author

தவிர்க்க இயலாத தமிழர்தம் பட்டங்கள்

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

  வில்லவன் கோதை இயல்பாகவே  தமிழர்கள் ரசனை மிக்கவர்கள். உண்பதிலும் உறங்குவதிலும்  மட்டுமல்ல ! பேசுவதிலும் எழுதுவதிலும் கூட. பெரும்பாலும் ரசனை உள்ளவர்கள்   கற்பனை வளமும் மிகுந்தவர் களாகவே இருந்திருக்கவேண்டும். நம்மிடையே தலைமுறை தலைமுறையாக நிறைந்து கிடக்கிற நீதி நூல்களும் இலக்கிய குவியல்களுமே இதற்கு சான்றென கருதுகிறேன். ரசனை மிகுந்தவராக இருப்பதால்தான் ஒரு காரியத்தை ஆஹ..ஓஹோ என்று பாராட்டுவதும் இன்னொரு காரியத்தை த்தூ..து என்று நிராகரிப்பதும்  எப்போதுமே இந்த சமூகத்தில் நிகழ்கிறது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்…! தலையாலங்கானத்து […]

திருப்பாவை உணர்த்தும்வழிபாட்டுநெறி

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

முனைவர் ந.பாஸ்கரன், உதவிப்பேராசிரியர,; பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1. இறைவனை வணங்கும் தமிழர் வழிபாட்டு நிலை பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ளது.வழிபாட்டுத்தன்மை சமயம்தோறும் பல வகைகளில் பின்பற்றப்படுகிறது. காலந்தோறும் தமிழர் சமய வழிபாடுகளில் சிறசில மாற்றங்களும் புதுமைகளும் நிகழ்ந்து வருகின்றன.கடவுளர்கள் மற்றும் கடவுளர்களுக்கான அமைப்பிட வரையறைகளில் வகுக்கப்பட்டுள்ள ஆகம சட்டங்களின் இறுக்கம் வழிபாட்டளவில் சற்று நெகிழ்ச்சிகொண்டதாகக் காணப்படுகிறது. இருப்பினும் சில அடிப்படை விதிமுறைகள் உறுதியாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.வைணவ ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கும் ஆண்டாள் தமது திருப்பாவை பாடல்களின் […]

என்னை ஆட்கொண்ட இசையும், நானும்

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

அரவக்கோன் சிறுவயது முதலே இசைச் சூழலில் வளர்ந்த நான் அதைக் கற்கத் தேர்ந்தெடுக்காதது எப்படி என்று பிறரால் வினவப்படும்போது தக்க பதில் தெரியாமல் தவித்ததுண்டு. இளமையில் எப்போதும் கிட்டும் பொருள்கொண்டு விரல்களால் தாளங்களை தோன்றிய விதமாய் தட்டிக்கொண்டிருப்பது எனக்கு உற்சாகமான பொழுதுபோக்கு. வீட்டில் பெரியவர்களுடன் அனைத்து இசை நிகழ்ச்சிகளுக்கும் தவறாது சென்று வருவேன். மாலையில் ஒரு குழுவாகக் கிளம்பி மயிலாப்பூர், லஸ் போன்ற இடங்களில் அவ்வப்போது நிகழும் இசை நிகழ்ச்சிகளுக்கு சென்று இரவில் நடந்தே திரும்புவது என்பது […]

இயற்கையைக் காப்போம்

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

கௌரி சிவானந்தன்,திருச்சி. அழகிய இயற்கையைப் பாடி மகிழ்வோம்-அதன் அற்புதப் புதிர்களைத் தேடித் தெளிவோம்! பழகிய உறவுகள் கைவிட்டாலும்-நம்மை படைத்தநல் இயற்கைதான் கா்ப்பாற்றுமே! குறுகிய உளம்தனில் கொள்கையினால்-கொண்ட கூர்மதி குறைவதால் கெடுதல் செய்வார், இளகிய மனங்களை இசையச் செய்தே-எழில் இயற்கையின் வளங்களை என்றும் காப்போம்! பஞ்சமும் பிணியும் பாரினிலே-கொண்டு பாழாகும் மானுடம் பாராயோ, நெஞ்சமும் நிதம் நிதம் தான் நொந்ததே-உடல் நாளையை நினைத்தேதான் நலிவுற்றதே! பறவைகள் மிருகங்கள் பதை பதைக்க-காட்டை பாவிகள் வேரோடு கருவறுக்க, உறைவிடம் இன்றியே பறி […]

மறந்து போன நடிகை

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

-தாரமங்கலம் வளவன் “ என்னோட ஒரே ஆசை எதுன்னா, நான் நடிகைங்கறத மக்கள் மறந்துடணும்.. கடைத்தெருவில நா நடந்தா யாரும் என்ன கண்டுகொள்ளக்கூடாது…. ப்ரியா இருக்கணும்… மனசுக்கு பிடிச்சதை நெறய சாப்பிடணும், வெளியில போனா, யாரும் என்ன கண்டு கொள்ள கூடாது.. இது தான் என்னோட ஆசை…” மும்பை விமானத்தில் இருந்து சென்னையில் இறங்கியவுடன், ஒரு குழந்தையைப் போல் சொன்னாள் நடிகை புஷ்பவல்லி. ஒரு கதா நாயகி நடிகைக்குள் இப்படி ஒரு ஆசையா என்று சந்திரன் வியந்து […]

“ஓரினச்சேர்க்கையும் ஹிந்து மரபும்” கட்டுரைக்கு எதிர்வினை

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

ஷாலி // இங்கனம் நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் சுயராஜ்ஜிய சுதந்திரம் தரும் அந்த ஹிந்து சமூகச் சட்ட வழிகாட்டிகளுக்கு ஸ்ம்ருதிகள் என்று பொதுப் பெயர்.// இன்றைய ஹிந்து சமூகத்தை அப்பட்டமாக ஏமாற்றுவதற்காக சொல்லப்படும் மூடுமந்திரமே மேலுள்ளது.எப்படி? ஹிந்து வேத தர்மத்தின் அடிப்படை இரண்டு, 1. ஸ்ருதி.நிலையானது. 2.ஸ்மிருதிகள். காலத்திற்க்கேற்ப மாறுவது.ஸ்ருதி-அடிப்படை ஆன்மீக தத்துவங்களையும்,ஸ்ருதி-அந்த தத்துவங்களையொட்டி காலத்திற்க்கேற்ப ஏற்படும் விதிகளையும் விளக்குகிறது. இன்று இந்தக் காலத்திற்க்கான ஸ்மிருதி என்று எதுவும் இல்லை. http://www.tamilhindu.com/2008/06/questionsandanswers1/ வேத காலத்திலும் ஒருபால் புணர்ச்சியாளர்களுக்குள் […]

‘விஷ்ணுபுரம் விருது’

This entry is part 32 of 32 in the series 15 டிசம்பர் 2013

அன்புடையீர்! வணக்கம்; தமிழின் மூத்த படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் பொருட்டு ‘விஷ்ணுபுரம் விருது’ கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயமும், ரூ.50,000/- ரொக்கப் பணமும் உள்ளடக்கியது. இந்த ஆண்டு முதல் விருதுத் தொகை ரூ.1,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 2013-ஆம் ஆண்டிற்கான விருது இலங்கை மலையகத்தைச் சேர்ந்த மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. டிசம்பர் […]

கடத்தலின் விருப்பம்

This entry is part 26 of 32 in the series 15 டிசம்பர் 2013

தமிழ் ஒவ்வொரு ஜூன் மாதத்தையும், பண்டிகை காலத்தையும் கவனமுடன் கடக்க விரும்புகிறது நடுத்தர வர்க்கம். ஒவ்வொரு நவம்பர் மாதத்தையும், பெருமழைக் காலத்தையும் கவனமுடன் கடக்க விரும்புகிறது புறநகரின் குடிசை வர்க்கம். ஒவ்வொரு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திலும் சாலைகளைக் கவனமுடன் கடக்க விரும்புகிறது அரசு எந்திரம். — iamthamizh@gmail.com

(அ)சிங்கப்பூர் அல்லது சிருங்காரப்பூர்

This entry is part 3 of 32 in the series 15 டிசம்பர் 2013

புனைப்பெயரில்.   லிட்டில் இந்தியாவில் கலவரம், தமிழர்கள் 27 பேர் கைது. வாகன விபத்து. ஒருவர் மரணம். தொடர்ந்த 400 பேர் கலவரம். தொடர்ந்து,  அந்த ஊர் நாட்டான்மைகள் சொல்லுகிறார்கள், சிங்கப்பூரியன்ஸ் இதை செய்திருக்க மாட்டார்கள், கூலி வேலை கும்பல் குடிபோதையில் செய்த ரகளையே இதென்று. எந்த ஒரு தேசத்திலும், ஒரு வாகன விபத்து 400 பேரை கலவரம் செய்யத் தூண்டாது… செத்தவர் பத்தோடு பதினொன்றான “ஆம் ஆத்மி”யாக இருக்கும் போது. சிங்கப்பூரில் செத்தவரும் ஒரு ஆம் […]

பணம் காட்டும் நிறம்

This entry is part 23 of 32 in the series 15 டிசம்பர் 2013

விஜயலஷ்மி சுஷீல்குமார் “உங்களுக்கு என்னங்க? ராணி மாதிரி உங்கள பாத்துக்கும் புருஷன்! ஏழு தலைமுறைக்கும் இருக்கற சொத்து..ம்ம்ம்..இதுக்கு மேல என்னங்க வேணும்?” என்று பெருமூச்சு விடும் சொந்தத்துக்கு தெரியுமா சுமித்திரையின் வேதனை? “இங்க இவ்வளவு சொத்து இருந்து என்ன பிரயோஜனம்? திருமணமாகி பதின்நான்கு வருடங்கள் உருண்டோடியும் ஒரு குழந்தை அம்மா என்று அழைக்கும் பாக்கியம் இல்லாது போனது எந்த ஜென்மத்து பாவம்? அதுவும் மருத்துவரீதியாக தன்னால் குழந்தையை பெற முடியாது என்று மருத்துவர் கூறிய அன்று; அந்த […]