ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “உணவு, உடை, வீடு ஆகியவற்றை மனித ஊழியத்தால் உண்டாக்க முடியும். ஆனால் அவை உண்டாக்கப் பட்ட பிறகு களவாடப் படலாம். குதிரையைக் கையாளுவது போல் நீ மனிதரை நடத்தலாம். அதிகாரப் பலத்தால் உன் கை ஓங்கி அவரை நீ ஆட்டிப் படைக்கலாம். அல்லது அவரது உரிமையை நமக்காகத் தியாகம் செய்வது அவரது மதக் கடமை என்று விதிமுறை போதித்துக் கட்டுப்படுத்தலாம்.” […]
காசிம் ஹாஜியார் வேகுவேகென்று நடந்துகொண்டிருந்தார். இத்தனை காலங்களாகப் பாசமாக வளர்த்து வந்த தொந்தியைக் கரைத்தே ஆக வேண்டுமென்று இதய மருத்துவர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். இல்லையென்றால் ஹார்ட் அட்டாக் வந்தேவிடுமென்று பயங்காட்டியதால், அவர் பேச்சைக் கேட்டே ஆகவேண்டியதாகிவிட்டது. இல்லையென்றால், காசிம் ஹாஜியாராவது நடக்கிறதாவது? பக்கத்து தெருவிலிருக்கும் அவருடைய ஜவுளிக் கடைக்கே காரில்தான் போவார். இப்பக் கூட டாக்டர் காண்பிச்ச அந்தப் படம் மனக்கண்ணில் வந்து நின்றது. அதாவது இரத்தக் குழாயில் கொழுப்பு அடைச்சா எப்படியிருக்கும், அது இதயத்தை எப்படி […]
தமனகன் சொல்லிற்று: காலத்தில் பெய்தமழையால் ஒரு விதையிலிருந்து மற்ற விதைகள் முளைப்பதுபோல் வார்த்தைக்குக் கிடைக்கும் பதிலிலிருந்து மற்ற பேச்சுக்களும் முளைக்கின்றன. நேர்மையுள்ள அறிவாளி அபாயத்தை யறிந்து அபாயத்தையும், உபாயத்தை அறிந்து காரியசித்திக்கு வழியையும் வெளிப்படையாகக் காட்டுகிறான். சபையில் நல்லோரால் புகழப்படுகிற குணவான் அந்தக் குணத்தை விருத்தி செய்து காப்பாற்ற வேண்டும். பெருவழக்காய்ப் பேசப்படும் சொற்களை இன்னும் கேள்: அரசன் வீழ்ச்சியை விரும்பாதவன் அரசன் உத்தரவை எதிர்பாராமலே பேசட்டும். அதுவே நல்லவனுக்குத் தர்மம்; மற்றறவையெல்லாம் அதர்மமாகும். இதைக்கேட்ட கரடகன், […]
எஸ். ஷங்கரநாராயணன் மெத்தையின் சுகத்தில் நல்லுறக்கம் கொண்டிருந்த சொல்லுக்கு திடீரென முழிப்பு வந்தது. யாரோ உள்ளே வரும் சரசரப்பால் அது முழித்திருக்கலாம். நூலகம் பொதுவாக அமைதியாகவே இருக்கும். சொல்லுக்கும் அநேகமாக விதிக்கப்பட்டதே இந்த அமைதி. ஆதலின் மௌனத்துக்கு சப்தத்தில் ஒரு ஈர்ப்பு உண்டுதான். அதன் கூர்த்த மௌனத்தில் காதுகள் தானறியாமல் ஒரு பாதுகாப்பு பிரக்ஞையுடன் எதிர்பார்ப்புடன், அதாவது எதிர்பாராத ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கவே செய்கின்றன. சப்தங்களின் ஊடே இந்த எதிர்பாராத்தன்மை இல்லை தான். சப்தங்களின் ஊடே மௌனந்தான் […]
காலையில் புது புடவையணிந்து பளிச்சென்று கிளம்பியபோது ராதிகா நம்பினாள்.அது ஒரு இனிய நாளாக இருக்க வேண்டும் என்று. அன்று விடுப்பு எடுத்திருக்கலாமே என்று அவள் கணவன் கூறியதை மறுக்க இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது அன்று முடிக்க வேண்டிய முக்கியமான அலுவலக வேலைகள். இரண்டாவது, யாரும் உடனில்லாமல் அவள் மட்டுமே வீட்டில் தனித்திருக்க வேண்டும். அவள் பள்ளியில் படிக்கும்போது “வீட்டில் சாமி கும்பிடறாங்க!, கோவிலுக்கு போறோம் , பாட்டிக்கு உடம்பு சரியில்ல” என்றெல்லாம் எடுத்த விடுமுறைகள் இப்போது […]
“உள்ள வாங்க”, கண்ணாடி அணிந்து, மூன்று முறை குளித்து, ‘கம கம’வென வந்து உட்கார்ந்த மருத்துவர், தன் முதல் நோயாளியை உள்ளே அழைத்தார். ‘தாய்-சேய்’ என்று அழைக்கும்படியான இருவர் உள்ளே நுழைந்தனர். அந்தப் பெண், தயங்கித் தயங்கி நடக்க, உடன் வந்திருந்த வாலிபன் மட்டும் பயமே இல்லாமல் நுழைந்தான். “என்ன பிரச்சனை?” சிரித்த முகத்துடன் மருத்துவர் கேட்டார். “இவனுக்கு தான் பாக்கணும் டாக்டர்”, என்றார் அந்த பெண். “அவரு ஜாலியா வராரு. நீங்க ஏன் இவ்ளோ டென்ஷனா […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “விடுதலை என்றால் பொறுப்பு, கடமைகள் என்பவை முன்வந்து தோன்றுகின்றன. அதனால்தான் பெரும்பான்மையான மனிதர் அதைக் கண்டு பயமடைகிறார்.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் நேர்ந்த வெற்றி, தோல்வியைப் பற்றியது. அவள் புரிந்த அரிய சமூகத் […]
ஆப்பைப் பிடுங்கிய குரங்கு ஒரு பிரதேசத்திலே நகரம் ஒன்று இருந்தது. அதன் அருகே ஒரு தோப்பில் யாரோ ஒரு வியாபாரி கோவில் ஒன்று கட்டிக்கொண்டிருந்தான். அங்கு வேலை செய்யும் ஆட்கள் மேஸ்திரி எல்லோரும் உச்சி வேளையில் சாப்பிடுவதற்காகத் தினந் தோறும் நகரத்துக்குச் செல்வது வழக்கம். ஒருநாள் அவர்கள் இல்லாத நேரத்தில் ஒரு குரங்குக் கூட்டம் பாதி கட்டப்பட்டிருந்த அந்தக் கோவிலை அடைந்தது. அங்கு தச்சன் பாதி பிளந்து போட்டிருந்த ஒரு பெரிய கட்டை கிடந்தது. அதன் உச்சியிலே […]
பூஜைக்கு கியூ பிடித்து நின்றவர்களில் சிவசங்கரன் முதலாவதாக நின்றார். அவர் கோயில் தலைவர். ஆகவே ஐயனார் பூஜையில் அவருக்குத்தான் முதல் மரியாதை. அந்த விசேஷங்கள் ஒன்றுமில்லாத நாளிலும் ஒரு பத்து பேர் கோயிலுக்கு வந்திருந்தது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பெரும்பாலோர் இந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். ஐயனார் கோயில் ஆரம்பித்த காலத்திலிருந்தே ஐயனாருக்கு விசுவாசமாகவும் பக்தியுடனும் இருப்பவர்கள் சிலர். ஐயனாரின் மகிமை தெரிந்து வெளியிலிருந்து புதிதாக வந்தவர்கள் சிலர். இது நகரத்திலிருந்து ஒதுக்குப்புறமாக உள்ள இடம். கிட்டத்தட்ட புறம்போக்கு. […]
(இந்தக் கதையில் பயன்படுத்தியிருக்கும் சில அரபுப் பதங்களுக்கான விளக்கம். தவ்பா-பாவமன்னிப்பு ; மௌத்-மரணம் ; இத்தா- தனிமை ; ஹதியா-தருமம் ; துஆ-இறைவனிடன் விண்ணப்பித்தல் ; இஃப்தார்- நோன்பு திறக்கும் நேரம் ; யாசின்-குர்ஆனின் இதயமாகக் கருதப்படும் வசனங்கள்; இஷா-இரவு நேரத் தொழுகை) ஏழு நாட்களாகப் பூட்டிக் கிடக்கிறது அல்லாப்பிச்சைக் கடை. யார் இந்த அல்லாப்பிச்சை? ஏழு வயதில் சிங்கப்பூருக்கு வந்தவர். ஒரு மளிகைக் கடையில் சிப்பந்தியாகச் சேர்ந்தார். பிறகு அந்தக் கடையையே எடுத்து நடத்தினார். அதன் […]