ட்) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த […]
தீட்சதிரின் மகனை மனதில்வரித்துக்கொண்டு அவன் தந்தையுடன் சம்போகம் செய்வதுகூட ஒரு தாசியின் தர்மத்திற்கு உகந்ததுதானென்ற மனப்பக்குவத்தை பெண்ணிடம் மீனாம்பாள் ஏற்படுத்தியிருந்தாள். 11 இளவேனிற் காலமென்பதால் வெப்பம் முன்னிரவு நேரத்திலும் மூட்டம்போல கவிந்திருந்தது. நீர்ப் பாசி போல கரிய இருள் இரவு நீரில் கலந்தும் கலவாமலும் மிதந்துகொண்டிருந்தது. மரங்கள் காற்றை எதிர்பார்த்து அசைவின்றி இருந்தன. தொழுவத்தில் கட்டத் தவறிய பசுவொன்று வெகுநேரமாக இருட்டில் நிற்கின்றது. மரகதப்பச்சையில் ஒளிறும் அதன் விழிகளின் காட்சியில் பள்ளி அறையின் சன்னல் கம்பிகளைப் பிடித்தபடி […]
– கே.எஸ்.சுதாகர் சிவசம்பு தனது தங்கையின் திவசதினத்திற்குப் போக வேண்டும் என்ற நினைப்பில் அயர்ந்து தூங்கி விட்டார். சிவசம்புவிற்கு அறுபத்தைந்து வயதாகிறது. தனது மகன் மருமகளுடன் கனடாவில் ரொறன்ரோவில் இருக்கின்றார். கடந்த வருஷம் அவரது தங்கை பரமேசு அகால மரணமடைந்துவிட்டாள். உறக்கத்தில், சிவசம்புவிடம் தங்கை கதைத்தாள். “அண்ணா! உங்கை இருந்து என்ன செய்யுறாய்? நீயும் கெதியிலை மேலை வாப்பா. சும்மா ஜாலியா பாக்கு வெத்திலையும் போட்டுக் கொண்டு ஊர்க்கதையள், வயல்வம்புகள் கதைச்சுக் கொண்டு இருக்கலாம்.” “அது சரி. […]
பழநிக்கு அருகில் நெய்க்காரப்பட்டி என்று ஓர் ஊர் இருக்கிறது. அங்கே ஒரு பெரிய மிராசுதார். நெய்க்காரப்பட்டி மைனர் என்றால் தெரியாதவர்களே கிடையாது. பெயருக்கேற்ற மாதிரி ஐந்து சவரனில் வடக்கயிறு போன்ற மைனர் செயின் அவரது பொன்னிற மேனியில் தவழ்ந்து கொண்டிருக்கும். ஆனால் நெற்றியில் மட்டும் பட்டைப்பட்டையாக விபூதி. பெரிய முருகபக்தர். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் “முருகா! முருகா!” என்று வாய் முனகிக்கொண்டே இருக்கும். முருகன் பெயரை எப்போதும் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக ‘முருகன்’ என்ற […]
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் எட்வர்ட் திரிஃபீல்ட் இரவில் தான் எழுதுவார். ரோசிக்கு ஆகவே ராத்திரியில் சோலி கீலி எதுவுங் கிடையாது. ராத்திரியானால் அவள் யாராவது சிநேகிதர்களுடன் ஹாயாக வெளியே கிளம்ப சௌகர்யமாய் இருந்தது. வசதியாய் வாழ அவளுக்கு இஷ்டம். குவன்டின் ஃபோர்டின் கையில் துட்டுச் சக்கரம் தாராளமாய்ப் புழங்கியது. அவன் வாடகைக்காரை வரவழைத்து, இராத்திரி விருந்துக்கு என்று கேட்னருக்கோ சவாய்க்கோ அவளை அழைத்துப் போவான். அவளும் இருந்ததில் படாடோபமான உடையை அணிந்து அவனுடன் கிளம்பினாள். அந்த ஹாரி […]