வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் 17

This entry is part 21 of 43 in the series 17 ஜூன் 2012

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்   அடிமைத்தளை நீங்கியவுடன் நம் முதல் இலக்கு கிராமப் புனருத்தாரணம் கிராம ராஜ்யம் நம்மிடம் மந்திரக்கோலா இருக்கின்றது ?! கிராமங்களில் அனைத்து வசதிகளும் வர வேண்டும். சுதந்திர நாட்டின் உயிர்நாடி கிராமங்கள். எத்தனை பணிகள் செய்ய வேண்டியிருக்கின்றன ?! ஊரக வளர்ச்சித் திட்டம் தோன்றியது. எங்கும் காந்தீய மணம். பயிற்சி நிலையங்களான காந்தி கிராமமும் கல்லுப்பட்டியும் வார்தாவின் வார்ப்புகள். ஒவ்வொரு நடவடிக்கையும் ஆசிரம வாழ்க்கையாக இருந்தது. கழிப்பறை கூட […]

தாகூரின் கீதப் பாமாலை – 18 வைகாசி வாழ்த்து

This entry is part 20 of 43 in the series 17 ஜூன் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எவருடைய வீணை இனிய குரலில் வாசிக்குது எனது தனித்துப் போன புதிய வாழ்வினிலே. காலை மலர்ந்த தாமரை மலர் போல் கட்ட விழ்க்கும் இதழ்களை என் இதயமே. எல்லா அழகுமயம் விழிதெழும், அனைத்திலும் களிப்பு இதயத்தில் நிரம்பும் இன்பம் ஒரு கண்ணி மைப்பில் எங்கிருந்தோ கொணரும் தென்றல் ஓர் புத்துணர்வை எடுத்த கற்றும் ஆத்மா அணிந் திருக்கும் அங்கியை. களிப்பும் சோகமும் ஆழமாய் உள்ளத்தைத் […]

தாய்மையின் தாகம்……!

This entry is part 19 of 43 in the series 17 ஜூன் 2012

வீதி உலா சுற்றி வந்து களைத்த சூரியன் அலுப்புத் தீர கடலுள் முங்கிக் குளிப்பதை வெட்கப் புன்னகையில் பட்டு மேகங்கள் கன்னம் சிவக்கக் கண்டு மயங்கிக் கொண்டிருக்கும் அந்தி சாயும் மாலை நேரம். அந்த ரம்மியமான மாலைக் காட்சியைத் தன் வீட்டு  பால்கனியில் நின்று கொண்டு ரசித்துக் கொண்டிருந்த உமாவின் கவனத்தை கீழே விளையாட்டுத் திடலில் இருக்கும்  ஊஞ்சல்களிலும் சறுக்கலிலும்  ஆரவாரமாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் தங்கள் பக்கமாக இழுத்தனர். இயற்கையோடு இணைந்திருந்த மனம் திரும்பி  கீழே விளையாடும் […]

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நினைவரங்கு

This entry is part 18 of 43 in the series 17 ஜூன் 2012

வாணி. பாலசுந்தரம்   கடந்த மே மாதம் 20ம் திகதி கனடா, ஸ்காபரோ நகர மண்டபத்தில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நினைவரங்கு மிகவும் சிறப்பாக நடந்தேறியது.   நினைவரங்கு அழைப்பிதழ் மின்னஞ்சல் ஊடாக எனக்குக் கிடைத்ததுமே –அக்காலப் பல்கலைக் கழகச் சூழலும், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சகமாணவர்கள், எமது அன்றய வாழ்வின் நிகழ்வுகள் யாவும்  மனதில்  திரையோட –  நானும் அன்றைய தினம் நினைவரங்கில் சென்றமர்ந்தேன்.  நிகழ்ச்சிகள் யாவும் அமைதியான முறையில், அழகாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.   […]

ஆசை அறுமின்!

This entry is part 17 of 43 in the series 17 ஜூன் 2012

  சாம்பிராணிப் புகையின் மணம், மேக மூட்டமாய் வீடு முழுவதும் நிறைத்திருக்க, வெங்கடேசுவர சுப்ரபாதம் இதமாய் ஒலிக்க, விடியலில் எழுந்து குளித்து, மஞ்சள் பூசி, குங்குமமிட்ட மங்கலகரமான முகத்துடன், நுனியில் முடிந்த கூந்தலில் கொஞ்சமாக முல்லைப் பூவும் சூடி, விளக்கேற்றி, பூஜை முடித்து, மணக்க, மணக்க பில்டர் காபியுடன் மகனை எழுப்ப வந்தாள் மங்களம். கணவர் பூஜை அறையில் இருக்கிறார். பூஜை முடிய எப்படியும் இன்னும் 20 நிமிடமாவது ஆகும். மகன் குளிக்காமல் காபி சாப்பிடுவதற்கு திட்டி […]

பிடுங்கி நடுவோம்

This entry is part 16 of 43 in the series 17 ஜூன் 2012

விசாலமான வீடுகள் வினாக் குறியாய்க் குடும்பங்கள் மாமா என்கிறோம் அம்புலியை யாரோ என்கிறோம் அண்டை வீட்டாரை எல்லாரும் திறனாளிகள் எல்லாரும் பட்டதாரிகள் எல்லாரும் கடனில் அனைவர் கையிலும் அறிவுச் சாவி திறக்கத்தான் நேரமில்லை மருந்துகள் ஏராளம் நோய்கள் அதைவிட ஏராளம் ஆதாயம் தேடும் வியாபாரப் பொருள்களாய் உறவுகள் விரைவான உணவுகள் மெதுவான சீரணங்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் தெரிகிறார் சிரிக்கத் தெரிவதில்லை வாழும் நிலம் செத்துக் கொண்டிருக்கிறது குற்றுயிராய் மனித நேயம் வாருங்கள் வாழ்க்கையைப் பிடுங்கு நடுவோம் அமீதாம்மாள்

வாசு பாஸ்கரின் “ மறுபடியும் ஒரு காதல் “

This entry is part 15 of 43 in the series 17 ஜூன் 2012

காதல் கோட்டையில் ஆரம்பித்து, மௌனராகத்தில் கொஞ்சம் கலந்து, தேவதாஸ் பாணியில் முடித்து விட வேண்டும். நவீனத்திற்கு லண்டன், மெடிக்கல் காலேஜ், புகழ் பெற்ற டாக்டர் என்று சில மசாலாப் பொடிகளைத் தூவ வேண்டும். டிரம்ஸ் இசையுடன் டிஜிட்டலில் எடுத்து விட்டால் தமிழ் சினிமாவுக்கு ஒரு பேல் பூரி ரெடி. ஜீவா முத்துசாமி ( அனிருத் ) புகழ் பெற்ற சர்ஜன். இந்தியாவே கொண்டாடும் ஜூனியஸ். கூடவே கவிக்கோ என்கிற பெயரில் கவிதைகள் எழுதுபவன். அவன் படித்த மருத்துவக்கல்லூரி, […]

பழ. சுரேஷின் “ பொற்கொடி பத்தாம் வகுப்பு “

This entry is part 14 of 43 in the series 17 ஜூன் 2012

ஒரு கறுப்பு வெள்ளை திரைப்படக்காலத்துக் கதையை எடுத்து, அதேபோல் உருவம் கொண்ட நடிகர், நடிகையைத் தேர்ந்தெடுத்து, கொஞ்சம் வண்ணம் சேர்த்து டிஜிட்டலில் எடுத்தால் அது நவீனப் படமாகிவிடுமா? இந்தப் படத்தைப் பார்த்தவுடன் என் மனதில் எழுந்த கேள்வி இதுதான். கதாநாயகன் பிரவீன், ஏ வி எம் ராஜனின் கறுப்பு ஜெராக்ஸ். கதாநாயகி பிரிந்தா, அப்படியே சின்ன வயது புஷ்பலதா. பழைய காலத்து சாராய வியாபாரி ( பாலாசிங் ), குடிகாரர்கள் நிறைந்த கிராமம். இது நடுவே விடலைக் […]

மணமுறிவும் இந்திய ஆண்களும்

This entry is part 13 of 43 in the series 17 ஜூன் 2012

                            இந்தியாவில் அண்மைக்காலங்களில் திருமண முறிவுகள் பெருகி வருகின்றன. 1980களில் இந்திய தலைநகர் புதுடில்லியில் விவாகரத்து வழக்குகளை கவனிக்க 2 நீதிமன்றங்கள் தான் இருந்தன. இன்று 16 நீதிமன்றங்கள் விவாகரத்து வழக்குகளைக் கவனிக்க இருந்தும் போதவில்லை. மராத்திய மாநிலத்தில் ஓராண்டில் சட்டப்படி மணமுறிவு பெற்றவர்கள் 43000. அதில் மும்பையில் 20,000, புனேயில் 15000. கல்யாணமாலை இணைய தளத்தில் இரண்டாவது […]

ருத்ராவின் க‌விதைக‌ள்

This entry is part 12 of 43 in the series 17 ஜூன் 2012

  பட். இதன் கதை முடிந்து விட்டது. இனிமேல் தான் கதை எழுதப்போகிறார் ஆசிரியர்.”கொசு” ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________ எழுதிச்செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும். எங்கே முடியும் விதி? “பத்திரிகை அலுவலகத்தின் குப்பைக்கூடை” _______________________________________________ பேனாவுக்கு மட்டுமே புரிந்தது. காகித‌ம் ம‌ட்டுமே ர‌சித்த‌து. “க‌விதை” _________________________________________________ எழுதி முடிக்க‌வில்லை. பேனாவில் எல்லாம் எறும்புக‌ள். “த‌மிழுக்கும் அமுதென்று பேர்” ___________________________________________________ என்னைத் தூக்கி கொடுக்கிறார்க‌ள் என்னைக்கேட்டா கொடுக்கிறார்க‌ள். இது யார் எழுதிய‌ க‌விதை? “ஞான‌பீட‌மே எழுதிய‌து” ____________________________________________________ ல‌ட்ச‌க்க‌ண‌க்கான […]