அமைதி

This entry is part 4 of 7 in the series 25 ஆகஸ்ட் 2024

வளவ. துரையன் இருசக்கர வாகனத்தை அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு, “அம்மா”என்று குரல் கொடுத்துக் கொண்டே நுழைந்தான் வரதன். வீடே அமைதியாக இருந்தது. அவன் இல்லம் எப்பொழுதும் இப்படி இருக்காது. அம்மாவிற்கு வானொலி கேட்பது மிகவும் பிடிக்கும். அது காலை முதல் அலறிக்கொண்டே இருக்கும்.புரிகிறதோ இல்லையோ அம்மாவிற்கு அது இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.“ஏம்மா இப்படி” எனக் கேட்டால் ”அந்த சத்தம் கேட்டுக்கிட்டே இருந்தா வீட்ல யாரோ தொணைக்கு இருக்காங்கன்னுக்கு எனக்கு நெனப்பு” என்று அம்மா சொல்லிவிட்டாள்.அம்மா […]

புறப்பட்டது முழுநிலா

This entry is part 3 of 3 in the series 4 ஆகஸ்ட் 2024

மீனாட்சி சுந்தரமூர்த்தி                                  மழைமேகம் இருண்டு திரண்டு கொண்டிருந்தது.குண்டூசி இலேசாகப் பட்டால் போதும் படாரென வெடிக்கும் பலூன்போல சடசடவெனக் கொட்டக் காத்துக் கொண்டிருந்தது. வினாயகம். மழை வருவதற்குள் வீடு சேர  அலுவலகத்திலிருந்து புறப்பட்டிருந்தார். பள்ளி, கல்லூரி, அலுவலகம் சென்று எல்லோரும் திரும்பும் நேரமென்பதால்  போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. தனியார்  வங்கி ஒன்றில் கிளை மேலாளராகப் பணிபுரிகிறார்.ஆறு மாதத்தில் ஓய்வு பெறப் போகிறார்.  சிக்னலில் நிற்கும்போது அலைபேசி சிணுங்கியது. வண்டி ஓட்டும்போது  பேசும் வழக்கம் இல்லை […]

தொட்டால்  பூ மலரும்

This entry is part 2 of 3 in the series 4 ஆகஸ்ட் 2024

வெங்கடேசன் ராஜமோகன் ” பயணிகளின் கனிவான கவனத்திற்கு” என்ற அறிவிப்பின் மத்தியில் ,  ஓயாத இறைச்சலோடு , இயங்கி கொண்டு இருந்த எழும்பூர் ரயில் நிலையம் அன்று காலை அங்கு வந்து இறங்கிய பயணிகளை வெளியே அனுப்ப , திணரிக்கொண்டு இருந்தது. ” எங்க சார் போகனும் ” ? அந்த குரலை கேட்டதும் தான் , கதிர் தன் அருகே  உரசிடாமல் நிற்கும் ஆட்டோவையும், அதனுள்ளிருந்து  அந்த கேள்வியை கேட்டவரையும் கண்டான். “வடபழனி ” அண்ணன்…. […]

கண்ணீர் மறைத்தார்

This entry is part 1 of 5 in the series 21 ஜூலை 2024

மீனாட்சி சுந்தரமூர்த்தி                                                                        வெள்ளைப் பளிங்கில் நெடிதுயர்ந்த அந்தத் திருமண மண்டபம் அரண்மனைபோல் வண்ண விளக்குகளின் ஒளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது. வெள்ளைச் சீருடையில் பணியாளர்கள் அங்குமிங்கும் இயங்கிக் கொண்டிருந்தனர். காணொளிகள் நேரலையாக ஆங்காங்கிருந்த பெரிய திரைகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. ஆர்ப்பாட்டம் இல்லாமல் இனிய இசையொலி மென்மையாக ஒலித்துக் கொண்டிருந்தது.பளீரென ஒளிவெள்ளம் பரவாமல், இதமாக மெல்லிய விளக்கொளி தவழ்ந்து கொண்டிருந்தது.முகப்பில் செயற்கை நீரூற்று, நான்கு புறமும் நான்கு மயில்கள் நீரை உமிழ்ந்துகொண்டிருந்தன. நடுவில்  ஒயிலாக மணிமுடி தரித்த வெண்சிறகுத் […]

பத்துப் பொருத்தம்

This entry is part 1 of 2 in the series 7 ஜூலை 2024

விஜயலட்சுமி கண்ணன் கலாவுக்கு வயது இருபது நிறைந்து விட்டது.பி.காம் முடித்து நல்ல வங்கி வேலையும் கிடைத்தது. கலாவின் தந்தை ரவிக்கு ஜோசியம், ஜாதகம் இதில்  எல்லாம் நம்பிக்கை அதிகம்.கலாவின் தாய் சுஜாதாவுக்கு இதில் சிறிதும் நம்பிக்கை கிடையாது. “ஆமா,, எங்கப்பாவும் ஜாதகமும் கையுமாக அலைந்து ஒரு ஜோசியர் பத்துப் பொருத்தத்தில் எட்டு பொருத்தமும் அமைந்த ஜாதகம் என்று சொன்னதனால் தானே ரவிக்கு கழுத்தை நீட்டினாள். என்னத்தை சாதிக்க முடிந்தது? காலம் ஓடியது. அதோடு நாமும் ஓடியது தான் […]

என் தாய் நீ

This entry is part 1 of 6 in the series 30 ஜூன் 2024

               ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி                                                                 .                 வேப்ப மரத்துக் குயில் கூவியது. அலாரமே தேவையில்லை. இதையாவது நிறுத்தி விட்டுத் தூக்கத்தைத் தொடரலாம் ஆனால் இந்த பொல்லாத பூங்குயிலை ஒன்றும் செய்ய முடியாது. சரியாக ஐந்து மணிக்கெல்லாம்  கச்சேரியை ஆரம்பித்துவிடும். யாராவது கேட்கிறார்களா, இரசிக்கிறார்களா என்றெல்லாம் பார்ப்பதில்லை.ஆளில்லாத டீக்கடையில் டீ ஆற்றுபவர் போல என்று சொல்லலாமா? ரஞ்சனிக்கு என்னவோ அது தன்னை எழுப்புவதற்கே நாள் தவறாமல் வருவதாக எண்ணம். எந்தபக்கமும் திரும்ப முடியாதபடி ஆளுக்கொரு காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டு ஆளுக்கொரு கையைப் […]

வாசல் தாண்டும் வேளை

This entry is part 4 of 6 in the series 16 ஜூன் 2024

ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி இருள் அப்போதுதான் விலக ஆரம்பித்திருந்தது. வாசு போர்வையை நன்றாகஇழுத்து முகத்தை மூடிக் கொண்டான். மார்கழி மாதக் குளிருக்கு சுகமான தூக்கம்தொடர்ந்தது. வள்ளி  கதவைத் திறந்தாள். இரவு வெகு நேரம் கழித்து வந்து  திண்ணையில் உறங்கிக் கிடந்த முனியனைப் பார்த்தாள். வெறுப்பு முகத்தில் தொற்றியது.வாசல் தெளித்து கோலமிட்டு நிமிர்ந்தாள்.வேப்ப மரத்தடியில்  நின்றிருந்த ஆட்டோவில் பாட்டிலும், குப்பம்மா கிழவியிடம் வாங்கிவந்து தின்றது போக மீதமிருந்த மிளகாய் பஜ்ஜிகளும்  சிதறிக் கிடந்தன. பக்கத்து வீட்டுநாய் பின்புற இருக்கையில் சுருண்டிருந்தது. […]

தனிமையின் இன்பம்

This entry is part 6 of 7 in the series 9 ஜூன் 2024

சசிகலா விஸ்வநாதன் பத்மநாபன் நன்றாய் தூங்கி கண்விழிக்கும்போதுதான் நினவில் வந்தது;சங்கேஸ்வரி, சிறு மனஸ்தாபத்தில், பிறந்தகம் போயிருப்பது. ஆஹா! இன்று விடுமுறை நாள் என்று நினைப்பே வெறுப்பாய் இருந்தது.             வாயில் கதவைத் திறந்து செய்தி தாளை எடுப்பதற்குள், வெள்ளை பூனை ஒன்று உள்ளே வந்து மிக உரிமையாக சாப்பாட்டு மேசை மேல் தாவி உட்கார்ந்தது.           காபி அருந்தும் வேளையில் பூனைக்கும் ஒரு தட்டில் […]

சாதனா எங்கே போகிறாள்

This entry is part 6 of 6 in the series 2 ஜூன் 2024

வி. ஆர். ரவிக்குமார் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். இரவு மணி ஏழு.  கார்த்திகை மாத காரிருள்,  சீக்கிரமே இருட்டிவிட்டது.    வெளியில் லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. பிளாட்பார்ம் எண் ஆறிலிருந்து சார்மினார் எக்ஸ்பிரஸ்  இன்னும் இருபது நிமிடங்களில் ஹைதராபாத்திற்கு  புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் கவனத்திற்கு என்று ஒலி பெருக்கியில் மீண்டும்  மீண்டும் அறிவிப்பு முழங்கிக்கொண்டிருந்தது. பல பெட்டிகளுடனும் லக்கேஜ்களுடனும் பயணிகள் வேக வேகமாக அவரவர் கம்பார்ட்மெண்டை நோக்கிச்  சென்று கொண்டிருந்தனர்.      இருக்கை உறுதி ஆகாதவர்கள் […]

சந்தைக்குப் போனால்…

This entry is part 5 of 6 in the series 2 ஜூன் 2024

                                                                                          மீனாட்சி சுந்தரமூர்த்தி                    விடிவதற்கு இன்னும் நேரமிருந்தது.வேலம்மாளுக்கு அப்போதுதான் நல்ல தூக்கமே வந்திருந்தது.புது இடம் என்பதால் தூக்கம் வரவில்லை.  கந்தப்பன் மீது காலைப் போட்டுக் கொண்டு பெரியவனும் , கழுத்தைக் கட்டிக்கொண்டு சின்னவனும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.அலாரம் ஐந்துமுறை அடித்ததும் விழித்துக் கொண்ட கந்தப்பன் பிள்ளைகளைச் சரியாகப் படுக்கவைத்துப் போர்வையைப் போர்த்திவிட்டான்.ஏழு மணிக்கெல்லாம் கிளம்பினால்தான் ஷிப்டுக்குச் சரியாக இருக்கும். குளித்து முடித்துத் தயாராகி , முன்பக்கத்து அறையில் மர ஸ்டேண்டில் வைத்திருந்த பிள்ளையாரைக் கும்பிட்டு திருநீறு இட்டுக்கொண்டிருந்தபோது […]