author

code பொம்மனின் குமுறல்

This entry is part 16 of 19 in the series 6 ஜூலை 2014

ரவிசந்திரன் உனக்கு எதற்குடா நாங்கள் கட்ட வேண்டும்.??? இன்கம் டாக்ஸ், வாட், சர்வீஸ் டாக்ஸ் கோடு எழுதினாயா, டெஸ்டிங் பண்ணினாயா? ஸ்கீரீன் டிசைன் செய்தாயா? சம்பளமில்லாமல் ஆபிஸில் தூங்கினாயா? பென்ஞ் துடைத்தாயா? டீமுக்கு பிட்சா, சீகரெட்டாவாது ! வாங்கினாயா? இல்லை தூங்கும் எங்கள் ப்ராஜெக்ட் மேனேஜருக்கு சொரிந்தாவது விட்டாயா? உனக்கு எதற்காட வரி , வட்டி, சர் சார்ஜ் நெஞ்சு துடிக்கிறது. கால் துரத்துக்கிறது வெளிநாட்டுக்கு ஒடு ஒடு என தடுக்கிறது அன்னையின் முனகல். ரவிசந்திரன்

க‌ப்பல் கவிதை

This entry is part 15 of 19 in the series 6 ஜூலை 2014

சங்கர் ஒரு காகிதத்தைக் கொடுத்து ஒரு நல்ல கவிதை எழுதென்றார்கள் எது நல்ல கவிதை? யென்றேன் “நீ சொல்லாமல் சொல்லியிருக்கவேண்டும் நீ சொல்லாததும் அதிலிருக்கவேண்டும் க‌விதை நில்லாம‌ல் ஓட‌ வேண்டும் வானம் போல் இல்லாத ஒன்றுக்கும் நிறம் தர வேண்டும் வார்த்தை ஒவ்வொன்றும் எழுந்து நிற்க வேண்டும் காதல் இருக்கவேண்டும் காமம் இருக்கவேண்டும் களப் போராளியின் வீரமிருக்க வேண்டும் நீ இருக்க‌ வேண்டும் குறிப்பாக‌ நானுமிருக்க‌ வேண்டும்” எனக்கவர்கள் வேண்டுதல்க‌ள் புரிந்தது காகிதத்தை மடித்து மடித்து . […]

வேனில்மழை . . .

This entry is part 3 of 19 in the series 6 ஜூலை 2014

ஸ்வரூப் மணிகண்டன் ஒற்றை மழைக்குப் பச்சை படரும் வனம். ஒரு பார்வைக்குறைவிற்கு வறண்டு போகும் வரம். பெய்தொழியாமல் கடந்து போகும் மேகம். பெய்தும் பெய்யாமல் தகிக்க வைக்கும் உன் தேகம். மழைக்கும் மரணத்திற்கும் இடையே பறந்து திரியும் ஈசல் வாழ்க்கை வாய்த்திருக்கிறது எனக்கு. மழையிரவில் ஈசல் தின்ன இறங்கும் கருந்தேளின் லாகவம் வாய்த்திருக்கிறது உனக்கு.

கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருது

This entry is part 2 of 19 in the series 6 ஜூலை 2014

கவிஞர் சிற்பி அறக்கட்டளை ஆண்டுதோறும் தமிழ்க்கவிஞர்களுக்கு விருதும் பரிசும் அளித்துப் பாராட்டி வருவது பலரும் அறிந்த ஒன்று. கவிக்கோ அப்துல் ரகுமான், சி.மணி. பழமலய், கல்யாண்ஜி, தேவதேவன். வ.ஐ.ச.ஜெயபாலன், காசிஆனந்தன், இரா.மீனாட்சி, புவியரசு, பாலா, தமிழ்நாடன், நா.முத்துக்குமார் எனப்பல கவிஞர்கள் விருது பெற்றுள்ளனர். அந்த வரிசையில் இந்த ஆண்டு விருது பெறுபவர் கவிஞர் மு.மேத்தா. ‘வானம்பாடி’க்கவிஞரான மு.மேத்தா.கண்ணீர்ப் பூக்கள் என்னும் கவிதைத் தொகுப்பின்மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர்.ஊர்வலம் என்னும் தொகுப்பு தமிழக அரசின் பரிசு பெற்ற கவிதைத்தொகுப்பு.திருவிழாவில் […]

உடலே மனமாக..

This entry is part 1 of 19 in the series 6 ஜூலை 2014

– கலைச்செல்வி வைதேகியின் கணவன் வீட்டிலிருந்து இன்று பஞ்சாயத்து பேச வருவதாக சொல்லியிருந்தனர். திருமணம் முடிந்த இந்த ஓராண்டிற்குள் இதுவரை இரண்டு முறை பேச்சு வார்த்தை நடந்திருந்தது. இரு முறையுமே பஞ்சாயத்தின் வாதமும் பிரதிவாதமும் ஒரு புதிர் நிறைந்த சூழலுக்குள்ளேயே பயணித்துக் கொண்டிருந்தது. இம்முறை உறவினர்களையும் அழைத்துக் கொண்டு ஏழெட்டு பேராக வருவதாக சொல்லியிருந்தார்கள். வைதேகி வீட்டு தரப்பிலும் வேறு வழியின்றி; ஆள் சேர்க்க வேண்டியதாயிற்று. அதே மனிதர்கள் தான்.. சென்ற வருடம் அவர்களின் வருகை திருவிழாவாக […]

ஏன் என்னை வென்றாய்! அத்தியாயம்- 3

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

சிவக்குமார் அசோகன் சென்னை. அதிகாலை ஐந்தரை மணி. தாம்பரத்திலிருந்து மேற்கு மாம்பலத்திற்கு ரயில் டிக்கெட் எடுத்துக் கொண்ட வசந்தி, சுதாகரை செல்போனில் அழைத்தாள். ”சொல்லுங்க வசந்தி, எங்கே இருக்கீங்க?” ”நான் வெஸ்ட் மாம்பலம் டிக்கெட் எடுத்துட்டு தாம்பரம் ஸ்டேஷன்ல நிக்கிறேன் சுதாகர்!” ”ஓகே, நான் வெஸ்ட் மாம்பலம் ஸ்டேஷன் வந்துடறேன். உங்க ஹாஸ்டல் பக்கத்துல ரெங்கநாதன் தெருல தான் இருக்கு!” ”ஹாஸ்டல் நல்லா இருக்குமா சுதாகர்?” ”கொஞ்சம் அப்படி இப்படி தான். உங்களோட ரெண்டு பேர் தங்குவாங்க. […]

சிவமே

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

ரெ. மரகதவல்லி வேண்டுவது விருப்பானால் விருப்பது இருப்பானால் இருப்பது பொறுப்பானால் பொறுப்பது வெறுப்பானால் வெறுப்பது வெளியாகும் வெறுப்பது வெளியானால் வெளியது பரமாகும் பரமது இருப்பானால் இருப்பது ஜீவனாகும் ஜீவனது வெளியானால் வெளியது பரமாகும் பரமது வெளியானால் துதிப்பது சிவமே சிவமே முடிப்பது சிரமமே சிரமமே நினைவும் நிகழ்வும் சுழல்வது மெய்யே மெய்யே ~

இந்த இதழ்கள் இடம்பெயராதா…..

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

ஜெ.பாண்டியன் வாரம் தவறாது வாசல் கொண்டுவரும் வார இதழின் முகப்பிலும் இன்னபிற பக்கங்களிலும் முழுக் காலும் இடையு முரித்த பெண்கள் இடை குறுக்கி கிறக்கும் கண்களும் முறுவல் புன்னகையுமாய் பெரும்பாலும் திரைப்பட மாதவிகள்தான்.. வாசிக்கும் வாசகனின் கண்களிலும் மனத்திலும் இச்சைகளை கிளர்ந்தெளச் செய்கிறார்கள்…. பின்னொருநாள் அதே இதழின் வேறு பதிப்பின் பக்கங்களை புரட்டி பாதி கடந்திருந்த போது.. சாகசபட்சிகளால் எழுதப்பட்ட பெண்ணியக் கவிதையும் கட்டுரையும் ஏகத்துக்கும் எடுத்துரைக்கும் இதோபதேசம் அதே வாசகனின் மனத்தில் என்ன சிந்தையை வித்திட […]

ஒரு நதி ஒரு கடல் ஒரு சில கரைகள்

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

ஸ்வரூப் மணிகண்டன் மறுகரையில் இருப்பதாகச்சொல்லி செய்தியனுப்புகிறாய். நம்மிடையே நதியோடியிருந்த காலம் போய் வெகுநாட்களாகிவிட்டது. இப்போது நான் வந்து நிற்கும் கடலுக்கு எந்தெந்தப்பக்கம் எத்தனைக்கரைகள் என்று யாருக்குத்தெரியும்?

புதுச்சேரியில் 13 ஆம் உலகத்தமிழ் இணைய மாநாடு

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

புதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு புதுவை முதல்வர் ந . ரங்கசாமி தொடங்கி வைக்கின்றார்!   புதுச்சேரியில் 13 ஆம் உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் 2014, செப்டம்பர் 19 முதல் 21 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலிருந்தும் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்க் கணினி வல்லுநர்கள் பேராளர்களாக வருகைதர உள்ளனர். உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு உலகின் பல பாகங்களிலும் அரசுடனும் பல்கலைக்கழகத்துடனும் இணைந்து தமிழ் இணைய மாநாட்டைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது. இந்த […]