இஸ்லாமிய வழியில் வந்த மத ஸ்தாபகர்களில் ஒருவராக பஹாவுல்லா அவர்களை முன்பு பார்த்தோம். இந்த வாரம் இந்தியாவில் பிறந்து இஸ்லாமில் ஒரு பிரிவாகவே தொடர விரும்பும் அஹ்மதியா பிரிவை தோற்றுவித்த மிர்ஸா குலாம் அஹ்மது அவர்களை பார்க்கலாம். இஸ்லாமில் நிறைய பிரிவுகள் இருந்தாலும் இரண்டு மிக முக்கியமான பிரிவுகளாக ஷியா பிரிவையும் சுன்னி பிரிவையும் குறிப்பிடலாம். இதற்கு முக்கிய காரணம் இந்த பிரிவுகளே சரியான பிரிவுகள் என்று கருதும் அரசாங்கங்கள் ஆட்சியில் இருப்பதே. அரேபியாவை ஆளும் சவுதி […]
முனைவர் க. நாகராசன். வெளீயீடு : அகரம் மனை எண் ; 1, நிர்மலா நகர், தஞ்சாவூர். 637 007 விலை; ரூ 60 நல்ல கவிதைத் தொகுப்பு தரும் வாசிப்பு அனுபவம் அலாதியானது. கவிதையில் இடம் பெறும் வீர்யமான ஒரெ ஒரு சொல்கூட நம் மனத்தைப் பரவசப்படுத்தி ஞாபகங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து, நினைக்கும் போதெல்லாம் இனிமையைத் தரவல்லது. சமீபத்தில் வந்துள்ள வளவ. துரையனின் “ விடாத தூறலில் “ கவிதைத் தொகுப்பு ஏராளமான இனிய […]
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]
நட்பு அடைதல் இங்கே நட்பு அடைதல் என்னும் இரண்டாம் தந்திரம் தொடங்குகிறது. அதன் முதன் செய்யுள் பின்வருமாறு: சாதனமும் செல்வமும் இல்லாமற் போனாலும் அறிவாளிகளும் கல்விமான்களும் – காக்கை, எலி, மான், ஆமை செய்ததுபோல் – எடுத்த காரியத்தைத் தொடுத்து முடிக்கின்றனர். ‘’அது எப்படி?’’ என்று அரசகுமாரர்கள் கேட்கவே, விஷ்ணுசர்மன் சொல்லத் தொடங்கினார்: தென்னாட்டில் பிரமதாரூப்யம் என்றொரு நகரம் இருக்கிறது. அதற்கு வெகு சமீபத்திலேயே ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதன் அடி மரம் பெருத்தும், கிளைகள் […]
கு.அழகர்சாமி கண்ணாடிப் பேழைக்குள் உறங்குவது போலும் உடலுக்குள் உயிர் செலுத்துவது போல் அழுது கொண்டிருக்கும் அவளைக் கண்டதும் கைகளைச் சேர்த்தழுத்தியது தான். எங்கே இழுத்துப் போகிறாள் என்னை? எந்தக் கடலுக்குள்? எந்த ஆழத்துக்குள்? கனவு மீளாது போய்க் கொண்டே இருக்கிறேனா? காலம் நழுவியதில் காணாமல் போய்க் கொண்டே இருக்கிறேனா? என்னுள் பெருகும் வெள்ளத்தில் நெக்குருகிக் கரைகின்றேனா? ஒரு பிணத்தைத் தூக்கிக் கொண்டு கரையேறுகிறாளே அவள் இன்னொரு காலத்தில்? அவள் மருவலில் என் மரணமா? கண்ணாடிப் பேழைக்குள் எவர் […]
தோனி – நாட் அவுட் வருடிச்செல்லும் மயிலின் இறகினையொத்த இசையைப்பற்றி இப்போதுதான் ரசித்தகணத்திற்குள் இன்னுமொரு கூக்ளி ராஜா சாரிடமிருந்து “தோனி” வழியாக.முதலிலேயே சொல்லிவிடுகிறேன் , நீங்கள் ஒரு “நெஞ்சத்தைக் கிள்ளாதே”வையோ “மூடுபனி”யையோ அல்லது ஒரு “முள்ளும் மலரும்” போன்ற இசையை எதிர்பார்த்து இங்கு வந்திருப்பீர்களானால் உங்களை ராஜா இந்தத்தடவை திருப்திப்படுத்த மாட்டார் என்றே சொல்லுவேன்.கொஞ்சம் வித்தியாசமாக, கதைக்களனுக்குப் பொருத்தமான இசையாகத்தான் தோன்றுகிறது எனக்கு இந்த “தோனி-நாட் அவுட்”-ன் பாடல்கள் அனைத்தும்.அதிகப்பாடல்களும் இல்லை மொத்தமே நான்கு பாடல்கள்.அனைத்தும் ஒவ்வொரு […]
டிக்கெட் எடுத்திட்டியா டிபன் எடுத்திட்டியா தண்ணி எடுத்திட்டியா தலகாணி எடுத்திட்டியா பூட்டு செயின் எடுத்திட்டியா போர்வை எடுத்திட்டியா போன் எடுத்திட்டியா ஐபாட் எடுத்திட்டியா… அலாரம் வெச்சுட்டியா…. கேள்விகளால் நிரம்பி வழிகின்றன தொலைதூரம் செல்லவிருக்கும் தொடர்வண்டியின் சன்னலோரங்கள் பார்த்துப் பத்திரமா போ யாருகிட்டேயும் எதும் வாங்காதே மறக்காம போன் பண்ணு நல்லா சாப்பிடு ரொம்ப அலையாதே மனித சமுத்திரத்தின் காலடியில் நசுங்கும் நடைமேடை விளிம்புகள் அக்கறையிலும் அன்பிலும் மிதக்கின்றன பிரியும் நேரம் நெருங்க விடுபடப்போகும் விரல்களினூடே நிலநடுக்கத்திற்கு நிகராக […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பிரம்மாண்டமான தோற்றம் ! பெருமை மிக்க சாதனைகள் ! பல பேருக்கு ஓரிடத்தில் வேலைகள் ! நவீனத் தொழிற் புரட்சியின் வெற்றி விளைவுகள் ! மனந் திறந்து சொல்லப் போனால் என்னருமை அப்பா ! நானொரு மூடனாய் இருந்திருக்கிறேன் ! இந்த வெடிமருத்துச் சாலையின் விந்தை தெரியாமல் புறக்கணித்திருக்கிறேன் ! முன்னூகத்துடன் திட்டமிட்ட ஆக்கவினைகள் ! கட்டி […]
தமிழவனை ஆசிரியர் குழுவில் கொண்டு வெளிவரும் சிற்றேடு இதழ் பல முக்கியமான அறிமுகக் கட்டுரைகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் தாங்கி வெளிவந்திருக்கிறது. கடந்த இதழ்களில் கேரலத்தின் புதிய அறிவுஜீவி எம் கே ஹரிகுமார் பற்றிய அறிமுகக் கட்டுரை வெளியாகியுள்ளது. க முத்துகிருஷ்ணனின் “யாதுமற்றவர்” நாவல் பற்றிய விமர்சனமும் அறிமுகமும் வெளியாகியுள்ளது. தமிழவனின் நாவலான “வார்ஸாவில் ஒரு கடவுள்” பற்றிய பல பார்வைகள் வெளியாகியுள்ளன. இன்னொரு முக்கியமான கட்டுரை “எந்திரன் திரைப்படமும் எடிபஸ் சிக்கலும்” ஆகும். எந்திரன் படத்தில் எப்படி […]
ஐயன்மீர்! தொடக்கத்தில் திரையில் காட்டப்பட்ட பாதுகாப்பு அட்டைகள் பற்றி எந்த ஆட்சேபமும் இல்லை எங்களுக்கு. அடுத்து முன்வைக்கப்பட்ட வரவு செலவு கணக்கு பற்றியோ எதிர்கால திட்டங்கள் குறித்தோ நாங்கள் சொல்ல விரும்புவதும் ஏதுமில்லை. விடைபெறுவதற்கு முன் விருந்தோம்பல் சகிதம் திறக்கப்பட்ட மதுப் போத்தல்களைப் பற்றியே எங்களின் இந்த தாழ்ந்த விண்ணப்பம். எங்களைப் போலவே உங்களின் வாகனங்களின் வருகைக்கும் காத்திருக்கும் எதிர்பார்ப்பின் கண்களுக்கு என்னவிதமான உத்திரவாதத்தை தரப் போகிறோம் நாம்.