முருகபூபதி – அவுஸ்திரேலியா ‘ இந்து மதச்சிறையினிலே ஹரிஜனங்க நாங்க இயற்கையின் படைப்பினிலே சரிசமங்க நாங்க. சொந்த மண்ணில் சுதந்திரமா வாழ முடியலீங்க ஏரைப்பிடிச்சுப்பாடுபட்டும் எதைத்தான் கண்டோமுங்க ” தலித் மக்களின் குரலாக வாழ்ந்த கலைஞர் முனைவர் தோழர் கே.ஏ.குணசேகரன் நேற்று 17 ஆம் திகதி பாண்டிச்சேரியில் காலமானார் என்ற செய்தியை தாங்கிவந்தது நிறப்பிரிகை ரவிக்குமார் – பா. ஜெயப்பிரகாசம் ஆகியோரின் தகவல். தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே 1955 ஆம் ஆண்டு பிறந்த […]
கார்ல் சேகன் (1934-1996) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ “பிரபஞ்சத்தை நம்மைப்போல் வேறு உயிரினங்களும் பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டுபிடித்ததின் முக்கியத்துவம் மிகவும் மகத்தானது! அது மனித வரலாற்றில் பதிக்க வேண்டிய விண்வெளி யுகத்தின் ஓர் சிகரமான நிகழ்ச்சி ஆகும்” “ஒன்று இருப்பதற்குச் சான்று கிடைக்கவில்லை என்றால், அது இல்லை என்பதற்குச் சான்றாகாது.” “நீ மூலப் பண்டங்களிலிருந்து ஓர் ஆப்பத்தைத் தயாரிக்க விரும்பினால், முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப் படவேண்டும்.” கார்ல் சேகன் […]
இதோ ஒரு “ஸெல்ஃபி” ==============================================ருத்ரா யார் இந்த மானிடப்புழு? நெளிந்து கொண்டிருந்தாலும் நெளிந்த தடம் எல்லாம் மின்னல் உமிழ்வுகள். ஆயிரம் கைகள். ஆயிரம் கண்கள்..தலைகள். ஆயிரம் ஓசை எழுப்பும் ஆயிரம் நயாகராக்களை கடைவாயில் ஒழுக விடும் கடையனுக்கும் கடையவன். ஒளியாக ஒலியாக நரம்புகளைத் துளை போடும் அதிர்வுகளை இரைச்சல்களை வெளிச்சங்களை சர்க்கரைப்பொங்கலாய் தின்று கொண்டிருப்பவன். எங்கிருந்தோ எதையோ எப்படியோ இழுத்துவந்து வெளியே போட்டு அதன் கருப்பொருள் தெரியாமல் ஆரவாரம் செய்து கொண்டிருப்பவன். காரணமே கரு தரிக்காமல் காரியமாய் […]
photo caption: கடிகாரச் சுற்றுப்படி: நரசிம்மன், வித்யா ரமணி, எம். ஸ்ரீதரன், விக்ரம் சதீஷ். நடுவில்: மு. இராமனாதன் , வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம்தொகுப்பு: மு இராமனாதன் பகுதி-2 இலக்கிய வட்டத்தைப் பற்றி…- நேர்காணல்கள் [ரேடியோ டெலிவிஷன் ஹாங்காங்(RTHK) சிறுபான்மை தேசிய இனங்களுக்காக நிகழ்த்திய தொடர் ஒலிபரப்பில் 19.9.15 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டத்தைக் குறித்த உரையாடல் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் எழுத்து வடிவம் இங்கே இடம் பெறுகிறது. இது […]
என் செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை என்ற தலைப்பில் ஏற்கனவே 5 கட்டுரைகள் நான் எழுதி திண்ணையில் வெளிவந்துள்ளது. அவற்றில் பல சிறுகதை தொகுப்புக்களை அறிமுகப்படுத்தி இருந்தேன். பல எழுத்தாளர்களின் பரிந்துரைகளையும் குறிப்பிட்டு இருந்தேன். சிற்றிதழ்கள் பலவற்றின் தொகுப்புக்களையும் குறிப்பிட்டு இருந்தேன்.அந்த கட்டுரைகளுக்கு பிறகு எனக்கு கிடைத்த சில தொகுப்புக்களையும் சேர்த்து சிறந்த சிறுகதைகளைப் பட்டியலிட்டு இருக்கிறேன். சிறந்த சிறுகதையாக இங்கு நான் குறிப்பிடும் கதைகள் அவை இடம் பெற்ற தொகுப்புக்கள், எழுத்தாளர்களின் கட்டுரைகளில் […]
0 இயக்குனர் பாலாவின் பல படங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் புதிய ரீமேக் படம் தாரை தப்பட்டை! பதினாறு வருட திரையுலக வாழ்வில் ஏழாவது படத்திலேயே இப்படி இறங்கியிருக்கும் இயக்குனர் பாலாவுக்கு ரசிகனின் ஆழ்ந்த இரங்கல்கள்! சாமி புலவரின் ஒரே மகன் சன்னாசி! தாரை தப்பட்டை என்கிற கிராமிய நடனக் குழுவை நடத்தி வருகிறான். அவனது குழுவில் முன்னணி ஆட்டக்காரி சூறாவளி! மாமா சன்னாசி மேல் மையல் கொண்ட அவளுக்கு, வேறொரு இடத்தில் திருமணம் செய்து வைக்கிறான் சன்னாசி. […]
Kaala Subramaniam நோயுற்றிருக்கும் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு நலநிதி திரட்டித் தருவதற்கான வேண்டுகோள் கூட்டறிக்கை —————————————————————————————— தமிழையும் இலக்கியத்தையும் மானுடத்தையும் உயிர்களையும் நேசிக்கும் அன்பர்களே! வணக்கம். புதுச்சேரியில் பிறந்த கவிஞர், கதாசிரியர், நாடக ஆசிரியர், கோட்பாட்டாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பன்முக ஆளுமையாகத் திகழும் ரமேஷ் பிரேதன் அவர்கள் பக்கவாதம் (Paralysis Attack) என்னும் கொடுநோய் தாக்கி, உடல் இயக்கம் குன்றிய நிலையில், கடந்த ஒன்றைரை ஆண்டுகாலமாக ஒரு சிறு அறையில் முடங்கிக் கிடக்கின்றார். தமிழ் […]
சொல்லதிகாரம் ’ஐந்து’ என்ற ஒரு வார்த்தை மட்டும் சொல்லித்தரப்பட்டது அந்த ஐந்து வயதுக் குழந்தைக்கு. அது ஒரு இலக்கத்தைக் குறிப்பது என்ற விவரம் கூடத் தெரியாத பச்சைப்பிள்ளையது. பின், பலர் முன்னிலையில் அந்தக் குழந்தையிடம் எண்ணிறந்த கூட்டல் கழித்தல் வகுத்தல் பெருக்கல் கணக்குகளுக்கான விடை கேட்கப்பட எல்லாவற்றுக்கும் மிகச் சரியான பதிலளித்தது குழந்தை: “ஐந்து” பிள்ளையின் அறிவைப் பார்த்து வாய் பிளந்து மூக்கின் மேல் விரலை வைத்தார்கள் ஐந்தே பதிலாகக் […]
விளிம்பு நிலை மனிதர்கள் படும் இன்னல்களை சொல்லும் படம் என்று சொல்லி ஒரு……………………………. முதலாளித்துவமும், ஆதிக்க வர்க்கமும் தங்கள் சுய நலத்திற்கு பயன்படுத்திக்கொள்வதால் ஒரு சமூகத்தின் ஏணிப்படிகளில் கட்டகடைசியாக தேங்க நேர்ந்தவர்களின் இன்னல்களை எதிர்பார்த்து படத்திற்கு போனால், பெருத்த ஏமாற்றம். ஏமாற்றம் என்னவெனில், சமூகத்தின் ஏணிப்படிகளில் கட்டகடைசியாக தேங்க நேர்ந்தவர்கள் தங்கள் சுய நலங்களுக்காக தங்களையே வருத்திக்கொள்வதும் , புறமுதுகில் குத்திக்கொள்வதும் தான் படமாக்கப்பட்டிருக்கிறது. சன்னாசி மேல் சூறாவளிக்கு காதல். சூப்பரான காதல். வரலட்சுமியில் வசனங்களை கேட்டால் […]
அன்று இரவு முழுதும் பிரேதங்களின் நினைவில்தான் கழிந்தது. ஒரு காலத்தில் அவர்கள் உயிரோடு இருந்தபோது எப்படியெல்லாம் வாழ்ந்திருப்பார்கள். இன்று வெறும் மரக்கட்டைகள் போன்று கிடக்கிறார்களே! நாங்களும் அவர்களை மனிதர்கள் என்பதை மறந்த நிலையில் வெட்டி உடற்கூறு பயில்கிறோமே என்ற எண்ணம் மேலோங்கியது. அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ தங்களுடைய உடலை இப்படி எங்களுக்காக தானம் செய்துள்ள தியாகச் செம்மல்கள்தான் என்றும் எண்ணிக்கொண்டேன். மறுநாள் வகுப்பும் கையின் அமைப்பைப் பற்றிதான். தசைகள், இரத்தக் குழாய்கள், நரம்புகள் போன்ற அனைத்தையும் அறிந்துகொள்ளவேண்டும். […]