62 பக்கங்களில் ‘ பனிக்குடம் ‘ வெளியீடாக 2007 – இல் வெளிவந்த புத்தகம் எழுத்தாளர் தமிழ்நதி எழுதிய முதல் கவிதைத் தொகுப்பு ‘ சூரியன் தனித்தலையும் பகல் ‘ ! தமிழ்நதி தன் முன்னுரையில் , ” கவிதை மிகப் பெரிய ஆசுவாசத்தையும் அவஸ்தையையும் ஒருசேரத் தருகிறது. ஓடும் நதியில் திளைக்கும் சுகத்தையும் எரியும் நெருப்பின் தகிப்பையும் எழுதும் போதெல்லாம் உணர முடிகிறது. ” என்கிறார். உண்மைதான். முதல் கவிதை ‘ இருப்பற்று அலையும் […]
பொதுவாக பயணக் கட்டுரை நூல்களில் ‘கட்டுரைகளின் விரிவாக்கமும்” பயணங்களின் காட்சிப் படங்கள் சுருக்கியும் தரப்பட்டிருக்கும். ஞான சைமனின் இந்நூலில் பார்த்த இடங்களை வாசகர்கள் உள்வாங்கி பெறுவதில் முழுமையாக ஈடுபட்டிருப்பது ஒரு முக்கிய விஷயம். 20 நாடுகளுக்குச் சென்றவர் என்ற வகையில் அவரின் உலகக் குடிமகன் அனுபவத்தை 4 நாடுகளின் மீது செலுத்தி இதில் விளக்கியுள்ளார். ஞான சைமன் சிறுகதை எழுத்தாளர் என்ற வகையில் அவரின் சிறுகதைத் தன்மையின் “பளீர்” தன்மை பளிச்சிடுகிறது. பல இடங்களில் தெரிகிறது, […]
சிவகுரு பிரபாகரன் ஆறு மணிக்கெல்லாம் கதவைக் கழட்டுகிற சத்தம் நினைவோடு இருக்கும் நண்பனில் எவனோ தாழ்ப்பாளை அவிழ்க்கிறான் உள்ளே வந்தவள் மழை வெள்ள தவளை போல் பேசிக்கொண்டே வேலையைத் தொடங்குகிறாள் இன்றைக்கு என்ன சமைக்கனும் காதில் ஊற்றிய காரமாய் கேட்கிறாள் அங்கே ஒட்டியிருக்கிற அட்டவணை பிசகாமல் செய்யுங்கள் என்கிறது பணி ஆணை புளித்துப் போகும் மாவை என்ன செய்வதென தெரியாமல் அதட்டிய அரை நித்திரை வார்த்தைகளுள் கட்டுகொள்கிறாள் என் தலையணையை நான் பசை போட்டு ஒட்டிக்கொள்வதில்லை அது […]
ரொமான் (le roman) : புதினத்தைப் பிரெஞ்சு மொழியில் ரொமான் என்றே இன்றைக்கும் அழைக்கிறார்கள். இச்சொல் இடைக்காலத்தில் உருவான சொல் தவிர அவை உரைநடையில் அல்லாது பாடல்களால் ஆனவை. (பிரெஞ்சு உரைநடை புதினங்களின் காலம் பதினாறாம் நூற்றாண்டு). ரொமான் என்ற பெயரை இவ்வகை இலக்கியங்கள் பெறுவதற்குரிய காரணம் , அக்காலகட்ட த்தில் இலக்கியங்கள் எனப்பட்டவை இலத்தீன் மொழியிலேயே சொல்லப்படுவது மரபு. தவிர அவை பெருவாரியான சாமானிய மக்களிடமிருந்து விலகி அரசவை, திருச்சபை, மேட்டுக்குடியினர் ஆகியோருக்கு உரியனவாக க் […]