”பாவண்ணனைப் பாராட்டுவோம்” விழா

This entry is part 3 of 16 in the series 6 மே 2018

அன்புள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களே, வணக்கம். தமிழ் இலக்கிய உலகில் அமைதியாக தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிற அன்பு நண்பர் எழுத்தாளர் பாவண்ணன். பாட்டையா பாரதிமணி சொல்வதுபோல், பாவண்ணன் “ எத்தனையோ எழுத்தாளர்களின் சப்பரத்தைத் தன் தோளில் சுமந்தவர். நிறைகுடம். இலக்கியத்தின் ‘ஒளிவட்டம்’ தன்மேல் விழாமல் கவனமாக இருப்பவர்.” சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழியாக்கம், கவிதை, புத்தக விமர்சனம் என்று எல்லா தளங்களிலும் அயராமல் இயங்கி வருபவர் பாவண்ணன்.  மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.  […]

புதிய சூரியக்கதிர் மின்சக்தி உற்பத்திப் பொறிநுணுக்கத்தை எப்படித் திறனாய்வு செய்வது ?

This entry is part 1 of 16 in the series 6 மே 2018

Posted on May 6, 2018   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++ https://en.wikipedia.org/wiki/Solar_power https://en.wikipedia.org/wiki/Solar_power https://www.hgtv.com/remodel/mechanical-systems/the-true-cost-of-solar-power 1.  https://youtu.be/luN91njPlLM 2.  https://youtu.be/RmkCdhW0re8   +++++++++++++++++   ++++++++++++ சூரிய மின்சக்தி சேமிக்க, நூறு மெகாவாட் பேராற்றல் உள்ள ஓரரும் பெரும் மின்கலம் தாரணியில் உருவாகி விட்டது வாணிபப் படைப்புச் சாதனமாய் ! தட்டாம்பூச்சி போல் பறக்க வானூர்திக்குப் பயன்படப் போகுது ! பரிதியின் சக்தியால் பறக்கும் ! எரி வாயு இல்லாமல் பறக்கும் ! பகலிலும் […]

உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் – 4 – தி ஹேன்ட் மெய்டன்

This entry is part 2 of 16 in the series 6 மே 2018

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – 2016-இல் வெளிவந்த தி ஹேன்ட் மெய்டன்(The Hand Maiden) என்ற இந்த கொரியத் திரைப்படம், தனது படம் முழுக்க, நிறைய உடல் உறவுக் காட்சிகளைக் கொண்டுள்ளது. ஆண்களையும், பெண்களையும் சுண்டியிழுக்கும் அத்தனை ஆபாசக் காட்சிகள் இருந்தும், படம் எண்ணற்ற உலக விருதுகளை தட்டிச் சென்று இருக்கிறது என்பது இந்தப்படத்தின் கலைத் தரத்துக்கு ஒரு சான்று. A for Apple, B for Ball என்று பிள்ளைகளுக்கு படம் காட்டிச் சொல்லிக் […]

சிலம்பு சித்தரிக்கும் அரசியல்

This entry is part 4 of 16 in the series 6 மே 2018

  முனைவர் இரா.முரளி கிருட்டினன், உதவிப்பேராசிரியர், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 02   “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” என்று பாரதி சிறப்பித்துப் பாடிய சிலப்பதிகாரம் போன்ற முத்தமிழ்க் காப்பியம் அதற்குப் பின்பு இன்றுவரை தோன்றவில்லை. தமிழுக்குரிய தனித் தன்மையுடைய காப்பியமாக சிலம்பு மட்டுமே உள்ளது.  அதுவரை கடவுளையோ அரசனையோ காப்பியத் தலைவனாகக் கொண்ட வெளிவந்த இலக்கிய மரபிலே ஒரு சாதாரண குடியிலே பிறந்த கண்ணகி தெய்வநிலை எய்தியதை வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் […]

இராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன்-ஒரு பார்வை – 1

This entry is part 5 of 16 in the series 6 மே 2018

மீனாட்சி சுந்தரமூர்த்தி (28.04.18 அன்று முத்தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற உலக புத்தக நாள் விழாவில் ,`நான் விரும்பும் நூல்`என்ற தலைப்பில் பேசியது.) முன்னுரை   இளங்கோவடிகளின் சிலம்பில் இடம் பெற்ற சிறப்பு நீலமலைக்கு (நீலகிரி) உண்டு.  இது  தமிழும் மலையாளமும், கன்னடமும் கூடுமிடம் எனவும் சொல்லலாம்.இங்கு வாழும் மலையின மக்களில் பெரும்பான்மையினரான படகர்களின் வாழ்வில் இந்திய விடுதலைக்கு முன்னும் இந்திய விடுதலைக்குப் பின்னுமான ஐந்து குறிஞ்சி கால அளவில் ஏற்பட்ட   மாற்றங்களை  (அதாவது அறிவியல் முன்னேற்றம், அருளியல் […]

உயிர்ப்பேரொலி

This entry is part 6 of 16 in the series 6 மே 2018

ரா.ராஜசேகர் தூரத்தில் ஒலிக்கும் உயிர்ப்பேரொலி எங்கும் கேட்பதாய்ச் சொல்லும் உன் செவிப்பறைகள் கிழிந்தே பலகாலம் அவதானிப்பில் பார்க்கலாம் பேசலாம் கேட்கலாமுமா அவ்வரிசையில் இப்போது நீ இன்புற்றுக் கேட்பதாய்ச் சொல்லும் அவ்வுயிர்ப்பேரொலியில் கசிந்து வழிவது உன் துரோகத்தின் ரணகானமே என் மனமுதுகில் நீ செருகிய துரோகக் குறுவாளால் மீட்டப்பட்டதே அக்கானம் இப்போதெல்லாம் உன் மனப்பண்பலை ஒலிபரப்பில் தொடர்நேயர் விருப்பமாக அத்துரோரகக் கானமே என ரகசியக் குரலொன்று அறிவித்துப் போகிறது உயிர்வெளியெங்கும் நானற்றப் பொழுதுகளிலும் எது எப்படியோ ஒரு துரோகம் […]

செய்தி

This entry is part 7 of 16 in the series 6 மே 2018

  அவர்களின் மணவிலக்கு ஏற்பு   அந்த ஜோடிக்கிளிகள் நாளைமுதல் தனித் தனிக் கூடுகளில்   சமீபத்தில் இவர்கள் சிறந்த தம்பதிக்கான விருதை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   அமீதாம்மாள்  

உடைந்த தேங்காய் ஒன்று சேராது

This entry is part 8 of 16 in the series 6 மே 2018

  ‘அவசரம். அரை மணி நேரத்தில் நீங்கள் இங்கிருக்க வேண்டும். இல்லாவிட்டால்..’ என்று தொடரந்த அந்த மனநல நோய் மருந்துவமனை தாதியை இடைமறித்தேன். ‘இருபத்தொன்பது நிமிடத்தில் அங்கிருப்பேன்’ என்று சொல்லி துப்பாக்கியில் விடுபட்ட குண்டானேன். பறந்தேன். இலக்கைத் தொட்டேன். படுக்கையில் அன்சாரி. இரண்டு கைகளிலும் தோள்பட்டையிலிருந்து மணிக்கட்டுவரை கட்டுப் போடப்பட்டிருந்தது. அவருடைய ரத்தம் தோய்ந்த பழைய சீருடை சுருட்டிக் கிடந்தது. புதிய சீருடையில் புதிய கட்டுக்களுடன் என்னைப் பார்ந்து சிரிக்கிறார். தாதி ‘ஆபத்து’ என்றார். இவரோ சிரிக்கிறார். […]

மகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்

This entry is part 9 of 16 in the series 6 மே 2018

  தருக்குடனே உமதுதிரு வுளத்துக் கேற்கத் தங்கள்தங்கள் பணிவிடைகள் தலைமேற் கொண்டு வருக்கமுடன் பத்துவகைக் கொத்து ளோரும் மற்றுமுள்ள பரிகரமும் வந்து சூழ அருக்கனென முடிவிளங்க அழகு வீற அண்டர்கள் பூமழை பொழிய அடியார் போற்ற செருக்கி விளையாடி உகந்து ஆடிர் ஊசல் சீரங்கநாயகியார் ஆடிர் ஊசல்   பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பெயரரான கோனேரியப்பனையங்கார் அருளிய “சீரங்கநாயகியார் ஊசலின் எட்டாம் பாடல் இதுவாகும். சீரங்கநாயகியாரைச் சூழ்ந்துள்ளோர் இப்பாடலில் குறிக்கப்படுகின்றனர். முதலில் பத்துவகைக் கொத்தினர் காட்டப்படுகின்றனர். உடையவர் சீரங்கம் […]

அந்தி

This entry is part 10 of 16 in the series 6 மே 2018

சு. இராமகோபால்  காட்சி –1 இடம்: தெரு காலம்: மாலை (ஆனந்தன் அலுவலகத்திலிருந்து தெருவழியே வருகிறான். அவன் நண்பன் முத்து சில புத்தகங்களைக் கையில் தாங்கியவாறு அங்கே வந்துகொண்டிருக்கிறான். இருவரும் சந்திக்கின்றனர்.) முத்து: யார்? ஆனந்தாவா? ஏன் இவ்வளவு நாட்களாக வீட்டிற்கு வருவதில்லை? ஆனந்தன்: (நகைத்துக் கொண்டு) அப்படி என்ன முத்து? நான் நாள்தோறும் உங்கள் வீட்டிற்கு வருகிறேனே? நீதான் எங்கேயோ சங்கம் கூட்டம் கச்சேரியென்று போய்விடுகிறாயாம்! முத்: (பரபரப்படைந்து) அப்படி ஒன்றுமில்லையே! ஒரு மாதமா நான் […]