சேதுபதி கவிதைகள் ஒரு பார்வை

  பேராசிரியர் சேதுபதி மேலச் சிவபுரியில் கல்வி கற்றவர். கவிதை நாடகமும் எழுதியுள்ளார். பாரதியார் , ஜெயகாந்தன் எழுத்துக்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். " சாம்பலுக்குப் பின்னும் சில கனல்கள் :என்ற இத்தொகுப்பில் 54 கவிதைகள் உள்ளன..புதிய சிந்தனைகள் , எளிமை…

கடைசிக் கனவு

சோழகக்கொண்டல் இலக்கின்றி எல்லையுமின்றி மிதந்து மிதந்தேறி மெல்லப் பறக்கிறேன் சூரியன் சென்று மறைந்த பாதையில்   காத்திருக்கும் பொறுமையற்ற மனம் காற்றில் சருகாய் அலைகிறது விடியல் கூடாத திசைகளில்   நான் ஏங்கியலைந்த பூக்களெல்லாம் பழுத்துக் கிடக்கின்றன தூங்காது கிடந்து துரத்திய…

விதிவிலக்கு

    பாலம் நெடுக நெருங்கி நின்றன வாகனங்கள் முடிவின்றி நீண்ட போக்குவரத்து நெரிசல்   பாதிக்கப் பட்ட பயணிகள் திருச்சி ஸ்ரீரங்கம் எனப் பிரித்து இரு ஊர்களைத் தனித்தனியாய்க் குறிப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள்   பாலம் இடைவழி மட்டுமோ? இரண்டற்றதாக்காதோ?…
நூறாண்டுகள நிறைவடைந்த  இந்திய  சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்

நூறாண்டுகள நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்

முருகபூபதி (தமிழ்நாட்டில் கடலூரில் 24-04-1934 ஆம் திகதி பிறந்து தமது 81 வயதில் கடந்த 08-04-2015 ஆம் திகதி சென்னையில் மறைந்த மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் - படைப்பிலக்கியவாதி - பத்திரிகையாளர் - சினிமா வசனகர்த்தா - பாடலாசிரியர் -திரைப்பட இயக்குநர்…

பயணங்கள் முடிவதில்லை

  மனிதர்களுக்கென்ன  ரயிலேறிப் போய்விடுகிறார்கள்    கசிந்த கண்ணீருக்கும்  குலுக்கிய கைகளுக்கும்  மென்தழுவலுக்கும்  மௌன சாட்சியாய்க் கிடக்கும்  நடைமேடையையும்  உயரத் தூண்களையும்  கழிப்பறை வாடை கருதாமல்  பூவும் பிஞ்சும் உதிர்த்தபடி  நிற்கும்  பெயர் தெரியா இம்மரத்தையும்  என்ன செய்வது..... -உமாமோகன்
அப்பா எங்க மாமா

அப்பா எங்க மாமா

  தமிழரசனை முதன்முதல் அந்தத் திருமண விருந்தில்தான் சந்தித்தேன். நானும் என் மனைவியும் அமர்ந்திருந்த மேசையை அப்போதுதான் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ‘இங்க யாரும் வர்றாங்களா சார்?’ என்று கேட்டபடி நின்றார் அவர். அந்த மரியாதை எனக்குப் பிடித்திருந்தது. இல்லையென்றதும் அமர்ந்துகொண்டு அடுத்த…
ஜெயகாந்தன் – இலக்கிய உலகைக் கலக்கியவர்

ஜெயகாந்தன் – இலக்கிய உலகைக் கலக்கியவர்

  ஜெயகாந்தன்! தமிழ் இலக்கிய உலகில் பளீரென்று தோன்றிய விடிவெள்ளி! இவரின் அனைத்துப் படைப்புகளையும் படித்ததில்லை. இவ்வாறு சொல்ல நேர்ந்ததில் வெட்கம்தான். ஆனாலும் உண்மை. கவிதா பதிப்பகம் இவரின் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளது. அதைச் சில ஆண்டுகளுக்கு முன் வாங்கியது உண்மையானாலும்,…

மூன்றாவது விழி

    உன் துணையோடுதான் இவ்வளவுத்தூரம் கடந்துவந்திருக்கிறேன்   களைப்பின்றி கவலையின்றி என்பயணம் நிகழ வழித்துணை நீதான்   இன்பபென்று எதையும் தேடவேயில்லை இன்பமில்லை என்ற எண்ணமேயில்லை துன்பமும் அப்படியே துளியும் உணர்ந்ததில்லை   புயல் வந்துபோனதற்குப்பின் அமைதியாய் நானிருக்க அரவணைத்தது…
தொடுவானம் 63. வினோதமான நேர்காணல்

தொடுவானம் 63. வினோதமான நேர்காணல்

  நேர்முகத் தேர்வின் இரண்டாம் நாள். காலையிலேயே மிகுந்த உற்சாகத்துடன் புறப்பட்டுவிட்டேன். சரியாக காலை ஏழரை மணிக்கு உணவுக் கூடத்தில் ஒன்று கூடினோம். என்னைப் போன்றே மற்ற மாணவர்களும் உற்சாகமாகவே காணப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் மருத்துவம் பயில இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை…

பழம்பெருமை கொண்ட பள்ளர் பெரு மக்கள்

  தலைவர், இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம், கடலூர் 607002 [டாக்டர் குமார. சிவா எழுதிய “திரிகூடராசப்பக் கவிராயர்—ஓர் இலக்கியப் போக்கு” எனும் நூலை முன் வைத்து] சிற்றிலக்கியங்கள் எனப்படுபவை பேரிலக்கியங்களுக்கு நிகரான யாப்பமைதியும், இலக்கிய வளமும், கருத்தாழமும் கொண்டவை. ஆனால் அவற்றில்…