தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் திரிஃபீல்ட் தம்பதியர் என்மேல் ஏன் இத்தனை பரிவு பாராட்டினார்கள் என்பதே புரியாப் புதிராய் இருந்தது. இயல்பான இதயத்தின் கனிவே அது. வேறு விளக்கம் இல்லை. சகஜமாய்ப் பேசாத சங்கோஜிதான் நான். என்மேல் டெட் திரிஃபீல்ட் ஆர்வப்பட்டார் என்றால் நானே அறியாத ஏதோ ஒன்றுதான் அதன் காரணமாக இருக்க முடியும். ஒருவேளை எனது கழுத்து உயர்த்திய கர்வத்தினால் அவர் கவரப்பட்டிருக்கலாம். ஒரு மிஸ் உல்ஃபின் கோர்ட் குமாஸ்தாவின் மகனையிட்டு எனக்கு ஒரு மட்டமான அபிப்ராயம் […]
அன்னமும் ஆந்தையும் ”ஒரு காட்டில் பெரிய ஏரி ஒன்றிருந்தது. அங்கே மதரக்தன் என்கிற அன்னப்பறவை ஒன்று இருந்தது. அது பலவிதமாய் விளையாடி ஆனந்தமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தது. இப்படி வெகு காலம் சென்றபிறகு, ஒருநாள் அதற்கு யமனாக ஒரு ஆந்தை அங்கு வந்து சேர்ந்தது. அதைப் பார்த்த அன்னம், ”எங்கிருந்து வருகிறாய் நீ? இது ஜன சஞ்சாரமில்லாத காடாயிற்றே!” என்று கேட்டது. அதற்கு ஆந்தை; ‘உன் குணங்களைக் கேட்டுத்தான் இங்கு வந்தேன். நான் நற்குணத்தைத் தேடி உலகம் […]
“தமிழு….தமிழு…” – பொழுது விடிந்தும் விடியாத வேளையில் படுக்கையில் இருந்தமேனிக்கே குரல் கொடுத்தான் மாரிச்சாமி. வாசலில் ‘சளப்…சளப்’ – எனத் தண்ணீர் தெளிக்கும் சத்தம். “ஏண்டா அதுக்குள்ளாறயும் தமிழு…தமிழுங்குறே…? ஒந்தங்கச்சி விடியங்காட்டி எப்டி வந்து உம்முன்னாடி நிக்கும்? சூரியன் உதிச்சு வெயிலு போட வேணாமா?” ராமுத்தாயி மகனுக்குப் பதில் சொல்லிக் கொண்டே வாசலைப் பெருக்க ஆரம்பித்தாள். மாரிக்கு அப்படிப் பதில் சொல்லி விட்டாளே தவிர அவள் மனதிலும் ஒரு கலக்கமிருக்கத்தான் செய்தது. அப்படியான ஒரு சஞ்சலத்தோடுதான் மகனையும் […]
காற்றில் மிதந்து வருகிற மாதிரி பரவச நிலையில் வந்துகொண்டிருந்த கவிஞரை அவர்கள் எதிர்கொண்டனர். விடியிருளில் நிழலுருவாய்த்தான் அவரது வடிவம் புலப்பட்டது. ஆனால் அவரது நடை, உடை, பாவனைகள் வருவது அவர்களுடைய கவிஞர்தான் என்பத்தை வெகு எளிதாய்ப் புலப்படுத்திவிட்டது கவிஞர் அருகில் வந்த பிறகு அவரது நிறம் மங்கிய கறுப்பு அல்பாகா கோட்டில் எல்லாம் மணல் படர்ந்து கிடப்பதும் தலையில் குலைந்துபோன பாகையிலும் திட்டுத் திட்டாக மணல் அப்பி யிருப்பதும் தெளிவாகவே தென்பட்டது. “என்ன பாரதி இது, நாங்களானால் […]
அது ஒரு நூறு அடுக்கு மாடிக் கட்டிடம். அந்த நகரத்தில் மட்டுமல்லாமல், அந்த நாட்டிலேயே அது தான் உயர்ந்த கட்டிடம். கட்டிடக் கலைக்கே பெருமையும் புகழும் தேடித் தரத்தக்க அவ்வளவு அழகான கட்டிடம்! வந்தவரைப் பிரமிக்க வைக்கும் வரவேற்பு அறை! வழவழக்கும் மொஸைய்க் தரை! வடிவழகு மிளிர தலைக்கு மேல் ஆறடி உயரத்திலிருக்கும் விதானம். அறைக்கு அறை அழகாகப் பொருத்தப்பட்டிருக்கும் வாயிற் கதவுகள்! சுவரே தெரியாமல் அதன் மேல் பதிக்கப் பெற்று, சுத்தமாக ‘வார்னிஷ்’ செய்யப்பட்டுப் பளபளத்துக் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “வில்லியம் உழைத்து வேர்வையில் சம்பாதித்த பணம் சாவடியில் சாதனை புரியும் பலருக்கு. ஆனால் போருக்காகப் பீரங்கி வெடி மருந்து செய்து விற்றுச் சேமித்த உங்கள் பணம் வேதனைதான் தரும் எமக்கு !” ஜார்ஜ் பெர்னாட் ஷா (மேஜர் பார்பரா) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major […]
தீபாவளி எல்லா நாளும் போல மற்றுமொரு நாளே என்று ஆகி வெகு வருடங்கள் கடந்து விட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும், தீபாவளிக்கான சிறுவயது குதூகளிப்பை,கொண்டாட்டத்தை, திரும்பவும் பெற்று விட எங்கோ ஒரு மூலையில் மனம் ஏங்கி கொண்டு தான் இருக்கிறது. திரும்பி செல்லவே முடியாத பாதை எப்போதும் வசீகரமானதே. சிறுவயதில் தீபாவளிக்கான உற்சாகம், ஊரில் முதல் பட்டாசு கடையாக திறக்கப்படும், சூர்யா வெடிக் கடை(கடல்), திறந்த நாள் முதல் தொற்றிக்கொள்ளும். வருடம் முழுவதும், பட்டாசு விற்கும் ராமையா […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “இந்தக் காசு பணத்தில் எப்படி என்னை நம்பி இருக்கும் எல்லோருக்கும் கஞ்சிக் குழம்பு காய்ச்சிக் கொடுப்பேன் கடவுளே ? பசியோடு இருப்பவனிடம் எப்படி நான் பைபிளைப் பற்றிப் பேசுவேன் ? எப்படி மத மாற்றம் பற்றி மன்றாடுவேன் ! பயமாக இருக்குது எனக்கு !” ஜார்ஜ் பெர்னாட் ஷா (மேஜர் பார்பரா) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி […]
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ஆனால் வேலைக்காரர்கள் சாப்பிட்டு ஆயிற்று என்று தெரிந்ததும் நான் சமையல் கூடத்துக்குள் போனேன். எவர்சில்வர் வாஷ்பேசினை எமிலி சுத்தம்செய்து கொண்டிருந்தாள். மேரி ஆன் கழுவிக் கொண்டிருந்தாள். ”சொல்லுங்க, திரிஃபீல்ட் தம்பதிக்கு என்ன குறை?” என்று நான் கேட்டேன். மேரி ஆன் பதினெட்டு வயதில் இந்த விகாரேஜுக்கு வந்தவள். நான் சின்னப் பையனாக இருக்கையில் என்னைக் குளிப்பாட்டி விட்டிருக்கிறாள். எனக்குத் தேவைப்பட்டபோது பிளம் ஜாமில் மருந்துப்பொடி குழைத்து சாப்பிடத் தந்து சொஸ்தப்படுத்தி யிருக்கிறாள். (நம்மூர்ப் […]
நீல நரி ஒரு நகரத்தின் அருகில் இருந்த குகையில் ஒரு நரி இருந்தது. அதன் பெயர் சண்டரவன். ஒருநாள் பசியால் வாடிப்போன அந்த நரி இரவானவுடனே இரைதேடப் புறப்பட்டுத் திரிந்தபடியே நகரத்திற்குள் நுழைந்தது. அதைக்கண்டவுடன் ஊர் நாய்கள் பயங்கரமாய்க் குரைத்தன; ஓடிவந்து அதன்மேல் விழுந்து கூரிய பற்களால் கடித்துவிட்டன. குலைக்கும் சத்தம் கேட்டுப் பயந்துபோய், உடம்பெல்லாம் காயங்கள் உண்டாகி, திக்குத் திசை பாராமல் நரி தாவியோடியது. ஓடுகிற ஓட்டத்தில், யாரோ ஒரு சாயப் பூச்சு வேலை […]