author

வார்த்தெடுத்த வண்ணக் கலவை – திலகன் எழுதிய “புலனுதிர் காலம்” கவிதைத் தொகுப்பை முன்வைத்து

This entry is part 8 of 15 in the series 1 மார்ச் 2015

  [திலகன் எழுதிய “புலனுதிர் காலம்” கவிதைத் தொகுப்பை முன்வைத்து] கவிதையைப் பற்றிக் கூற வந்த கண்ணதாசன் ஒரு முறை சொன்னார். ”உண்மை கால், பொய் கால், ஒளிவு கால், மறைவு கால் சேர்ந்ததுதான் கவிதை”. திலகனின் ’புலனுதிர்காலம்’ கவிதைத் தொகுப்பைப் படிக்கும்போது இதுதான் நினைவுக்கு வந்தது. மேற்கூறிய அனைத்து வகைகளையும் உள்ளடக்கியதாக திலகன் தன் கவிதைத் தொகுப்பை முன்வைத்துள்ளார். ஒரு படைப்பாளனின் படைப்பு எதைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்பதை இப்போது புறக் காரணிகள்தாம் தீர்மானிக்கின்றன. […]

இருதலைக் கொள்ளியில் அகப்பட்ட எறும்பு

This entry is part 19 of 26 in the series 22 பெப்ருவரி 2015

    சோழ மன்னன் உலா வருகிறான். அவன் மீது காதல் கொண்ட ஒரு தலைவி அதைக் கேள்விப்பட்டாள். அவன் ஒவ்வொரு தெருவாக வந்து போவதற்குள் நடு இரவு வந்து விடும். எனவே அவன் தன் வீட்டுக்குப் பக்கத்தில் வரும்போதே அவனைக் கண்டு விட தலைவி எண்ணுகிறாள். இதோ வீட்டுக்கு அருகில் மன்னன் வரும் ஒலிகள் கேட்கின்றன. மனமானது அந்த மன்னனைக் காணும் ஆசையால் தெரு வாசலுக்கு விரைகின்றது. ஆனால் நாணமானது அந்த மனத்தைப் பின்னுக்கு இழுத்து […]

திருக்கூடல் என்னும் மதுரை [ஒரே ஒரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம்]

This entry is part 21 of 24 in the series 8 பெப்ருவரி 2015

  மதுரை என்றாலே அனைவருக்கும் அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில்தான் நினைவுக்கு வரும். ஆனால் மதுரை மாநகரம் ஸ்ரீவைஷ்ணவம் சார்ந்த திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் திருக்கூடல் எனும் பெயரில் திகழ்ந்துகொண்டுள்ளது. பாண்டிய நாட்டின் பதினெட்டுத் திவ்யதேசங்களில் அதுவும் ஒன்றாகும்.   ஆறுகள் கூடும் இடங்களைக் ‘கூடல்’ எனும் பெயரில் வழங்கும் மரபு ஒன்று உண்டு. இரண்டு ஆறுகள் கூடும் இடத்தைக் கூடலூர் என்றும் மூன்று ஆறுகள் கூடும் இடத்தை முக்கூடல் என்றும் பெயரிட்டு அழைத்தனர். தொண்டை நாட்டுப் […]

பொன்பாக்கள்

This entry is part 8 of 17 in the series 1 பெப்ருவரி 2015

  [ வளரி எழுத்துக் கூடம் வெளியிட்டுள்ள “பெண்பாக்கள்” கவிதைத் தொகுப்பை முன்வைத்து] ஆண் படைப்பாளிகளின் படைப்புகளை வாசிக்கையில் அதில் அப்படைப்பாளரை உள் நிறுத்திப் பார்க்காத வாசக உலகம் பெண் படைப்பாளி என்றால் அவரை அப்படைப்பின் மையமாக நிறுத்திப் பார்ப்பது இலக்கிய உலகின் மிகப்பெரிய அவலம். ஒரு படைப்பின் ஓட்டத்தில் வரும் உறுப்பு வருணனைகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை அப்படைப்பின் கருவைக் கொண்டே உணர வேண்டும். எழுத்தாளர் தன் கூற்றாக வெளியிடும் படைப்பில் கூட ஆண் பெண்ணாகவும், […]

சீரங்க நாயகியார் ஊசல்

This entry is part 5 of 19 in the series 25 ஜனவரி 2015

இந்நூல் பெரிய கோயில் என்று போற்றப்படும் திருவரங்கத்தில் எழுந்தருளி உள்ள பெரிய பிராட்டியான சீரங்க நாயகித்தாயாரை மங்களாசாசனம் செய்யும் நூலாகும். இதை யாத்தவர் கோனேரியப்பனையங்கார் ஆவார். இவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் பேரன் என்பது இந்நூலின் இறுதியில் உள்ள தற்சிறப்புப் பாயிரத்தால் அறிய முடிகிறது. இதோ அந்தத் தற்சிறப்புப் பாயிரம்; தார்அங்கத் திருவரங்கர்க்கு ஊசல் பாடிச்            சாத்தினான் பேரனெனும் தன்மை யாலும்                 ஆருங்கண்டே தெளியும் அவன் சொல் பாட்டின்                                 அதிசயத்தை அறிவன்என்னும் ஆசை யாலும் […]

பண்பாட்டைக்காட்டும் பாரம்பரியச்செல்வங்கள்

This entry is part 5 of 23 in the series 18 ஜனவரி 2015

வளவ. துரையன் [ புதுச்சேரி தொண்டை மண்டல நாணயவியல் கழகத்தில் 7—12—2014-இல் ஆற்றிய சொற்பொழிவின் கட்டுரை வடிவம் ] ”பாரதபூமி பழம்பெரும் பூமி—நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் “ என்று பாடினார் மகாகவி பாரதியார். பழம்பெருமை என்பது நாட்டின் பழமையைக் குறிக்கும்அந்தப் பழமையைக் காட்டப் பல சான்றுகளாகக் கலைச்செல்வங்கள் இன்றும் நிலைகொண்டுள்ளன. அவை நம் நாட்டின் பழமையைக் காட்டுவதோடு நம் பண்பாட்டைக் காட்டும் ஆடிகளாக விளங்குகின்றன. அவற்றில் சில மட்டுமே இங்கு காட்டப்படுள்ளன. முதலில் நாணயங்கள் பற்றிக் காண்போம். […]

பண்பாட்டைக்காட்டும் பாரம்பரியச்செல்வங்கள்

This entry is part 26 of 31 in the series 11 ஜனவரி 2015

[ புதுச்சேரி தொண்டை மண்டல நாணயவியல் கழகத்தில் 7—12—2014-இல் ஆற்றிய சொற்பொழிவின் கட்டுரை வடிவம் ] ”பாரதபூமி பழம்பெரும் பூமி—நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் “ என்று பாடினார் மகாகவி பாரதியார். பழம்பெருமை என்பது நாட்டின் பழமையைக் குறிக்கும்அந்தப் பழமையைக் காட்டப் பல சான்றுகளாகக் கலைச்செல்வங்கள் இன்றும் நிலைகொண்டுள்ளன. அவை நம் நாட்டின் பழமையைக் காட்டுவதோடு நம் பண்பாட்டைக் காட்டும் ஆடிகளாக விளங்குகின்றன. அவற்றில் சில மட்டுமே இங்கு காட்டப்படுள்ளன. முதலில் நாணயங்கள் பற்றிக் காண்போம். பண்டைக் காலத்தில் […]

அம்பு பட்ட மான்

This entry is part 3 of 33 in the series 4 ஜனவரி 2015

வளவ. துரையன் அடர்ந்த காட்டினுள் புகுந்த வேடர்கள் அக்காட்டில் இருக்கும் விலங்கினங்களை வேட்டையாடுகிறார்கள். அவர்கள் பார்வையில் ஓர் ஆண் மானும் பெண் மானும் பட்டு விட்டன. உடனே அவற்றை நோக்கி அவர்கள் அம்பு எய்தார்கள். அம்பு பெண் மான் மேல் தைத்து உள்ளே புகுந்தது. ஆண் மான் தப்பித்து அங்கிருந்த ஓர் ஓடையைத் தாண்டி மறு கரைக்குப் போய் விட்டது. பெண் மானும் தைத்த அம்புடன் அக்கரைக்கு ஓடும்போது வேறு சிலர் அவ்வழியே வந்து விட்டார்கள். அவர்கள் […]

கிளி ஜோசியம்

This entry is part 15 of 23 in the series 21 டிசம்பர் 2014

சீட்டாட்டம் எங்காவது நடப்பதை வழியில் பார்த்தால் சிலர் அப்படியே அங்கு நின்று விடுவார்கள். அவர்கள் ஆடாவிட்டாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற பைத்தியம் அவர்கள். இந்த சீட்டுப் பைத்தியங்களைப் போலவே சில கிரிக்கெட் பைத்தியங்களும் உண்டு. கிரிக்கெட் ஆடினாலோ அல்லது அதைப் பற்றி யாராவது பேசிக் கொண்டிருந்தாலோ அவை அப்படியே அவற்றில் மூழ்கிப் போய் விடும். அதுபோல குமார் ஒரு ஜோசியப் பைத்தியம். யாராவது கைரேகை பார்ப்பவர்களோ அல்லது கிளி ஜோசியக்காரர்களோ அவர்கள் தெருவின் வழியாய் வந்து விட்டால் […]

அளித்தனம் அபயம்

This entry is part 3 of 23 in the series 14 டிசம்பர் 2014

  வளவ. துரையன் இராமபிரானின் தூதனாக இலங்கை சென்ற சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயர் அசோகவனத்தில் தவம் செய்த தவமாம் சீதாபிராட்டியைக் கண்டார். பின் அசோகவனத்தை அழித்தார். இலங்கையைத் தீக்கிரையாக்கி அயோத்தி வள்ளலை அடைந்தார். எம்பெருமானிடம் “கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்’ என்று மாருதி கூறினார். அண்ணனுக்கு மொழிந்த நீதிகள் பயனளிக்காததால் வீடணன் இலங்கையை விட்டு நீங்கி இராமபிரானிடம் அடைக்கலமானார். பின்னர் சுக்ரீவனும், அனுமனும், வீடணனும் உடன் வர இராம இலக்குவர் இருவரும் இலங்கையை அடைய வேண்டி கடற்கரையை அடைந்தனர். […]