சென்னை தினத்தை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டிசென்னை தினத்தை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டி வணக்கம். சென்னை தினம் (மெட்ராஸ் டே) சென்னையால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கூட்டு நிகழ்வாகும். இந்நிகழ்வை முன்னிட்டு ஒரு சிறுகதைப் போட்டியை நடத்த கிழக்கு பதிப்பகம் முடிவெடுத்துள்ளது. அனைவரும் இந்த சிறுகதைப் போட்டியில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். * சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். * சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி […]
மிகுந்த பரபரப்புடனும் கொந்தளிப்புடனும் கிஷன் தாஸ் மீரா பாய் கண்ணாடித் தொழிற்சாலையில் மேலாளர் சேகரின் அறைக்குள் நுழைகிறார். அவரைக் கண்ட கணமே சேகர் எழுந்து நிற்கிறார். “குட் மார்னிங், சர்!” என்று சொல்லும் சேகரை நோக்கிப் பதிலுக்குத் தலை கூட அசைக்காமல், “தொலைபேசியில் நீங்கள் பதற்றத்துடன் பேசிய தினுசில் இன்று குட் மார்னிங் இல்லை, பேட் மார்னிங் என்றுதான் தோன்றுகிறது. என்ன நடந்தது? சொல்லுங்கள்!” எனும் கிஷன் தாஸ் பொத்தென்று நாற்காலியில் அமர்கிறார். நடந்தவை […]
தங்கமணிக்கு வயிறு பெருத்துக்கொண்டே போனது. எப்போது வேண்டுமானாலும் பிரசவித்து விடலாம் என்பது போல் பயம் வந்தது கோபிநாத்திற்கு. வலி வந்து விட்டால் பழையனூரில் இருக்கும் ஏதாவது மருத்துவமனையில் சேர்த்து விடலாம் என்று நினைத்திருந்தான். ஆனால் வலி வருவதற்கான எந்த அடையாளமும் தங்கமணியிடம் காணப்படவில்லை என்பது கோபிநாத்திற்கு வருத்தமாக இருந்தது. வருத்தம் பிரசவத்தால் உடைந்து போகும். ஜானகி பிரசவத்தின் போது எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதைத் திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாள். பற்களைக் கடித்துக் கொண்டு முக்க வேண்டும். […]
சக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர் , திருப்பூர் —————————————————————- உலக சுற்றுச்சூழல் தினம் விழா ஞாயிறு மாலை 6 மணி :சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம், அம்மா உணவகம் அருகில் , பாண்டியன்நகர், திருப்பூர் தலைமை:கலாமணி கணேசன், சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. சுப்ரபாரதிமணியனின் “ அழியும் மரங்கள் “ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. திருமதி சரோஜா வெளியிட புலவர் சொக்கலிங்கம்,. சிவராமன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ஜோதி “ கொங்கு நாட்டுச் […]
சூரிய குடும்பத்தின் புறக்கோளாய்ச் சுற்றும் புதிய கோள் பத்து ஒளிந்து திரிவது உறுதி செய்யப் படுகிறது ! ஒன்பதாம் கோள் இருப்பதைச் சென்ற ஆண்டு கண்டார் ! கியூப்பர் வளைய அண்டங்கள் . குளிர்ந்து போனவை. கியூப்பர் வளைய அண்டங்கள் சூரியனைச் சுற்றும் பாதைகள் சாய்வதின் காரணம் என்ன ? பூமி வடிவில் பத்தாவது கோள் புளுடோ வுக்கு அப்பால். சாய்க்கும் மர்மம் என்ன ? இதுவரைக் கோளைக் கண்டிலர். சூரியன் சுழலச்சைப் பூதக்கோள் -9 கோரமாய்ச் […]
மணிகண்டன் ராஜேந்திரன் 70 ஆண்டு சுகந்திர இந்தியாவில் எத்தனையோ சமூகத்தை சார்ந்த ஆளுமைகள், பிரதமராகவும், குடியரசு தலைவராகவும், உச்சநீதிமன்ற நீதிபதிகளாவும், ராணுவ தளபதிகளாகவும் இருந்துள்ளனர்..ஆனால் இந்த பதவிகளுக்கு தலித் ஒருவர் நியமிக்கபட்டாலோ அல்லது பரிந்துரைக்கபட்டாலோ அதுநாடு முழுவதும் பெரிய பரபரப்புகளையும் அதிர்வுகளையும் விவாதங்களையும் ஏற்படுத்துகிறது..ஏன் இப்படி ஏற்படுகிறது? தலித் என்பது சாதியையும் தாண்டி அது தங்களுக்கான முதலீடாக கட்சிகள் பார்க்க தொடங்கிவிட்டன.. முதலீடு என்பதையும் தாண்டி தலித் என்ற சொல் தன்னுடைய இழந்த புகழ்களையும் செல்வாக்கையும் […]
ஜோகூர் பேருந்து நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் விரைவு பேருந்தில் ஏறினேன். அது முக்கால் மணி நேர பிரயாணத்தில் சிங்கப்பூர் குயீன்ஸ் ஸ்ட்ரீட் சென்றடைந்தது. அங்கு கோவிந்தசாமி காத்திருந்தான். அவன் முன்புபோலவே ஒல்லியாக இருந்தான். தோற்றத்தில் கொஞ்சமும் மாற்றம் இல்லை. அவன் ஹெண்டர்சன் மலையில் நகரசபை குடியிருப்பில் ப்ளோக் பதின்மூன்றில் இருந்ததுபோலவே இருந்தான்.அப்போது நான் ” கண்ணீர்த்துளிகள் ” நாடகம் அரங்கேற்றியபோது அவனுக்கு முதலில் டாக்டர் வேடம் தந்தேன். பின்பு அவனுடைய உருவம் பொருத்தமில்லை என்பதால் அதை மாற்றி […]
மதிப்பிற்குரிய இதழ் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். வழக்கம்போலவே இந்த வருடமும் சிறுகதைப் போட்டி ஏற்பாடு செய்துள்ளோம். போட்டிக்கான கீழ்க்காணும் விபரங்களை வெளியிட்டு உதவிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன், ம.காமுத்துரை
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. +++++++++++++++++ [79] அடுத்த குடம் சொல்லும், பெருமூச்சு விட்டு புறக்கணிப் பாகி காய்ந்து போச்சு என் களிமண்; ஆயினும் என் குடத்தில் நிரப்பு பழைய மதுரசம், தெரியுது சிறுகச் சிறுகப் பிழைத் தெழலாம் நான். [79] Then said another with a long-drawn Sigh, ‘My Clay with long oblivion is […]
அருணா சுப்ரமணியன் மறந்த வரம் இதமாய் வருடுது காற்று இன்பத் தேனாய் பாயுது குருவிகளின் கொஞ்சல் குதித்து ஓடும் அணிலின் துள்ளலில் அத்தனை குதூகலம் பூக்களின் வண்ணங்கள் கண்களை குளிர்வித்தன நடைப்பயிற்சியின் ஒவ்வொரு சுற்றிலும் என்னை நோக்கி வீசப்பட்ட குழந்தையின் சிரிப்புகளை பத்திரமாய்ச் சேகரித்தேன் கூடவே மறக்காமல் இருக்க மனதிடம் சொல்லிவைத்தேன்.. மறந்து வைத்த கைபேசியை நினைவாக நாளையும் மறந்து வர வேண்டுமென…. எரிதலின் பொருட்டு எங்கோ காய்த்து வெடித்த பஞ்சு திரிக்கப்படுகிறது எவ்விடம் தீபம் ஆவோம் அறிவதில்லை திரிகள் […]