ஜெயஸ்ரீ ஷங்கர் பாரதத்தின் நாடியை நன்கறிந்த கவிஞன் ஒய்யார முண்டாசுக்குள் ஓயாத எண்ணங் கொண்டவன் கண்களால் ஈர்த்து விடும் காந்த மனம் கொண்டவன் வார்த்தை ஜாலங்களால் வானத்தில் கார்மேகம் சூழ வைப்பவன் வான் நட்சத்திரங்களை பூமழையாக மாற்றுபவன் மந்திரங்கள் கற்காமல் கவிதை ஜாலத்தால் மனத்தைக் கட்டிப்போட்டு நகைப்பவன் மீசை துடிக்கத் துடிக்க ஆசைகளைச் சொன்னவன் கண்ணனைக் கட்டிப் பிடித்தவன் காளியோடும் மாரியோடும் மகிழ்ந்து கும்மியடித்தவன் பாரதக் கொடியை உயர்த்திப் பிடித்தவன் விடுதலை வேண்டி சங்கம் முழக்கியவன் இறுக்கிச் […]
மு. கோபி சரபோஜி தாராளமயமாக்களின் தடத்தில் கலாச்சாரத்தைக் கலைத்து உலகமயமாக்களின் நிழலில் பண்பாடுகளைச் சிதைத்து பொருளாதாரத்திற்கு ஆகாதென தாய்மொழியைத் தள்ளி வைத்து நாகரீகத்தின் நளினத்தில் இனத்தின் குணங்களை ஊனமாக்கி அறம் தொலைத்த அரசியலுக்காக அகதி என்ற பதத்தை இனத்திற்குரியதாக்கி பழம்பஞ்சாங்கக் குறியிட்டு மூத்தகுடிகளின் அனுபவங்களைப் புறந்தள்ளி இனம் காக்க களம் கண்டவர்களை சாதிகளின் சாயத்தில் தோய்த்து விழுதுகளாய் வியாபித்து நிற்கும் அடையாளங்களை முறித்து எறியும் நம்மிடம் கர்வமாய் அறைந்து சாற்றித்திரிய எப்பொழுதும் கைவசமிருக்கிறது. கல் தோன்றா […]
இடம்: ஆனந்தபவன் நேரம்: மாலை மணி ஆறு உறுப்பினர்: ராஜாமணி, சுப்பண்ணா, சாரங்கன் (சூழ்நிலை: ராஜாமணி கேஷ் கவுண்டரில் உட்கார்ந்திருக்கிறான். சாரங்கன் உள்ளேயிருந்த கைக் காரியத்தைப் போட்டு விட்டு ஓடி வருகிறான். அவன் பின்னால் சுப்பண்ணா வருகிறார்) சாரங்கன்: ராஜா… ரங்கண்ணா ஒய்.சி.எம்.ஏ.வுக்குப் போனவர் அவரா வரல்லியே… சைக்கிள்ளேறி பார்த்துட்டு வந்துடட்டா? ராஜாமணி: என்னமோ ராகவன் விஷயம் பேசணும்ணு செக்ரட்டரி ஜான்ஸன் கூப்பிட்டு […]
மெல்பனில் நினைவரங்கு – விமர்சன அரங்கு அவுஸ்திரேலியாவில் அண்மையில் மறைந்த ஈழத்தின் மூத்த இலக்கியப்படைப்பாளிகள் எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) மற்றும் காவலூர் ராஜதுரை ஆகியோரின் நினைவாக அவர்களின் படைப்புலகம் குறித்த மதிப்பீட்டு அரங்கும் எழுத்தாளர் முருகபூபதியின் 20 ஆவது நூல் சொல்லமறந்த கதைகள் தொகுதியின் விமர்சன அரங்கும் மெல்பனில் எதிர்வரும் 20 ஆம் திகதி (20-12-2014) சனிக்கிழமை மாலை 5 மணிக்கு, Darebin Intercultural Centre – Preston (59 A, Roseberry Avenue, Preston -3072) […]
The English transcreation by me of my historical noval MANIKKODI, based on India’s freedom struggle, has been released by Cybetwit.net Publishers, Allahabad, under the title Goodbye to Violence. Thanks. – Jyothirllata Girija
வணக்கம். கீழ்க்காணும் என் பழைய நாவல்கள் பூம்புகார் பதிப்பகத்தால் அண்மையில் மறு பதிப்புகளாய் வெளியிடப்பட்டுள்ளன. இச் செய்தியைத் திண்ணை வாசகர்கள் அறிய வேண்டுகிறேன். நன்றி. 1. படி தாண்டிய பத்தினிகள் 2 இதயம் பலவிதம் 3 வசந்தம் வருமா? 4 மரபுகள் முறிகின்ற நேரங்கள் 5 வாழத்தான் பிறந்தோம் 6 சாஹி இரத்தத்தில் ஓடுகிறது! மீதமுள்ள நான்கு புதினங்கள் விரைவில் வெளிவரும். இங்ஙனம் ஜோதிர்லதா கிரிஜா
ரஸ்கின்பாண்ட் (மரங்களின் மரணம் – ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் : வளவ. துரையன் ) ஒரு குளிர்காலத்தில் ‘ மேப்பில்வுட் ’ மலைப்பக்கத்தில் இருந்த அமைதியும் நிதானமும் எப்பொழுதும் இல்லாதபடி மறைந்துவிட்டன. அரசாங்கம் மலைகளுக்குப் புதிய சாலை அமைக்கத் தீர்மானித்து விட்டது. பொதுப்பணித்துறையானது வீட்டின் வலப்பக்கத்தில்,நான் காட்டை நன்றாகப் பார்க்க வசதியாய் இருந்த ஜன்னலிலிருந்து ஆறு அடி தூரத்தில் அமைத்தால் பொருத்தமாக இருக்கும் என எண்ணியது. என்னுடைய குறிப்புப் புத்தகத்தில் நான் எழுதினேன்: அவர்கள் பல மரங்களை வெட்டிவிட்டார்கள். முதலில் […]
தொகுப்பு: மு இராமனாதன் [ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். மேலும் பிற மொழி இலக்கியங்களைக் குறித்தும், வாழ்வனுபவங்களைக் குறித்தும் பல கூட்டங்கள் நடந்துள்ளன. சமயம் வாய்க்கிற போது கூடுவதும், படித்ததை ரசித்ததை அனுபவித்ததைப் பகிர்ந்து கொள்வதும் வட்டத்தின் எளிய செயல் திட்டம் ஆகும்.கூட்டங்களில் நிகழ்த்தப்பட்ட சில முக்கியமான உரைகள் இந்த வரிசையில் இடம் பெறுகின்றன.] (ஹாங்காங் இலக்கிய வட்டம் நவம்பர் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=GLgnZ89b8Po https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DlkjMnWNjic https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gdxeDdwmEb0 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=p6TWU4o0xQQ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DSK_mymJvkM https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uo5hhIZ4qjM https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UEuOpxOrA_0 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Sdk3qVI2Q5A ++++++++++++++++ நிலவில் தடம் வைத்த நாசா செவ்வாய் நோக்கிச் செல்ல முதல் சோதனை செய்து முடித்தது ! ஓரியன் விண் கப்பல் ஒருநாள் செவ்வாய்க் கோள் நோக்கிப் போகும் ! அகில நாட்டு விண்வெளி நிலையத்தில் இணைந்து சற்று இளைப்பாறிக் கொள்ளும் ! நிலவில் இறங்கித் தங்குமிடத்தில் களைப்பாறும் ! அங்கிருந்து கிளம்பி செந்நிறக் […]
வைகை அனிஷ் தமிழகம் மற்றும் அல்லாது இந்தியாவெங்கும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து சமூகத்தினரும் ஆயுத பூஜையை கொண்டாடி மகிழ்கின்றனர். அனைத்து சமூகத்தினரும் தாங்கள் வைத்திருக்கும் வாகனங்கள், தங்கள் கடைகள், தங்கள் படிக்கின்ற நூல்கள், தாங்கள் பயிற்றுவிக்கின்ற கல்லூரிகள் என அனைத்தையும் கழுவி விட்டு சுத்தம் செய்து பழைய பொருட்களை விலைக்கு விற்பனை செய்து பரன் மற்றும் கேட்பாரற்று கிடக்கின்ற பொருட்களை அப்புறப்படுத்தி அலங்காரம் செய்து ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்துக்கள், […]