பீரப்பா தர்காவிற்கு வந்திருந்தார்

This entry is part 13 of 33 in the series 12 ஜூன் 2011

பீரப்பா டீக்கடையில் ஒரு சாயா குடிக்க வந்திருந்தார். நெடுநாளாய் சமாதியில் ஓய்ந்திருந்த சோர்வு அவருக்கிருந்தது. முன்னூறு வருடங்களுக்கு முன்பு தன்னோடு விளையாடிய குழந்தைகளும் விளையாடிய இடமும் உருத்தெரியாமல் போயிருந்தது. உயிரோடு சமாதிக்குள் போனபிறகு பிள்ளைகளுக்கு பழக்குலைகளை அதன்மேல் முளைக்கச் செய்த அதிசயத்தை தன்னால் இன்னமும் நிகழ்த்தமுடியுமென நம்பியிருந்தார். ஒரு சுற்று நடந்துவந்தபோது தன் பெயரில் தர்காவும் பிரமாண்ட கட்டிடமும் எழும்பியிருந்த போதும் கூட பரவசப்பட்டதாய் தெரியவில்லை. தன் வாசல் முற்றத்தில் உட்கார்ந்திருக்கும் தப்ஸ் கொட்டும் பக்கிர்களையும் முஸாபர்களையும் […]

தேசிய ஒருமைப்பாட்டுக்காக அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் !

This entry is part 12 of 33 in the series 12 ஜூன் 2011

அது 1993ம் வருடம். சரியாகச் சொன்னால் ஜூலை மாதம் 16ம் திகதி. ‘நல்லரத்தினம் சிங்கராசா’வுக்கு அப்பொழுது வயது 17. அவர் இப்போதைக்குச் சில தினங்கள் முன்பிருந்தே வீட்டுப் பரணின் இருட்டு மூலையொன்றில் ஒளிந்திருக்கிறார்.   அவரது ஊர் மட்டக்களப்பின் நாவற்காடு. ஒளிந்திருப்பது இரு குழுக்களின் மீதுள்ள அச்சத்தால். ஒரு குழு இலங்கை அரசின் இராணுவப் படை. மற்றைய குழு விடுதலைப் புலிகள் இயக்கம். இது பயனற்ற கதையொன்றென எவருக்கும் தோன்றக் கூடும். விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் […]

கவிதை

This entry is part 11 of 33 in the series 12 ஜூன் 2011

எங்கே போயிருந்தது இந்த கவிதை மழை வரும் வரை.   * ஈரநிலமாய் மாறுதலுக்கு தயாராகிறார்கள் சன்னல்கள், கார் கண்ணாடி, சுவர்கள், மெட்ரோ ரயில்கள்   மரங்கள் அகோரிகள் வெயில், மழை, தூறல், பனி..   *   தாமதமாய் வந்த கணவன் மீது கோபம் கொள்ளும் மனைவி   படித்து முடித்து வரும் பையனை முதலில் சாப்பிடு என சந்தோசமாய் விரட்டும் அப்பா   விடுமுறை முடிந்து கிளம்பும் உறவுகாரப் பையன்களின் கடைசி நாள் மூடிய […]

அறிகுறி

This entry is part 10 of 33 in the series 12 ஜூன் 2011

  தனக்குத்தானே உருகிக்கொள்வது, பின் தேற்றிக்கொள்வது, நடந்தவற்றை மறுகோணம் கொண்டு பார்ப்பது, இப்படி நடந்திருந்தால் நான் எப்படியோ இருந்திருப்பேன் என்று நினைத்துக்கொள்வது, ஏற்கனவே நடந்தவற்றில் தனக்கு பிடித்த வகையில் முடிவுகளை மாற்றி வைத்துக்கொண்டு மனதிற்குள்ளேயே மகிழ்ச்சி கொள்வது, பின் அதைப்பற்றி பலரிடம் பெருமையாகப்பேசுவது போல நினைத்துக்கொள்வது, கடைசியில் மாய்ந்து மாய்ந்து அதைப்பற்றியே கவலை கொள்வது,   – இவை எல்லாம் எதற்கான அறிகுறிகள்?!  

கணமேனும்

This entry is part 9 of 33 in the series 12 ஜூன் 2011

குழந்தைகள் பற்றிய எந்த கவிதையையும் நினைக்கையிலும் வாசிக்கையிலும் வரிகளினூடே திரிகின்றனர் எண்ணற்ற குழந்தைகள். நமது குழந்தையோ நண்பரின் குழந்தையோ எதிர் வீட்டுச் சிறுமியோ பயணத்தில் அருகமர்ந்த சிறுவனோ… நினைவுகளில் புதையுண்டு கனவுகளில் பிறப்பெடுக்கும் தொலைந்த நம் பால்யமோ… அலங்காரங்கள் அவசியப்படாத எந்த குழந்தையைப் பற்றிய கவிதையையும் சுகிக்கையிலும் எழுதுகிற நானும் வாசிக்கிற நாமும் மீண்டும் மழலைகளாகிறோம் கணமேனும்.   -வருணன்  

ஒரிகமி

This entry is part 8 of 33 in the series 12 ஜூன் 2011

காகிதத்தில் கற்பனை மடிப்புகள் விரிந்து புதுப்புது உருவங்கள் பார்வையாளர் உள்ளத்தில் மிதக்கும். ஒரிகமி கலைஞனின் மெல்லிய விரலழுத்தத்தில் குதித்தெழுகின்றன குதிரைகளும், பறவைகளும். ஒரே தாளில் தோன்றுகின்ற வியத்தகு உருவங்களை உள்ளத்தில் கசங்காமல் பதித்துக் கொண்ட மக்களின் கரகோஷம் அரங்கைக் குலுக்கியது.   சிந்தனையைக் கொட்டி விதைத்து அறுவடை செய்யும் தாளில் பொம்மைகள் செய்யும் பேதமை. கணக்கிட்டு உருவாகும் பதுப்புது வடிவங்களின் மடிப்புகளிலும் ஒடுங்கிப் போகிறது அறிவு என்றது விஞ்ஞான மூளை.   பக்கம் பக்கமாய் இயற்கை எழுதி […]

மனவழிச் சாலை

This entry is part 7 of 33 in the series 12 ஜூன் 2011

கவலைகள் அவ்வப்போது கடுகாகவும் கடுஞ்சீற்றத்துடனும் வரும்…   அதன் வருகையின் அடையாளமாய் மனதில் சிறு குழிகளும் பெருங்குண்டுகளுமாய் இருக்கும்…   எதிரே வருபவர்களெல்லாம் அதில் தடுக்கி விழலாம். குழிகளையும் சாலையையும் பொறுத்து காயங்களும் ஏற்படலாம்.   மிகச் சிலரே அதில் தண்ணீர் ஊற்றி குழிகளை நிரப்பி செடி வளர்த்து அதில் ஒரு பூ பூப்பது வரை கூடவே இருந்து பராமரிப்பர்…   ஆனாலும் அவனுக்கு அவன் மனதானது எப்போதும் அர்ப்ப ஆயுளுடன் சீர் செய்யப் படுகிற தார் […]

சதுரங்கம்

This entry is part 6 of 33 in the series 12 ஜூன் 2011

நாட்கள் நத்தை போல் நகர்கிறது கணக்குச் சூத்திரம் போல வாழ்க்கை வெகு சிக்கலாக இருக்கிறது தாழப் பறந்து கொண்டுள்ளதால் உயரே பறப்பவர்களின் எச்சம் என் மீது விழுகிறது சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டதைப் போல வாழ்க்கை சங்கிலிகளால் என்னைப் பிணைத்துள்ளது நினைத்தபடி காரியங்கள் நடக்காத போது சரணாகதி தீர்வாகிறது அதல பாதாளத்தில் விழுந்து கொண்டிருக்கும் போது கையில் பற்றிய மரக்கிளையும் முறிந்தால் என் கதி என்னாவது சூழ்நிலைக் கைதியாய் விளையாட்டுப் பொம்மையாய் விதியின் கைப்பாவையாய் எத்தனை நாளைக்கு […]

ஊரில் மழையாமே?!

This entry is part 5 of 33 in the series 12 ஜூன் 2011

மற்றொரு மழை நாளில்… மடித்துக் கட்டிய லுங்கியும் மடக்குக் குடையுமாய் தெருவில் நடந்த தினங்கள்…   கச்சலில் கட்டிய புத்தக மூட்டையும்.. “அடை மழை காரணமாக பள்ளி இன்று விடுமுறை”யென- தேனாய் இனித்த கரும்பலகையும்…   சற்றே ஓய்ந்த மழை வரைந்த வானவில்லும்…   சுல்லென்ற ஈர வெயிலும்… மோதிரக்கல் தும்பியும்… கருவேலும் புளிய மரமும் சேமித்த மழையும் கிளையை இழுக்க சட்டென கொட்டி நனைந்த உடையும்…   க்ஷைத்தானுக்கு கல் எறிந்த பின் சுப்ஹுத் தொழ […]

நிகழ்வுகள் மூன்று

This entry is part 4 of 33 in the series 12 ஜூன் 2011

பதிவு – சு.குணேஸ்வரன் 1.         சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா   யாழ் இலக்கிய வட்டம் – இலங்கை இலங்கைப் பேரவை நடாத்தும் 2008-2009 இல் வெளிவந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் 12.06.2011 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு நல்லை ஞானசம்பர் ஆதீன மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் வாழ்த்துரையையும் கவிஞர் ஐயாத்துரை விருது உரையினை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களும் நிகழ்த்தவுள்ளனர். மூதறிஞர் கவிஞர் கே.வி ஐயாத்துரை ஞாபகார்த்த கவிதைக்கான (2008) […]