ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 14 அடுத்த நாள். கிஷன் தாஸ் தம் அலுவலகத்துக்குப் போயிருக்கிறார். எம்.பி.ஏ. தேர்வுக்குரிய பாடத்தைப் படித்தபடி பிரகாஷ் நடுக்கூடத்துச் சோபாவில் அமர்ந்திருக்கிறான். காப்பிக் கோப்பையுடன் நகுல் சமையலறையினின்று வருகிறார். அவரைப் பார்த்ததும் பிரகாஷ் நிமிர்ந்து உட்கார்ந்துகொள்ளுகிறான். பிரகாஷிடம் காப்பியைக் கொடுத்துவிட்டு, “பரீட்சைக்குப் படிக்கிறீர்கள் போலிருக்கிறது!” என்று சொல்லும் நகலை நோக்கித் தலையசைத்துவிட்டுக் காப்பியைப் பிரகாஷ் பருகுகிறான். “காப்பி மிகவும் பிரமாதம். ஆனால் மதராஸ் காப்பி அளவுக்கு இல்லை!” குறும்பாய்க் கண்சிமிட்டும் […]
பாச்சுடர் வளவ. துரையன், ஆசிரியர் “சங்கு” இலக்கிய இதழ் ஐங்குறுநூற்றின் இந்தப்பகுதியில் வரும் பத்துப் பாடல்களிலும் எருமை வருவதால் இப்பெயர் பெற்றது எனலாம். எருமை மருத நிலத்திற்கு உரிய விலங்காகும். எருமையின் செயல்களெல்லாம் அந்நில மாந்தர்களின் செயல்களுக்கு உவமையாகக் கூறப்படுகின்றன. ஓரம்போகியார் நாள்தோறும் தாம் கண்டு இன்புற்ற காட்சிகளை இப்பாடல்களில் நன்கு புலப்படுத்தி உள்ளார். எருமைப் பத்து–1 நெறிமருப்[பு] எருமை நீல விரும்போத்து வெறிமலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும் கழனி ஊரன் மகள்இவள் பழன வெதிரின் கொடிப்பிணை […]
சித்ரா ————— கூழாங் கற்களை தேடிப் பழகிய கைகள் வெறுங்கையாகவே குவிந்து மூடிக்கொண்டன ஒர் தீர்மானத்துடன்.. தேடுவதை ஏன் நிறுத்திவிட்டாய் என மெல்ல தட்டிக் கேட்கிறேன் விரல்களை இதழ்களாக விரித்துக் காண்ப்பிக்கிறது தேடாத தருணங்களில் மட்டுமே உருவாகும் சுயமான ஒளிக் கற்களை – சித்ரா (k_chithra@yahoo.com)
சுப்ரபாரதிமணியன் பழையனூரில் மூன்று பேருந்து நிறுத்தங்கள் உLLanண்டு. எதிலும் நிழலில் நின்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள நிழல் குடையோ மறைப்புகளோ இல்லை. வெய்யிலானாலும் மழையானாலும் ஏதாவது மரத்தடி கிடைத்தால் பாக்யம் என்பது போல் தவிப்பார்கள் சுடுமணலில் கால்களை வைத்தவர்கள் போல் தள்ளாடுவார்கள். ஆண்கள் ஏதாவது தேநீர் கடையில் போய் தேனீர் குடித்து விட்டு கொஞ்சம் நேரம் உட்கார அனுமதி கிடைக்கும். பெண்கள் என்றால் தெருதான். தெருவில்தான் நிற்கவேண்டும். வெயிலில் காயவேண்டும் . முதல் பேருந்து நிறுத்தம் பழைய பழையனூர் . […]
———– சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம் பற்றிய கருத்தரங்கை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ராசபாளையம் கிளை ராசபாளையத்தில் 7/5/17 அன்று நடத்தியது. விசயராணி தலைமை வகித்தார். மூத்த எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் –( சுடுமணல் நாவல் ) , மருத்துவர் சாந்திலால் செந்தழல் சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் ( விமோசனம் தொகுப்பு ), சாயத்திரை நாவல் ( வே.பொன்னுசாமி ), அபூர்வன்ராஜா ( மற்றும் சிலர் நாவல் ) வீரபாலன் ( கோமணம் நாவல் ) திருமுத்துலிங்கம் ( சமையலறைக்கலயங்கள் […]
எனக்குள் அப்படி ஒரு ஓங்காரக் குரல் இருப்பது எனக்கே தெரியாது. அலறினேன். என் அலறல் அந்த கென்டக்கி கோழிக்கறிக் கடையின் சுவர்களில் ஆக்ரோஷமாய் எதிரொலித்தது. கோழித் துண்டுகள் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் ஸ்ட்ரைக்கர் தாக்கிய வேகத்தில் சிதறும் கேரம் காய்களாய்ச் சிதறி என்னைச் சுற்றி நின்றுகொண்டார்கள். விற்பனை செய்துகொண்டிருந்த இளைஞர்கள் இளைஞிகள் அந்த விற்பனை மேசையைத் தாண்டிக் குதித்து அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள். உள்ளே எண்ணெயில் சில கோழித் துண்டுகள் லேசாகக் கருகிக் கொண்டிருந்தன. ‘அவன் […]
மீனா தேவராஜன் காத்திருக்கோம் காத்திருக்கோம் உன் வரவுக்கு பார்த்திருக்கோம் பார்த்திருக்கோம் வானவெளியை கோடைஇடி முழங்குமா? முழங்குமா? கோடி(புது) மேக ஆடைகட்டி மழைக்கொழுசொலி கேட்குமா? கேட்குமா? அடை மழையாய் நீ கொட்டும்போது ஓடை ஒடப்பெல்லாம் உன்னை அடக்கி வைக்கவில்லையே கார்கால வெள்ளத்தைக் கருதாமே வீணாக்கிட்டோமே ஊரெல்லாம் சுத்தி வந்தாலும் உழக்கு தண்ணில்லை தரையெல்லாம் காய்ந்து புழுதி பூத்துப்போச்சுனு புழுதி அடங்க பூப்பூவாய்ப் பூந்த கோடைமழையே! தகிக்கும் வெப்பத்தால் நாங்க வெந்து புழுங்கையிலே வேக்காடு தணிய வைச்ச குளிர் வான்மழையே […]
டாக்டர் ஜி. ஜான்சன் 171. மருத்துவச் சேவை கடவுள் சேவை … அப்பா என்னுடன் கை குலுக்கினார். தங்கைகளை அணைத்துக்கொண்டார். அம்மாவைப் பார்த்து சிரித்தார். அண்ணி குழந்தை சில்வியாவை அவரிடம் அனுப்பினார். அவள் தயங்கியபடி அவரிடம் நடந்து சென்றாள் . பேத்தியை அவர் பாசத்துடன் தூக்கிக்கொண்டார். மோசஸ் சித்தப்பாவிடமும் செல்லக்கண்ணு மாமாவிடமும் அமர்ந்து பேசினார். கூடியிருந்த உறவினர்களிடமும் ஊராரிடமும் நலன் விசாரித்தார். அவர் அணிந்திருந்த ” கெள பாய் ” தொப்பியைக் கழற்றி திண்ணையில் வைத்தார். தலை […]
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++++++++++ [67] இதை நான் அறிவேன்: மெய்யொளி ஒன்று அன்பு, சினத்தைக் கிளர்வது, எனை அழிப்பது, மதுக்கடை உள்ளே மகத்தான அதன் காட்சி ஆலயத்துள் காணப் படாது இழந்து கிடப்பது. [67] And this I know: whether the one True Light, Kindle to Love, or Wrath – consume me quite, One Glimpse of It […]
என்.துளசி அண்ணாமலை “வானதி…என் கன்னுக்குட்டி, எங்கே இருக்கே?” வீட்டுக்குள் வரும்போதே பாசத்துடன் மகளின் பெயரைச் சொல்லி அழைத்தவாறே வந்த கணவனைக் கோபப்பார்வையோடு எதிர்கொண்டாள் ராஜி. அந்தப் பார்வை தன்னை ஒன்றும் செய்யாது என்ற பதில் பார்வையை வீசிவிட்டு, மகளைத் தேடினான் பிரபு. வழக்கமாக வானதி ஒளிந்து கொள்ளும் இடங்களைத் தேடிப் பார்த்தவன், அவளைக் காணாது, மனைவியைப் பார்த்தான். அவளோ மோவாயில் இடித்துக் கொண்டே சமையற்கட்டுக்குள் புகுந்து கொண்டாள். இது தினமும் நடக்கும் செயல்தான். ஆனாலும் இன்று ராஜியின் […]