சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=XXTEWQdu3aE&x-yt-cl=84503534&x-yt-ts=1421914688 https://www.youtube.com/watch?feature=player_detailpage&x-yt-ts=1421914688&v=O-V3yR2RZUE&x-yt-cl=84503534 பூமி உட்கருவில் சுழலும் திரவத்தை ஆழியாய்க் கடைந்து மின் காந்த உற்பத்தி நிகழும் ! சூரியக் கதிர் வீச்சு களுக்கு கவசச் சுவர் எழுப்பும் பூகாந்தம் ! உட்கருத் திரவம் உறைந்து ஒரு காலத்தில் மரணிக்கும் பூகாந்தம் ! பூகாந்த இழப்பு சூரியக் கதிர்வீச்சைப் பாதுகாக் காது ! முரண்கோள், எறிகல் காந்தம் போல் தரணியின் காந்தமும் தேயும் ! கணினி மாடல் […]
–மோனிகா மாறன். வசு இன்று உனக்கு ஆறாவது கீமோ சிட்டிங்.ட்ரீட்மெண்ட் அறையில் உன்னை விட்டுவிட்டு வெளியில் நிற்கிறேன். இடது கன்னத்தில் எரிகிறது.நேற்று நீ தூக்கி எறிந்த முள்கரண்டி கீறிய வலி.நேற்றிரவு என்னிடம் உக்கிரமாய் சண்டையிட்டாய்.காலையில் ஒன்றுமே நடக்காதது போல குளித்து,எனக்குப் பிடிக்காத ப்ரௌன் வண்ண சுடிதார் அணிந்து போலாமா என்றாய். வசு ஆஸ்பிட்டல என்பது வேப்பமரங்கள்,காகங்கள், நீலநிற அறைகள்,நர்ஸ்கள்,வார்ட் பாய்கள்,அழுகைகள்,ஸ்பிரிட் வாசனைகள் என்று எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரியானவையே.சென்னை,வேலூர்,பெங்களூர் என எல்லா மருத்துவ […]
(அவனில்லாத் தருணம் வெளிநாட்டில் மரணம்) ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வாசல் வழியே நீ நுழைய வில்லை; வழிமேல் விழி வைத்தேன் நெடு நேரம் ! வந்தனம் போய் வா ! ஒரு வேளை அவள் இழக்கலாம் நம்பிக்கை; அருகில் இருப்பது மரணம் நீயல்ல ! வருவாய் இனிய நேசனே ! அருகிலே இறுகி அணைத்துக் கொள் ! நீ தேடி அழைத்த […]
மலேசியா, இந்தோனேசியாவை ப+ர்விகமாகக்கொண்ட தென்னை மரம் முதன் முதலில் இந்தியாவிற்கு கடல் வழியாக வந்ததாக கூறப்படுகிறது. கேரளாவில் இதனை கடல் யாத்திரை செய்யும் கொட்டை என்று அழைக்கிறார்கள். தேங்காயை தென்னம்பிள்ளை என்று அழைப்பார்கள். பிள்ளை என்றால் மலையாளத்தில் விருந்தாளி என்று பெயர். இதனால் மாப்பிள்ளை, தென்னம்பிள்ளை போன்ற வார்ததைகள் பயன்படுத்தப்படுகிறது. முஸ்லிம்களில் மாப்பிள்ளா முஸ்லிம் என்று ஒரு வகையினர் கேரளத்தில் உள்ளனர். அவர்கள் அரேபியாவிலிருந்து வந்து மதம் மாறியவர்கள் என்று கூறப்படுகிறது. திருமணம் ஆனவுடன் வீட்டிற்கு வரும் […]
மிதமான சாரலில் இதமாய் நனைந்தபடி நடமிடும் அழகில் இலயித்த வான்மேகம் வளமாய் பொழிந்து வசமாய் வீசிடும் வளியின் வீச்சில் வெகுதூரம் விரைந்தோடி மௌனலையினூடே கிழித்துச்செல்ல எத்தனிக்கும் மீகாமனில்லா நாவாய் நீராழியலையின் மிதவையாய் வெள்ளத்தினூடே ஓயாமல் காற்றின் திசையில் சிறகடித்தபடி ஆழிப்பேரலையின் அதிர்வில் திசைமாறி மதங்கொண்ட களிறே போலோடியது நீரடிப்பதால் அழுவதில்லை மீன்கள் பேரிடியால் வீழ்வதில்லை நீரலைகள் குத்தீட்டியால் குத்திக் கிழித்தாலும் குழம்பித் திரியா வான்மேகங்கள் முகமூடியணியும் விடையறியா வினாக்கள் அக்கரை செல்ல அக்கறையாய் கலங்கரை விளக்கை நாடும் […]
முனைவர் பா.சங்கரேஸ்வரி உதவிப்பேராசியர், தமிழ்த்துறை, மதுரை காமராசர் பல்கலைகழகம் மதுரை -21 ஒரு மொழியின் மீது மற்றொரு மொழியின் தாக்கமோ, ஆதிக்கமோ மிகச் சாதாரணமாக நிகழ்ந்துவிட இயலாது. ஒரு மொழியின் சமூக, அரசியல்;, பாண்பாடு, கல்வி ஆகிய தளங்களில் மற்றொரு மொழிபெறும் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டே தாக்கமும் ஆதிக்கமும் நிகழும் ஆங்கிலேயரின் ஆட்சி அகன்றாலும் ஆங்கில மொழியின் தாக்கத்திலிருந்து தமிழகம் இன்னும் விடுபடவில்லை. தற்பொழுதுள்ள காலகட்டத்தில் உலகத்தில் நிகழும் தொழில்கள், விஞ்ஞானச் செயல்கள் பற்றிய தகவல்களை ஆங்கிலத்தின் […]
இன்ஸ்பெக்டர் ரஞ்சன், குற்றம் நடந்த, இடத்திற்கு வந்தபோது புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்த இடம் கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ளடக்கமாக அமைந்த ஒரு தனி வில்லா வீடு. வாசலில் ஒரு மிகப்பெரிய கேட். கேட்டிலிருந்து வீட்டிற்கு இடையே இருபது அடிக்கு சிமென்ட் கற்களால் வேயப்பட்ட தரை. ஒரு பெரிய ஹோண்டா சிஆர்வி நிற்க ஒரு போர்டிகோ. அதன் தலையில் இரண்டடுக்கு வீடு. இவையெல்லாம் அடைத்த இடம் போக எஞ்சிய இடத்தில் அலங்காரத் தென்னை, ஒரு மாமரம், நிறைய பூச்செடிகள், க்ரோடான்ஸ் […]
திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் சிறந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருது ஆகியவற்றை வழங்கி வருகிறது. இவ்வாண்டின் அவ்விழாவில் ” நம்மூர் கோபிநாத்” அவர்களைச் சந்தித்தேன். கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் அவரின் கவிதையில் நவீனத்துவம் இல்லாவிட்டாலும் மரபின் தொடர்ச்சியாய் செய்திகளைப் பரிமாறிக் கொள்வதைக் கண்டேன். அவர் இணைந்து பணியாற்றி, நடித்துமிருந்த “ எதுவும் மாறலாம் “ குறும்படத்திலும் இதைக் காண முடிந்தது. “புறச்சமூகத்திலிருந்து வரும் ஆதிக்கம், தனக்குளேயிருக்கும் ஆதிக்கம், தன்னில் […]
இந்நூல் பெரிய கோயில் என்று போற்றப்படும் திருவரங்கத்தில் எழுந்தருளி உள்ள பெரிய பிராட்டியான சீரங்க நாயகித்தாயாரை மங்களாசாசனம் செய்யும் நூலாகும். இதை யாத்தவர் கோனேரியப்பனையங்கார் ஆவார். இவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் பேரன் என்பது இந்நூலின் இறுதியில் உள்ள தற்சிறப்புப் பாயிரத்தால் அறிய முடிகிறது. இதோ அந்தத் தற்சிறப்புப் பாயிரம்; தார்அங்கத் திருவரங்கர்க்கு ஊசல் பாடிச் சாத்தினான் பேரனெனும் தன்மை யாலும் ஆருங்கண்டே தெளியும் அவன் சொல் பாட்டின் அதிசயத்தை அறிவன்என்னும் ஆசை யாலும் […]
தன் வண்டியைப் பல தளங்கள் தாண்டி நிறுத்தத் தெரியாது விலைப் பட்டையைப் பார்க்காமல் தேர்வு செய்ய மாட்டார் விற்கும் உணவுகளில் எதுவும் அவரால் ஜீரணிக்க முடியாது தான் செல்ல வேண்டிய தளத்துக்கான வழியைக் கேட்டு இளவயதினரின் இனிய பொழுதைக் கெடுப்பார் எழுதாத விதியாக ராட்சத வணிக வளாகத்தில் இல்லை ஒரு முதியவருக்கு இடம் பெரு நகரின் வழி முறைகளில் பொருந்தாத மற்றொரு தொந்தரவு மழை நகரம் கோரும் […]