நாவல் தினை அத்தியாயம் இருபத்தொன்று காலப்படகு காலத்தில் முன்னும் பின்னும் பத்து நாள் போகுமளவு பழுது திருத்தியிருந்தது. முழுக்க முன்னே, பின்னே நூற்றாண்டுகள் போய்வர இன்னும் நிறையச் செய்ய வேண்டியது உண்டு. வேறு கால ஓடத்தை அனுப்பி வைத்து நம்மை இந்த இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து மீட்டுப் போனால் என்ன? வானம்பாடி குயிலியைக் கேட்டாள். செய்யலாம் தான். ஆனால் வருஷம் – மாதம் – வாரம் –நாள் –மணி-நிமிடம் […]
அன்புடையீர், 25 ஜூன் 2023 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 297 ஆம் இதழ் இன்று வெளியானது. பத்திரிகையைப் படிக்க விரும்புவோர் செல்ல வேண்டிய முகவர்: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: இற்றைத் திங்கள் அந்நிலவில்-1 – கமலதேவி ஒரே ஒரு முத்தம் – குமரன் கிருஷ்ணன் ஊர்வசி காதலில் கண்விழித்தாள்! – மீனாக்ஷி பாலகணேஷ் ராகஜலதி என்ற நாவல்– டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்) சொல்லாத காதல் எல்லாம்– கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு தொடர் – பாகம் 27) பப்பைரஸ் – லோகமாதேவி நாவல்கள்: மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு- இரா. முருகன் தெய்வநல்லூர் கதைகள் – 5 – ஜா. ராஜகோபாலன் அதிரியன் நினைவுகள் – 16 – மார்கரெத் யூர்செனார் (தமிழாக்கம்: நா.கிருஷ்ணா) உபநதிகள் – ஒன்பது – அமர்நாத் கதைகள்: உள்ளிருத்தல் – ஆதித்ய ஸ்ரீநிவாஸ் போர் – ஜெகன்மித்ரா […]
முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 2 சி. ஜெயபாரதன், கனடா படிப்பினை-2 முதியோர் இல்லப் புலப்பெயர்ச்சி தவிர்க்க முடியாத ஒரு சிறை அடைப்பு ரிவெல்லா முதியோர் இல்லத்தில் 50 பேர் தனித்தனி அறைகளில் ஐந்தாறு மாதங்களோ, ஓரிரு வருடங்களோ வசித்து வருகிறார். தம்பதிகள் ஒரு பெரும் அறையிலே தங்கி இருக்கிறார். சேர்ந்த முதல் நாள் காலை உணவு தின்னக் கூடியிருந்த குழுவுக்கு ஹாலில் நான் அறிமுகம் செய்யப் பட்டேன். சேர்ந்த சில தினங்கள் அங்குள்ள பலரும் என்னைப் பாராதவர் போல் நடந்து கொண்டார். நான் செவ்வாய் […]
”மற்றமை” யின் இரண்டாவது வெளியீடாக மார்ச்-08 மகளிர் தினத்தை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு-2023. சிறகுகளே ஆயுதமாக… இத்தொகுப்பில் இடம் பெற்ற பெண் கவிஞர்கள் அனார், தினுஷா மகாலிங்கம், சஞ்சிகா லோஜன் சித்தி ரபீக்கா பாயிஸ், க.ஷியா, அஸ்ரபா நூர்டீன் மின்ஹா, அம்பிகை கஜேந்திரன், கெக்கிராவ ஸூலைஹா பாலரஞ்சனி ஜெயபால், அஸ்மா பேகம், தாட்சாயணி மரீனா இல்யாஸ் ஷாபி, தயானி விஜயகுமார், தம்பிலுவில் ஜெகா, ஜென்சி கபூர் மிஸ்ரா ஜப்பார், எஸ்தர் மலையகம் […]
ஆர் வத்ஸலா நெருங்கி வருகிறது இன்னொரு நட்பு உனதளவு இல்லாவிட்டாலும் நிறைய அன்புடனும் அதேயளவு மதிப்புடனும் புரிந்துணர்வுடனும் கொசுருக்கு கதை கவிதை பற்றின கருத்து பரிமாற்ற சாத்தியத்துடன் ஆனால் அச்சம் மனமூலையிலமர்ந்து பின்னுக்கு இழுக்கிறது என்னை உன் விலகலை நினைவூட்டி எனக்கும்தான் தெம்பில்லை இன்னொரு நட்பின் தொலைதலை தாங்க
ஆர் வத்ஸலா நான்கு வயதில் முதல் சுதந்திர நாள் அன்று நடுநிசியில் அப்பாவின் தோள் மேல் அமர்ந்து தெரு நிறைந்த கூட்டத்தோடு குட்டிக் குரலில் ‘ஜெய்ஹிந்த்’ சொன்னது நினைவிருக்கிறது ஆறு வயதில் பள்ளியிலிருந்து திரும்புகையில் வாத்தியார் எழுதிய ‘குட்’ மழையில் அழியாமலிருக்க ‘சிலேட்’ பலகையை நெஞ்சோடணைத்து வீட்டிற்கு நடந்தது நினைவிருக்கிறது பதினாறில் கல்லூரி கும்பலோடு மெரினாவில் கும்மாளம் போட்டது மறக்கவில்லை பிரசவித்தவுடன் முகமெல்லாம் வாயாக அழுத மகளின் முதல் தரிசனம் மறக்கவில்லை பின்னர் வந்து சென்ற பல […]
வளவ. துரையன் ஒரு முழம் கூடவிற்கவில்லையெனபூப்போல வாடும்பூக்காரியின் முகம்கூடு கட்டஎந்தக் குச்ச்சியும்சரியில்லை எனத்தேடி அலையும் காக்கைஎலிகள் கிடைக்காததால்காக்கைக்கு வைத்தசோற்றைப் பார்க்கும்நகரத்துப் பூனைதிடீரென வந்த தூறலில்ஒதுங்க இடம்தேடும் தெரு நாய்ஆட்டோவில் அடைத்துஅழைத்துச் செல்லப்படும்நர்சரியின் மாணவர்கள்
_________________ எத்தனை நாள்தான் ஒரே மூஞ்சியை பார்ப்பது கண்ணாடியில். எத்தனை முறைதான்- தலை முடியை மாற்றி, மாற்றி, தாடிமீசையை மாற்றி, மாற்றி ஒரே மூஞ்சியை பார்ப்பது கண்ணாடியில். எத்தனை முறை பார்த்தாலும் அதே மூஞ்சி, அதே கண்ணாடிதான். எத்தனை முறை நடந்தாலும் அதேபாதை, அதே வாழ்க்கைதான்! ஜெயானந்தன்.
மனோந்திரா (நொண்டிச் சிந்து) யாரெனக் கேட்டதற்கு – அவன் யாதொரு பதிலையும் சொல்லவில்லை பாரெனை என்பதுபோல் – அவன் பாவனை செய்வதாய் நானுணர்ந்தேன் கூரெனப் பார்வையினைத் – தீட்டி குறுகுறு என்றுநான் பார்த்திருக்க நீரென பூமியிலே – சரிந்து நிற்காமல் மண்ணிலே போய்மறைந்தான் மாயமாய்ப் போய்மறைந்த – அந்த மனிதனை எண்ணியே நின்றிருந்தேன் தேயமும் நடுங்கியது – சற்று சிந்தையும் தானுடன் குழம்பியது காய்ந்திட வில்லைபதம் – அவன் காயமு டன்தரை மீண்டுவந்தான் தீயதோர் சக்தியென்றே – […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பூமியின் காந்த துருவங்கள்புதிராய்த் திசை மாறும் !ஆமை வேகத்தில் வட துருவம்தென் துருவ மாகும் !பூமியின் சுழற்சி நின்றுஎதிர்த் திசையில் ஓடுமா ?பரிதியின் உதய திசை அப்போதுகிழக்கா ? மேற்கா ?உயிரினம், மனித இனம் என்ன வாகும் ?மின்காந்த இயக்கங்கள் பூமியில்தன்னியல் மாறுமா ?சூழ்வெளி மண்டலம் முறிந்துபாழ்வெளி ஆகுமா ?நீர் மண்டலம் ஆவியாகிநிலம் பாலை ஆகுமா ? சூடேறிஉயிரினங்கள் தவிக்குமா ?பயிரினங்கள்பசுமை இழக்குமா ?அரை மில்லியன் ஆண்டுகட்குஒருமுறை நேர்ந்திடும்துருவத் திருப்பம்,பிறகு […]