author

ஒற்றைப் பனைமரம்

This entry is part 10 of 14 in the series 18 அக்டோபர் 2020

உள்ளே போவதற்குப் பல வழிகள் இருக்கின்றன. எல்லாக் கதவுகளும் திறந்துகொண்டு வருபவரை விழுங்கிவிடக் காத்திருக்கின்றன சிலர் ஏதேனும் ஒருவழி அறிந்து உட்புகுகிறார்கள் அவர்கள் நுழைந்தவுடன் கதவுகள் தாமாக மூடிக்கொள்கின்றன தட்டினாலும் திட்டினாலும் திறக்காதவை அவை அதன் உரிமையாளன் ஆசைக்கயிறு வீசி அலைக்கழிக்கிறான் அதன் காவல்காரனின் கண்களில் உங்களின் வரவு ஆசைக்கங்குகளை ஏற்றுகிறது எருமையும் கூகையும் எங்கும் அலைய நீங்களோ ஒற்றைப் பனைமரம் நிலைக்குமென நம்புகிறீர்கள்

கூகை

This entry is part 9 of 14 in the series 18 அக்டோபர் 2020

                  வலிக்காமலே அடிக்கலாம் என வார்த்தையாடினர் அடித்தல் என்பதும் கடுமையான அன்பின் வழி அப்பா அம்மாவிடமும் அண்ணனிடமும் என்னிடமும் அடையாளம் காட்டியது வசவுகள் அடியைவிட வாழ்வில் மிகவும் ஆபத்தானவை வழியெல்லாம் அடைத்துவிடும் எந்தச் சந்தர்ப்பத்திலும் வழிகளை மூடக்கூடாது வானத்து இடியினால் வழிகின்ற வசவும் வலிக்காமல் அடிக்கின்ற மின்னலின் வீச்சும் அடையாளம் காட்டுவது ஆலமரப் பொந்திலிருக்கும் அழகான கூகையைத்தான் ===================================

கவிதைகள்

This entry is part 7 of 17 in the series 11 அக்டோபர் 2020

நிழல்                           என்னைப்போலவேஅவனும் கவிதைஎழுதுகிறான் கட்டுரைவரைகிறான் மேடையில்பேசுகிறான் அவனைப்பார்த்தால் நான்பொறாமைப்படுவதுஉண்மையே என்னைப்போலவே கோபப்படுகிறான்லே லேசாகச்சிரிக்கிறான் உறவுகளைநேசிக்கிறான் நட்புகளைநெருங்குகிறான் அவனைப்பார்த்தால் நான்பொறாமைப்படுவதுஉண்மையே அவனும்என்னைப்போலவே மாலதியைநேசிக்கிறான் நாடிவந்தமல்லிகாவை வெறுத்தொதுக்கினான் தேடிச்சென்று புகழடையவிரும்பாதவனை நீயார்எனக்கேட்டேன் நான்தான்உன்நிழல்என்றான் ============================================================================ எழுதுதல்                                 எழுதவேண்டும் ஆமாம்நிறுத்தாமல் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையேல்உன்னை மறந்துவிடுவார்கள் அதுமட்டுமன்றுஉன்னை மிதித்துஅடித்துப் போட்டுவிடுவார்கள் நீஇருந்தஇடமே தெரியாதபடிக்கு சுவடுகளைஎல்லாம் சுனாமிவந்ததுபோல அழித்துவிடுவார்கள் ஆகவே ஏதாவதுஎழுதிக்கொண்டே இருக்கவேண்டும் புரியவேண்டும்என்பதில்லை புரிந்ததுபோல்எழுதவேண்டும் புரியாததுபோலவும் எழுதவேண்டும். எப்படியோ எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் உன்னிடத்தைப்பிடிக்க அதோஒருவன்வருகிறான் அவன்வந்துஉன் கையைமுறிப்பதற்குள் எழுது      […]

இனிப்பும் கசப்பும் – எஸ்ஸார்சியின், “இன்னும் ஓர் அம்மா” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து

This entry is part 6 of 12 in the series 4 அக்டோபர் 2020

                             [எஸ்ஸார்சியின், “இன்னும் ஓர் அம்மா” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து] சிறுகதை, கட்டுரை, புதினம், கவிதை, மொழிப்பெயர்ப்பு எனப் பலதுறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர் தோழர் எஸ்ஸார்சி. அவரின் அண்மை வெளியீடு “இன்னும் ஓர் அம்மா” எனும் சிறுகதைத் தொகுப்பு. இத்தொகுப்பில் பதினாறு கதைகள் அடங்கி உள்ளன. அவற்றில் முதல் ஒன்பது சிறுகதைகள் அம்மா பற்றி உள்ளன. அம்மாபற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக் கொண்டே இருக்கலாம் அன்றோ? ”தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண்டடித்தால் தாய் உடன் அணைப்பள்” […]

அருளிசெயல்களில் பலராம அவதாரம்

This entry is part 10 of 17 in the series 27 செப்டம்பர் 2020

இந்துமதத்தில், பலராமன் கிருஷ்ணரின் அண்ணன்ஆவார்.இவர் பலதேவன் , பலபத்திரன், கலாயுதன் என்றும் அழைக்கப்படுகிறார். வைணவத்திலும் தென்னிந்திய இந்து புராணங்களிலும் பலராமன் விஷ்ணுவின் அவதாரமாகவே கருதப்படுகிறார். எனினும் இவர் விஷ்ணு படுத்திருக்கும் ஆதிசேஷனின் வடிவம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவருக்கு சங்கர்ஷனர் என்ற பெயரும் உண்டு. இவர் வசுதேவருக்கும் ரோகிணி தேவி என்ற அவரின் முதல் மனைவிக்கும் பிறந்தவர். இவரது மனைவியின் பெயர் ரேவதி, இவரின் தங்கையின் பெயர் சுபத்திரை ஆவாள். ஆழ்வார்கள் தம் அருளிச்செயல்களில் ஒரு சில இடங்களில் பலராம அவதாரத்தைப் போற்றுகின்றனர். பெரியாழ்வார் பலராமனை “வெள்ளிப் பெருமலைக் குட்டன்” என்று குறிப்பிடுவார். திருமங்கையாழ்வார் திருநறையூர் திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும்போது பலராமனின் நிறத்தைப் போற்றுகிறார். ”திருநறையூர் நிறைய சோலைகளை உடையதாகும். அச்சோலைகளில் பல சுளைகளை […]

முத்தொள்ளாயிரத்தில் யானைகள்

This entry is part 1 of 16 in the series 20 செப்டம்பர் 2020

                              யானைக்கு அஞ்சிய நிலவு       சோழநாட்டில் ஒரு தலைவியும் அவள் தோழியும் நாள்தோறும் நிலாமுற்றம் செல்வார்கள். அங்குக் காட்சியளிக்கும் நிலவைக் கண்டு மகிழ்வார்கள். ஒருவர்க்கொருவர் மனம் மகிழும்படிப் பேசிக்கொள்வார்கள். அதுபோல ஒரு நாள் இருவரும் சென்றனர். அப்போது தலைவி தோழியைப் பார்த்து, “ஏனடி தோழி! இதோ இந்த முழுநிலவு இருக்கிறதே; இது தினமும் தேய்ந்துகொண்டே வருகிறதே; ஏன் தெரியுமா?” என்று கேட்டாள். அதற்குத் தோழியோ, “எனக்குத் தெரியாது; நீயே விடை சொல்” என்றாள். தலைவி, தோழியைப் […]

ஐங்குறு நூறு — உரை வேற்றுமை

This entry is part 6 of 11 in the series 13 செப்டம்பர் 2020

                                                               ஐங்குறு நூறு என்பது ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் வீதம் என்னும் வகையில், ஐந்து குறுகிய நூறு பாடல்கள் அடங்கிய தொகுதியாகும். இந்நூலின் நெய்தல்திணைப் பாடல்களை அம்மூவனார் பாடி உள்ளார். அப்பாடல்களில் ஆறாவது பிரிவாக ‘வெள்ளாங்குருகுப் பத்து’ என்பது அமைந்துள்ளது.  வெள்ளாங் குருகு என்னும் பறவையைப் பற்றிய செய்திகள் இப்பத்துப் பாடல்களிலும் பயின்று வருதலால் இப்பகுதி வெள்ளாங்குருகுப் பத்து என்று பெயர் பெற்றது. வெள்ளாங்குருகு என்பது நீர்ப்பறவை இனத்தைச் சேர்ந்தது. வயிற்றுப்புறத்தில் வெண்மை நிறமும், […]

தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]

This entry is part 13 of 13 in the series 6 செப்டம்பர் 2020

                                                                                      பொய்கைசூழ் புகலிப் பெருந்தகை                         பொன்னி நாடு கடந்துபோய்                   வைகை சூழ்மதுரா புரித்திரு                         வால வாயை வணங்கியே.                 [171] [பொய்கை=குளம்; புகலி=சீர்காழி; பொன்னி=காவிரி; ஆலவாய்=மதுரை; ஆலம்=நஞ்சு]       திருக்குளங்கள் பல நிறைந்த சீர்காழிப் பதியில் அவதரித்த திருஞானசம்பந்தர் பொன்னி ஆறு என்னும் காவிரி பாயும் சோழநாட்டை விட்டுப் புறப்பட்டு, வைகை ஆறு பாய்கின்ற பாண்டிய நாட்டின் திருஆலவாய் என்னும் மதுரையை அடைந்து வணங்கினார். மதுரையை வணங்குவது என்பது அங்கே அருள்செய்து […]

நம்மாழ்வாரின் அன்னை அவதரித்த திருத்தலம்

This entry is part 8 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

                                                                        பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வார் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்னும் பெயராலே வழங்கப்படுகிறார். அவர் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் நான்கு பிரபந்தங்களை அருளிச் செய்துள்ளார். அவை ருக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்கு வேதங்களின் சாரமாக அமைந்துள்ளதால் அவருக்கு ”வேதம் தமிழ் செய்த மாறன்” என்னும் பெயர் வந்தது. நம்மாழ்வார் திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரியில் வைகாசி விசாக நாளில் அவதரித்தார். அவர் தந்தையார் திருநகரியைச் சேர்ந்த காரி […]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 4 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

                                 பொங்கு திரிபுரம் வெந்து பொடிபட       வந்து பொருளும்ஒரு பொருநர்கைத் தங்கு சிலைமலை கொண்ட பொழுதுஉல       கங்கள் தகைவதுதண்டமே.                [161] [பொருநர்=வீர்ர்; சிலை=வில்; தகைதல்=கட்டளை இடுதல்]       இவ்வுலகங்களைத் தம் தண்டாயுதத்தால் அன்னை அருளாட்சி செய்து வருகிறார். முன்னொரு காலத்தில் சிவபெருமான் திரிபுரங்களை வெந்து பொடிபட அழித்தபோது வீரரான அவர் கையில் இருந்த வில்லாக இருந்த மேருமலைதான் அன்னையின் கையில் இருக்கும் தண்டாயுதமாகும். ===================================================================================== தடிந்த துரக குலங்கள் உரக      பிலங்கள் […]