அழகர்சாமி சக்திவேல் விஜயா என்கிற விஜயன் சிங்கப்பூர் காலாங் எம்ஆர்டிக்கு பக்கத்தில் இருந்த, அந்த பழைய அடுக்குமாடி வீட்டில், நான் அந்தப் பகல் வேலையிலும், எனது தனியறையில், தூங்கிக் கொண்டிருந்தேன். வழக்கம் போல, அப்பாவின் அதட்டல் கேட்டு, நான் விழித்துக்கொண்டேன். “பகல்லே, ஒரு பொண்ணு, இவ்ளோ நேரம் தூங்குற அளவுக்கு, ஏன் அந்த ராத்திரி வேலைக்குப் போகணும்? சிங்கப்பூர்லே.. இல்லாத வேலைகளா? ஏன், நீ, வேற வேலைக்குப் போனாதான் என்ன விஜயா?”.. படுக்கையில் இருந்து எழுந்து நடக்க […]
விரிகடல் கொளுத்தி வேவவிழ வருமிகு பதங்கள் ஆறிருவர் எரிவிரி கரங்கள் ஆறிஎழ எழுகுழை அசைந்த சாகையது. [141] [கொளுத்தி=வெப்பமூட்டி; வேவ=வெந்து போக; பதங்கர்=சூரியர்; ஆறிருவர்=பன்னிருவர்; [தாத்துரு; சக்கரன்; ஸ்ரீயமன்; மித்திரன்; வருணன்; அஞ்சுமான்; இரணியன்; பகவான்; திவச்சுவான்; பூடன்; சவித்துரு துவட்டா] அறி=குளிர்ந்து; குழை=தளிர்; சாகை=கிளை] விரிந்து அகன்று எல்லா இடங்களிலும் பரந்திருக்கும் கடல்களெல்லாம் வற்றும்படி பன்னிரண்டு சூரியர்களும் வெப்பக்கதிர்கள் வீசுவார்கள். அவர்களும் இந்த ஆலமரக் கிளைகளுக்கு […]
எழுத்தாளர் பாக்கியம் சங்கரின் கதைகளைப் படித்தபின் வடசென்னை வாழ்வின் மீது ஒரு மணம் எழுந்தது. ஒரு பத்து நாளைக்கு அந்தப் பக்கம் போய் தங்கி ‘அவர்களை’ பார்த்து வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவற்றில் பல விஷயங்கள் மனதில் மகிழ்ச்சி தரக்கூடியவை: தேசம்மா தேசம்மா சோறு பொக்னா சோறு மீன்குழம்பு இல்லாமல்லி கல்யாணி திருப்பாலு குட்டை கை மல்லய்யா நந்தவனம் என்கிற இடுகாடு சுலாப் இன்டர்நேஷனல் மரண குத்து மாங்குடி மைனர் இப்படிப் பல. இப்படி, […]
அன்புமிக்க திண்ணை ஆசிரியர்க்கும் வாசகர்களுக்கும் வணக்கம். சில ஆண்டுகளுக்கு முன் குமுதம்-மாலைமதியில் தொடராக வெளிவந்த ‘சிக்குவானா, சிக்குவாளா?’ எனும் எனது துப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE?” எனும் தலைப்பில் என்னால் ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டு அமேசான் கிண்டில் பதிப்பாக வெளிவந்துள்ளது. விரும்புவோர் வாசிக்கலாம்! அதன் லிங்க் கீழே – ஜோதிர்லதா கிரிஜா
கூடலிழைத்தல் தலைவனைப்பிரிந்திருக்கும் தலைவி அவன் பிரிவைத்தாங்கமுடியாமல் தவிக்கும் பொழுது, அவன் வரு வானா என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் கூடலிழைத்துப் பார்ப்பாள்.தரையில் அல்லது ஆற்றுமணலில் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் சுழிச்சுழிகளாக சுழித்துக் கீறி இரண்டு இரண்டு சுழிகளாக எண்ணிப் பார்க்கும் பொழுது இரட்டைப் படையாக வந்தால் நினைத்தகாரியம் கைகூடும் எனவும் ஒற் றைப்படையாக வந்தால் கைகூடாது என்றும் கொள்வார்கள். திருமழிசை ஆழ்வார் தன்னைத் தலைவி யாகப் பாவித்து, ”அழைப்பன் […]
கோ. மன்றவாணன் அன்று அல்ல அல்லன் அல்லள் அல்லர் ஆகிய சொற்களில் அல்ல என்ற சொல்லைத் தவிர, பிற சொற்களை இன்றைய இதழ்களில் காண முடிவதில்லை. இச்சொற்கள் யாவும் எதிர்மறைப் பொருள்களைச் சுட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. வினையை முடித்தவர் பற்றிய திணை / பால் வேறுபாடுகளை உணர்த்தவும் இச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம். இது நாய் அன்று (நாய் என்பது அஃறிணை ஒன்றன்பால் என்பதால் அதன் வினைமுற்று அன்று என வந்துள்ளது). […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ் இன்று (26 ஜூலை 2020) வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற இணைய முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: அத்வைதம் மறைந்து கொண்டிருக்கும் வேதாந்தமா? – கடலூர் வாசு …என்றார் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி – ஏகாந்தன் வயாகரா – நாஞ்சில் நாடன் பைய மலரும் பூ… குமரன் கிருஷ்ணன் புதியதோர் உலகு – ரட்ஹர் பெர்ஹ்மான் – (தமிழுக்கு மாற்றி எழுதியவர் பானுமதி ந ) மற்றவர்கள் வாழ்வுகள்- 2 – ரிச்சர்ட் ரூஸ்ஸோ – தமிழாக்கம்: மைத்ரேயன் சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை – (பாகம்-4)- ரவி நடராஜன் இரண்டு வடையும் இளையராஜாவும் – கீமூ கவிதைகள்: கல்யாணீ ராஜன் கவிதைகள் – மொழியாக்கம்: அம்பை புஷ்பால ஜெயக்குமார்- கவிதைகள் இன்பா – கவிதைகள் கதைகள்: தபால் பெட்டி – இந்தி மூலம்: ப்ரஜேஷ்வர் மதான் (இங்கிலிஷ் வழியே […]
Posted on July 25, 2020 Kakkrapar – 3 Atomic Power Plant Achieves Criticality on July 22, 2020 in Gujarat India முதல் காண்டு -700 MWe அணுமின்சக்தி நிலைய வெற்றி 2020 ஜூலை 22 ஆம் தேதி இந்தியாவின் குஜராத் கக்ரபாரா -3 என்னும் புதிய மாபெரும் 700 MWe அணுமின்சக்தி நிலையம் முதல் பூரணத் தொடரியக்கம் புரியத் துவங்கியது. இது கனடாவின் காண்டு [CANDU DESIGN] அணுமின்சக்தி கட்டமைப்பு ஆயினும், […]
_லதா ராமகிருஷ்ணன் கவிஞர் ஜெயதேவனின் கவிதை இது: நிசப்தமான அறையில் ‘ ணங்‘ என்ற ஒலியுடன் சிதறி விழுகிறதுசற்று முன் நான் தேநீர் குடித்து விட்டுமேசையில் வைத்த பீங்கான் குவளை.எங்கிருந்து வந்தது இந்த ஒலிகுவளைக்குள்தான் இருந்ததா?எனில்நான் பருகிய தேநீருக்குள்ளும் சிலஒலிச் சிதறல்கள் போயிருக்குமா.பலா மரத்திலிருந்து விழுந்தகூழம் பலா போல் சிதறிக் கிடக்கும்பீங்கான் துண்டில் எந்தத் துண்டிடம்கேட்பேன்.” இத்தனை ஒலியை உள்ளுக்குள் வைத்திருந்தும்ஏன் இதுவரை ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசவில்லை.குறைந்தது ஒரு காலை வணக்கமாவதுசொல்லியிருக்கலாமே தினமும்“******(* ” […]
சிவகுமார் கதை சொல்வதென்பது ஒரு கலை, எல்லாருக்கும் அது வராது, இதை எத்தனை முறை எத்தனை பேரிடமிருந்து கேட்டாச்சு! ஆனால் இன்னிக்கு அப்பா என் கதையைத் தட்டிக் கழிப்பதற்கென்று சொன்ன போது எனக்குக் கொஞ்சம் பொறுக்கலைதான். அவருக்கருகில் சுந்தர ராமசாமியின் “ஒரு புளியமரத்தின் கதை”. அங்கங்கே சில பக்கங்களைப் படித்து விட்டுத்தான் இந்த அங்கலாய்ப்போ என்று எண்ணிக் கொண்டேன். ஆனானப்பட்ட சுந்தரராமசமியே அவ்வப் போது தாமோதர ஆசானின் உதவியை அல்லவா நாடியிருக்கிறார். அங்கங்கே அவரே கதை சொல்பவராக […]