author

அத்தம்மா

This entry is part 11 of 31 in the series 13 அக்டோபர் 2013

யூசுப் ராவுத்தர் ரஜித் (புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமனாதபுரம் மாவட்டங்களில் இன்றும் வழக்கிலுள்ள சொல் அத்தம்மா. அத்தா என்றால் அப்பா. அத்தாவின் அம்மா அத்தம்மா.) சுப்ஹு தொழுத கையோடு சேர்ந்திருக்கும் அழுக்குத் துணிகளை அள்ளிக் கொண்டு அரசமரக் குளத்திற்குச் செல்வார் அத்தம்மா. கூடவே நானும் செல்வேன். அதிகாலை எழும் பழக்கம் எனக்கு அத்தம்மா கற்றுக் கொடுத்ததுதான். இரவு கொஞ்சம் வெளிச்சத்தைப் பிசைந்துகொண்ட அதிகாலை. அந்தக் குளத்தை ஒவ்வொரு பொழுதும் முதலில் பார்ப்பது சூரியனும் அத்தம்மாவும்தான். ஒரு செம்ப்ராங்கல்லுக்கு அருகில் […]

தலைகீழ் மாற்றம்

This entry is part 12 of 24 in the series 8 செப்டம்பர் 2013

1 அனுபமா. ஓ நிலை படிக்கிறாள். தொட்டால் சிணுங்கி வகை. அதையும் விட சற்று அதிகம். தொட்டாச்சிணுங்கி சிணுங்கும். சில நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். ஆனால் அனுபமா? அடிக்கடி சிணுங்குவாள். ஆனால் இயல்பு நிலைக்குத் திரும்ப சில நாட்கள் ஆகும்.  அப்பா பன்னீர்ச்செல்வத்திற்கும் அம்மா ஜெயந்திக்கும் அனுபமாவோடு எப்போதும் ஏதாவது குளிர் யுத்தம். இப்போதும் கூட அப்பாவோடும் அம்மாவோடும் அனுபமா சரியாகப் கேசுவதில்லை. தன்னோடு அனுபமா ரொம்பக் கோபத்தில் இருக்கிறாள் என்பதை பன்னீர்ச்செல்வம் உணர்ந்து கொண்டார். […]

கஃபாவில் கேட்ட துஆ

This entry is part 12 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

1 யூசுப் ராவுத்தர் ரஜித் 40 ஆண்டுகளாய் அடைகாத்த ஆசை இதோ ஜூலை 12ல் நிறைவேறப் போகிறது. முகம்மது நபி (ஸல்) பிறந்த மண், குர்ஆன் அருளப்பட்ட மண், அல்லாஹ்வால் அடையாளம் காட்டப்பட்டு முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்டு, நபி இப்ராஹிம் (அலை) அவர்களால் மறுநிர்மானம் செய்யப்பட்டு பிறகு முகமது நபி (ஹல்) அவர்களால் புனிதமாக்கப்பட்டு, ஆண்டாண்டு லட்சோப லட்சம் ஹஜ் பயணிகள் தரிசிக்கும் வகையில் பொது உடமை யாக்கப்பட்ட அந்த கஃபா இருக்கும் […]

சதக்கா

This entry is part 11 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

சிறுகதை (இஸ்லாமிய சமுகத்தின் பின்னணியில்) யூசுப் ராவுத்தர் ரஜித் (சதக்கா என்றால் தான தர்மம். அல்லாஹ்வின் பெயரால் வழங்கப்படும் இந்த தான தர்மங்கள் நெருப்பை நீர் அணைப்பதுபோல் நம் பாவங்களை அழித்துவிடும் வல்லமை பெற்றது – நபிகள் நாயகம் (ஸல்)) மூன்றாம் மாடியிரலிருந்து தன் கால்குலேட்டரைத் தவறவிட்டுவிட்டு அப்படியே நின்றார் கதிஜா. கதிஜா ஒரு ஓ நிலை மாணவி. தமிழாசிரியர் கிரிஜா பார்த்துக் கொண்டே இருந்துவிட்டுக் கேட்டார். ‘உன் கால்குலேட்டர் உடைந்துவிட்டது. யார் தலையிலாவது விழுந்து உடைந்திருந்தால் […]

சிரித்துக் கொண்டே இருக்கும் பொம்மைகள்

This entry is part 3 of 28 in the series 27 ஜனவரி 2013

  1960 களில் என் ஆறாம் வகுப்பு நாட்களில்தான் நடந்தது என் முதல் நட்பும் முதல் பிரிவும். உடம்பெல்லாம் பூக்கள் பூக்கும் உணர்வு ஞாயிற்றுக் கிழமைகளில்தான். அந்த வயதில் நான் ஞாயிற்றுக் கிழமையையே வெறுத்தேன். என் நண்பன் உமாசங்கரை அந்த ஒரு நாள் பார்க்கமுடியாதல்லவா? அழகான பூப்போட்ட கண்ணாடிப் பாத்திரத்தை பொட்டென்று போட்டுடைத்தது போல் உமா சொன்னான். அவன் அப்பாவுக்கு வேலை மாற்றலாகி விட்டதாம். நாளையே எல்லாரும் மெட்ராஸ் போகிறார்களாம். என்னை ஓர் இருள் கவ்வியது. அவன் […]

ரத்தத்தை விடக் கனமானது தண்ணீர்

This entry is part 15 of 23 in the series 7 அக்டோபர் 2012

  அந்தக் காரின் முதுகில் மோதிய வேகத்தில் தன் இருசக்கர வாகனத்துடன் இரண்டு மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டார் வசந்தன். தலைக் கவசத்தின் இடப்பக்கம் பழைய டயராய்த் தேய்ந்து விட்டது. அந்த ஒரு வினாடி வசந்தனின் உயிரின் விலை 90 வெள்ளிக்கு வாங்கிய அந்தத் தலைக் கவசம்தான். சாலை ஓரத்திற்கு தூக்கிவரப்பட்டார். முதலில் சில மூச்சுக்களைக் கடினமாக இழுத்தார். பிறகு சரளமானது. உடல் முழுதும் எல்லா மூட்டுமே மடங்க மறுக்கிறது. ஓர் வாடகைக் கார் ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு […]

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 68வது நிகழ்ச்சி

This entry is part 3 of 37 in the series 2 செப்டம்பர் 2012

வணக்கம் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 68வது நிகழ்ச்சி முற்றிலும் மாணவர்கள் பங்குபெறும் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி பற்றிய எல்லா தகவல்களையும் இணைப்பில் காணவும். உங்களின் ஆதரவின்றி இந்த நிகழ்ச்சிகளில் எங்களுக்கு வெற்றி இல்லை. தாங்கள் தவறாது வருகை தந்து தமிழைத் தாங்கி நிற்கப்  பாடுபடும்  நம் மாணவச் செல்வங்களை வாழ்த்த வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். மற்ற தகவல்களுக்கு அழைக்கவும் 90016400 நன்றியுடன் யூசுப் ராவுத்தர் ரஜித் தலைவர் 68 pattimandram with loge தமிழ்ப் பட்டிமன்றக் […]

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்

இந்த மாதம் 21ம் தேதி தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் பெக்கியோ சமூக மன்ற இந்திய நற்பணிக் குழுவுடன் ஒரு சிறப்பான பட்டிமன்ற நிகழ்ச்சியை வழங்குகிறது. இணைப்பில் தகவல்களை அறியவும். தங்களுக்கு அழைப்பிதழ் அனுப்ப ஆவலாய் உள்ளோம். தயவுசெய்து தங்களின் முகவரியைத் தெரிவிக்கவும். அன்புடன் ரஜித் 90016400

பாத்தென்றல் முருகடியான் இயற்றிய திண்ணப்பர் பிள்ளைத் தமிழ் நூல் வெளியீடு

This entry is part 22 of 40 in the series 12 பிப்ரவரி 2012

வணக்கம் பாத்தென்றல் முருகடியான் இயற்றிய திண்ணப்பர் பிள்ளைத் தமிழ் நூல் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் வெளியீடு காண்கிறது. 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழுக்கு அவர்கள் செய்த தொண்டினை நாம் அனைவரும் மதிக்கும் வகையில் ஒன்று கூடுவோம். இணைப்பில் அழைப்பிதழ் இணைக்கப் பட்டிருக்கிறது. உங்களை வரவேற்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம் அன்புடன் தமிழ்ப் பட்டிம்ன்றக் கலைக் கழகம் பெக்கியோ சமூக மன்ற இந்திய நற்பணிக் குழு மேல் விபரங்களுக்கு ரஜித் 90016400

அப்பா

This entry is part 5 of 38 in the series 20 நவம்பர் 2011

திரும்பிப் பார்க்கிறேன். என் ஐந்து வயது முதல் இதோ இதைச் சொல்லும் இந்த நாள்வரை. எல்லாவற்றையும் திரும்பிப் பார்க்கிறேன். ஐந்து வயது. கலரான பாட்டிலில் எது இருந்தாலும் அதைக் குடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். அடுக்களையின் மூலையில் இருந்த அந்த பச்சை நிற பாட்டிலை எடுத்து இரண்டு முடக்கு குடித்துவிட்டேன். ‘என்னாங்க’ என்று அலறிக்கொண்டு அம்மா ஓடிவந்தார். மேல் சட்டை இல்லாமல் அப்பாவும் ஓடி வந்தார். நிலைமையைப் புரிந்து கொண்டேன். நான் குடித்தது மண்ணெண்ணெய். அப்பா ஒரு துண்டைப் […]