Articles Posted by the Author:

 • ”ஆனைச்சாத்தன்”

  ”ஆனைச்சாத்தன்”

           கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத்தன், கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே, காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து, வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ, நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி, கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ, தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவாய் திருப்பாவையின் ஏழாவது பாசுரமான இதில் பகவானின் பெருமையை அறிந்திருந்தும் மறந்து கிடப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள். கதவைத் தட்டுகிறார்கள். அவளோ ”உள்ளிருந்தே பொழுது விடிந்துவிட்டதா?” என்று கேட்கிறாள்.                          “       […]


 • ”புள்ளும் சிலம்பின காண்”

  ”புள்ளும் சிலம்பின காண்”

      “புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில், வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ, பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு, கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி, வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை, உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும், மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம், உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவையில் ஆறாம் பாசுரம் இது. மார்கழி நோன்பு நோற்பதற்காக விடியற்காலையில் எழுந்து புறப்படும் ஆயர் சிறுமிகள் ஒவ்வொரு வீட்டிலும் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களை எழுப்புகிறார்கள். […]


 • அருளிச் செயல்களில் மாயமானும் பறவையரசனும்

  அருளிச் செயல்களில் மாயமானும் பறவையரசனும்

  தயரதன் மதலையாய்த் தாரணிவருவேன் என்று தந்த வரத்தின்படி எம்பெருமான் இராமபிரானாக அவதரித்தார். அவர் ”மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோ?” என்று சிற்றன்னையிடம் உரைத்து தம்பியுடனும் சீதையுடனும் வனம் புகுந்தார். அங்கு வந்த சூர்ப்பனகை தகாத சொற்கள் பேச அவள் இளைய பெருமாளால் தண்டிக்கப்பட்டாள். அவள் சென்று இலங்கை வேந்தனிடம் முறையிட அவன் சீதா பிராட்டி மீது ஆசை கொண்டான். இதைத் “தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன்” என்று திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுவார். மேலும் அவ்வாறு […]


 • உடைபட்ட மகாபாரதம் – ப.ஜீவகாருண்யனின் “கிருஷ்ணன் என்றொரு மானுடன்” நாவலை முன்வைத்து

  தொன்மங்களை மறுவாசிப்புக்கு உட்படுத்துதல் என்பது நவீன  இலக்கியத்தின் ஒரு கூறாகவே தற்போது இருந்து வருகிறது. அவற்றைக் கட்டுடைத்துப் பார்த்து அப்படி உள்ளே புகுந்து பார்ப்பதன் வழியாய் இந்தச் சமூகத்துக்கு ஏதேனும் நல்ல கருத்துகள் கிடைக்குமா என்பதே ஒரு தேடல் முயற்சியாகும். புதுமைப் பித்தனின் ’ சாப விமோசனம் ‘ தொடங்கி இம்முயற்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது. ஆனால் இது நவீன இலக்கியப் படைப்பாளிக்கு பெரும் சவால்தான் என்பதில் ஐயமில்லை. அந்தச் சவாலில் ஜீவகாருண்யன் வெற்றி பெற்றுள்ளார் […]


 • பாம்பா? பழுதா?

  பாம்பா? பழுதா?

  வளவ. துரையன் ”வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்” என்ற பழமொழி சரியாய்த்தான் சொன்னார்கள் போலிருக்கிறது. இரண்டுமே எளிதாகப் பிறர் உதவியின்றி எந்தத் தடங்கலும் வராமல் செய்ய முடியாத செயல்கள்தாம். அப்பப்பா, இந்த வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் எத்தனை சோதனைகள், எவ்வளவு சிரமங்கள் எல்ல்லாவற்றையும் சமாளித்து ஒரு வழியாய் முடித்தாகி விட்டது” என்று நினைத்துக் கொண்டான் பரமு. ’பரமேஸ்வரன்’ என்ற பெயரே ’பரமேஸ்’ என்றாகி இப்போது நண்பர் வட்டாரத்துக்குள் ‘பரமு’ என்றாகி விட்டது. எப்படிப்பட்ட பெயர் […]


 • சோகச் சித்திரங்கள் [தில்லையாடி ராஜாவின் “என்வாழ்க்கை விற்பனைக்கல்ல…” எனும் நூலை முன்வைத்து]

  சோகச் சித்திரங்கள் [தில்லையாடி ராஜாவின் “என்வாழ்க்கை விற்பனைக்கல்ல…” எனும் நூலை முன்வைத்து]

  ’தில்லையாடி ராஜா’ எனும் புனைபெயரில் எழுதும் இரா. இராஜேந்திரன் தற்போது கடலூரில் வசித்து வருகிறார். அவர் எழுதி உள்ள இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ’என் வாழ்க்கை விற்பனைக்கல்ல’ எனும் பெயரில் வெளியாகி உள்ளது. இத்தொகுப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும் படிக்கும்போது இவை ஏதோ ஒரு வகையில் நம்மோடு சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றனவே என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு கதைகளின் பாத்திரங்கள் நாம் நாள்தோறும் பார்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். கதைகளில் வரும்          உரையாடல்கள் மிகவும் இயல்பாய் இருக்கின்றன. கதைகளின் தள   […]


 • ஜெயமோகனின் “வெண்கடல்” – வாழ்வின் வெளிச்சங்கள்

  ஜெயமோகனின் “வெண்கடல்” – வாழ்வின் வெளிச்சங்கள்

                                   நவீன இலக்கிய உலகில் கடந்த ஆண்டு சில அதிர்வுகளை ஏற்படுத்திய “அறம்” சிறுகதைத் தொகுப்பிற்குப் பிறகு 2013–ஆம்-ஆண்டுவெளிவந்துள்ளது ஜெயமோகனின் “வெண்கடல்” சிறுகதைத் தொகுப்பு.              முன்னுரையில் ஜெயமோகனே குறிப்பிட்டிருப்பது போல இதில் உள்ள 11 சிறுகதைகளும் வெவ்வேறு தளத்திலியங்கும் பல்சுவைத் தன்மை கொண்டவை. . பொதுவாகவே ஜெயமோகனின் கதைகளில் உரையாடல்கள் நேர்த்தியாக இருக்கும். கதைகளுக்கேற்ப அவை ஆழமாகவும் இருக்கக் கூடும். “குருதி” சிறுகதையின் இறுதியில் சேத்துக்காட்டார் கூறும் ”மனுசனா வாழணும்ல—-நாயா, பன்னியா வாழாதே; மனுஷனா […]


 • நாஞ்சில் நாடனின் “கம்பனின் அம்பறாத்தூணி”

  நவீன எழுத்தாளர்களில் மரபிலக்கியத்தில் ஆழ்ந்த பயிற்சி உள்ளவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் குறிபிடத்தகுந்தவர் நாஞ்சில் நாடன். அவருடைய நூல்களுக்கு அவர் வைத்திருக்கும் சில தலைப்புகளே அதற்கு சாட்சிகளாய் நிற்கின்றன. சாலப் பரிந்து, என்பிலதனை வெயில் போலக் காயும், எட்டுத் திக்கும் மத யானை, நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை, காவலன் காவான் எனின், தீதும் நன்றும் என்பன போன்றவற்றைக் கூறிக் கொண்டே போகலாம். 5-1-2013—ஆம் நாள் காரைக் குடியில் பழனியப்பா—மீனாட்சி அறக் கட்டளை சார்பாக அவர் நடத்திய […]


 • அருளிச்செயல்களில்வாலியும்சுக்ரீவனும்

  அருளிச்செயல்களில்வாலியும்சுக்ரீவனும்

    வளவ. துரையன்   தாயுரை கொண்டு தாதை உதவிய தரணிதன்னைத் தீவினை என்று நீத்துக் கானகம் சென்றான் இராமன். அங்கே ஏழை வேடன் குகனைச் சகோதரனாக ஏற்றான். சூர்ப்பனகை வந்து தகாத வார்த்தைகள் பேச அவளை மூக்கறுத்து அனுப்புகிறான் இலக்குவன். அவள் இலங்கை வேந்தன் இராவணனிடம் முறையிட்டு அவன் மனத்தில் சீதையைப் பற்றி வர்ணித்து ஆசையை மூட்டுகிறாள். இராவணன் மாரீசனை மாயமானாக அனுப்பி அதன் மூலம் இராம இலக்குவர்களைப் பிரித்துத் தனியாக இருந்த சீதையைச் சிறை […]


 • சங்க இலக்கியத்தில் பண்டமாற்று முறை

  சங்க இலக்கியத்தில் பண்டமாற்று முறை

  வளவ. துரையன். சங்க காலத்தின் பெருமையை விளக்கும் எட்டுத் தொகை நூல்களுள் அகநானூறும் ஒன்றாகத் திகழ்கிறது. அகநானூறு முழுதும் தலைவனும், தலைவியும் உலவும் அகத்திணைச் செய்திகளே விரவிக் கிடக்கின்றன என்றாலும் பண்டைத் தமிழரின் செல்வச் செழிப்பையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் சில பாடல்கள் காட்டுகின்றன. பண்டை வணிகமுறை பண்டம் மாற்று முறையிலேயே அமைந்திருந்தது. தன்னிடம் அதிகமாக உள்ள ஒரு பொருளைத் தந்து அதற்கு மாற்றாக தனக்குத் தேவையான வேறு ஒரு பொருளைப் பெற்றுக் கொள்வதே பண்டம் மாற்று […]