This entry is part 22 of 22 in the series 4 டிசம்பர் 2016
தெலுங்கில் : ஒல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மறுநாள் காலையில் எவ்வளவுதான் கட்டுபடுத்திக்கொள்ள முயன்றாலும் சாந்தாவால் முடியவில்லை. வேண்டாம் வேண்டாம் என்று நினைத்துக் கொண்டே ராம்குமார் தங்கி இருந்த அறைக்குச் சென்றாள். அறைக் கதவு திறந்து தான் இருந்தது. அவன் கட்டிலில் படுத்தபடி புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தான். சாந்தாவைக் கண்டதும் அவனுக்கு அளவுகடந்த ஆச்சரியம்! மூன்று ஆண்டுகளாய் அறிமுகம் இருந்த போதும், கடந்த ஒரு வருடமாய் நட்பு கொஞ்சம் வளர்ந்து இருந்தாலும் அவன் சாந்தாவை […]
1980-ல் எனக்கு தொலைபேசித்துறையில் வேலை கிடைத்தது. புதுச்சேரி தொலைபேசி நிலையத்தில் தொலைபேசி ஊழியராக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு இடதுசாரித் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். தொழிற்சங்க நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. என் ஓய்வுப்பொழுதுகளை அந்த நூலகத்திலேயே கழித்தேன். அங்கிருந்த எல்லாப் புத்தகங்களையும் படித்துமுடித்தேன். என் வாசிப்பைப் பார்த்த தொழிற்சங்க நண்பர்கள் எனக்காகவே புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார்கள். தம் வீட்டில் இருக்கும் புத்தகங்களையும் கொண்டு வந்து கொடுத்தார்கள். அவர்கள் நம்பிய கொள்கைகளுக்கு வெளியே உள்ள விஷயங்களிலும் நான் […]
முகிலன் rmukilan1968@gmail.com இன்றைய நாளில் பெரும்பாலும் அரசுத் துறைகளில் மிகவும் மோசமான சூழ்நிலைகளே நிலவுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. அரசின் பல்வேறு துறைகளிலும் சீரற்ற கருவிகளைக் கொடுத்தே ஊழியர்களைத் தனியார் நிறுவனங்களுக்கு இணையாகச் செயல்படுமாறு வற்புறுத்துகின்றனர். சான்றாக அரசுப்போக்குவரத்துக் கழகங்களை எடுத்துக்கொள்ளலாம். பத்தாண்டுகளுக்கு மேலான வாகனங்களை வைத்துக்கொண்டு, அவற்றையும் சரிவரப் பராமரிக்காமல் கால அட்டவணைகளைக் கண்மூடித்தனமாக அமைத்துக்கொண்டு செயல்படத் தூண்டுகின்றனர். அதனால் ஏற்படும் விபத்துகள் ஏராளம். எங்கு பார்த்தாலும் அரசுப்பேருந்து மோதி விபத்து […]
“கலைவாணர்” என்.எஸ். கிருஷ்ணன் ,சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற எல்லைகளை தாண்டிய சமூக சிந்தனையாளர், முற்போக்கு கொள்கையுடன் வாழ்ந்தவர். பெரியார் செயல்பாடுகளில் பங்கெடுத்தவர், கொள்கை பரப்பை, சினிமா மூலம், பாமர மக்களுக்கு புரிய வைத்தவர். அதே நேரத்தில், காந்தியின் சுதந்திர சிந்தனைகளுக்கும் மதிப்பளித்தவர்.தனது, 17வது வயதில், டி,கே.சண்முகம் நாடக சபாவில் சேர்ந்து, நாடக நடிகராக உருவாகி, சதி லீலாவதி , சினிமா மூலம், சினிமாவில் நுழைந்தார். சதி லீலாவதி படத்திற்கு, அவரே, நகைச்சுவை வசனம்,எழுதி நடித்தும் காண்பித்து, […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஊழிச் சிற்பி வெளிவிடும் மூச்சில் உப்பிடும் பிரபஞ்சக் குமிழி ஒரு யுகத்தில் முறிந்து மீள் பிறக்கும் ! விழுங்கிய கருந்துளை வயிற்றில் விழித்தெழும் பரிதி மண்டலங்கள் காண விண்ணோக்கியின் கண்ணொளி நீண்டு செல்லும்! நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை ஊடுருவிக் காமிராக் கண்வழிப் புகுந்த புதிய பூமிக்கோள்கள் இவை ! சூரிய மண்டலம் போல் வெகு தூரத்தில் இயங்கிச் சுய ஒளிவீசும் விண்மீனைச் சுற்றிவரும் மண்ணுலகுகள் இவை எல்லாம் ! […]
அருணா சுப்ரமணியன் எழுப்பிய அலாரத்தை மீண்டும் மீண்டும் தூங்க வைத்து நண்பகலுக்கு மேல் நிதானமாக எழுந்து .. அன்னை அளிக்கும் அன்பு அன்னம் அரைச்சானுக்குள் அரைகுறையாகத் தள்ளி அப்பன் பேச்செல்லாம் அனாதைகளாக்கி அவர் வியர்வையில் பூத்த புதுத்தாள்கள் ஏந்தி புத்தம்புது புரவியில் ஏறி சிநேகித சுற்றத்தோடு சிவப்பு விளக்கிலும் சீறிப் பாய்ந்து சாலையோர சிற்றுண்டி சுவைத்து மிச்சத்தைத் தெருவில் வீசி அறுபதடி தலைவனுக்கு அபிஷேகம் முடித்து ஆர்பாட்டமாய் அரங்கு நுழைந்து “ஜன கன மன” பாடி நாட்டைக் காப்பான் என் […]
கி.பி. [1044 – 1123] உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1 பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. +++++++++++++ உமர் கயாம் பழம்பெரும் பாரசீகக் கவிஞர்; கணித. வானியல், சித்தாந்த விஞ்ஞானி. அவரது புகழ்பெற்ற ‘ருபியாத்’ என்னும் ஈரடிப் பாக்கள் பல மொழிகளில் பல கவிஞர்களால் மொழி பெயர்ப்பாகி உள்ளன. ஆங்கிலத்தில் பலர் மொழி பெயர்த்துள்ளார். அவற்றுள் தனித்துவம் பெற்றவை […]
நிஷா அதே மஞ்சள் பூக்கள் பூத்த வாசல்ச்செடி, மரமாய் படர்ந்து சுவர் போர்த்திய மணிபிளான்டின் குளுமை, திண்ணை மர பெஞ்சில் யாரும் புரட்டாத ஹிந்து பேப்பர், டிவியின் முன்னே அந்த நாற்காலி, கோட் ஸ்டாண்டில் நீலம் போட்ட ஒரு கதர் சட்டை, மூலை அலமாரியில் சன்னமாய் மிஞ்சி இருந்த மூக்குப்பொடி வாசம் – தாத்தா வீடு வந்தாயிற்று. வீடு வந்து கேட் திறக்கையிலேயே ஆர்ப்பரித்து ஊர்க்கூடும் தாத்தா இன்று இல்லை. நிசப்தமாய் தாத்தாவின் வீடு – பேரிரைச்சலாய் […]
இரா.ஜெயானந்தன். அழிந்த நினைவுகளில், யாரோவின் வாழ்க்கை சட்டங்கள் தொங்கி கிடக்கும் மேலான கீழான காலடிச் சுவடுகள் எழுத முடியாத சுயசரிதை. ஒரு சிலர் கவனமாக தூக்கி செல்வர் வாழ்க்கையை! பலரின் சிலரோ தீர்க்க முடியாத வாழ்வின் சுமைகள் தெருவோர மரநிழலில் ஊசலாடும்! திறந்துதான் கிடக்கும் கதவுகள் வழி தெரியாமல் போன ஆத்மாக்கள் அலைந்தோடும் சவக்குழியில் ! நெஞ்சின் நினைவுகள் வேகும் முன்னே காரியதாரிசி கணக்குப்பார்பான் வெட்டியான் அடுத்தகுழி தோண்டுவான். இரா.ஜெயானந்தன்