புகுஷிமா விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் – 2

This entry is part 30 of 40 in the series 12 பிப்ரவரி 2012

(கட்டுரை -2) (பிப்ரவரி 10, 2012) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா இன்று அமெரிக்க அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (US Nuclear Regulatory Commission) ஜியார்ஜியாவில்  வெஸ்டிங்கவுஸ் மாடல் AP-1000 என்னும் இரண்டு புதுயுக 1150 MWe அணுமின் நிலையத்தை நிறுவ அனுமதி அளித்துள்ளது.    அவை 2016-2017 ஆண்டுகலில் இயங்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.   இந்த  மகத்தான வெற்றி  ஜியார்ஜியா பவர் கம்பேனிக் கும், தென்பகுதி பவர் கம்பேனிக்கும் மற்ற அணுவியல் தொழிற்சாலைக் […]

”மகாபலிபுரம்.. உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி” எழுதியவர் ஸ்ரீநிவாஸ். ஓவியர் ஜெ. பிரபாகர்.

This entry is part 29 of 40 in the series 12 பிப்ரவரி 2012

”மகாபலிபுரம்.. உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி” என்ற நூல் படித்தேன். நாம் சாதாரணமாக சென்று அவசரம் அவசரமாக ஒரு சரித்திரச் சின்னத்தைப் பார்த்து வருகிறோம். அதற்கு எல்லாம் இப்படி ஒரு வழிகாட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே எனத் தோன்றச் செய்த நூல் இது. இது தங்கத்தாமரை பதிப்பகம் வெளியீடு ( சுபா — எழுத்தாளர்கள் சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணனுடைய பதிப்பகம்). இந்நூலை வடிவமைத்தவர் பா. கணேஷ். மிக அருமையான வடிவமைப்பு. இந்த மாதிரி ஓவியங்களோடு கூடிய […]

எருதுப் புண்

This entry is part 28 of 40 in the series 12 பிப்ரவரி 2012

ந பிரபாகரன் “உன்னைப் பத்தி அந்த சோடாப்புட்டி கணேசன் என்ன சொன்னான் தெரியுமாடி” என்று பாகியாவின் வலது தோளைத் தட்டி கேட்டாள் வசந்தி. “என்ன சொன்னானாம்?” என்று வேண்டா வேறுப்பாக கேட்டாள் பாக்கியா. “அவன் நெனச்சா உனக்கு ஹோட்டல்ல ரூம் போட முடியும்னு அவன் பிரெண்ட்கிட்ட அளந்துகிட்டு இருந்தான்” பாக்கியாவுக்கு கண்கள் மறைக்க ஒரு நீர்ப் படலம் எழுந்தது உதடு துடி, துடித்தது . அவன் சட்டையை பிடித்து, தலை கலைய, முகத்தில் நான்கு அரை விட்டால் […]

“வரும்….ஆனா வராது…”

This entry is part 27 of 40 in the series 12 பிப்ரவரி 2012

“என்னங்க…என்ன பேசாம நின்னுட்டிருக்கீங்க…போங்க…போங்க…போய்க் கூப்பிடுங்க…” – என் கையைப் பிடித்து இழுக்காத குறையாக என்னை வாசலை நோக்கி விரைவு படுத்தினாள் சாந்தி. இவள் எதற்காக இப்படிப் பரத்துகிறாள் என்பது எனக்குத் தெரியும். அறையிலிருந்தே மேனிக்கே ஜன்னல் வழியாகப் பார்த்தேன். ராஜப்பாதான் போய்க் கொண்டிருந்தார். ‘பாவம், அவரே இந்த வீட்டைக் கடக்கும்போது தன்னைக் கூப்பிட்டு விடக் கூடாதே என்று பயந்தவராய்ச் சற்று வேகமாகக் கடப்பது போல் இருந்தது. “போகட்டும் விடு…” என்றேன். சாந்தியின் முகத்தில் சாந்தம் இல்லை. கோபம்தான் […]

செல்லாயியின் அரசாங்க ஆணை

This entry is part 26 of 40 in the series 12 பிப்ரவரி 2012

பிறந்ததிலிருந்தும் பிறந்தகம் துறந்த பின்னாலும் செல்லாயியின் பொழுதுகள் எப்போதும் ஆடுகளோடுதான். கோடையும் மழையும் ஆடுகளுக்கு உகந்ததில்லை எனினும் பருவத்தின் பின்சுழற்சியில் கருகிப்போயிருக்கும் மரங்களின் இலைகள் ஆடுகளுக்கெனத் தழைக்க, ” கொஞ்சம் பொறுங்கடா சிவராத்திரி வரைக்கும் ” எனப் பனிபோகவே அன்று விரதமிருப்பாள். எதிர் வீட்டுத் தோட்டத்தில் புகுந்து விட்ட வெள்ளையோ கருப்போ கால்கள் ஒடிந்தால் செல்லாயியின் வசவுத்தமிழில் விஷம் கலந்திருக்கும். மோட்டார்ச் சக்கரங்களிலும் வியாதி வெக்கையிலும் சிலதை இழந்திருந்தாலும் ஆடுகளை ஒருபோதும் விற்றதில்லை செல்லாயி என்றாலும், இப்போதெல்லாம் […]

மாதா+ பிதா +குரு < கொலைவெறி

This entry is part 25 of 40 in the series 12 பிப்ரவரி 2012

ஒரு 15 வயது நிரம்பாத மாணவன் தனக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரைக் கொலை செய்த சம்பவம் ஊடகங்களுக்கு வேண்டுமானால் திடுக்கிடும் செய்தியாக இருக்கலாம். ஆனால் சமூக ஆர்வலர்களுக்கு இந்தச் செய்தி சமூக அவலங்களின் எதிரொலி. ஓர் அபாயச்சங்கு. இந்தச் செய்தியின் இரண்டு பக்கங்களையும் பார்த்தாக வேண்டும். ஆசிரியரைக் கொலை செய்ய நினைத்ததே தவறுதான். மன்னிக்க முடியாதக் குற்றம் தான். ஆனால் இந்த விபரீத முடிவெடுக்க அவன் மட்டும் தான் காரணமா? உண்மையான குற்றவாளிகள் யார்? *பள்ளி நிர்வாகம்* […]

விஜய் நந்தாவின் ‘ விளையாட வா ‘

This entry is part 24 of 40 in the series 12 பிப்ரவரி 2012

சித்தார்த் நடித்து, இந்தியில் ஸ்ட்ரைக்கர் என்றொரு படம் வந்தது. சுமாரான வெற்றி என்று சொன்னார்கள். அதேபோல் இதுவும், தெருவில் காரம்போர்ட் விளையாடுபவர் களைப் பற்றிய படம். சீனிவாசபுரத்தில், குடிசை மாற்று வாரிய வீட்டில் வசிக்கும், கம்பி மேஸ்திரி பொண்வண்ணன், அவரது நண்பர்கள் லிவிங்ஸ்டன், மயில்சாமி, அவர் மனைவி லட்சுமி. பொன்வண்ணனுக்கு காரம் விளையாடுவதில் ஆர்வம். கூடவே இருக்கும் நண்பர்களுக்கு, அதற்குப்பின், வென்ற பணத்தில் தண்ணியடிப்பதில் விருப்பம். அனாதையான சிறுவனை தத்தெடுக்கும் பொன்னு, அவனை எப்படி தன்னைப்போலவே தென்னிந்திய […]

ராஜ்கிருஷ்ணாவின் ‘ ஒரு நடிகையின் வாக்குமூலம் ‘

This entry is part 23 of 40 in the series 12 பிப்ரவரி 2012

டர்ட்டி பிக்சர் வித்யா பாலன் அளவிற்கு பெயர் வாங்கித் தருமா என்று தெரியாது, ஆனால் சோனியா அகர்வாலுக்கு இது செகண்ட் இன்னிங்ஸைத் துவக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு நடிகையின் டைரியைக் கொண்டு கதையை நகர்த்தும்போது, கொஞ்சம் ஷகிலாத் தனமான காட்சிகள் வைத்தால் கூட தவறில்லைதான். ஆனால் அதைக்கூட காட்டாத இயக்குனரின் கண்ணியத்தைப் பாராட்ட வேண்டும். இந்தப் படத்துக்கு திரை உலகத் திலிருந்து ஏகத்துக்கு கண்டனம் வரலாம். வி. சேகரின் ‘ நீங்களும் ஹீரோதான் ‘ படத்துக்கு அப்படித்தான் […]

பாத்தென்றல் முருகடியான் இயற்றிய திண்ணப்பர் பிள்ளைத் தமிழ் நூல் வெளியீடு

This entry is part 22 of 40 in the series 12 பிப்ரவரி 2012

வணக்கம் பாத்தென்றல் முருகடியான் இயற்றிய திண்ணப்பர் பிள்ளைத் தமிழ் நூல் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் வெளியீடு காண்கிறது. 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழுக்கு அவர்கள் செய்த தொண்டினை நாம் அனைவரும் மதிக்கும் வகையில் ஒன்று கூடுவோம். இணைப்பில் அழைப்பிதழ் இணைக்கப் பட்டிருக்கிறது. உங்களை வரவேற்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம் அன்புடன் தமிழ்ப் பட்டிம்ன்றக் கலைக் கழகம் பெக்கியோ சமூக மன்ற இந்திய நற்பணிக் குழு மேல் விபரங்களுக்கு ரஜித் 90016400

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -60)

This entry is part 21 of 40 in the series 12 பிப்ரவரி 2012

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ சுதந்திர மனிதன் +++++++++++++ செல்வம் சேமித்துக் கணக்குக் கூட்டாத – செல்வந்த னாய்க் கொழுத்துத் தோன்றாத – செல்வத்தை இழக்க நெஞ்சம் அஞ்சாத – சிறிதும் தன் மேனி ஒப்பனை செய்யாத எவனோ ஒருவனை எடுத்துக் கொள் ! அவனே சுதந்திரம் அடைந்தவன் ! +++++++++++ என் சந்திப்பு +++++++++++ தப்புத் தவறான செயல் களுக்கும் அப்பால் ஒருவர் சிந்தனைக்கும், செம்மை […]