ஜெயமோகனுக்கு – பி கே சிவகுமார், திண்ணை, எனி இந்தியன் பற்றிய தகவல் பிழைகள் 

This entry is part 11 of 11 in the series 11 ஜூன் 2023

கோபால் ராஜாராம்  ஜெயமோகன் தன் வலை தளத்தில் திண்ணை பற்றியும் மற்றும் பி கே சிவகுமார் பற்றியும் எழுதியுள்ள கீழ்க்கண்ட பத்திகள் என் கவனத்திற்கு வந்தது. ‘பி.கே.சிவக்குமார் 2000 வாக்கில் எனக்கு அணுக்கமாக இருந்த திண்ணை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த கோ.ராஜாராம், கோ.துக்காராம் வழியாக அறிமுகம். திண்ணை இணையதளம், பின்னர் எழுத்தும் எண்ணமும் குழும உரையாடல் வழியாக தெரியும். ஒரு சில மின்னஞ்சல்கள், மற்றபடி பொது வெளி உரையாடல்கள் மட்டுமே. இணையம் உருவான காலகட்டத்தில் அப்படித் தெரியவந்த […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின்296 ஆம் இதழ்

This entry is part 10 of 11 in the series 11 ஜூன் 2023

அன்புடையீர்,                                                                                 12 ஜூன் 2023   சொல்வனம் இணையப் பத்திரிகையின் 296 ஆம் இதழ்,12 ஜூன் 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/          இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: எலிசபெத் பிஷப்: இரு மொழிபெயர்ப்புகளும் சில குறிப்புகளும் – நம்பி ‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’ – மீனாக்ஷி பாலகணேஷ் (அரவிந்தரின் ஆக்கங்களும் கவிதைகளும் தொடர்-3) தமிழ் நாவலின் விரியும் எல்லைகள் – ப. சகதேவன் ஒழிக தேசியவாதம்–2 – கொன்ராட் எல்ஸ்ட் (தமிழாக்கம்: கடலூர் வாசு) கனி மரம் – லோகமாதேவி தென்னேட்டி ஹேமலதா– பொது உலக பரிச்சயம் அல்லது மேதமை பிரபஞ்சம் – காத்யாயனி வித்மஹே (தமிழில்: ராஜி ரகுநாதன்) தெலுங்கு புதினங்களில் பெண்கள் தொடர் –18 ஆம் அத்தியாயம் இறை நின்று கொல்லுமோ? – கமலக்கண்ணன் – (ஜப்பானியப் பழங்குறுநூறு-26) சகோதரி  நிவேதிதையின் பார்வையில் இந்தியா – எஸ்ஸார்சி கதைகள்: மூங்கில் காடு – கமலதேவி தேவகுமாரன் – சியாம் வாசம்  – பாஸ்கர் ஆறுமுகம் சிதறும் கணங்கள் – காந்தி முருகன் குறுநாவல்கள் மார்க் தெரு கொலைகள்– பகுதி 4 – எட்கர் ஆலன் போ (தமிழாக்கம்: பானுமதி ந. ) நாவல்கள்: மிளகு – அத்தியாயம்  நாற்பத்தேழு  –இரா. முருகன் அதிரியன் நினைவுகள் –15 –மார்கரெத் யூர்செனார் (ஃப்ரெஞ்சு – தமிழாக்கம்: நா. கிருஷ்ணா) உபநதிகள் – 8 -அமர்நாத் தெய்வநல்லூர் கதைகள் –4 – ஜா. ராஜகோபாலன் கவிதைகள்: பார்வையற்றவனின் பார்வை – கோலி ஸ்லிப்பர் (தமிழாக்கம்: இரா. இரமணன்) ஆமிரா கவிதைகள் புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள் சர்க்கஸ் – ந. பெரியசாமி இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதும் உண்டெனில், அவற்றைப் பதிவு செய்ய ஒவ்வொரு படைப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: Solvanam.editor@gmail.com எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான். உங்கள் வருகையை எதிர்நோக்கும், சொல்வனம் பதிப்புக் குழு

கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது விழா

This entry is part 9 of 11 in the series 11 ஜூன் 2023

குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக்கிழமை 4 ஆம் திகதி கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ரொறன்ரோவில் இடம் பெற்றிருந்தது. ஆரம்பகால உறுப்பினரும், தற்போதைய செயலாளருமான எழுத்தாளர்; அ. முத்துலிங்கம் அவர்கள் நேரடியாக இந்த நிகழ்வுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அமைப்புத் தொடங்கிய காலத்தில் இருந்து இந்த நிகழ்வுக்காக எனக்கு அவர் வருடாவருடம் அழைப்பிதழ் அனுப்பிவிட்டுத் தொலைபேசியிலும் அழைத்துச் சொல்லுவார். இம்முறை அவர் அழைத்த போது நான் குறோசியாவில் இருந்தேன், […]

சூட்டு யுகப் பிரளயம் !மாந்தர் பிழைப்ப தெப்படி ?

This entry is part 8 of 11 in the series 11 ஜூன் 2023

 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பூகோளம் மின்வலை யுகத்தில்பொரி உருண்டை ஆனது !ஓகோ வென்றிருந்த உலகமின்றுஉருவம் மாறிப் போனது !பூகோள மஸ்லீன் போர்வைபூச்சரித்துக் கந்தை ஆகுது !  மூச்சடைத்து விழி பிதுக்கவெப்ப யுகப்போர் தொடுக்குது !நோய் பற்றும் பூமியைக்குணமாக்க மருத்துவம் தேவை !காலநிலை மாறுத லுக்குக்காரணங்கள் வேறு வேறு !கரங் கோத்துக் காப்பாற்றவருவீ ரெனக் கூறு கூறு !ஓரிடத்தில் எரிமலை கக்கி    உலகெலாம் பரவும்கரும்புகைச் சாம்பல் !துருவப் பனிமலைகள்உருகிஉப்பு நீர்க் கடல் உயரும்!பருவக் கால நிலைதாளம் தடுமாறிப்வேளை […]

இந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் கக்கிரபாரா யூனிட் -3 மின்வடத்துடன் சேர்க்கப் பட்டது.

This entry is part 7 of 11 in the series 11 ஜூன் 2023

Click to access 202212140133183171845KAPP_3_4_english.pdf KAPP-3&4:Location: Kakarapar near Vyara, GujaratType or Reactor: Pressurised Heavy Water Reactors (PHWRs)Capacity: 2×700 MWKAPP-3&4 is India’s first pair of indigenously designed Pressurised Heavy WaterReactors (PHWRs) of 700 MW unit size with enhanced safety features, located atKakrapar in Gujarat, where two units of 220 MW PHWRs are already in operation.Unit-3 has been […]

குழந்தைகளை மகிழ்விக்கும் டைனஸோக்களின் உலகம்

This entry is part 6 of 11 in the series 11 ஜூன் 2023

குரு அரவிந்தன் டைனஸோக்கள் இப்போது உயிரோடு இல்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் வரலாறு தெரிந்தவர்கள் அந்த டைனஸோக்கள் உயிர் பெற்று வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையாவது செய்து பார்த்திருப்பார்கள். அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் நவீன தொழில் நுட்ப உதவியுடன் அப்படி ஒரு உலகத்தை இப்போது உருவாக்கியிருக்கிறார்கள். சென்ற வாரம் டைனஸோ பற்றிக் கனடாவில் நடந்ததொரு காட்சிக்குச் சென்று பார்த்ததை இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். டைனஸோக்கள் எப்படி இருந்திருக்கும் என்று பார்க்க விரும்பினால் […]

நாவல்  தினை              அத்தியாயம் பதினெட்டு      CE 300

This entry is part 5 of 11 in the series 11 ஜூன் 2023

   வழுக்குப் பாறைக் குகைகள் முன்னே இந்தப் பெண்கள் நின்றபோது மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. வெள்ளமெனப் பெருகிய மழைநீர் குகையின் வாயிலில் பெரிய பாறையை உருட்டிப் போய் அடைத்திருந்தது.   குகைத் தொகுப்பில் மழை நீர் புகுந்து தேங்கி நிற்பது போல சுற்று வட்டார கிராமங்களுக்கு தொல்லை உண்டு பண்ணும் சங்கதி வேறேதுமிலலை. நீர்க் கசிவில் இழைந்து வரும் விஷப் பிராணிகள் வீடுகளுக்குள் புகுந்து கடித்தும் கொடுக்கு கொண்டு கொட்டியும் துன்பம் தரும்.  தேள்களை இழிந்த விஷப் […]

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி 1 பாகம் -6

This entry is part 4 of 11 in the series 11 ஜூன் 2023

கோமான் ஷைலக் & வில்லன் புருனோ ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்    அங்கம் -2 காட்சி 1  பாகம் -6 [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா  ++++++++++++++++++++++++   நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]  ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய  ராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது]  மோனிகா :  செனட்டர்  சிசாரோவின் மகள்.  ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]  புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது]  காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]  ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் [வயது 25]  சிசாரோ :  மோனிகாவின் தந்தை.  வெனிஸ் செனட்டர் [60 வயது]  எமிலியோ : புருனோவின் மனைவி.  மாண்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.  பயாங்கா :  காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.  மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜ்ய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.   நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு  இடம் :  சைப்பிரஸ் தீவில் ஒரு துறைமுகக் கரை ஓரம்  நேரம் : பகல் வேளை  பங்கெடுப்போர் :  சைப்பிரஸ் கவர்னர், மாண்டேனோ, மற்றும் இரண்டு படைவீர்கள்,காஸ்ஸியோ, மோனிகா, தோழியர், எமிலியோ, புருனோ, ஷைலக்.   [ஒத்தல்லோ காவல் படை சூழ தூரத்தில் வருகிறான்.] புருனோ:  [ஷைலக்கை நோக்கி]  மக்கள் சொல்வார்.  காதல்  நோயில் வெந்து போனவன் பிறகு செம்மை […]

வாளி கசியும் வாழ்வு

This entry is part 3 of 11 in the series 11 ஜூன் 2023

கோவிந்த் பகவான். மூதாதையரின் தொன்ம கிணற்றிலிருந்து நீர் இறைத்துக்கொண்டிருக்கிறாள் ஒருத்தி. அடி ஆழம் வரை தொங்கும் கயிறு பல நூற்றாண்டுகளின் நீளம். மூச்சிரைக்க அவள் இறைக்கும் வாளி நீரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் வழிந்து கொண்டிருக்கிறது இப்பெரும் வாழ்வு.     -கோவிந்த் பகவான்.

பார்வை 

This entry is part 2 of 11 in the series 11 ஜூன் 2023

ஸிந்துஜா  கமர்ஷியல் ஸ்ட்ரீட்டில் பகத்ராமிலிருந்து இனிப்பும் காரமுமாக இரண்டு பைகளை வாங்கிக் கொண்டு தெருவில் கால் வைத்த போது ‘ஏய் குரு, நீ எங்கே இந்தப் பக்கம்?” என்ற குரலைக் கேட்டு அருண் திரும்பிப்பார்த்தான்.  நரசிம். அவன் கையிலும் இரண்டு பைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அருண் பதிலளிப்பதற்கு முன்பே நரசிம்  “எங்கே நீ இவ்வளவு தூரம்?” என்று கேட்டான்.  “நகைக்காரத் தெருவிலே அம்மாவோட வேலை கொஞ்சம் இருந்தது. அவள் அலைய வாண்டாமேன்னு நா வந்தேன். சரி இவ்வளவு தூரம் வந்தது  வந்தோம், பகத்ராம்லே அம்மாக்குப் […]