author

பிரான்சு கம்பன் கழக மகளிர் விழா அழைப்பிதழ்

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

மகளிர் விழா அழைப்பிதழ் அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்! பிரான்சு கம்பன் கழக மகளிரணி நடத்துகின்ற ஐந்தாம் ஆண்டு மகளிர் விழாவுக்கு உறவுகளுடனும் நண்பர்களுடனும் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.  நாள்: 29.06.2014 ஞாயிற்றுக் கிழமை 15.00 முதல் 20.00 வரை இடம்: L’Espace Associatif des Doucettes, rue  du Tiers Pot (à côté Collège Henri Wallon 95140 Garges les Gonesse அன்புடன் திருமதி சிமோன் இராசேசுவரி தலைவர்: கம்பன் கழக மகளிரணி திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால் செயலாளர்: கம்பன் கழக மகளிரணி திருமதி லெபோ லூசியா பொருளாளர்: கம்பன் கழக மகளிரணி மற்றும் கம்பன் கழக மகளிரணி செயற்குழு உறுப்பினர்கள் கம்பன் கழகத்தினர் – பிரான்சு http://francekambanemagalirani.blogspot.fr http://bharathidasanfrance.blogspot.fr

மறுவாசிப்பில் தி. ஜானகிராமன்..

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்..   28,06,2014 அன்று மாலை 06.30. மணிக்கு இலக்கியவீதியின்,   இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில்-   மறுவாசிப்பில் தி. ஜானகிராமன்..   தலைமை: திரைப்பட இயக்குநர் திரு ஞான, ராஜசேகரன். இ.ஆ.ப.   சிறப்புரை: முனைவர் கல்யாணராமன் அவர்கள்..                     (பேராசிரியர் -நந்தனம் கலை அறிவியல் கல்லுரி..)    விருதாளர்: எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்..   ஒருங்கிணைப்பு: […]

தீட்சை

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

ரவிசந்திரன் கவிதை கேட்டேன் காதல் தந்தாய் காதல் கேட்டேன் காமம் தந்தாய் கல்வி கேட்டேன் காசு தந்தாய் காசு கேட்டேன் கஷ்டம் தந்தாய் நிம்மதி கேட்டேன் உன்மத்தம் தந்தாய் வேகம் கேட்டேன் நிதானம் தந்தாய் தானம் கேட்டேன் சந்தானம் தந்தாய் மொழி கேட்டேன் பழி தந்தாய் பாரசக்தி என் மொழியில் பிழை கண்டு எனக்கு மெளனம் தந்தாயோ ? மெளன குருவின் காலடி கட்டை விரல் தீட்சை….

Lofty Heights event featuring well-known senior Carnatic vocalist from India, Raji Gopalakrishnan

This entry is part 21 of 21 in the series 15 ஜூன் 2014

Dear all, It gives me great pleasure to invite you to the next Lofty Heights event featuring well-known senior Carnatic vocalist from India, Raji Gopalakrishnan. She is acclaimed for her smooth and versatile voice besides her adherence to the traditional values of this music. She will be accompanied by popular artists from the NY-NJ area, […]

புதியதைத் தேடுகிறார் {வளவ.துரையனின் “ஒரு சிறு தூறல்” கவிதைத் தொகுப்பை முன் வைத்து}

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

கோ. மன்றவாணன் இந்த உலகம் உயிரோட்டமாக இருப்பதற்கும்- புதுப்பொலிவோடு சிறப்பதற்கும், ஒரு காரணம் உண்டு. அது, காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை ஏற்றுக்கொள்வதுதான்! இதில் கவிதைக்கு விதிவிலக்கு இல்லை. காலத்துக்கேற்ப கவிதை மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு கவிஞனின் வாழ்நாளிலேயே கவிதையின் போக்கு மாறிப்போய் விடுகிறது. புளித்துப் போன சொற்களாலும், சலித்துப்போன உவமைகளாலும், அலுத்துப்போன உத்திகளாலும், இனி கவிதை எழுதினால் யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். புகழ் பெற்ற பல கவிப்பேரரசுகளே கூட, ஒரு காலத்தில் எழுதிய அதே பாணியைக் […]

ஏன் என்னை வென்றாய்! அத்தியாயம்-1

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

சிவக்குமார் அசோகன் ஏன் என்னை வென்றாய்! அத்தியாயம்-1 மழை வலுத்தது. சாலையின் இருபுறமும் நடந்து செல்பவர்கள் அங்குமிங்கும் ஓடி ஒதுங்கினார்கள். கார்கள் தங்கள் ப்ளாஸ்டிக் குச்சி விரல்களால் கண்ணாடியை துடைத்தபடி ஓடின. ஜெர்கின் வாலாக்களும், குடையேந்திகளும் மழையை எதிர்த்து தத்தமது வேலைகளில் இயங்கிக் கொண்டிருக்க, குண்டு குண்டான மேகத்துளிகள் மேனியைப் பதம் பார்ப்பது குறித்த பிரக்ஞையே இல்லாமல் நடந்து கொண்டிருந்தாள் வசந்தி. மாநிற உடம்பை, காட்டன் சேலையைத் தாண்டி முழுதாய் நனைத்திருந்தான் வருணன். மாரை மாரி காட்டிக் […]

ஜோதிர்லதா கிரிஜாவின் ஆக்கத்தில் வால்மீகி ராமாயணம் ஆங்கில கவிதைகளாக

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

1974 இல் தொடங்கி 1975 இல் நான் வால்மீகி முனிவரின் ராமாயணத்தை ஆங்கிலத்தில் ஈரடிப் பாடல்களாகச் சிறுவர்க்காக எழுதி முடித்தேன். முதலில் சுமார் 1000 பாடல்களில் கதை முடிந்தது, முக்கியமான சில்வற்றை நீளம் கருதியும் அது சிறுவர்க்கானது என்பதாலும் அதில் சேர்க்க்காதிருந்தேன். ஆனால் அவற்றைச் சேர்க்க நினைத்துப் பெரியோர்க்கானதாக மாற்றி எழுதியதில் அது 1789 பாடலகளாக உருக்கொண்டது. ராமரின் பட்டாபிஷேகம் வரையிலான கதை மட்டுமே அதில் அடக்கம். வண்ணான் ஒருவனின் பேச்சைக் கேட்டு மதி இழந்து ராமன் […]

காவல்

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

தாயுமானவன் மதிக்குமார் விற்பனைக்காக துகிலுரிக்கப்பட்டு விலைமாதர்களாக வீட்டுப்பெண்கள். சதுர அடி விற்பனையில் சமாதியான விளைநிலங்கள் ! ஆவின்பால் ஆக்கிரமிப்பால் அழிக்கப்பட்ட வீட்டுத்தொழுவங்கள் ! பதப்படுத்திய பாலின் ராசியால் மறந்துபோன சீம்பால் ருசி ! பாதாளத்தில் பல்லாங்குழி மாயமான தாயம் உருக்குலைந்த ஊரணி கட்டடங்களான கண்மாய் வாழ்விழந்த வறட்டி கற்பிழந்த கம்பங்கூழ் குலைந்த கூட்டாஞ்சோறு அழகிழந்த அம்மிக்கல் ஆவியான ஆட்டுக்கல் கிராமங்களில் தொலைந்த கிராமியம் ! காணாமல் போன கிராமங்களை கண்டுபிடிக்க முடியாமல் கவலையோடு நிற்கின்றன காவல் தெய்வங்கள் […]

நிலை மயக்கம்

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

ஸ்வரூப் மணிகண்டன்  நிலா தெரியாத இரவில் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தோம். பின் நிலவு தெரிந்த பொழுதில், எண்ணி முடித்த நட்சத்திரங்களைப் பறித்து நமது தோட்டத்தில் நட்டு வைத்தோம். விரிந்து நிற்கும் நட்சத்திரங்களின் வாசத்தில் மயங்கி நின்றது நிலவும்.

கவிதைகள் – ஸ்வரூப் மணிகண்டன்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

ஸ்வரூப் மணிகண்டன் வார்த்தைகள் மட்டும் கொண்டிருந்தவனிடம் வசிக்க இடம் கேட்டு வந்தாய். இருக்கும் வார்த்தைகளை வெளியனுப்பி விட்டு உன்னை உள்ளிருக்க வைத்தேன். உள்ளிருக்கும் உன்னை பார்த்து விடும் முனைப்பில் எட்டிப்பார்க்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றாய் உன் புன்னகைக்குள் விழூந்து மறைவதை பார்த்திருக்கும் பாக்கியம் வாய்த்திருக்கிறது எனக்கு. ,.. ——————————————————- என் இதயத்துடிப்பைக் கேட்டு நீயறிந்த ரகசியங்கள் உன்னுடையதும்தான் … ,.. ——————————————————- அலைந்து திரியும் வெண்மேகங்களின் அழகில் மயங்கி நிற்கிறது மாலை. மறையும் வானில் நிறங்களின் கூடமைக்கும் சூரியனைப் […]