சொல்லவந்த ஏகாதசி

This entry is part 40 of 48 in the series 11 டிசம்பர் 2011

ரயில்வே காலணியின் கோடியில் அமைந்திருந்த அந்த இரண்டு ப்ளாக்குகள் எங்களுக்கு அமானுஷ்யமாகத் தெரியும். அவற்றின் முன்புறம் ஒரு பெரிய புளியமரம் அடர்ந்து கிளைபரப்பி நிற்கும். சாதாரணக் குருவிகள், காக்கைகள் மற்றும் எப்போதாவது குரல் கொடுக்கும் கிளிகளோடு பெயர்தெரியாத பல இறகு ஜீவன்கள் அந்த மரத்தில் காலை நேரத்தில் உட்கார்ந்து பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருக்கும் . பின்புறம் பம்பிங்க் ஸ்டேஷனும் அதைத்தொடர்ந்து நாங்கள் அதிகம் பார்க்கக்கிடைக்கும் நத்தைகள் ஊறும் யானைப்புல் காடும் நீண்டிருக்கும். புளியமரம் ஆயிரம் வருஷங்களாக அங்கிருப்பதாகவும் அதில் […]

ஆனந்தக் கூத்து

This entry is part 34 of 48 in the series 11 டிசம்பர் 2011

நிர்மல் நான் கண்விழித்தபோது முதலில் என் பார்வையில் விழுந்தது அந்தக் குடிலின் கூரையுடைய அடிப்பகுதி தான். மிகவும் எளிமையாக நடுவில் ஒரு உச்சிப் பகுதியும், அதிலிருந்து கூம்பாகச் சாய்த்து வரிசையாக வேயப்பட்ட ஓலைகளும் எனக்கு ஒரு வண்டிச் சக்கரத்தை நினைவூட்டின. என்னைச் சுற்றி நான்கைந்து பேர் இருந்தனர். நான் கண்விழித்ததைக் கண்டதும் அவர்கள் ஆச்சரியத்துடன் முணுமுணுத்துக் கொண்டனர். என் கால்கள் இருந்த திசையிலிருந்து சூரிய ஒளி குடிலுக்குள் நுழைய ஆரம்பித்திருந்தது. குடில் முழுக்கப் பனிப்புகை சூழ்ந்திருந்தது. எனக்கு […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 1

This entry is part 30 of 48 in the series 11 டிசம்பர் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “என் இதயம் கிழிந்து போன பிறகு எந்த உடை அணிந்தால் என்ன ? அணியா விட்டால் என்ன ?  என் ஆன்மா கீறப் பட்ட பிறகு இந்த வெளி வேடம் எல்லாம் இனித் தேவை இல்லை.” மேஜர் பார்பரா மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation […]

பொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்

This entry is part 22 of 48 in the series 11 டிசம்பர் 2011

சாரதா அந்தத் திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன் மனதில் வந்து ஒட்டிக் கொண்டது அந்தத் துக்கம். இதே மனநிலையில்தானே மாலையிலும் இருந்தேன். பின் எப்படி இதை ஒதுக்கிவிட்டு உள்ளே நுழைந்தேன் என்று அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். ஆனாலும் இந்த ஆண்கள் பெரிய சாமர்த்தியசாலிகள். எப்படியாவது மனநிலையை மாற்றி தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்கிறார்கள். சட்டென்று இந்த நினைப்பு வந்தபோது பின்னால் அவனும் வருகிறானா என்று திரும்பிப் பார்த்தாள். படிகளில் இறங்கிக் கொண்டிருந்தான் பாண்டியன். தான் கிளம்பிய […]

முன்னணியின் பின்னணிகள் – 17 சாமர்செட் மாம்

This entry is part 18 of 48 in the series 11 டிசம்பர் 2011

  தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்   இவையெல்லாம் எனக்கு சுவையான விவரங்கள். ஆனால் ராய்க்கு இவையெல்லாம் விஷயமே அல்ல. சட்டென என் பேச்சை நிறுத்தினார். ”ஏம்ப்பா இலக்கியம் பத்தி அவர் பேசவே இல்லையா?” என்று கேட்டார். ”பேசினாப்ல எனக்கு ஞாபகம் இல்லை. அப்பிடி இலக்கியம் பத்தி எப்பவுமே பேசிட்டிருக்கிற எழுத்தாளர் அல்ல அவர். எழுத்து பத்தி உள்ளே அசைபோடுவாரே தவிர எல்லாத்தையும் பேசிற மாட்டார், அவர் சுபாவம் அப்பிடின்னு நினைக்கிறேன். எங்க கியுரேட்டுக்கு புத்தகம் வாசிக்கக் குடுப்பார். […]

பஞ்சதந்திரம் தொடர் 21 புத்திகூர்மையுள்ள கிழவாத்து

This entry is part 17 of 48 in the series 11 டிசம்பர் 2011

புத்திகூர்மையுள்ள கிழவாத்து   ஒரு காட்டுக்குப் பக்கத்தில் ஆலமரம் ஒன்று இருந்தது. அதில் பல பெரிய கிளைகள் உண்டு. அங்கு ஒரு வாத்துக் கூட்டம் இருந்து வந்தது. அந்த மரத்தடியில் கோசாம்பி என்றொரு கொடி படர்ந்தது. அதைக் கண்ட கிழவாத்து, ”இந்தக் கொடி ஆலமரத்தைப் பற்றிக்கொண்டு ஏறினால் நமக்குக் கெடுதிதான் உண்டாகும். கொடியைப் பிடித்துக் கொண்டு ஒருவேளை யாராவது மரத்தில் ஏறி நம்மைக் கொல்லலாம். சுலபமாகப் பிடுங்கி யெறிகிற மாதிரி சிறியதாக இருக்கும்போதே, நாம் இந்தக் கொடியைப் […]

மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 4

This entry is part 13 of 48 in the series 11 டிசம்பர் 2011

ஆண்டையிடத்தில் ஒருவித அச்சம் அவனுக்கு இருந்தது. அந்த அச்சம் தலைமுறை தலைமுறையாக அவனுடைய முன்னோர்களுக்கு மட்டுமல்ல அவனுடைய இனத்தோடும் பயணித்துவந்தது. அதை பராமரிக்கின்ற வகைமையை எல்லா எஜமானர்களையும்போலவே தீட்சதரும் தெரிந்துவைத்திருந்தார்.”. 6. வெயில் சற்று மட்டுபட்டதுபோலிருந்தது. தலையிற் கட்டியிருந்த சவுக்கத்தை அவிழ்த்து முகத்தைத் துடைத்தான். மார்பைத் துடைக்க எத்தனித்தபோது முந்திரிப்பழம்போல வயிற்றில் புடைத்திருந்த தொப்புளைப்பார்க்கக்கூச்சமாக இருந்தது வெட்கப்பட்டான். இனி வெட்கப்பட்டு ஆவதென்னவென்று சமாதானமும் செய்துகொண்டான். தீட்சிதருக்குகூட அப்படியொரு தொப்புளுண்டு ஆனால் அவருக்கு தொப்புளான் என்ற பெயரில்லை. இவனுடைய […]

வெண்மேகம்

This entry is part 10 of 48 in the series 11 டிசம்பர் 2011

பொழுது நன்றாக விடிந்து விட்டிருந்தது.பால்காரனின் மணிச்சத்தம் அருகாமையில் கேட்டது.நாளிதழ் போடும் பேப்பர் பையன் வீசிய தினசரி கதவில் மோதி கீழே விழுந்து டொப் என்ற சத்தத்தை எழுப்பியது;எழுந்து போய் எடுத்து படிக்க ஆரம்பித்துவிட வேண்டுமென்ற உணர்வு ஏற்பட்டது சங்கரனுக்கு.எழுந்து தினசரிக்குள் மூளையை திணிக்காவிட்டால்,மனம் கவலை கொள்ள ஏதவதொரு பிரச்சனையை கொண்டு வந்து அதைச் சுற்றியே சுழல ஆரம்பித்துவிடும்.பேப்பரில் அச்சியப்படும் செய்திகளை உருவாக்குகிறவர்களாக சில நபர்கள் நாட்டில் இருக்கிறார்கள்;பல பேர் அதனைப் படிப்பதோடு நிறுத்திக்கொள்கிறார்கள்,அதில் சங்கரனும் ஒருவன். திரும்பவும் […]

கெடுவான் கேடு நினைப்பான்

This entry is part 7 of 48 in the series 11 டிசம்பர் 2011

வசந்தபுரி மகாராணி நோய்ப் படுக்கையில் துவண்டு கிடக்க, இளவரசன் விக்கிரமன் கண்ணீர் சிந்தியவாறு அருகில் இருக்க, மதிவாணர், முத்துராசர் ஆகிய இரண்டு அமைச்சர்களும் கைபிசைந்தவாறு நின்றார்கள்! “மதியூக மந்திரிகளே! இனி நான் பிழைப்பேன் என்ற நம்பிக்கை இல்லை. பத்து வயதே நிரம்பப் பெற்ற என் மைந்தன் விக்கிரமனை உங்களிடம் ஒப்படைத்துச் செல்லுகிறேன். நீங்கள் தான் அவனுக்குப் பாதுகாப்பாய் இருக்க வேண்டும்” என்று மகாராணி கண்ணை மூட, அதற்கான இறுதிச் சடங்குகள் எல்லாம் முடிந்த பின்பு, நல்ல நாள் […]

மணியக்கா

This entry is part 6 of 48 in the series 11 டிசம்பர் 2011

சந்திப்பிழை போன்ற சந்ததிப்பிழை நாங்கள் காலத்தின் பேரேட்டைக் கடவுள் திருத்தட்டும் — நா.காமராசன் -காகிதப் பூக்கள் மணியக்கா லயித்து ஆடிக்கொண்டிருந்தாள்.என்னதான் மாயம் இருக்குதடி… கண்ணண் இசைத்திடும் தேன்குழல் தான்…. இதயம் உருக்குதடி….என பாடலுக்குள் தன்னை இழந்தவளாக அனிச்சையாக உடல் வளைத்து ஆடிக்கொண்டிருந்தாள்.பரதம் தான் அவள்.அவள் தான் பரதம்.கண்கள் கிறங்கி, கண்ணணோடு ஒன்றாக கலப்பது போலவும், அவனோடு காற்று வெளியில் கை கோர்த்து நடப்பது போலவும் ஆடிக்கொண்டிருந்தாள். பெரிய பெரிய சபாக்களில் எல்லாம் அரங்கேற்றம் செய்தவள் மணியக்கா. ஆடிய […]