பாரிய அணு உலைகள் ,செயற்கை பசுமை, பறக்கும் மின்சார வாகனங்கள் என கி .பி 2050 இல் ஒரு இயந்திரச்சாலை போலவே காட்ச்சியளித்தது ஜப்பானின் தலைநகரம் டோக்கியோ .இயந்திரங்களிடையே சில சில இடங்களில் மனித நடமாட்டமும் இருந்தது .மனிதர்கள் புன்முறுவலுடனும் ஆச்சரியம் கலந்த முகத்துடனும் ஆங்காங்கே குழுக்களாக நின்று சாலையின் பாரிய திரைகளில் செய்தியை பார்த்துக்கொண்டிருந்தார்கள் . அவர்களின் எதிர்பார்ப்பு, மகிழ்ச்சிக்கு காரணம் உலகையே தமது பக்கம் திருப்பும் வேலையில் அவர்களின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுக்கொண்டிருப்பது தான் . மத்திய விஞ்ஞான தொழில்நுட்ப […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நமது தீமைகளில் மிகவும் தீவிரமானது, குற்றங்களில் மிகக் கொடியது வறுமை. நமது முதற் பணி ஏழ்மையை இல்லாமல் செய்வதே. அதற்காக நாம் எதையும் தியாகம் செய்யகத் தயாராக வேண்டும்.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara) “எல்லா ஆடவரும் மாதரின் சொத்துக்களைத்தான் திருமணம் செய்து கொள்கிறார். அதுவே திருமணமான பெண்டிரின் உண்மையான சொத்து என்று மெய்யாக விளக்கப் படுவது.” ஆஸ்கர் […]
கடுமையான டிராபிக் ஜாமில் ஹனீஸ். எப்படியும் பள்ளிகூடத்தை சென்றடைய குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிடும். +2 கணித தேர்வு இன்னும் 10 நிமிடத்தில் ஆரம்பித்து விடும்.பாதையில் விபத்தா? மந்திரி வருகின்றாரா? என்ன எளவோ எதனால் இத்தனை தாமதம். எந்த வாகனமும் ஒரு அடி கூட நகரவில்லை. என்ன செய்வது என்றே புரியவில்லை.சீக்கிரம் பள்ளிக் கூடம் போவனும் “யா அல்லாஹ் …யாஅல்லாஹ் எனக்கு கருணை செய் ரப்பே” பரிதவித்தான் ஹனீஸ். 000 ஹனீஸ் +2 வின் […]
வெயில் சற்றே தணியத் தொடங்கியிருந்தது. வானம் மேகக் கூட்டங்கள் இல்லாமல் நீலவண்ணமாக இருந்தது. பள்ளிக் குழந்தைகள் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். தேநீர் கடையில் கூட்டம் மொய்க்கத் தொடங்கியிருந்தது.கலையரசன் பேருந்து நிறுத்தத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். திருவாரூர் செல்லும் பேருந்து வந்தது.அவ்வளவு கூட்டம் இல்லை.கலையரசன் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தான். அவன் இப்போது மடாலயத்திற்கு சென்று கொண்டிருக்கிறான். வாழ்க்கையில் அவன் எதிர்கொண்ட அனைத்திலுமே தோல்வியடைந்திருக்கிறான். காதல்,கல்வி,வேலை என அனைத்தும் அவனுக்கு ஏமாற்றத்தையே பரிசாக அளித்தன. ஊருவிட்டு ஊரு வந்து […]
டிசம்பர் காலை பத்துமணிக் குளிரில் கஸ்தூர்பா ரோடு குளிர்ந்து கிடந்தது. போன வருஷம் இதே நேரம் இந்த தில்லிக்கு வந்த போது நன்றாக மாட்டிக் கொண்டோம் என்று இருந்தது. ” இந்த நவம்பர்ல, சரியான குளிர் சமயத்ல வந்து சேர்ந்திருக்கே. நல்லதுதான் போ. அடுத்த வின்டருக்கு நீ தயாராயிடுவே ” என்று சாமித்துரை அவன் வந்த புதிதில் சொல்லிச் சிரித்தார். வந்த ஒரு வாரம் அவர் கூடத்தான் அவன் தங்கியிருந்தான். அப்புறம் சரோஜினி நகரில் ஒரு பஞ்சாபி […]
ராதிகாவின் திருமணம் மிகச் சிறப்பாக நடந்த திருமணம் . ராதிகா வீட்டின் கண்மணி . புத்திசாலி . இன்ஜினியரிங் வேண்டாம் என்று தெளிவாக சொல்லிவிட்டாள். பிடித்த கணிதத்தில் பி.ஹெச்டி பட்டம் .உள்ளூர் கல்லூரியில் வேலை . பேசுவதில் , எழுதுவதில் எல்லாவற்றிலும் தெளிவு . பிறரைப் புண்படுத்தியதாக நிகழ்ச்சியே கிடையாது . யாராவது சுள் என்று பேசினாலும் ஒரு இளம் புன்னகையால் ஒதுக்கிவிடுவாள் . அவளுடைய வாழ்க்கையில் ஒரு மரண அடி . ராஜரத்தினம் உள்ளூரில் இருப்பவன். […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “ “மனித இனத்தின் நன்மைக்காகக் கிளர்ச்சி செய்யவும், மதக் கோட்பாடுளை எதிர்க்கவும், வாலிபரைத் தம் வசப்படுத்தவும் மேதைகளுக்கு உரிமை அளிக்க வேண்டும்.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (The Sanity of Art) “மாது ஒருத்தி மறுமுறைத் திருமணம் செய்து கொள்வதற்குக் காரணம் அவள் முதல் கணவனை முற்றிலும் வெறுத்ததே ! ஆடவன் மீண்டும் திருமணம் புரிவதற்குக் காரணம் முதல் மனைவி […]
“சாப்பாடு எடுத்துக்கிட்டியா மா?” புளிச்சை மறைக்கும் பார்வையுடன் தூக்கத்திலிருந்து எழுந்த லலிதா. காலை 7 : 15 மணிக்கு வண்டி ஏற வேண்டிய காயத்திரி, குளித்து முடித்து வருவதற்குள் சிற்றுண்டியைத் தயார் செய்துவிட்டு, கணவன் எழும் வரை ஒரு ‘குட்டி’ தூக்கம் போடலாம் என்று படுத்தார் லலிதா. மகள் கதவை திறக்கும் சத்தம் கேட்டதும் ‘தாய்மை’ விழித்துக் கொண்டது. “எடுத்துகிட்டேன்”, ரயிலில் பயணிக்கும் போது தான் சிற்றுண்டியை உண்பாள் காயத்திரி. அதுவும் சென்ட்ரலில் இறங்கி, பறக்கும் ரயிலில் […]
– திலினி தயானந்த தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை பளபளக்கும் விழிகள், பூக்கும் இதழ்கள் என்பன மகிழ்ச்சி நிரம்பி வழியும் ஒரு வாழ்க்கையின் அறிகுறி. உண்மைதான், நான் இன்று எல்லோர் முன்னிலையிலும் புன்னகைக்கிறேன். இவ்வுலகில் வாழும் ஏனைய எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினைகள் எதுவுமே எனக்கு இல்லாதது போல பூரிப்புடன் உரையாடுகிறேன். உண்மையில் இன்னுமொருவர் முன்னிலையில் எனது விழிகளில் கண்ணீரைத் தேக்கி வைக்க எனக்கு உரிமையில்லை. உங்களைப் போலவே நானும் துயருவதை சொல்வதற்கும் இயலவில்லை. புன்னகையால் துயரக் […]
எப்படியாவது தன் மகன் இஞ்சினியரிங் பட்டம் வாங்க வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தார் சுப்பையன்.ஆனால் அவரது மகன் சுந்தரோ வேறு மார்க்கத்தை பின்பற்றப்போவதை மனதில் வைத்துக் கொண்டு படிப்பை தொடர மாட்டேன் என பிடிவாதமாக இருந்தான்.+2 முடித்துவிட்டு பையனை வீட்டில் வைச்சிருந்தா ஏன், எதற்கு, என்னண்ணு கேள்வி கேட்டு சொந்த பந்தங்கள் குடையுமே என வேதனைப்பட்டாள் சுந்தரின் அம்மா காமாட்சி. காதைக் கிழிக்கும் ஹாரன்.இயந்திரத்தனமான மனிதர்கள்.விண்ணை முட்டும் கட்டிடங்கள்.எங்கு பார்த்தாலும் மேம்பாலங்கள்.இரவைக் கொண்டாடும் இளைஞர்கள்.இப்படிப்பட்ட சென்னை நகரத்தில் வசித்துக் […]