காலை மணி எட்டரையைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கேன் நெற்றியில் வேர்வை வழிய வழிய. பவர் கட்டுத் தொல்லை வேறு ! அது எப்போது வருமோ ? இன்னும் வீட்டு வேலை செய்ய வரும் ஆயிஷா… வரவில்லை.எத்தனை நேரம் தான் நேற்று ராத்திரி போட்ட பத்துப் பாத்திரங்கள் காய்ந்து கொண்டிருக்கணும் ? வேலைக்கு வந்து பத்து நாட்கள் கூட ஆகலை…அதற்குள் இப்படி….! இந்த லட்சணத்துக்குத் தான் நான் வேலைக்கு ஆளே.. வெச்சுக்காமல் இருந்தேன்…என்னோட இந்த […]
இச்சிறுகதை எழுத தகவல் தந்து உதவிய சில குறிப்புகள்:—-. 1)= ’உடையாளூரில் பள்ளிப்படையா?.— கட்டுரை எழுதியது இரா.கலைக்கோவன்.—– நன்றி வரலாறு.காம்.இணையதளம் 2) =நன்றி— தமிழர் பார்வை இணைய தளத்தில்— கருவூர் தேவரின் சாபம் பற்றி மூத்த பத்திரிகையாளர் திரு அய்யப்பன் அவர்களின் தகவல். 3)= ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?.இணையதள ப்ளாக் ல் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு திரு. நிர்மல் அவர்கள் ஒரு கடித வடிவில் விவாதித்த ஒருகட்டுரை 4) =‘ சோழர்கள் ‘வரலாற்று நூல் எழுதியது […]
இப்படி ஒரு தடாலடி வேலையை எலி என அறியப்படும் ராமகிருஷ்ணன் செய்துவிடுவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொருமுறையும் எப்படியோ என்னை அறியாது கூட இருக்கும் நண்பர்கள் செய்துவிடும் திருட்டு அல்லது சில்மிஷங்களில் மனசே இல்லாமல் தலையைக்கொடுத்துத் துன்பம் ஏற்கிற ஜன்மமாகவே ஏன் இருந்திருக்கிறேன் என்று தெரியவில்லை. ராமகிருஷ்ணன், கூட இருந்தே குழிபறிக்கிறவன் என்பதால் காரணப்பெயராக எலி என்று மிகச்சரியான பெயர் வாங்கி, அப்படி அழைக்கப்படுவதால் எந்தவித கோபமும் கொள்ளாதவனாகவே இருந்தான். அவர்கள் வீட்டிலேயே கூட அவனை எலி […]
1927 மார்ச் 6 அக்ஷய மாசி 22 ஞாயிற்றுக்கிழமை காரசாரமான வெங்காய சாம்பாரும், கத்தரிக்காய் எண்ணெய்க் கறியும், ஆனையடி அப்பளமுமாக ராஜ போஜனம் போல ஒரு சாப்பாடு. இருபது சொச்சம் வருஷத்துக்கு முன்பு இந்த பாக்கியம் கிடைத்து அப்புறம் சொப்பனத்தில் மட்டும் கிடைக்கிறதாக மாறிப் போன சுகம் திரும்ப சித்தித்திருக்கிறது. அதை அனுபவிக்க விடாமல், போக வேளையில் வாசல் கதவைத் தட்டி மூட்டு வலித் தைலம் கேட்கிற அண்டை வீட்டுக்காரன் போல் இந்த மனுஷர்கள் […]
x ஆறடி உயரத்தில் வெண்நிற ஆடையுடன் நின்றிருந்த அவ்வுருவத்தைப் பார்த்தபோது செல்லம்மாவின் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.ஏதோவொரு வெப்பம் தனிச்சையாக வந்து தாக்கியது.மேனி முழுவதும் சிலிர்த்தது.அத்தருணத்தில் தனக்குத் தோன்றிய உணர்வு எத்தகையானது என்பதை அவளால் பகுத்துப் பார்க்க இயலவில்லை. அவ்வுருவத்தை தொடந்தாற்போல் சில நொடிகள் பார்க்கமுடியாமல் மெல்ல தலையைக் குனிந்துக்கொண்டாள்.சேலைத்தலைப்பை நன்கு இழுத்து முக்காடைச் சரி செய்தாள்.இதுவரையில் அதுபோன்ற ஒளிப்பொருந்திய கண்களை அவள் சந்தித்ததில்லை.தூரத்தில் இருந்து பார்த்தபோது அவை நட்சத்திரங்களாய் மின்னின…சற்று நெருங்கிய போதோ நிலவைப் போன்று […]
அக்கினி புத்திரி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “நான் பணி புரியும் விஞ்ஞானத் தொழிற்துறைகளில் பாலினப் பாகுபாடு (Gender Discrimination) எதுவும் கிடையாது. ஏனெனில் யார் வேலை செய்கிறார் என்று விஞ்ஞானத்துக்குத் தெரியாது. நான் வேலை செய்யப் பணித் தளத்தில் கால் வைக்கும் போது ஒரு பெண்ணாக என்னை நினைத்துக் கொள்வதில்லை. மாறாக நானொரு விஞ்ஞானியாக அப்போது எண்ணிக் கொள்கிறேன்.” டாக்டர் டெஸ்ஸி தாமஸ் (Agni-V Project Director, Defence Research & […]
பழமுதிர் சோலையில் நூல் விடும் கண்ணீர் ஏன் இந்த சோக இழை? கல் மனம் உருக்கிய மோனத்தின் வெள்ளி நீர்க் கொடியிது. அழகர் மலை இங்கு பாறை விரித்து அமர்ந்து பத்மாசனம் செய்தது. குளிப்பவர்களுக்கு முதுகில் சாட்டையடிகள் தண்ணீர்க்கயிற்றில். மலையே போதையில் புதைந்ததுவோ? பாட்டில்களில் டாஸ்மாக் தீர்த்தம். கள்ளழகனா?கதிர் வேலனா? மெல் ஒலி உதிர்த்து நீர் நடத்தும் பட்டிமன்றம். அடர் இலையில் சுடர் மலரில் நிழல் பரப்பிய சங்கப்பலகையில் திருமுருகாற்றுப்படை இது. கொத்து கொத்தாய் குரங்குக்குட்டிகள் […]
கடவுளும் கடவுளும் பேசிக்கொள்கிறார்கள். “உன்னை இருக்கிறது என்கிறார்கள் என்னை இல்லை என்கிறார்கள்” “ஆமாம் புரியவில்லை.” “இல்லையை இல்லை என்று சொன்னால் இருக்கிறது என்று ஆகி விடுகிறது” “இருக்கிறதை இல்லை என்று சொன்னால் இல்லை என்று ஆகிவிடுகிறது.” “மண்டையில் மத்து கடைகிற “அல்ஜீப்ரா” தான் கடவுளாலஜி. கடவுள் புராணங்களின் படி கடவுள்கள் கடவுள்கள் கடவுள்கள் எங்குபார்த்தாலும் கடவுள்கள். எங்கு பார்ப்பது? கடவுளுக்கு தீர்வு சொன்னவனே மனிதன். கடவுள் போய்விட்டார். கடவுள் எங்கு போனார்? மனிதன் சொன்ன இடத்துக்கு. […]
தோட்டத்தில் மகிழ மரத்தில் கூடுகட்டி வாழும் அந்த புள்ளிப்போட்ட புள் கூட்டம் தான் வைத்த அந்த ஒரு பிடி சோற்றில் உயிர் வாழுவது போல ஒரு மன நிறைவில் இன்பமாக இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி அங்கையற்கண்ணி, சமயலறை சன்னல் வழியாக. வழக்கம் போல. அன்றாடம் இரவு ஒரு பிடி சோறு தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும், பாத்திரத்தை சுத்தமாக கழுவி கவிழ்க்கக் கூடாது, காரணம் இறந்து போன நம் முன்னோர்கள் சில நேரங்களில் […]
“மனிதர்கள் என்றால் கவலைகள் இல்லாமலா? கேள்விகள் இல்லாமலா? ஏராளமாக இருந்தன. கூண்டுவண்டியிலும், கட்டைவண்டியிலும் வைக்கோலை தெளித்து ஜமுக்காளத்தை விரித்து, பெண்கள் கால்களை துறட்டுகோல்போல மடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க ஆண்கள் வண்டிக்குப்பின்புறம் அமர்ந்து வார்த்தைகளைக் கோர்த்து கேள்விச் சரடை தயார்செய்துகொண்டுவருவார்கள்.” 25. ‘கிருஷ்ணபுரத்தை காக்கவே மானுடவடிவில் வந்திருக்கிறேன்’ என்ற கமலக்கண்ணியின் வார்த்தைகளைகேட்டு ஐந்து ஆண்டுகளுக்கு முன் மெய்யுருக கைகூப்பி தண்டமிட்டவர்களில் கிருஷ்ணப்ப நாயக்கரும் ஒருவர். கமலக்கண்ணியின் பேச்சு அவரைக் கட்டிபோட்டது. தம்மை தெய்வமென்று அவள் அறிவித்துக்கொள்ளாதிருக்கும் பட்சத்தில் கல்யாணமகாலில் அவளுக்கென்று […]