Articles Posted by the Author:

 • ”செல்வப் பெண்டாட்டி”

  ”செல்வப் பெண்டாட்டி”

    கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து, செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும், குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே, புற்றர வல்குல் புனமயிலே! போதராய், சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்து, முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி,நீ எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்! திருப்பாவையின் பதினோராவது பாசுரம் இது. இந்தப் பாசுரத்திற்கும் இதற்கு அடுத்த பன்னிரண்டாம் பாசுரத்திற்கும் தொடர்பு உண்டு. இப்பாசுரம் கடமையைச் செய்வதைக் காட்டுகிறது என்றால் அடுத்த பாசுரம் தன் கடமையைச் […]


 • பட்டறிவுகளின் பாடங்கள் – [எஸ்ஸார்சியின் ‘தேசம்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து]

  பட்டறிவுகளின் பாடங்கள் – [எஸ்ஸார்சியின் ‘தேசம்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து]

  ”ஜரகண்டி”எனும் தலைப்பில் ஒரு சிறுகதை. மிகவும் எள்ளலானது. அரசு விழாக்கள் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுவது. ‘ஜரகண்டி’ என்ற சொல் மிகவும் பிரபலமானதாகும். முன்கூட்டிப் பதிவு செய்து திட்டமிட்டுத் திருமலை அடைந்து பதினைந்து மணி நேரம் அறைகளில் அடைத்து வைக்கப்பட்டுப், பெருமாளருகில் சென்று தரிசிக்கும் போது காதில் ஒலிக்கும் குரல் ஜரகண்டி. அதைச் சொல்லிக் கொண்டே நம்மை இழுத்து அப்புறப் படுத்தி விடுவார்கள். இதை அப்படியே ஒப்பிட்டு எஸ்ஸார்சி எழுத்தாளர் ஒருவர் அரசு விருது வாங்கும் விழாவுக்குச் […]


 • ”பங்கயக் கண்ணான்”

  ”பங்கயக் கண்ணான்”

    உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்      செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்      செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்      தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்      எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்      நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்!      சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்      பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.  ”பங்கயக் கண்ணான்”                                       வளவ. துரையன் உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கல் பொடிக்கூறை […]


 • அம்மனாய்! அருங்கலமே!

  அம்மனாய்! அருங்கலமே!

    நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற அனந்த லுடையாய்! அருங்கலமே தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய். இப்பாசுரத்தில் பெண்களெல்லாம் கிருஷ்ணனைக் கண்டு மயங்கும்போது, அவன் தன்னைக் கண்டு மயங்கும்படியான பெருமை கொண்ட ஒருத்தியை எழுப்புகிறார்கள். பல பிள்ளைகள் படிக்கும்போது ஒருவன் மட்டும் திறமையானவாய் இருப்பது போலே எல்லாப் […]


 • மனத்துக்கினியான்

  மனத்துக்கினியான்

    கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய் இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் அனைத்தில்லத் தாரு மறிந்தேலோ ரெம்பாவாய். ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் பன்னிரண்டாம் பாசுரமான இதில் இராமபிரானுக்கு இளையபெருமாளைப் போலே கிருஷ்ணனுக்கு இடைவிடாமல் கைங்கர்யம் செய்து வருபவனின் தங்கையை எழுப்புகிறார்கள். அவன் எப்பொழுதும் கண்ணனுடனேயே சுற்றிக் […] • தூமணி மாடம்

  தூமணி மாடம்

  தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத் தூப[ம]ம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ உன்மகள்தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்! ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையில் இது ஒன்பதாம் பாசுரமாகும். மார்கழி நோன்பு நோற்பதற்காக ஒவ்வோர் இல்லமாகச் சென்று எழுப்பும் பெண்கள் இப்போது உடைமையைக் கொண்டு போவது உடையவனுக்கே உரிமை என்று […]


 • கீழ்வானம்

  கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு, மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும், போவான்போ கின்றாரைப் போகாமல் காத்து,உன்னைக் கூவுவான் வந்துநின்றோம்; கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய, தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால், ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய். திருப்பாவையின் எட்டாவது பாசுரம் இது. இப்பாசுரத்தில் எல்லாராலும் விரும்பப்பட்ட, எல்லாரும் அவளிடத்தில் நெருங்கி வரக்கூடிய பெருமை உள்ள கிருஷ்ணனாலே விரும்பப் பட்டுக் கிருஷ்ணனைத் தன் வசத்தில் வைத்துள்ள ஒருத்தியை எழுப்புகிறார்கள். அவளை […]


 • பூக்களைப் பற்றிய புதுமைச் செய்திகள்     [”கடல்” நாகராசனின் அதிசய மலர்கள்—1000   நூலை முன் வைத்து ]

  பூக்களைப் பற்றிய புதுமைச் செய்திகள் [”கடல்” நாகராசனின் அதிசய மலர்கள்—1000 நூலை முன் வைத்து ]

    கடல் நாகராசன் எப்பொழுதும் தேனீயைப் போல சுறுசுறுப்பாய் மிகவும் உற்சாகமாய் ஏதேனும் செய்துகொண்டே இருப்பவர். பல தலைவர்களின் மற்றும் தமிழ்ச் சான்றோர்களின் பிறந்த நாள்களைத் தவறாமல் கொண்டாடி வருபவர். அந்த விழாக்களில் மாணவர்களுக்குப் போட்டி வைத்து பரிசுகள் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி வருபவர். அவர் தேனீ எப்படி ஒவ்வொரு மலராகச் சென்று சென்று தேனை எடுத்து வருமோ அதேபோல பல புத்தகங்களைப் படித்து அப்புத்தகங்களில் மலர்களைப் பற்றி உள்ள தகவல்களை எல்லாம் தொகுத்து இந்நூலாக ஆக்கித் […]


 • ”மகத்தான கனவு” [’முகில்’ எழுதிய “செங்கிஸ்கான்” நூலை முன்வைத்து]

  ”மகத்தான கனவு” [’முகில்’ எழுதிய “செங்கிஸ்கான்” நூலை முன்வைத்து]

    ’செங்கிஸ்கான்’ என்பதே தவறான உச்சரிப்பு. சிங்கிஸ்கான் [chinkhis khan] என்பதே சரி. மங்கோலியர்க்கு மிகவும் விருப்பமான விலங்கு ஓநாய். Chin என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. வலிமையான, உறுதியான, அசைக்கமுடியாத, பயமற்ற, ஓநாய் எனும் பொருளில் ‘டெமுஜின்’ என்பவனுக்கு அப்பெயர் சூட்டப்பட்டது. வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து கிடந்து எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை எல்லாம் மங்கோலியர் எனும் ஒரே பெயரில் கொண்டு வந்து அவர்களின் வீரத்தால் ஒரு பேரரசை அமைக்க வேண்டும் என்ற டெமுஜினின் கனவு […]