தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

அமீதம்மாள்

Total Contribution: 163 Articles

பசியாறலாமா?

அமீதாம்மாள் இட்லி வேணுமா?தோசை வேணுமா?தயாரா இருக்குமாக்கி நூடுல்ஸ்கேவூர் கூழ்உடனே தரலாம்நேத்து வாங்கியசப்பாத்தி, பரோட்டாஉப்புமா, இடியப்பம்எல்லாம் திடீர் வகைகள்வேணுமா?அட! மறந்துட்டேன்பழசு புடிக்குமேதண்ணிவிட்ட சோறுதயிர், கருவாடு தரவா?சொல்லுங்கஎன்ன வேணும்?யோசித்துக்கொண்டேதொலைக்காட்சியைப்பார்க்கிறேன்ரொட்டிஎதிர்பார்த்து……ஒட்டிய வயிறோடு…..ஆயிரமாயிரம்அகதிகள்அமீதாம்மாள்

பேருந்து நிறுத்தம்

பள்ளிப் பருவமாய் இனிக்கும் அந்தப் பேருந்து நிறுத்தம் அருகில்தான் மகள் வீடு மகளைப் பார்த்தபின் என் மனை செல்லும் பேருந்து அங்குதான் நிற்கும் அங்கு.... ஒற்றுத்தாள் விற்கும்…

என் பெயர்

அமீதாம்மாள் எனக்குள்இன்னொரு உயிர்பேசுகிறதுபேசுகிறேன்அழுகிறதுஅழுகிறேன்சிரிக்கிறதுசிரிக்கிறேன்மௌனிக்கிறதுமௌனிக்கிறேன்வெளியேஎவர் பேசுவதும்எனக்குப் புரிவதில்லைநான் பேசுவதும்எவர்க்கும் புரிவதில்லைஅந்த இன்னொருஉயிரைத் தவிர

பயணம்

என் பயணத்தில் என்னைக் கடக்கும்  வாகனங்கள் பல நான் கடக்கும்  வாகனங்களும் பல அவரவர்களுக்கு  அவரவர் இலக்கு விதிகள் மீறாதவரை விபத்துகள் இல்லை

முதுமை

நதியின் இறுதி நாள் இதோ நெருக்கத்தில் கடல் அன்று மாட்டுக்கு  விலை இன்று தோலுக்கு   விலை விழுந்த தேங்காய் தென்னையைப் பார்த்து அழுகிறது இனி எல்லா…

இரண்டு கவிதைகள்

வாகன  இரைச்சலில் சாலைகள் காலடி  ஓசையில்  பாதைகள் இடைப்பட்ட புல்வெளியில் ஒரு மைனாவாய் மேய ஆசை ---------- அவள் தைரியமாகவே உலா வருகிறாள் உரக்கப் பேசுகிறாள் எவர்தான்…

க…… விதைகள்

1 மனிதன் தேடும் ‘சுகம்’ ஒரு நாணயமாகத்தான் தரப்படுகிறது அதன் மறுபக்கம் ‘வலி’ 2 வெறுப்பை விரோதத்தை கோபத்தை பகையை நோக்கி எடுத்துவைக்கும் காலடிகளே ‘விவாதங்கள்’ 3…

சுமைகள்

பருத்து வீங்கிய பணப்பைகையிலும் அடங்கவில்லைபையிலும் அடங்கவில்லைஅதக்கிய குரங்குவாய் மாதிரிசே! ஒரு நாள்சுங்கச்சாவடியாகிபணப்பையை சலித்தேன் காலாவதி பற்றுச்சீட்டுகள்ஒரு காலாவதி சிம்அட்டைசில மாத்திரைகள்பயனற்ற சாவிஒரு ஊக்குஇந்திய ரூபாய்கள்ஒற்றுத்தாள்கள்கடைச்சாமான் பட்டியல்கள்புகைப்படங்கள்பெயர் அட்டைகள்பேசி…

வெயிலில்

வெயிலில் காய்ந்ததைவறட்சி வாட்டியதைவெள்ளம் விரட்டியதைபுயல்கள் புரட்டியதைஎந்தத் தாவரமும் தன்பூவிடம் சொல்வதில்லை அமீதாம்மாள்

நித்தியகல்யாணி

அமீதாம்மாள் மகள் வீட்டில் எல்லாருக்கும் கொரொனா விமானத்தைத் தவறவிட்டு தவிக்கிறான் மகன் தைவானில் மனைவி தாலிக்கொடியில் தாயத்தைக் காணோம் இலக்கியப் பரிசுக்கு என் நூல் தேர்வு இணையத்…