மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 3

This entry is part 8 of 39 in the series 4 டிசம்பர் 2011

“அநேகமாக சுப்புபாட்டி சொன்ன சங்கதியாக இருக்கலாம். அவள்தான், கோவிந்தராஜ பெருமாளுக்கென தனியாக சன்னிதிக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், சீரங்கத்திலிருந்து கல்தச்சர்களை அதன் பொருட்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தாள்.” 4. நான்கு நாட்களுக்கு முன்பு திடீரென்று தில்லையில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை கொட்டியது. இரவு மின்னல் தாக்கியதில் நடராஜர் கோவில் மேற்கு கோபுரத்தில் கோபுர கலசம் சேதமடைந்து, யாழியும் ஒன்றிரண்டு பொம்மை சிற்பங்களும் உடைந்து விழுந்திருந்தன. பொது தீட்சிதர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். கோவிலுக்குள் பூசணிக்காய் உடைத்து பரிகார […]

நினைவுகளின் சுவட்டில் – (82)

This entry is part 7 of 39 in the series 4 டிசம்பர் 2011

ஹிராகுட்டில் எனக்குப் பரிச்சயமான உலகம், அந்த அணைக்கட்டின் தாற்காலிக முகாமில் கிடைத்திருக்கக் கூடிய பரிச்சயங்கள் தான் என்று சொல்ல முடியாது. ஆனால் நேரில் எதிர்ப்படும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் அந்த முனைப்பு ஏற்படுத்தும் பரிச்சயங்கள் சாதாரணமாக அந்தந்த சூழல்களில் எதிர்ப்படாத பரிச்சயங்களையும் கூட முன் கொண்டுவந்து நிறுத்தும் என்று தான் சொல்ல வேண்டும். ஹிராகுட்டுக்கு வந்த முதல் வருடம் 1950-ல் புத்தகம் வாங்க என்றால் பக்கத்தில் 10 மைல் தூரத்தில் இருக்கும் […]

விசித்திரம்

This entry is part 6 of 39 in the series 4 டிசம்பர் 2011

மார்கழி பனிப் புயலில் மெழுகுவர்த்திகள் அணைந்து போகின்றன… எங்கும் குளிர் எதிலும் இருள் அங்கு – மின்னல் கீறுகள்தான் மாயமான வெளிச்சங்கள்.. சுவாச மூச்சுக்கள் தான் சூடான போர்வைகள்.. வீதி விளக்குகளும் விகடமாமக் கோபித்துக் கொள்கின்றன.. மின் விசிறிகளும் சொல்லாமலே அணைந்து போகின்றன.. மார்கழிப் பனிப் புயலில் எவைதான் எஞ்சுகின்றன…? உறக்கங்கள் மட்டும் தான்! கனவுகளைத் தேடி ஆன்மாக்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டன., கார்கால மின்னல் வெளிச்சங்களில் எப்படித்தான் தேடிப்பார்க்கப் போகின்றனவோ…? ஜுமானா ஜுனைட், இலங்கை.

எங்கே போக விருப்பம்?

This entry is part 5 of 39 in the series 4 டிசம்பர் 2011

அமெரிக்காவில் ஒரு முக்கிய நகரம். முச்சந்தியில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. மேடையில் ஒரு பேச்சாளர் முழங்கிக் கொண்டிருந்தார். “சீமான்களே! சீமாட்டிகளே! எனக்கு நீங்கள் வாக்களிப்பீர்களேயானால், அது உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொண்டதாகும். நான் சார்ந்திருக்கிற கட்சி அத்தனை செல்வாக்கு வாய்ந்ததாகும்! எங்கள் கட்சி பெருபான்மையாகத் தேர்ந்தெடுக்கப்படுமானால், பிறப்பு முதல் இறப்பு வரை உங்களுக்கு முழுப் பாதுகாப்பு கிடைக்கும். We will give you protection from the cradle to the grave”. இந்தப் பேச்சைக் கேட்டதும் கூடியிருந்த […]

காணாமல் போன ஒட்டகம்

This entry is part 4 of 39 in the series 4 டிசம்பர் 2011

வளமான நாட்டை அறிவார்ந்த அரசனொருவன் ஆண்டு வந்தான். அவனுடைய அறிவும் தரும குணமும் அக்கம் பக்க நாடுகளில் அவனுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. மக்கள் அனைவரும் அவனைப் பெரிதும் நேசித்தனர். வளமான நாட்டில் எந்தவொரு பிரச்சனையும் இல்லாதிருந்த காலத்தில் வியாபாரி ஒருவனின் ஒட்டகம் காணாமல் போனது. பல நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை. ஒரு நாள் ஒட்டகத்தைத் தேடிச் சென்ற வியாபாரி வழியில் நால்வரைச் சந்தித்தான். “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டான். “நாங்கள் பெருத்த துயரத்தில் இருக்கிறோம். […]

ஜென் ஒரு புரிதல் – பகுதி 21

This entry is part 3 of 39 in the series 4 டிசம்பர் 2011

பகுதி இருபதைத் தொடர்ந்து ‘மட்ஸுவோ பஷூ’வின் கவிதைகள்: யாரும் இந்தப் பாதையில் பயணிக்கவில்லை என்னையும் மாரிக்கால மாலைப் பொழுதையும் தவிர வருடத்தின் முதல் நாள் எண்ணங்கள் வருகின்றன தனிமையும் மாரிக்கால மாலை கவியும் நேரம் ஒரு பழைய சுனை ஒரு தவளை தாவிக் குதிக்கும் ‘தொபக்’ பழைய இருண்ட தூங்கி வழியும் சுனை திடீரென விரையும் தவளை தாவும் – தண்ணீர் தெரிக்கும் மின்னல் கொக்கின் கூவல் இருளைக் குத்தித் துளைக்கும் தட்டாம் பூச்சிகளின் ஒலிப்பில் அது […]

யானையைச் சுமந்த எறும்புகள்

This entry is part 2 of 39 in the series 4 டிசம்பர் 2011

சூர்யா நீலகண்டன் நொண்டி வந்த யானையை நோக்கி அது விழுந்து விடும் என்று இரங்கி இரு பக்கமும் பக்கபலமாக ஓடின ஈரெறும்புகள். நொண்டி நடந்த யானையின் வேகத்திற்கு கூட ஓடமுடியாமல் யானையைச் சுமந்தன அந்த சிறு எறும்புகள் அதன் சிறு மூளைக்குள்.

காணாமல் போன உள்ளாடை

This entry is part 1 of 39 in the series 4 டிசம்பர் 2011

பயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பத்து இயக்குனர்களின் குறும்படங்கள் “கேரள கபே” என்ற பெயரில் முழுத்திரைப்படமாக கேரளாவில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டது முக்கிய நிகழ்வாகும். பலமுன்னனி இயக்குனர்கள் முன்னனி நடிக நடிகர்கள் அதில் பங்கு பெற்றிருந்தனர்.சமீபத்தில் கேரளாவிலிருந்து சில குறிப்பிடத்தக்கக் குறும்படங்கள் வெளியாகியுள்ளன. ஷாஜிகைலாஜின் இயக்கத்தில் பொதுவுடமைத் தத்துவவாதி ஏகேஜி பற்றின படத்தில் அவரின் அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றின பல்வேறு தகவல்கள் அதை ஒரு சிறந்த ஆவணப்படமாக்கியிருக்கிறது.”மதர்” என்ற படம் கிறிஸ்துவ கன்னியாஸ்திரிக்கு நேர்ந்த […]

அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் கட்டுரை -3

This entry is part 36 of 39 in the series 4 டிசம்பர் 2011

அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும்   கட்டுரை –3 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   பரிதியின் ஒளிக்கதிர் மின்சக்தியாய்ப் பயன்படும் பகலில் பல்லாண்டு ! ஓயாத கடல் அலைகளின் அசுர அடிப்பில் அளவற்ற மின்சக்தி உள்ளது ! காற்றுள்ள போது விசிறிகள் சுழன்று மேட்டில் கிடைக்கும் மின்சக்தி ! மாட்டுச் சாணி வாயு வீட்டு மின்சக்தி ஆக்கும் ! நிலக்கரி மூலம் நிரம்ப மின்சக்தி பெறலாம், கரியமில வாயு வோடு ! […]