மொழிவது சுகம் ஜூலை 18 -2015 அ. இலக்கிய சொல்லாடல்கள் -4

This entry is part 10 of 29 in the series 19 ஜூலை 2015

– நாகரத்தினம் கிருஷ்ணா அ. இலக்கிய சொல்லாடல்கள் -4 கலை மக்களுக்காக (Art Social) கோட்பாட்டளவிலும் சரி, செயல்பாட்டிலும் சரி எவ்வித விதிமுறைகளையும் வகுத்துக்கொள்ளாமல் செயல்பட்ட கலை இலக்கிய ஆர்வலர்கள், தங்கள் சமூகத்தை முன்வைத்து சில பொறுப்புகளும் கடமைகளும் தங்களுக்கு இருப்பதாகக்கூறி உருவானதே “கலை மக்களுக்காக’ என்ற இயக்கம். குறிப்பாக 1830க்கும் 1848க்குமான இடைபட்ட காலத்தில் இவ்வியக்கம் தீவிரமாக செயல்பட்டது. ‘கலை மக்களுக்காக’ என்பது கலை, இலக்கியம் ஆகியவற்றைக்கொண்டு சமூக ஏற்றதாழ்வுகளை விமர்சனம் செய்வது மற்றும் சாதாரண […]

கெளட் நோய் ( Gout )

This entry is part 12 of 29 in the series 19 ஜூலை 2015

டாக்டர் ஜி. ஜான்சன் ” கெளட் ” என்பதற்கு சரியான தமிழ் சொல் இல்லை. இதை குருத்தெலும்பு மூட்டு வீக்கம் எனலாம். நாம் இதை கெளட் என்றே அழைப்போம். இது வளர்சிதை மாற்றம் ( Metabolic ) தொடர்புடைய நோய். வளர்சிதை மாற்றம் என்பது உணவை சீரணம் செய்து அதை சக்தியாக மாற்றம் செய்வதாகும். இவ்வாறு செய்யும்போது சில கழிவுப்பொருட்கள் உற்பத்தியாவது இயல்பு. அவைகளில் ஒன்றுதான் யூரிக் அமிலம். இதை சிறுநீரகங்கள் கழிவுப்பொருளாக வெளியேற்றுகின்றன. அதில் கோளாறு […]

பரிதி மண்டலத்தின் புறக்கோள் புளுடோவை முதன்முதல் நெருங்கிப் படமெடுத்த நாசாவின் புதுத்தொடுவான் விண்ணூர்தி

This entry is part 13 of 29 in the series 19 ஜூலை 2015

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா +++++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FvksfIDVGAA https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LgzM-uV81YE https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=iQ_Wp4bcLFI https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KfODJpfS0fo http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KNJNaIoa5Hk http://www.youtube.com/watch?feature=player_embedded&v=WUB7dRgClSQ http://www.youtube.com/watch?v=iPyRAmviIuE http://www.space.com/22752-voyager-1-goes-interstellar-solar-system-boundary-passed-video.html (NASA New Horizon Spaceship to Dwarf Planet Pluto & Beyond)   புதுத் தொடுவான் விண்ணூர்தி முதன்முதல் நெருங்கி புறக்கோள் புளுடோவைப் படமெடுக்கும். அணுசக்தி உந்து ஆற்றலில் மிகுந்த வேகத்தில் கடந்து செல்கிறது விண்கப்பல் புளுடோ வையும் சாரன் துணைக் கோளையும். நாற்பது ஆண்டுக்கு முன் பறந்த முதலிரு வாயேஜர் விண்ணூர்திகள் […]

மணல்வீடு இலக்கிய வட்டம்-தக்கை- கொம்பு- சார்பில் நிகழவிருக்குமோர் நூல்-வெளியீட்டு & விமர்சன அமர்வு

This entry is part 14 of 29 in the series 19 ஜூலை 2015

அன்புடையீர் வணக்கம் . மணல்வீடு இலக்கிய வட்டம்-தக்கை- கொம்பு- சார்பில் நிகழவிருக்குமோர் நூல்-வெளியீட்டு & விமர்சன அமர்விற்கு வரவேற்கிறோம் . ஹரி ————————————— நிகழ்விடம் -லட்சுமி அரங்கம் – சாமுண்டி வணிக வளாகம் -நான்கு ரோடு -சேலம் நாள்-26-7-2015- நேரம் -முற்பகல் 11 மணி —————————————————— வெளியீட்டமர்வு -உறை நிலைக்கு கீழே – கவிதைப்பிரதி -கொம்பு வெளியீடு நூல் விமர்சன அமர்வு மீசை என்பது வெறும் மயிர் -நாவல் சூர்யகிரகணம்- அரங்காடல் மற்றும் நாடகப்பிரதி மீகாமம் -கவிதைப்பிரதி […]

ஆறாண்டு காலத் தவிப்பு –

This entry is part 15 of 29 in the series 19 ஜூலை 2015

பாவண்ணன் பாரதியார் 11.12.1882 அன்று நெல்லையைச் சேர்ந்த எட்டயபுரத்தில் பிறந்தார். 12.09.1921 அன்று சென்னையில் மறைந்தார். இன்னும் சில ஆண்டுகளில் அவருடைய மறைவு நிகழ்ந்து நூறாண்டுகள் நிறைவடைந்துவிடும். அவருடைய பாடல்களையொட்டியும் வாழ்க்கையை ஒட்டியும் இன்னும் பல ஆய்வுகள் நிகழ்ந்தபடி உள்ளன. அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற பல முக்கியமான சம்பவங்களை யதுகிரி அம்மாள், வ.ரா., செல்லம்மாள், கனகலிங்கம், சகுந்தலா பாரதி, ஏ.வி.சுப்பிரமணி ஐயர், வ.சுப்பையா பிள்ளை, சீனி.விசுவநாதன், ரா.அ.பத்மனாபன், தொ.மு.சி.ரகுநாதன் போன்றோர் எழுதிய புத்தகங்கள் மூலம் அறிவதன் வழியாகவே […]

வாழ்வின் வண்ணமுகங்கள் – பாரதி கிருஷ்ணகுமாரின் சிறுகதைகள்

This entry is part 16 of 29 in the series 19 ஜூலை 2015

பாவண்ணன் பாரதி கிருஷ்ணகுமார் தமிழுலகத்துக்கு அறிமுகமான நல்ல பேச்சாளர். பாரதியின் பாடல்களில் மனம் தோய்ந்தவர். முதல் முயற்சியாக அப்பத்தா என்னும் தலைப்பில் ஒரு சிறுகதைத்தொகுதியை வெளியிட்டிருக்கிறார். 2008 முதல் 2011 வரை எழுதிய அவர் எழுதிய பத்து சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. 2012-ல் முதல் பதிப்பும் 2013-ல் மேலும் இரு பதிப்புகளும் வெளிவந்துள்ளன. கிருஷ்ணகுமாரின் கதைமாந்தர்கள் அனைவரும் மிக எளிய மனிதர்கள். சாதாரண வாழ்க்கைச் சம்பவங்கள் வழியாகவே அவர்களை கிருஷ்ணகுமார் நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். மிகவும் குறைவான […]

கள்ளா, வா, புலியைக்குத்து

This entry is part 17 of 29 in the series 19 ஜூலை 2015

வளவ. துரையன் தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் முதல் முதலில் பதிப்பித்தது சீவகசிந்தாமணியாகும். பதிப்புத்துறை அவருக்குப் புதிய துறையாதலால் “ஆரம்பத்தில் எல்லா விஷயங்களும் தெளிவாக விளங்கவில்லை” என்று அவரே குறிப்பிடுகிறார். சில பாடல்களை ஆராயும்போது சில தொடர்களுக்குப் பொருள் புரியாமல் அவரே திகைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய நிலை ஏற்படுகையில் அத்தொடர் அவர் மனத்தில் பதிந்துவிடுகிறது. சிந்தாமணிக் காப்பியத்தில் சீவகன் யாழிசைத்துப் போட்டியில் காந்தருவதத்தையை வென்றான். இதனால் கட்டியங்காரன் பொறாமை கொண்டு அங்கிருந்த மன்னர்களை நோக்கிச் சில சொற்களைக் […]

சிவப்பு முக்கோணம்

This entry is part 18 of 29 in the series 19 ஜூலை 2015

 ஜான்ஸ் டேவிட் அன்டோ   எழும்பூர் நிலையத்தில் அனந்தபுரி விரைவு வண்டி எந்நேரமும் உரிவதற்கு தயாராக நின்று கொண்டிருந்தது. மாரிசன் தன் குடும்பத்தாருடன் நடைமேடையில் ஓடிக் கொண்டிருந்தார். அவரின் நான்காம் மகள் வைத்திருந்த குரைக்கும் நாய் பொம்மையை தவிர்த்தால் மொத்தம் ஏழு உயிரினங்கள். இளையவனை தவிர  மற்றவர் அனைவருக்கும் ஈரேழரை வயதுக்கு மேல் கடந்து விட்டதால் அனைவருக்கும் சீட்டு எடுத்திருந்தார் மாரிசன். நாற்பத்தி இரண்டு வயசானாலும் கையில் இரண்டு சுமையுடன் ஓடி வந்து கொண்டிருந்த அவருக்கு பின்னால்தான் […]

‘தாய்’ காவியத்தில் பாடுபொருள்

This entry is part 19 of 29 in the series 19 ஜூலை 2015

    முனைவர் ச.கலைவாணி இணைப்பேராசிரியர் மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி.   கார்க்கியின் தாய் காவியம் கவிதை நடையில் அமைந்த காவியமாகும். இக்காவியத்தை கலைஞர் கருணாநிதி எழுதியுள்ளார். கலைஞர் தமது கைவண்ணத்தால் குறளோவியம்ää சங்கத்தமிழ்ää தொல்காப்பியப் பூங்கா போன்ற தமிழ் இலக்கியப் படைப்புக்களைப் படைத்து தமிழ்மொழியின் சிறப்பினையும் பண்பாட்டையும் பறைசாற்றினார். மார்க்ஸிம் கார்க்கியின் ரஷ்யப் படைப்பான ‘தாய்’ நாவலைத் தமிழில் கவிதை நடையில் காவியமாகப் படைத்து தமிழரின் பண்பாட்டை ரஷ்ய […]